https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 25 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வெளிச்சத்தின் இருள் *

 



ஶ்ரீ:



பதிவு : 560  / 750 / தேதி 25 ஜனவரி  2021


* வெளிச்சத்தின் இருள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 38.






எங்கும் உள்ள வழக்கம் போல இங்கும். ஊருக்கு வெளியே தனிக்காலனிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகம். அதன் மூத்தோர் அனைவரும்  பெருநிலக்கழார்களை சார்ந்து பல தலைமுறைகளாக தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் . தொழிற்சாலைகள் வந்த போது அவை தனி சாலை வசதிகள் காலனிக்களுக்கு ஊடாக அமைந்தன . சாலையின் வரவு சமூகத்தில் அக மற்றும் புறவயமான மாற்றங்களை உருவாக்கி விட்டது மிக குறிகிய காலத்தில் சட்டென எல்லாம் மாற்றமடைந்து சமூகத்தில் புது அடுக்குகள் எழுந்து வந்தன . அது நிலக்கிழார்களுக்கு சலுகையென அதுவரை வழங்கி இருந்த பலவற்றை ரத்து செய்துவிட்டிருந்தது . சிலவற்றை காலாவதியாக்கியும் இருந்தது . அதன் பின் அவர்களால் இக்கால இளைஞர்கள் மீது வெளிப்படையான  அதிகாரம் செலுத்த முடியாமலாகியது . ஆனால் அவை அனைத்தும் திரைமறைவில் வேறு தளத்தில் வேறு விதமாக ஆனால் முன்னிலும் பலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்ததுதமிழகத்தில் சில இடங்களில் காணப்படும் தாழ்பட்டவர்களின் நிலை போல புதுவையில் அது வெளிப்படைத் தன்மையற்று இருந்தாலும் , மௌனமாக ஆழத்தில் அது இருந்து கொண்டிருக்கிறது. கராணம் புதுவை நகரமாக மாற முயற்சிக்கும் கிராம சூழ்நிலையையும் , சட்டென நகரமாகி அதன் அத்தனை அலகுகளுக்கும் வந்து சேரக்கூடிய சிறிய வேறுபாடுகளைக் கொண்ட இடத்திலும் இருக்கிறது. ஆகையால் அதன் மீது எப்போதும் அசையும் இருப்பில் நிலமுடைய சமூகம் இருக்கிறது  . சிறு சமன்குலைவு அச்சமூட்டும் அளவிற்கு அனைத்தையும் புரட்டக்கூடியது என அவர்கள் அறிந்திருக்கி்னறனர் . தங்களை நிலை கொள்ளச்செய்ய ஆளும் காங்கிரஸ் அமைப்பில் அவர்கள் எப்போதும் தங்களை வைத்துக்கொண்டனர் . காங்கிரஸிற்கு நீண்ட கால ஆட்சியில் இருக்கும் வாய்ப்பிருந்ததால் அவர்கள் தங்களை காங்கிரஸின் ஆதரவாளர்களாக வெளிப்படுத்திக் கொண்டனர்  . 


