https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 9 ஜூலை, 2025

மணிவிழா - 64 * முகங்களுக்கு மயங்கும் முதிரா சிறுவன் *

 ஶ்ரீ:



மணிவிழா - 64


09.07.2025


* முகங்களுக்கு மயங்கும் முதிரா சிறுவன் *







தலைவரென கட்சிப் பொறுப்பில் அசைக்க முடியாத தனியாளுமையாக, புதுவை அனைத்து கட்சி அரசியலில் யாரையும் தனக்கு இணை வைக்க முடியாதவராக, அனைவரையும் அரவணைப்பவராக, அரசு சூழ்தலில் யாராலும் அவதானிக்க முடியாத நுண் செயல்பாடுகளை உடைவயவராக, எதிரிகளாலும் குற்றம் சொல்ல முடியாதவராக 60 ஆண்டுகாலம் நீடித்தவர் 2001ல் முதல்வர் பதவியேற்ற 18 மாதங்களில் சண்முகம் தனது முதல்வர் பதவியில் இருந்து அவமானகரமாக வெளியேறியது அதிர்ச்சியும் திகைப்பும் கொடுத்திருந்தது. அவரால் பதவியில் நீடிக்க இயலாது என்பதை யேனாம் இடைதேர்தல் நடந்த அந்த ஆறு மாதத்திற்குள் அவதானித்திருந்தேன். ஆனால் அவமானகரமான வெளியேற்றம் அளவிற்கு தன்னை இட்டுச் செல்வார் என நினைக்கவில்லை. அது அவரது அரசியல் பிழையா அல்லது அனைத்தையும்தன்மயம்என தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அரசியல் சரிநிலைகளில்சமரசம்செய்து கொண்டதா? இவை இரண்டில் ஒன்று என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். இந்த பதிவுகளுக்கு அவ்வளவே போதுமானது என நினைக்கிறேன்.என்னுடையஅடையாளமாதல்குறித்த அரசியல் கட்டுரை பதிவுகளில் இவை குறித்து வரிவாக எழுதியிருக்கிறேன். அவற்றையே இங்கு முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிப் பாக்கிறேன்


அதுவரை அவர் அடைந்த அத்தனையும் இழக்க துணிந்தது ஏன்? அதை அவர் அறிந்திருந்தாரா,அவற்றில் ஒன்றிற்கு ஒன்றை ஈடு வைக்க முடியுமா? என்கிற கேள்விக்கு நிரந்தரமாக பதில்லைஎனக்கு புரியாதது இதுநாள் வரை அவர்தன்னறம்என கொண்டவை எவையும் பொய்யல்ல என அறிவேன். அது ஒருவகை தவ வாழ்வு. அவற்றை  உள்வாங்கி வாழ்வியலில் பொருத்திக் கொண்டவை அத்தனையும் இந்த பதவியை நோக்கியா? அதை அடைந்தபின் வேறு எதுவும் தேவைபடாத ஒன்றா முதல்வர் பதவி?. பதவியை அப்படிக் குழப்பிக் கொள்பவரா சண்முகம்?. அடைந்த பதவியில் நிலைத்திருக்க வேறு எதையாவது பற்றிக் கொள்ள அதுவரை தடையென சுமையென நினைத்த அத்தனையும் இறக்கி வைத்தாரா? அவர் அடைந்த் பேரும் புகழும் ஆளுமையும் பல பத்தாண்டுகளில் உருவாகி வந்தவை அதை முழுவதும் முதல் ஆறு மாதத்திற்குள்ளாக இழந்து போனார் . இதை ஊழ் என சொல்லுவதை தவிர வேறில்லை


பதவியை தனக்கு பொருந்தாத சட்டையாக உணர்பவரின் பதட்டமும்,மிகச் சரியாக தனக்கு பொருந்துபவை என எண்ணி மயக்கமுறுபவர்க்கும் உள்ள இடைவெளியில் உறைகின்றன அத்தனை விடைகளும் அதற்கான காரணங்களும் . அவரது வெளியேற்றத்திற்கு சொந்தக் கட்சியே காரணமாகியதை புரிந்து கொள்ள முடிந்தது . அவர்களை நன்றி கெட்டவர்களாக ஆக்கியதா? என கேட்டுக்கொண்டால் பாதிக்கும் மேலாக பொருந்தாது என நினைக்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவர் முதல் முறை 2000ல் முதல்வரான போது அவர் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆறு மாதத்தில் ஏனாம் தொகுதி உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணாராவ் விலக அங்கு போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். அப்போதே அவரை பல அலருக்கு இட்டுச்சென்றது. முதல் முரண் பின் ஒரு போதும் பிறிதொன்று தேவையாகாத முழு முரணாக அவருக்கு வாய்த்தது . யேனாம் தேர்தலின் போது சண்முகத்திடம் இருந்து அதுவரை நான் அறியாத பிறிதொருவர் எழுந்து வந்தார். நிச்சயம் அது நான் சந்தித்திராத சண்முகம். யேனாமில் முதல் முறையாக அவருக்கு எதிராக என்முன் வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் பதிலில்லாமல் திகைத்து நின்று கொண்டிருந்ததை நானே பார்த்துக் கொண்டிருந்தேன். அவமானமாக உணர்ந்த நாட்கள் . அதுவரை அவரது தன்னறம் என சொல்லப்பட்டவைகள் அவரை விட்டு முழுமையாக விலகிக் கொண்டிருந்ததையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க இயலவில்லை . அங்கேயே அவரது நீண்டகால அனுக்கர்கள் அவர் மீது துவக்கி வைத்த அதிருப்தியை அவரால் எதிர் கொள்ள முடியவில்லை. அவற்றிக்கு  எதிரான தர்க்கத்தை வைக்காமல் அனைவரையும் மொட்டை வசை சொல்லால் விலக்கி வைத்த போது அவர் தன்னளவில் அவர் தோற்றிருந்தார். அதை ஒரு போதும் அவரால் சரி செய்ய இயலவில்லை. அதை அவர் அறிந்திருந்தாரா? என தெரியவில்லை 


