https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 ஜூலை, 2025

மணிவிழா - 65 * தனிமையின் அரசன் *

 ஶ்ரீ:



10.07.2025


* தனிமையின் அரசன் *







சட்டமன்றத்தை மையப்படுத்திய அரசியல் வேறுவகை. அதில் பொது மக்களுக்கு நேரடியாக செய்ய ஏதுமில்லை. அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் இணைக்கும் சமரசப்புள்ளி மட்டுமே அதன் வழிமுறைகள் அரசியல் சரிநிலைகளை ஒட்டி நிலையற்றதாக அவ்வப்போது மாற்றமடைந்து கொண்டே இருப்பது. மேக்ரோ & மைக்ரோ எனப்படும் இருவேறு அரசியலை தொடர்புறுத்தும் மையமாக தான் அரசு எப்போதும் இருக்கிறது. அதை தவிர்த்து கட்சி தொண்டர்கள் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு இவற்றிற்கு  அப்பால் பொதுமக்கள் உள்ளே வருகிறார்கள். நேரடியாக தங்கள் மனுக்களுடன் வரும் பொதுமக்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் எப்போதும் அலைகழிக்கப் படுகிறார்கள். “மேக்ரோஅரசியல்  சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களது மாநில கட்சி மற்றும் அவர்களின் தலைமையை  மையங் கொண்டது. “மைக்ரோஅரசியல் அவர்களின் வழியாக அல்லது பெரும்பாலும் அவர்களை நிராகரித்து சிறு குழுவாக அமைச்கத்துடன் தொடர்புறுத்துகிறது என்பதால் அவை

மேக்ரோ அரசியலுக்கு ஒருவகையில் எதிரானதும் கூட.


அப்படி அவை பல்வேறு இழைகளாக பிண்ணி பினைந்து அமைச்கத்தை அடைகிறது. சட்டமன்ற அமைச்சரவை அரசு ஊழியர்கள் வேலை அந்த இழைகளை பிரித்து அவற்றிக்குரிய இடத்தை அடைய வைப்பது. சண்முகம் முதல்வராக இருந்த போது அந்த செயல்பாட்டு முறை இறுதிவரை நிகழவேயில்லை. இவற்றின் பின்னால் இருப்பது நுண்மை அரசியல் அதை வழி நடத்தும் மாநில அலகை அணுக்கமாக அறிந்த யாரும் முதல்வருக்கு உதவியாக அவரால்  நியமிக்கப்படவில்லை. அது இணை அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்ள வல்லது ஊழல் அங்கிருந்து கிளைக்கிறது என உறுதியாக அவற்றை செயல்படுத்த மறுத்துவிட்டார் . அவர் நினைத்தது முற்றிலும் சரி . நடைமுறையில் சட்டமன்றம் சமரசங்களால் மட்டுமே ஆனது என்பதால் அதன் உள்ளூழல் தவிர்க்க இயலாது ஆனால் கட்டுப்படுத்த முடியும். அனைத்து இடத்திலும் முதல்வர் சண்முகம் தன்னை முன்வைத்ததால் இரண்டு வித சிக்கலை நேரடியாக எதிர் கொண்டார். அது அவரை அலைக்கழித்தது. அனைவரின் ஆவேசத்தை சற்றும் குறைக்காது அவரது தலையில் இறங்கியது.


