https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 18 ஜூலை, 2025

மணிவிழா - 66 * ஒன்றில்லிருந்து பிறிதொன்று *

 



ஶ்ரீ:



18.07.2025


* ஒன்றில்லிருந்து பிறிதொன்று *






இன்று ஏகாந்த தனிமையில் கடந்து சென்ற வாழ்கையில் நிகழ்ந்தவற்றை நினைவுறுகிறேன். இந்த வாழ்க்கை  வாழ்த்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருந்வைகளுக்கு பின்னால் நான்றியாத தொல் தெய்வம் புரிந்து கொள்ளவே இயலாத கணக்கு துல்லியத்துடன் அவற்றை எடுத்து செல்கிறது. அதை எல்லோர் வாழ்விலும் பொதுவில் வைப்பது என சொல்ல முடியாது காரணம் எளிதில் வெற்றி பெற இயலாத துறைகள் வியாபாரம், அரசியல்,ஆன்மீகம், இலக்கிய செயல்பாடுகள் போன்றவற்றில் அனைத்திலும் ஈடுபடும் வாய்ப்பும் அதனூடாக உருவான தனி அடையாளமும் செயலில் பெரிய வெற்றியை அடைந்து ஒரு புள்ளியில் இன்று இலக்கியம் தவிற பிற அனைத்திலிருந்து முற்றாக விலகி நான் நான் என மட்டுமேயாகி தனித்து நிறைவுடன் நின்று கொண்டிருக்கிறேன் . இளம் வயது முதல் எனக்கான தேவையை செய்து கொடுக்கும் உலகை எனது படைப்பூக்க செயல்பாடுகளால் உருவாக்கிக் கொண்டேன் எதன் பொருட்டும் யார் முன்பும் சென்று வேண்டி நின்றதில்லை தேவைக்கு ஏற்ற என் சுய தொழில் வழியாக நிறைவான பொருளாதாரத்தையும் அரசியல் வழியாக என் தனி அடையாளத்தை அதிகாரத்தை உருவாக்கிக் கொண்டேன். அவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டதில் ஒன்றில் விலகி பிறிதொன்றில் துவங்கி நிறைந்து நிகழ்ந்தவை.


இருந்தும் அனைத்திலிருந்தும் விலகும் எண்ணத்தை உந்துதலை எங்கிருந்து எப்போது அடைந்தேன். விலகல் இரண்டு விதமாக நிகழ்ந்தன ஒன்று அங்கு நிலவிய சமரசத்தில் நம்பிக்கையில்லாமல் அந்த பயணத்தில் ஒத்திசைய இயலாமையால் விலகியது. பிறிதொன்று அலப்பரிய அனுபவங்களை கொடுத்து அதற்காகவே அதனுள் நுழைந்த காரணத்தை சொல்லி என் முயற்சியில்லாமல் அங்கு நிகழ்வின் நிறையால் விலக வைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் என கெஞ்சாத குறையாக நின்ற போதும் ஒரு ஆசிரியனைப் போல காலம் என்னை அதிலிருந்து விலக்கி வைத்தது. ஏன் என்ற போதுஅனுபவம் அனுபவம் அடைஎன்றது. எதன் பொருட்டு இவ்வளவு அனுபவங்கள். அவற்றால் ஆவதென்ன. அனுபவங்களால் ஆவது ஒன்றில்லை அந்த அனுபவத்தின் வழியாக கற்றல் நின்று நிலைப்பது. அந்த கற்றலின் வழியாக பிறிதொரு வாய்பை எதிலாவது வழங்க இருக்கிறதா. தெரியவில்லை. ஆனால் இன்று நின்றிருக்கும் இந்த நிறை வாழ்கையில் இருந்து குறைவுபடும் எதையும் புதிதாக செய்யப் போவதில்லை


ஒட்டு மொத்த விலகல் மனப்பான்மை ஹரித்துவார், ரிஷிகேசத்தில் பயணத்தின் போது உருவானது என்கிற புரிதலுக்கு மிக மிக மெல்ல வந்து சேர்ந்தேன். அப்பாவிற்கு ஹரித்துவாரிலும்,ரிஷிகேஷிலும் நீர்கடன் செய்யும் போது அந்த முதல் மன அசைவை அடைந்திருந்தேன். பொங்கி பெருகி பனிமலையில் இருந்து சுத்தமாக பளிங்கு போல இறங்கி ஓடி வரும் சில்லிட்ட கங்கை சலனமற்று இருப்பது போல தோற்றமளித்தாலும் அலை அலையென நெளிந்து வழிந்தோடி பின் சட்டென உருவாகும் சுழல்கள் வழியாக எதையோ மீள மீள ஒற்றை சொல் போல ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தது. கரைக்கு மிக அருகில் ஒடிக் கொண்டிருந்தாலும் கால் வைத்தவுடன் அழம் குறைந்த பகுதியாக இருந்தாலும் நீரின் விசை திடுக்கிட்டு அஞ்சவைக்கும். நடுக்கி எடுக்கும் குளிரில் குளிக்கும் போது அதன் வேகத்தை அறிந்து திகைத்தேன். சங்கிலி இட்ட பாதுகாப்பான இடத்தில் குளிப்பது மட்டுமே ஆபத்தற்றது. அங்கும் முழங்காலுக்கு மேல் ஆழத்தில் அந்த தண்ணீரில் நிற்பது ஆபத்தானது ஆனால் வசீகரமாக இருந்தது. மரணமும் வசீகரம் தான்