தனித் தொகுதி வேட்பாளர்கள் இவர்களின் ஆதரவில் இருந்து தான் எப்போதும் உருவாகிறார்கள் . ஊர் , காலனி என இரண்டையும் இணைக்கும் இடத்தில் இருப்பவர்களில் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள் . அதற்கு நுண்ணிய பின்னனி ஒன்று உள்ளது . அவர்களில் மிகப் பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலையை உதறி வெளிவந்தவாராக இருப்பார்கள் . அரசு உத்தியோகம் அனைத்து விதத்திலும்  அடிமைத்தொழில் , அது மேல் கீழ் என்னும் அடுக்குமுறையை அவர்களுக்கு பயிற்றுவிக்கிறது யாரும் எந்த சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல . தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அது இன்னும் ஆழமான அடங்கியிருத்தலை கற்றுக் கொடுக்கிறது . மேலும் தேர்தலில் தோல்வியுற்றால் அரசு வேலைக்கு திரும்பும் வாய்ப்பை சட்டம் அவர்களுக்கு வழங்குவதால் முதல் முறை சட்டமன்ற  நுழைவுக்கு பிறகு , மறுவாய்ப்பு கிடைக்காமல் போனால் மீளவும் தங்களின் வாழ்வாதரத்தை திரும்பப் பெற இயலும் . ஆனால் அது  இறுதிவரை எந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில்லை. மீளவும் அரசாங்க வேலைக்கு திரும்ப அவர்கள் மனம் ஒருபோதும் ஒப்புவதில்லை . ஒரு வித கையறு நிலை . அவர்களின் வாழ்நாள் இறுதிவரை அவர்களை விடாது தொடர்வது . அவர்கள் அதற்கு எப்போதும் அஞ்சினர் . தங்களை மீறி செயல்பட நினைக்கும் எவருக்கும் நிலமுடை சமூகம் மீளவும் ஒருமுறை வாய்ப்பு அளிப்பதில்லை என்பது அவர்களை பலமுள்ளவர்காளாக ஆக்கி அந்த அடுக்குகளை நிரந்தரம் செய்கிறது  . அதன்பொருட்டு வேட்பாளர் தேர்வு  கட்சியின் வழியாக நிகழாது பார்த்துக் கொள்ளப்படுகிறது. விதி விலக்கான சட்டமன்ற உறுப்பினர்களாக வந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள். அவர்கள் அரசியலுக்கு முற்றும் புதியவர் அமைப்பின் பின்னணியில் வெற்றி பெறும்போது  கட்டற்றவர்களாக ஆகி விடுகின்றனர் . புதுவையின் ஆட்சி மாற்றத்திற்கு பல சமயங்களில் இவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். அல்லது அவர்களிடமிருந்து துவங்கி இருக்கிறது  . ஆகவே தாழத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சி அமைப்புகள் பொறுப்பிற்கு வருகிறபோது அவர்களை கட்டுக்குள் வைக்க நிலமுடை சமூகத்தின் உதவி தேவைபடுகிறது , மேலும் பல அலகுகளை கையாளத் தெரிந்த நிலவுடையை சமூகத்தை சார்ந்திருப்பது அவசியமாகிறது , அவர்கள் எண்ணற்ற உள் நெசவுகளின் மூலம் அதை தங்கள் கையில் எப்போதும் வைத்திருக்கின்றனர் . ஆகவே அவர்களே எப்போதும் கட்சியின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களாக உறுவெடுக்கிறார்கள்.


தாழ்த்தப்பட்ட சமூக நவீன இளைஞர்கள் இயல்பில் பிற சமூக இளைஞர்களை விட மீறல் மனநிலை கொண்டவர்கள் . காரணம் அவர்கள் இருப்பே கேள்விக் குறியாகி விடுகிறது . அதை எதிர்பதன் பொருட்டு எந்த நிர்பந்தமும் இன்றி ஒருங்கு திரளக்கூடியவர்கள் என்பது அவர்களை பிற சமூகத்தினரை விட பலமுள்ளவர்களாக ஆக்குகிறது  . தங்கள் மீது இருக்கும் நேரடி மற்றும் மறைமுக கட்டுப்பாட்டில் இருந்து வெளிவர அரசியலை தேர்ந்தெடுக்கின்றனர் . அதன் ஊடாக பதில் சொல்ல முயல்வது ஒன்றே அவர்களுக்கான மீட்சி . அந்த இளைஞர்கள் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் அமைப்பிற்குள் வந்து சேர்ந்தபோது அங்கு நிலவும் அடுத்த கட்ட சிக்கலை புரிந்து கொள்ள துவங்கினர் . தனித் தொகுதிகளின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அவர்களுக்கு மத்தியில் இருந்து தாமாக ஒருபோதும் எழுந்து வராமல் பார்த்துக் கொள்ளப்படுவதும். நிலமுடை சமூகத்தின் தயவினால் மட்டுமே அவர்களால் அரசு அதிகாரங்களுக்குள் நுழைவு நிகழ இயலும் என்பது இன்னும் தீவிர எதிர்மனநிலையை் உருவாக்கி இருந்தது . இளைஞர் காங்கிரஸ் அதற்கான மாற்று என அதன் தலைவர் கண்ணனால் அழுத்தமாக சொல்லப்பட்டது . ஆட்சி பொறுப்பில் இடம்பெற ஆர்வமுள்ளவர்களுக்கு இளைஞர் காங்கிரஸிற்குள் நுழைந்தனர் . தீவிர எதிர்ப்பு மனநிலை உள்ளவர்வகள் கம்யூனிஸ இயக்கம் நோக்கி சென்றனர்.