ஆட்சியென்பது பல நிலை மனிதர்களை சமரசத்துக்கு இட்டுச் செல்லும் சமன் புள்ளிகளான சரடுகளை கையாளத் தெரிந்தவர்களின் உலகம். அதன் நுண்மைகளை சண்முகம் அறியாது போனார் என சொல்ல இயலாது. பின் ஏன் அது நிகழ்ந்தது. அவர் அங்கு நிலவிய முதல் நிலை பதட்டங்களுக்கு தீர்வு கண்ட பிறகு அதன் அடுத்த உள்வட்ட சிக்கலுக்குள் வரலாம். அதுவரை அவரை தன்னை நம்பியவர்கள் காத்திக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைத்தையும் தலைகீழாக்கியது. அவசர உலகில் யாரும் யாருக்காவும் காத்திருக்க மாட்டார்கள். சிக்கல் அலையலை என வந்து மோதும் அந்த கணம் பல மதகுகள் வழியாக அவற்றின் வேகத்தை மட்டுப் படுத்தும் வழிமுறைகள் உருவாக்கப்படவில்லை. தன்னை ஊழலுக்கு அப்பால் உள்ளவராக நிலைநிறுத்ததனமையஅரசியலை முன்வைத்து அந்த அலைகளின் விசையை எதிர் கொள்ள இயலாமல் வீழ்ந்து போனார். யாரையும் நம்ப மறுத்தார் அனைவரும் ஊழல் செய்யும் வாய்பிற்கு அலைகிறார்கள். அதன் வழியாக தனக்கும் ஆட்சிக்கும் இழி பெயர் உருவாக்கிவிடுவார்கள் என அஞ்சினார். அதை தடுப்பது முதல் வேலை என்கிறகருத்தியலுக்குவந்து சேர்ந்தார் அது ஏறக்குறையஒன்மேன் ஆர்மி”. சட்டமன்றத்தில் அதற்கு எந்த பெறுமதியும் இல்லை. தனியொருவராக நின்று கட்சியை வழிநடத்தியது போல ஆட்சியையும் கொண்டு செல்ல நினைத்திருக்கலாம். அதில் வெற்றி பெறும் வாயப்பே இல்லாத சூழலில் அனைவராலும் வெறுக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டார்


ஏறக்குறைய அதுவே என் விஷயத்திலும் நடந்தது புதுவை காங்கிரஸ் கட்சி அரசியலில் அன்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி மிக முக்கிய இடம். அடுத்த கட்ட அரசியல் நகர்விற்கு காத்திருந்ததுஅனைவரும் எதிர்பார்த்தது நான் அந்த இடத்திற்கு உட்கட்சி தேர்தல் வழியாக வந்தமர்வேன் என்று. தில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அது சம்பந்தமாக தில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் வழிகாட்டலை பெற்றிருந்தேன். கட்சி தலைவர் பதவியை சண்முகத்திடம் இருந்து தட்டிப் பறித்து தலைவரான நாராயணசாமியை அது எரிச்சலடைய செய்தது. சண்முகம் முதல்வரானதும் எனக்கு இணையாக இளைஞர் காங்கிரஸ் மாநில அமைப்பை கைப்பற்ற பாண்டினை முன்னிறுத்தி நடந்த திட்டங்கள் முறியடிப்பட்டது நாராயணசாமிக்கு தெளிவான செய்தியை சொன்னது


சண்முகம் முதல்வராவதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஆட்சி மாற்றத்தை ஊகித்து ஆட்சியின்மைக்ரோஅரசியலுக்கு உதவும்  குழுவை வடிவமைக்க துவங்கி இருந்தேன் . அப்போது முதல்வர் பதவி ரேசில் நாராயணசாமி முன்னணியில் இருந்தார். என் முயற்சிகளும் அதன் உள்நோக்கமும் அவருக்கு மிக துல்லியமாக புரிந்திருந்தது. சண்முகம் முதல்வராகும் எண்ணமற்று இருப்பவராக தன்னை காட்டிக் கொண்டார் அது உண்மையாக அல்லது பாவனையாக இருக்கலாம். நானும் நண்பர்கள் சிலரும் அவரை முதல்வர் வேட்பாளாராக முன் நிறுத்தும் திட்டத்தில் இருந்தோம். மூப்பனாரை இறுதி கணத்தில் சந்தித்து நாராயணசாமி சண்முகத்தின் வேட்பாளர் அல்ல என்பதையும் கண்ணனை தவிர்ப்பது ஆட்சிக்கு நல்லதல்ல என அன்றைய அரசியல் தேவைகள் குறித்து தெளிவுபடுத மூப்பனாரின் முயற்சியால் சண்முகம் முதல்வரானார்.


