வெண்முரசு கூடுகை. 84 . வெண்முரசு நாவல் வரிசையில் ஒன்பதாவது நாவல் “வெய்யோன்” பகுதி 7 பேசு பொருள் “நச்சாடல்” என் உரையாடலின் எழுத்து வடிவம். பல மும்மணைகளை கொண்டதாக இருப்பது கவனிக்கத் தக்கது
- படகின் மறுமுனையில் பாய்த் தொகுதிக்கு அப்பால் இருந்து பறந்தெழுந்த வெண்பறவை ஒன்று ‘வாக்!’ என்று கத்தியபடி அவர்களின் தலைக்குமேல் பறந்து சென்றது”
இங்கு ஒரு பறவை தனது “வாக்” என்ற தனது வாக்கால் சூதனான கர்ணனுக்கு சொல்ல அவன் நிஷாதனை ஷத்திரியனை துவந்த யுத்தத்தை நிறுத்துகிறான்
- வாக் . ஒரு சொல் ஒரு குறியீடு அது ஒரு நிகழ்வை அது நிகழும் போது பிறருக்கு புரியாது தள்ளி வைக்கிறது ..அதிலிருந்து பெரும் நிம்மதியை தருகிறது. ஆனால் அது பிறிதொன்றின் துவக்கமாகவும் அமைகிறது.
- 3.பொதுவாக வெண்பறவை அமரர் துதிநாதம்,தூய்மை, தூது ,மாறுதல் போன்றவற்றை குறிக்கிறது
- 4.தமிழ் இலக்கியத்தில் வெண்பறவை பயணம், நகர்தல், வேளாண்மை நிகழ்வுகளில் புதிய தொடக்கம் எனப் பொருள்படும்.
- இங்கு வெண்பறவை பறந்து செல்லுவது அந்த கடந்த காலத்திலிருந்து புது பாதைக்கு செல்கிறது என்பதை குறிக்கும்.
- குறிப்பாக துரியனின் நிகழ இருக்கும் பெரும் மாற்றத்தை முன்வைக்கிறது உடல் வழியாக நிஷாதனும் ஷத்திரியனும் ஒன்றென ஆகி பின் என்ன வாக மாற இருக்கிறான் என்பதன் குறியீடு.
“அயோத்தியிலிருந்து வந்த நான்கு பாவாணர்களுடன் அமர்ந்து முதற்பெருங்கவியின் காவியத்தை படித்தேன். அதன் முதல் வரியை மூன்று முறை படிக்கச்சொன்னேன்” என்றான்.”
- “மா நிஷாத!” என்றான் கர்ணன்.
- “ஆம்.‘வேண்டாம் காட்டுமிராண்டியே நீ அழியக் கடவாய’ இல்லையா?” கர்ணன் தலையசைத்தான். “உங்கள் காவியங்கள் அனைத்தும் அந்த ஒற்றை வரியைத்தான் உள்ளூர கூவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அசுரர்களாகிய நாங்கள் உங்களைப்பார்த்து அவ்வண்ணம் கூவுவதில்லை.”
இங்கு நிஷாதனை ஒரு சூதன் தடுத்து நிறுத்த முடியவில்லை.
- மா நிஷாத!
- 4.இது ஒரு பறவைக்காக வால்மீகி நிஷாத வேடனுக்கு இட்ட தீச்சொல்.
– இது ராமாயணத்தில் வால்மீகி முனிவர் முதலில் உச்சரித்த முதல் கவிதை வரி:
“மா நிஷாத பிரதிஷ்டாம் த்வமக்ஷயம்…அதாவது: “அரக்கர் போன்ற வேட்டைக்காரனே, நீ இங்கு சுகமாக இருக்க வேண்டாம்.”என்று ஒரு பறவையை (குறும்புள்ளியை) கொன்ற நிஷாத வேட்டைக்காரருக்கு வால்மீகியின் தீச் சொல் இதற்கான விளக்க உரை வேறொரு வடிவமாக மா என்னும் சொல் மாஹாலக்ஷ்மி யை குறிக்கிறது நிஷம் என்றால் இருப்பிடம் ஶ்ரீநிவாசன்.