கண்ணன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக வந்த போது அவர்களே அதன் பலமென அமைந்தார்கள் . கண்ணன் கட்சி அமைப்பை எதிர்ப்பவராக, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மாற்றாக தன்னை நிறுவிக்கொண்டருந்த காலம் . கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்களை கவர்பவராக இருந்தார் . அவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிஸ இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் கம்யூனிஸ்ட்களின் வெறுப்பிற்கு ஆளானார் . சகோதர யுத்தம் துவங்கி பல வன்முறைகளை அதை தொடர்ந்து அரசியல் கொலைகளுக்கு வழிவகுத்தது .


புதன், 20 ஜனவரி, 2021

அடையாளமாதல் * வளருதல் *

 



ஶ்ரீ:



பதிவு : 559  / 749 / தேதி 20 ஜனவரி  2021


* வளருதல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 37.






சிக்கல்களை தீர்க்க முக்கிய பதவிகளில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் , சொல்லுபவர்களுக்கு எந்த பதவியும் உதவப் போவதில்லை , அதை சொல்லுபவர்கள் எத்தகைய அதிகாரத்தில் இருந்தாலும் எப்போதும் உணர்வது தங்கள் போதாமையைத் தான். எழுந்துவரும் சிக்கல்கள் அனைத்தையும் நேரடியாக சென்று அணுகுவதற்குறிய செயல்பாடுகள் மட்டுமே அதை தீர்க்க வல்லதாக இருக்க முடியும் . அதற்கு தொண்டர்களை ஒருங்கு திரட்டும் பலம் ஒரு முதல் படி மட்டுமேஎவ்வளவு தடுத்தும் சிரித்தபடி கார்வரை வந்து எங்களுக்கு விடைகொடுத்து அனுப்பும் முன் அவர் சொன்ன அந்த வார்தைகள் எனது காதுகளில் கேட்டபடி இருந்தது . முதலில் திகைப்பை கொடுத்தாலும் அதை ஏனோ மனம் நிராகரிக்கவில்லை . அதனுடைய அடிப்படை சீண்டுவதாக இருந்தாலும் அதை மெல்ல உள்வாங்கிக் கொண்டிருந்தேன். நான் அவர்களை பல ஆண்டு காலம் பார்த்து வந்திருக்கிறேன் . புதுவை கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவராக இருந்தவர் வா.சுப்பையா எனது பக்கத்து வீட்டுக்காரர் . என்ன காரணத்திலோ கம்யூனிச சிந்தாந்தமும் அதன் வழிமுறைகள் எனக்கு உகப்பாக இருந்ததில்லை . தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கு திரட்டும் பலமே அவர்களை அரசியலின் முக்கிய இடத்தில் கொண்டு வைத்திருக்கிறது. அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியலாளர்கள் அஞ்சுவது அவர்களைத் தான் . அவர்கள் ஒருபோதும் புதுவை அரசியலில் அதிகாரத்திற்கு வரப்போகிறவர்கள் இல்லை . ஆனால் அவர்கள் எதையும் நேரடியாக வீதிக்கு கொண்டுவந்து விடுகிறார்கள் என்பதே அவர்கள் அச்சத்தின் முதன்மைக் காரணம் . அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி நிறுவிவிடுகிறார்கள் . பிறரின் அச்சம் அவர்களுக்கான இடத்தை உருவக்கிக் கொடுத்து விடுகிறது . இன்று காவல் நிலையத்தில் நடந்ததை திரும்பவும் ஒரு முறை நினைவில் இருந்து எடுத்துப் பார்த்தேன் . ஒரு கனவைப் போல அதை விரித்தெடுக் முடிந்ததுகாவல் நிலையத்தில் நுழைந்தது முதல் பின்னர் வெளியேறிது வரை முதலில் அவர்களின் கடும் பேச்சு பின் மெல்ல குறைந்து எங்களை எதிர்க்க முடியாதவர்களாக மாற்றியது  எனது பின்னால் கூடிய கூட்டம் என நினைத்தேன் . ஆனால் அது உண்மையல்ல கம்யூனிச ஆதரவாளரான அந்த நபர் எனது பக்கத்தில் வந்து நின்ற பிறகே அங்கு சூழ்நிலை மாற்றமடைந்த படி வந்தது காவல்துறை அதிகாரிகள் அவருக்குத் தான் முதலில் அஞ்சினர் . அது அப்பட்டமான உண்மை . அன்றிரவு வீடு வந்து சேர்ந்த போது ஒரு விஷயத்தை சாதித்த நிறைவை அடையாமல் யதார்த்தம் முகத்தில் வந்து வீசுவது போல இருந்தது . அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம் எதையும் கொடுப்பதில்லை . மேலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட இறுதிக் காரணம் என ஒன்று உருவாகி வந்து விடும் . அத்துடன் யாரும் போராட முடியாது என்பது யதார்த்தம் . அவர்கள் கட்சி ரீதியிலே எதையும் அணுகும் அவசியமில்லாதவர்கள் . காரணம் சட்டமன்றம் வேறுவிதமான அரசியல் செயல்பாட்டை வழிமுறையாகக் கொண்டது . கண்ணன் மற்றும் பாலனின் கம்யூனிச சிந்தனை நோக்கிய மனச் சாய்வு அதன் கொள்கையின் அடிப்படையில் ஆனது இல்லை . அது ஒரு பாவனை மட்டும் என புரிந்து கொள்கிறேன் . அரசியல் அவர்கள் எதிர் கொண்ட உண்மையின் முகம் மிகக் கொடுமையானதாக இருந்திருக்க வேண்டும் . அரசு அதிகார பதவிக்கு வரும் யாரும் இந்த இடத்தில் தங்களை சமரசம் செய்து கொள்ளாமல் முன்னகர முடியாது . ஒரு வகையில் மரணத்திற்கு ஒப்பானது . அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அடிப்படையை சமரசம் செய்து கொள்வது ஒரு கொடுங் கனவு போல இருந்திருக்க வேண்டும் . அந்த நேரடித் தன்மை அவர்களை நிலைகொள்ள இயலாமல் செய்திருக்கும் அந்த சீற்றத்தைக் கடக்க தங்களை கலகக்காரர்களாக இளந்துருக்கியர்களாக முன்வைத்துக் கொண்டார்கள் .