கங்கை தேவ பூமி என சொல்லப்படுகிற மலைகளின் அடுக்கை விட்டு ரிஷிகேஷத்தில் தான் மனித உலகில் காலடி எடுத்து வைக்கிறது. அங்கு நிலவும் காற்றும் அதனுடன் சம்பந்தபட்ட ஒன்றாக இருக்கிறது. கங்கை நீருக்கு இணையாக வீசும் தோறும் உடலில் வேதியல் மாற்றம் போல ஒன்றை நிகழ்த்தி விடுகிறது. அப்போது உடல் எதையும் தடுக்கும் பௌதிக விதிகளுக்கு அப்பால் நிலை இழந்து வலைபோலாகி மொத்த காற்றையும் நீரையும் உள்புகுந்து வெளியேற அனுமதிக்கிறது. மன மாசுகள் அகற்றப்படுகின்றன. அங்கு யாரின் எந்த ஒத்திசைவும் இல்லாமல் அது தன் போக்கிற்கு அதை செய்து  கொண்டே இருக்கிறது. அதன் பின் பெருந்திட்டம் இருப்பதை உணரும் தருணத்தை வேறொரு இடத்தில் நிகழ்த்துகிறது அது அங்கு அதை அளிப்பதில்லை போலும் . குளிர்ந்த காற்று உடற்சூட்டை தொடர்ந்து அகற்றிக் கொண்டே இருப்பது போல  உளச் சூட்டை அகற்றுகிறது. உள்ளம் சில்லிடுகிற போது உள்ளே தேங்கும் நீர் கண்கள் வழியாக பெருகி வெளியேறுகிறது


நீர்கடன் முடித்து கண்களை அகற்ற இயலாத வசீகரிக்கும் கங்கையை எந்த எண்ணமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் . தன்மய உணர்வு மேலோங்கி பெருக கால் இடறுவது போல உள்ளம் முதன் முறையாக வருத்தமற்ற நெகிழ்ந்து நெகிழ்ந்து பின் இறுகும் மன அழுத்தம் உடல் எங்கும் நிறைந்து எழுந்து பரவி என் தனித்தன்மையை நான் இழந்து பிரிந்து பிரிந்து சூழ்ந்துள்ள அனைத்துடனும் ஊடுருவி கலந்தது போன்ற உணர்வை எழுப்பிக் கொண்டிருந்தது. சிந்தனை முழுவதுமாக இழந்த சித்தம் சிந்தனை உருவாகும் ஊற்று முணையை ஊதி அனைத்துக் கொண்டே இருந்தது. நிகழ்வதை உணர்ந்து கொள்ள அந்த இடத்தின் அமைதியை உள்வாங்கும் மனத்துடன் பல பரதேசிகள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெரிய மரத்தின் கல் மேடையில் நீண்ட நேரம் கங்கையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்


சட்டென மன அழுத்தம் ஏறி ஏறி வந்து உருவாகும் மன அசைவு கண்ணீர் மல்கி உளம் பொங்கி மனம் விடுதலை விடுதலை என ஆர்ப்பரித்து எழுந்தது. எதனுடன் கட்டப்பட்டிருக்கிறேன் எதிலிருந்து எதை நோக்கிய விடுதலையை அது சொல்கிறது உலகியலில் இருந்தா? என்னில் இருந்தேவா?. அதை நான் எப்படி செய்ய இயலும். இலக்கில்லாமல் செல்லும் அந்த பயணத்திற்கான இலக்கு ஒன்று உண்டு போலும் அப்படியான இடத்தை எப்படி அல்லது ஏன் அடைந்தேன் என புரியவில்லை அந்த கணம் வியாபாரம் அரசியல் முதலான அனைத்தில் இருந்தும் மனம் விலகிவிட்டிருந்தது. நடைமுறையில் சாத்தியமற்ற அந்த முடிவை ஏன் சென்றடைந்தேன் என தெரியவில்லை. ஆனால் வெறியேறும் உள்ளம் உறுதியாக இருந்தது காலம் அதை செய்து கொடுக்கும் என நம்பினேன். அதுவரை அனைத்திலிருந்தும் விலகி நின்று எனக்குள்ளும் புறமுமாக நிகழ்வதை வருத்தமும் கண்ணீருமாக பார்த்துக் கொண்டிருந்தேன். காலம் தனது கைகளில் என் சூழலை எடுத்துக் கொண்டதை ஒரு புள்ளியில் தெளிவாக பார்கக முடிந்ததுஅது ஒரு புயல் போல அடித்து என்னை வேறோடு பிடிங்கி எடுப்பது வீசியது போல ஒரு எளிய செடி போல மண்ணில் ஆழ வேரூன்றி அத்துடன் ஒத்திசைந்து கொண்டிருந்தேன். சுமார் பத்து வருட காலம் வீசிய பெரும் புயல் நடுநடுவே விடுதலையளிக்கும் ஓய்வு இதமான காற்று மெல்லிய வெய்யிலின் ஒளி பின் அடுத்து அதே வேகத்தில் அந்த புயல் பல வேறு நிலைபாடுகளை கொண்டதாக வீசிக் பொண்டே இருந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...