2. “கர்ணனிடம் புன்னகை செய்து “வடங்களில் ஏறி விளையாடும் ஜராசந்தனை மட்டுமே தாங்கள் பார்த்தீர்கள் அங்கரே. அதை நம்பி என்னை இங்கு அழைத்து வந்தீர்கள். இப்போது இவ்வஞ்சங்கள் அனைத்தும் நிறைந்த என்னைக் கண்டு பிழை செய்துவிட்டதாக உணர்கிறீர்கள் அல்லவா?”என்றான்.
3. கர்ணன் “ஆம், உண்மையில் அவ்வாறே உணர்கிறேன்” என்றான்.”
இங்கு கர்ணனின் பிழைக்கு முன் இருவர் அவரது நிலையில் நிற்க கர்ணனின் இடம் தடுமாற்றமடைகிறது.
இந்த்சூழலில் எனக்கு பூரிசிரவசுவுடன் கர்ணனை ஒப்பு வைக்க தோன்றுகிறது.
ஜராசந்தன் தனது திட்டங்களை முன்னெடுக்க விரும்புகிறான்.
கர்ணன் ஒரு தருணத்தில் ஜராசந்தனின் வஞ்சநோக்கான செயல்களை எதிர்க்க விரும்பினாலும், துரியோதனனுக்கான நட்பு காரணமாக ஜராசந்தனை விட்டு விலக முடியாத நிலைக்குப் போகிறான்.
ஜராசந்தன் புறத்தோற்றத்தில் ஒரு வீரனாகவும், மறுபுறம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த தந்திரங்களையும், வஞ்சகங்களையும் பயன்படுத்துபவனாகவும் இருப்பது இங்கு வெளிப்படுகிறான்.
கர்ணனுக்கு ஜராசந்தனின் இந்த செயல்களில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
கர்ணனின் நேர்மை, அவன் உணர்ச்சிகளை மறைக்காத தன்மை வெளிப்படுகிறது. அதே சமயம் மதிப்பீடுகளின் பிழை அதே உணர்வு நிலைக்கு செல்லும் இயல்பு உள்ளவான இருக்கிறான்.
ஜராசந்தனின் வஞ்ச நிறைந்த ஆளுமை கர்ணனுக்கு நேரடியாகத் தெரிகிறது.
அரசியல் நட்புகளில் இருக்கும் ஊசலாட்டம், மதிப்பீட்டில் வரும் மாற்றம் ஆகியவை நாவலில் நுணுக்கமாக வெளிப்படுத்தப்படுகிறது.
விலங்கு நியாயத்தை முன்வைக்கும் நிஷாதன் தன்னை மனிதனாக அவன் கருதவில்லை.
“மைந்தர்கள் கொல்லப்பட்டதைக்கூடவா? என்றான் சுபாகு. “ஆம், என் எதிரிகுலத்து மைந்தர் அவர்கள்.” துச்சாதனன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.
துச்சலன் “அறமறியாதவரா நீங்கள்? என்றான்.
“என்ன அறம்? அம்மைந்தர் வளர்ந்து போருக்கு வந்தால் கொன்று குவிக்கமாட்டோமா என்ன?”
உரத்த குரலில் “அம்மைந்தர் என்ன பிழை செய்தார்கள் மகதரே?” என்றான் சலன். “போரில் உங்கள் மூத்தவரும் அங்கரும் கொன்றுகுவிக்கும் எளிய வீரர்கள் மட்டும் என்ன பிழை செய்தனர்?” என்றான் ஜராசந்தன். “இரக்கமற்ற சொற்கள் என்று துச்சாதனன் தலையசைத்தான்.
“இரக்கம் என்ற ஒன்று எந்தப் போர்வீரனிடம் உள்ளது? எல்லை வகுக்கப்பட்டு இடம்பொருள் குறித்து நம்மவர் பிறர் என கண்டு எழுவதன் பெயரென்ன இரக்கமா?”
கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். “நான் எளியமலைமகன். என் எண்ணங்கள் மலைக்குடிகளுக்குரியவையே” என்றான் ஜராசந்தன்.
“அப்படியென்றால் இளைய யாதவர் செய்ததில் என்ன பிழை?” என்றான் கர்ணன்.
“படைகொண்டு சென்று இளைய யாதவன் மதுராவை வென்றது முற்றிலும் முறையானதே. கம்சரின் நெஞ்சு கிழித்ததை நான் ஏற்கிறேன்.
அவன் மதுராவின் அத்தனை படையினரையும் கொன்றழித்தான். அதையும் ஏற்கிறேன். அது அரசியல். என் நெஞ்சை அவன் கிழிப்பான் என்றால் அவன் நெஞ்சை நான் கிழிக்கலாம். படைகொண்டு செல்வதும் மண்
வென்று முடிசூடுவதும் ஆண்களின் உலகம். ஆனால் ஒரு தருணத்திலும்.
பெண்டிரின் நிறைமதிப்பு அழியும் செயல்களை ஆண்மகன் செய்யலாகாது.
“துச்சாதனன் “மூத்தவர் இந்திரப்பிரஸ்தத்தின் அணையாச்சுடரை இறுதிவரை காப்பதாக வாளேந்தி சூளுரை உரைக்கப் போகிறார்” என்றான்.
ஜராசந்தன் திரும்பி துச்சாதனனை நோக்கி ஒருகணம் சொல்லுக்குத் தயங்கியபின் “ஆம், அது இயல்பே. அஸ்தினபுரியின் அரசர் நல்லுள்ளம் கொண்டவர் என்று நானும் அறிவேன். உடன்பிறந்தாருக்கு மூத்தவராக ஒழுகுவதே குலமூத்தோன் கடன்” என்றான்.
“இந்திரப்பிரஸ்தத்தின் அணையாச்சுடருக்கு மறுபக்கம் வாளேந்தி நிற்கவிருப்பவர் இளைய யாதவர்” என்று கர்ணன் சொன்னான். “என்றேனும் ஒருநாள் களத்தில் அஸ்தினபுரியும் துவாரகையும் கைகோத்து ஒருபுறமென நிற்க நேரலாம். எதிர்ப்புறத்தில் மகதம் இருக்கும்.” “ஆம், அதை நான் அறிவேன்” என்றான் ஜராசந்தன். “அதனால் என்ன? போரிடுவதும் மடிவதும் ஷத்ரியர்களின் கடன். அதற்கெனத்தான் இங்கு தோள்கொண்டு வந்துள்ளோம்.
துரியோதனனிடம் “அதன்பொருட்டு என் உளம்கவர்ந்த அஸ்தினபுரியின் அரசரிடம் நான் இன்று பகைமை பற்றி கொள்ள வேண்டுமா என்ன?” என்றான்.துரியோதனன் அதற்கு மறுமொழி சொல்லாமல் மீசையை முறுக்கிக்கொண்டிருந்தான்.”“துரியோதனனின் முகத்தில் அரசர்களுக்குரிய பாவைச்செதுக்குத் தன்மைக்கு அடியில் உணர்வுநிலையாமை தெரிவதை கர்ணன் கண்டான்.