எனக்கு அரசியல் மீது ஈடுபாடுகள் உருவான காலகட்டத்தில் கம்யூனிச கட்சிகளின் மேல் எனக்குள்ள கசப்பு இன்னும் ஆழமானதாக மாறியது , அவர்களின் வன்முறை அரசியலில் மீது எப்போதும் ஒவ்வாமை இருந்து . 1969 களில் கட்சிகளுக்கு இடையேயான தொழிற்சங்க சிக்கல் பழனிராஜாவின் கொலையில் முடிந்தது . என்னை வந்து முட்டி நிலையழச் செய்த முதல் அரசியல் படுகொலை செய்தி . எனக்கு அன்று ஏழு வயது . ஒரு மனிதன் பிறிதொருவனை கொல்ல முடியும் என்கிற உண்மை பெரும் அச்சத்தை அதிர்ச்சியை அப்போது உருவாக்கி இருந்தது . அதைச் செய்யும் ஒருவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்கிற கேள்வி அலைகழிப்பை கொடுத்தது . அந்த சவ ஊர்வலம் முக்கிய தெருக்களின் வழியாக சென்ற போது ஒவ்வொரு தெரு முணைக்கும் உளம் பதற ஓடி மீள மீள எதற்கு பார்கிறேன் என தெரியமால் பார்த்துக் கொண்டிருந்ததை நினைவுறுகிறேன் . பின்னர் தொடர்ந்து பல அரசியல் கொலைகள் கருணாஜோதி வரை நிகழ்ந்தது. அது வன்முறையை கையாண்ட அந்த அமைப்பை பற்றிய ஆழ் மன விலக்கலை அளித்திருக்க வேண்டும் . தேர்தல் அரசியலை நோக்கிய பயணம் எனக்கு இறுதி வரை உடன்பாலில்லாத ஒன்றாக இருந்தது . நான் அதற்கானவன் அல்ல என்கிற தெளிவு ஆழ்மனத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும் . அதை நோக்கி இறுதிவரை நகரவேயில்லை . தொண்டர் ஒருங்கு திரட்டல் மற்றும் அவர்களுடன் இருத்தல் எனக்கு மிக அனுக்கமானதாக இருந்தது . அதுவே எனது பலமாக பின்னாளில் ஆனது


காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளை எதிர்த்து நிகழ்ந்தது  திட்டமிட்ட ஒன்றல்ல , எனக்கு கொடுகப்பட்ட பணியை நான் செய்து முடிக்க முயன்றபோது அதன் எதிர்ப்பு உருவானது . பின் அது என்னை மையங் கொண்டது. நான் அரசியலில் இருந்த இறுதிக் கணம் வரை அதன் பாதிப்பை தொடர்ந்து அடைந்து கொண்டிருந்தேன் . முதலில் திகைப்பை கொடுத்தாலும் பிறருடன் உரையாடும் இடத்தில் நான் இருக்கவில்லை .அதற்கு அன்றைய அரசியல் பற்றிய ஒற்றைப் புரிதல் காரணம் . மெல்ல அதில் இருக்கும் ஆபத்தை உணருந்த போது காலம் கடந்து விட்டிருந்தது. அனைத்தையும்  உரையாடி தீர்த்துக் கொள்வதில் இருந்த நம்பிக்கை தகர்ந்த போயிற்று . அரசியலில் அதிகாரம் இருக்கும் வரை ஒருவருடன் வெளிப்படையான உரையாடல்கள் நிகழ வாய்ப்பில்லை  . அவர்களில் பலர் நிலவுடைமை சமூகத்தை சேர்ந்தவர்கள்புதுவையின் ஐந்து தனித் தொகுதிகளில் நான்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இன்றளவும் இருக்கிறது . இளைஞர் காங்கிரஸின் பெரும்பான்மை தொண்டர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் . அதற்கு சில அடிப்படைப்படை காரணிகள் உண்டு . தமிழக மற்றும் புதுவை அரசியலில் எதிர்கட்சியை ஆளும் அமைப்பாக மாற்றும் ஊசல் ஓட்டுகளை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே எப்போதும் முடிவுசெய்கிறார்கள். தமிழகம் போலன்றி நீண்ட காலம் அவர்கள் காங்கிரஸை ஆதரித்தனர் என்பது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் முதல்வராக வர விழைபவர்களுக்கு அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு எப்போதும் தேவைப்பட்டது . அவர்களின் முடிவை தீர்மானிக்கும் இடத்தில் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு மீறி நிலவுடைமை சமூக பெரியவர்கள் கைகளில் இருந்தது . முதல்வராக வர இருப்பவர் அவர்களுடனான பேரம் வழியாக பல உள்விளைவுகளையும் சமன்பாட்டையும் உருவக்கிய பின் அந்த அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்.


வெள்ளி, 15 ஜனவரி, 2021

அடையாளமாதல் * மேலடுக்கு அரசியலும் வலிகளும் *

 


ஶ்ரீ:



அடையாளமாதல்


பதிவு : 558  / 748 / தேதி 15 ஜனவரி  2021


* மேலடுக்கு அரசியலும் வலிகளும் * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 36.