2001ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் போட்டியிடவில்லை ஆனால் மீண்டும் உறுப்பினராக இல்லாமல் முதல்வராக பதவியேற்று நீடித்தார். இம்முறை அவருக்கு யாரும் தங்கள் தொகுதியை விட்டுக் கொடுக்காத சூழலில் ஆறுமாதம் கடந்து முதல்வர் பதவியை விட்டு வெளியேறினார். அந்த ஒன்னரை ஆண்டு காலம் கட்சிக்குள் பெரும் சர்சை பொருளாக உருவெடுத்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை நான் இங்கு வைக்க முயலவில்லை. அவர்கள் வேறு தளத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவரை விட்டு விலகிய அனைவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முகத்தை விதந்தோதி, பணிந்து செயல்பட்டவர்கள் அவர்கள் அனைவரும் எளிய மனிதர்கள் பெரிய அரசியல் கனவு என எதையும் கொள்ளாதவர்கள்

தலைவரின் பின் நிற்பதை வாழ்நாள் பெருமையாக கொண்டவர்கள் அவர்கள் அனைவரின் ஆழ்மனத்தின் வழியாக கொண்டிருந்த அங்கீகாரத்தால் உருவானது சண்முகத்தின் இடம். ஒரு கணத்தில் ஒட்டு மொத்தமாக அது துடைத்து எடுக்கப்பட்டது தான் வினோதம்


தலைவரில் இருந்து முதலவர் பதவி வரை என்கிற குறுகிய கால பயணத்தின் வழியாக அவர் அடைந்திருந்த மாற்றத்தால் பெற்ற இழிவும் நஷ்டமும் சொல்லில் அடங்காதவை. எங்கு தனது வெற்றியை உறுதி செய்ய அவற்றை இழக்க முடிவு செய்தார் என்பது அரசியல் விவாதங்களால் முடிவு செய்ய இயலாது


தனக்கான தனித்துவமான இடம் பிறரால் செல்வாக்கு செலுத்த முடியாதவராக கசப்படைந்தவர்களை நோக்கி தொடர்ந்து உரையாடுபவராக இருந்தவரிடம் முதல்வர் பதவி என்னும் அது அளித்தது என்ன விலக்கியது என்ன? அதன் வழியாக அவரிடம் அனைவரும் அவரிடம் எதிர்பார்த்தது என்ன? ஏன் அதை செய்யத் தவறினார்? கடந்த 30 ஆண்டுகளில் பலர் முதல்வராக வந்தமர அவர் நேரடியான முறைமுகமான காரணமாக இருந்தவர் அந்த பதவியில் ஊடாடும் நிழல் என்ன என்பதை அறியாதவரில்லை.தன்னை எந்த நிழலும் வந்து தீண்டாத இடத்தில் தன்னை வைத்திருந்தவர் என்கிற மறுக்க முடியாதவராக இருந்தும் எங்கே அந்த பெரும் தவறு நிகழ்ந்தது. அது தவறுதானா! அல்லது பெரும் வல்லமை கொண்டு பல முகங்களை காட்டி விளையாடும் பேரியற்கைக்கு முன்னால் அனைவரும் முதிரா சிறுவர்கள் தானா?


இந்த பதிவுகள் வழியாக பல  துறைகளில் உச்ச நிலையில் இருந்து சமரசம் செய்து கொள்ள விரும்பாதவனாக நான் வெளியேறியதன் பின்னணியில் இந்த பாடம் இருந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து கற்றவைகளை கொண்டு என்னை தொடர்ந்து வரையறை செய்து கொண்டே இருக்கிறேன். அங்கிருந்து நான் பெற்றுக் கொண்டது என்ன என்ன? என கேட்டுக்கொண்டு இங்கு அவற்றை எனது மணிவிழா பதிவில் நீட்சியாக முன்வைத்தேன். எனது மணிவிழா குறியீட்டளவில் மிக முக்கியமாக உணர்கிறேன். வாழ்நாள் முழுவதும் பெற்றும் பரிமாறியதும் பின்பற்றியதும் என்ன என்பது பற்றியதாக இருந்தது. அவற்றை முன்வைத்து எனது அன்றாடங்களை எப்படி வரையறை செய்து கொண்டதை இங்கு நினைவுறுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...