“பிறிதொருமுறை நாம் எக்களத்தில் சந்திப்போம் என்றாலும் நான் உயிர் கொடுப்பேனேயன்றி உங்களை வெல்வதில்லையென்று வாக்களிக்கிறேன் துரியோதனரே” என்றான் ஜராசந்தன்.திகைத்து தலைதூக்கிய துரியோதனன் “என்ன சொல்கிறீர்? உயிர் கொடுப்பதா?” என்றபடி மீண்டும் அவனை தழுவிக்கொண்டு “எக்கணத்திலும் உங்களுக்கு எதிரியென்று களம் நிற்கமாட்டேன் மகதரே. உங்களுக்கென என் உயிரும் என் தம்பியர் உயிரும் இன்று அளிக்கப்படுகிறது” என்றான்.“தசைகளினூடாக நீங்கள் ஒருவரை ஒருவர் அறிவதுபோல்“வேறெவ்வழியிலும் அறிய முடியாது” என்றான். “ஆம், உண்மை. நான் இந்த மற்போரில் தழுவியதுபோல எப்போதும் எவரையும் தழுவியதில்லை” என்றான் ஜராசந்தன். “ஏதோ ஒரு கணத்தில் ஒரு பெரும் கருப்பை ஒன்றுக்குள் இரட்டையராக நாங்கள் உடல் பின்னி குருதிக்குள் சுழன்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.”
இந்த மாபெரும் மானுட ஆட்டத்தில் இங்கிருந்து “வாக்” என பறவை சொல் ஜராசந்தனை எந்த மாற்றமும் அடையாதவனாக. துரியனை தன்னற உறுதிபாட்டிக்கும். முழு தமோ குணத்திற்கும் கர்ணனை அடுத்த குழப்பத்திற்கு நகர்த்தி செல்கிறது. ஜெ வின் வெண்முரசில் அவரது பாணி சொல்முறை என்பது சில பகுதிகளில் தகவலாக, இளிவரலாக, பக்கம் பக்கமாக எழுதி அதில் ஒரு புள்ளியில் பல திரிகளை ஒன்றிணைக்கும் பின்னி பிணைந்து அடர்த்தியாக வைத்து விடுவதுண்டு அவ்வகையில்.
இங்கு மூவர் மூன்று குணத்தில் மூன்று ஸ்தானத்தில் நிற்கிறார்கள் மூன்று பாவங்களில் மற்றும் மூன்று தளங்களில் இருந்து இந்த பகுதியை அனுகலாம்
தமஸ்-ரஜஸ்-ஸத்வ
மிருகம்-மனிதன்-தேவன் குணங்களினுடான கலவை. ஸ்தாயி / விஷய பாவம். அல்லது சாமான்யம் - விசேஷ தளங்களில் செயல்பாடுகள் என வரையறை செய்யலாம்
ஜராசந்தன்- முழு காட்டாளனாக சற்றே சத்திரிய நிறம் கொண்டவனாக. தமோ குணம்,மிருக மற்றும் சாமான்ய தளத்தில் தன்னை முன்வைக்கும் தெளிவு.துரியோதனன் - முழு ஷத்திரயனாக சற்று மூர்க அரசனாக. பின் முற்றும் மாற்றமடையும் ஒருவனின் இறுதி கணத்திற்கு ஊழ் அழைத்துச் செல்வதாக.ராஜச குணமுள்ளவனாக சாமான்ய தளத்தல்.கர்ணன் அறத்தில் நிற்பதில் குழப்பம் உள்ளவனாக தெளிவற்றவனாக தனக்கான ஆன்மீகத்தை கண்டடைய இயலாதவனாக பிறர் அறிவுறுத்தினாலும் உள்ளிருந்து எழும் இருளின் சாயல் கொண்டவனாக.பூரிசவசு போன்ற முதிரா சிறுவனாக இல்லாமல் புது முயற்சிகளில் தயங்காது தொடர்ந்து ஈடுபடுபவனாக அதன் வழியாக தன் ஆன்மீகத்தை சென்று தொட முயற்சிப்பவனாக சத்துவ குணம் ஓங்கப் பட்டவன் என்பதால் இந்த அலைக்கழிப்பிற்கு ஆளாகிறான்.
முடிவை தர்க்க ரீதியில் எடுக்காதவனாக. ஒவ்வொரு முறையும் எடுத்த பின் அதை நியாயப்படுத்த தர்க்கங்களை தேடுபவனாக தோன்றுகிறான்.

