அந்தப் பெரியவர் அரசியல் மிதப்பு என்கிற என்னுடைய எண்ணக்குமிழியை ஊதி உடைத்துவிட்டிருந்தார் . அரசியலின் எல்லைகள் யாருக்கும் வசப்படுவதில்லை . ஒரு சிலருக்கு சில காலம் , சில நேரம் அது அப்படி ஒரு மிதப்பை கொடுத்தாலும் அது உண்மையில்லை . அவர்கள் அனைவரும் ஒரு நிலத்தில் இறங்கி நின்றாக வேண்டிய காலம் என ஒன்று உண்டு . அன்று எனக்கு மேல் பல நிலைகளில் அமைப்பும் அதன் தலைவர்கள் இருந்ததால் அடுத்து என்ன என்கிற கேள்வி அப்போது என்னிடம் இல்லை . ஒரு வகை திகைப்பும் வருத்தமும் எங்கோ ஒட்டியிருக்க அதன் மற்ற பகுதிகள் அதை துடைத்து எடுத்து வெளியே வீசிவிட முயன்று கொண்டிருந்தது . தற்சமயம் அதை அதனிடம் விடுவது நன்று . எப்படியும் வீடு சென்று சேர்வதற்குள் அப்படி ஒன்று நிகழவேயில்லை என்றாகி இருக்கும் . உடன் வந்த அனைவரையும் அவர்களின் குடியிருப்புக்கு சென்று விடும் பொருட்டு சிறு நடை பயணம் போல அவரவர்களின் வாழ்விடம் நோக்கி நடக்கத் துவங்கினோம் . குடியிருப்பு சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது . நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிரிப்பும் வெற்றிக் களிப்புமாக பேசியபடி அந்த இரவு நேர நடை பயணத்தில் உடன் வந்தனர் . ஊர் ஆரவாரமற்ற அந்த இரவு நடைபயணம் மனதிற்கு மிக அனுக்கமாக இருந்தது . அந்த இரவு எங்களுக்கு மட்டுமேயாக . ஒருவேலை இரவு நேரம் அனைத்தையும் அப்படி பார்க்க வைப்பது போலும் . எனது வீட்டில் என்ன நிகழப் போகிறது என்கிற கவலை  ஒருபுறம் ஓடிக் கொண்டிருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பரவச நிகழ்வு அதை நானும் இழக்க விரும்பாமை மட்டுமே அப்போது நெஞ்சில் இருந்து கொண்டிருந்தது . நான் அதுபோல இரவில் நெடுநேரம் வெளியில் இருந்ததில்லை என்பது தனி உற்சாகத்தை கொடுத்திருந்தது கணக்கில்லா டீ களும் சிகரெட்களும் வெட்டி சிரிப்பும் ஒருவர் பற்றி ஒருவர் பகடியும் நையாண்டியுமாக அந்த பகுதியை அதிர்ந்து கொண்டிருந்தது , பின் மெல்ல நேரமானதை உணர்ந்து  அனைவரும் ஒவ்வொருவராக அங்கிருந்து விலக துவங்கினர் . மரியாதை நிமித்தமாக சில முக்கியஸ்தர்களை அவர்களுடைய வீடு வரை சென்று விட்டு வர கிளம்பினோம் . ஒரு விதமான வெட்டி மனநிலை . இளைஞர் காங்கிரஸ் நண்பன் பெருமாள் அந்த பகுதியை சார்ந்த தோழன் . அவன் வீடு வரை வந்தபோது அவனது தந்தையை சந்திக்க முடிந்தது எளிய குடிசைகள் நிறைந்த பகுதி . சாலை என ஏதும் இல்லாமல் கற்கள் கொட்டி மேடு செய்யப்பட்டு பகுத்து வடிவில் ஒழுங்கற்ற வீடுகள் இருள் நிறைந்து கனத்து காணப்பட்டது , சற்று நேரம் கழித்தே அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன் .கெடும் நாற்றம் அடர்த்தியான இருளுடன் அதை ஒரு பருப்பொருளை பார்க்க முடிவதை போல எங்கும் சூழ்ந்து நின்று கொண்டிருந்தது . அதன் அடர்த்தி தாங்க முடியாததாக இருந்தது . முதலில் அருகில் தேங்கி  இருக்கும் அல்லது அழுகிய பொருளில் இருக்குது அது வருகிறது என நினைத்தேன் . மூக்கை பொத்துவதோ அது என்ன துர்நாற்றம் என கேட்கவோ மிகுந்த தயக்கமாக இருந்தது , அது அவர்களை சங்கடப்படுத்தக் கூடும் . விரைவில் அங்கிருந்து வெளியேற நினைத்தேன் துர்நாற்றம் வயிற்றை புரட்டுவதாக இருந்தது . காஞ்சி போட்ட வெள்ளை காதர் சட்டையுடன் மொட மொடக்க காட்சி தரும் அவன் எப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வருகிறான் என்கிற உண்மை முகத்தில் ஓங்கி அறைந்தது. அவனைப் பற்றிய எந்த உண்மை நிலையை உணராதிருந்தது குற்ற உணர்வை ஏற்படுத்தியது.ஒரு கட்டத்தில் என் நிலைமையை புரிந்து கொண்ட பெருமாள் அது அவனது குடியிருப்பிற்கு வெகு அருகில் இருக்கும் அந்த ரசாயன ஆலையின் கழிவில் இருந்து வருகிறது என்றான் . அதன் பொருட்டே இன்று இவ்வளவு களேபரம் . அதிர்ச்சியாக இருந்தது .ஒரு நிமிடம் நிற்க முடியாமையை ஏற்படுத்திய அந்த மாசு நிறைந்த சுற்றுச் சூழல் அவர்களுக்கு பழகிய ஒன்றாக இருந்தது . அந்த தொழிற்சாலை வந்தது முதல் ஏதாவதொரு வகையில் அன்றாட சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள் . சற்று நேரத்தில் அந்த ஊர் பெரியவர் யாரோ ஒருவர் எங்களை நோக்கி கைகளை நீட்டி வசவுகளை வாரி விட்டுக்கொண்டிருந்தார் , அவர் குடிகாரர் என்று முதலில் நினைத்தேன் எங்களை திட்டியபடி வெகு அருகாமையில் வந்துவிட்டார் , அவர் குடித்திருக்கவில்லை என்பதை சிறிது நேரம் கழித்தே உணரமுடிந்தது . “இது இன்றோடு முடியப்போவதில்லை மேலும் சிக்கலை உருவாக்கும் . இப்படி எத்தனை நாளைக்கு இரவில் உங்களால் வர முடியும்என கேள்வி எழுப்பினார் . உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரின் பெயரை சொல்லி அதன் பிண்ணியில் அந்த ஆலை நிர்வாகம் வளர்ந்து வந்ததை விளக்கினார் அது நீண்ட காலமாக இருந்துவரும் சிக்கல் , மேலும் அது பல காலம் அங்குதான் இருக்கப்போகிறது . நிரந்தரத் தீர்வு என ஒன்றில்லைஎன்றார் . திரும்பவும் அதே அனுபவம். அரசியலால் அணைத்திற்கும் தீர்வு கண்டுவிட முடியாது என மீளவும் ஓங்கிச் சொன்ன யதார்தத குரல்