இளைஞர் காங்கிரஸிற்கு உட்கட்சி தேர்தல் என ஒன்று நடைபெற்றால் நான் வெற்றி பெறுவது உறுதி என்கிற சூழலில் தனது வழக்கமான தந்திர அரசியல் வழியாக தனது ஆதரவாளரான பாண்டியனை நியமிக்க பரிந்துறைத்து வெற்றி கண்டார். தேர்தல் என அறிவிக்கப்பட்ட சூழலில் அடிப்படையில் இது பெரிய முரண். நடைமுறை கட்சி அரசியலில் இதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை. முதல்வர் சண்முகத்தை கேட்காமல் அவர்கள் முடிவெடுத்திருக்க வாய்ப்பில்லை. அந்த சூழலில் அவர் என்ன சொன்னார் என எனக்கு தெரியாது . ஆனால் நான் உருவாக்கிய மாநில அமைப்பு மிக விஸ்தாரமானது. சமாளிக்க முடியாத அழுத்தங்களை அவருக்கு உருவாக்கக் கூடும் என ஊகித்திருக்கலாம். ஆனால் அது போன்ற அழுத்தங்களை பிரிக்கும் மதகுகளை அவர்களை உருவாக்கும் போதே செய்திருந்தேன். அதன் முதல் விதி தற்சார்பு கொண்டது அது சட்டமன்றத்தை எவ்வகையிலும் சார்ந்திராது என்பது 

அவர் அறிந்தது. ஆனால் தந்தை பிள்ளையை மறுப்பது போல இங்கு நிகழ்ந்தது அமர்ந்திருந்த பதவியின் அழுத்தம் மிகுந்த நிலையில் அவரிடம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாற்றம் பற்றிய செய்து வந்த போது அவர் வெறுத்துசரிஎன சொல்லியிருக்கலாம். செய்தி வெளியான பிறகு அவருக்கு நெருக்கமான பலர் வந்து அவரது பிழையை சுட்டிய பிறகு நிதானமடைந்தார் அதற்குள் எல்லாம் கைமீறி இருந்தது


என்னுடைய அரசியல் விலகலின் துவக்கம் இது நான் யாரை எனது குருவாக பின்புலமாக இருத்தி இருந்தேனோ அவர் அதிகார உச்சத்தில் இருந்த போது இது நிகழ்ந்தது என்பதுதான் முரண்நகை. அனுபவம் எதிர்மறையாகவும் விளையக் கூடியது. அனுபவத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழலில் அதை பிடித்து நிற்பதன் விளைவு எவ்வளவு அபத்தமானது. அனுபவம் கடந்த காலத்து புரிதல் அதற்கு நவீன காலத்தில் பெறுமதியில்லை. அதை புதிது புதிதென முளைக்க வைத்து புரிந்து கொள்ள வேண்டியது. அனைத்து சிக்கலுக்கும் தனது அனுபவ ரீதியிலான தீர்வை முன்வைத்தார். அவை காலத்திற்கு ஏற்காதவை. அவரை வந்து சந்தித்த எந்த சிக்கலையும் காது கொடுத்து கேட்க மறுத்தார். தனது ஆளுமையை புரிந்து கொள்ளாது தன்னை நிராகரிக்கிறார்கள் என எங்கிருந்தோ ஒரு சித்தாந்ததை பற்றிக் கொண்டார் அதை ஒட்டி அனைவர் மேலும் கசப்பு ஓங்க ஆரம்பித்து. தன்னை வீழ்த்த அனைவரும் ஒற்று சேர்ந்து சதி செய்கிறார்கள் என கொதிக்க ஆரம்பித்தார். அவர் காலத்து அதிகாரிகளின் அரசியலை தற்போதய நிலையுடன் ஒப்பிட்டது பெரிய பிழை அவர் தனக்காத அதிகாரிகளை கண்டடைய இயலாமல் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...