என் முதிரா இளைமையின் காரணமாக அதை முற்றும் சரி சேர்த்து விட முடியும் என்பது ஒரு மிகை நம்பிக்கை என்பதும் , அது மெல்ல உடைந்து போய்க் கொண்டும் இருந்தது . அந்த சிக்கலுக்கு பின்னால் உள்ளவர் யாரென தெரிந்தும் அவரது  செல்வாக்கு அவரை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாமையை உருவாக்கியது . நங்கள் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் மாற்று கட்சியினரும் சிலர் இருந்தனர் . அவர்களில் மூத்த ஒருவர் என்னிடம் பேசியது எனக்கு ஆரம்பத்தில் மகிழ்வாக இருந்தாலும் நான் செய்யக்கூடுவது என்ன என்கிற புரிதலை மெல்ல அடைந்தேன் . அவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் , அந்த பகுதியை சேர்ந்த மூத்தவர் சிலர் எங்கள் செயல்களை விமர்ச்சித்த போதும் அவர் தான் சொன்னவற்றில் உறுதியாக இருந்தார் . இரவு நேரம் ஏறிக்கொண்டே வந்தது நான் வீடு திரும்பியாக பேண்டும். மெல்ல காரை நோக்கி சென்றதும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் என் கார் வரை என்னுடன் வந்து எங்களை வழியனுப்பி வைத்தார் . வழியில் நிறைய பேசினார் . கண்ணன் தலைவராக இருந்த காலத்தில் இது போல தொண்டர்களின் சிக்கல்கள் அவரால் நேரடியாக தலையிட்டு மட்டுமே தீர்க்கப்பட்டது . அதிகாரம் உள்ளவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி செய்வது வளர நினைப்பவர்கள் அதை நோக்கி சென்று தான் தீர்க்க முடியும் என்றார் .அதற்கு எந்த பதவியில் இருப்பது  முக்கியமல்ல நேரடியாக அணுகுவதே அதை தீர்க்க வல்லது என்றார் .தேவை தொண்டர்களை ஒருங்கு திரட்டும் பலம் என்பதாக இருந்தது .

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 96 அழைப்பிதழ்