ஶ்ரீ:
பதிவு : 593 / 783 / தேதி 06 நவம்பர் 2021
* நம்பிக்கையின் உலகு *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 68.
-அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்-
தன்னில் எழும் அறத்தின் குரலால் சீண்டபடாதவர் எவரும் இல்லை அதை கடக்க நினைப்பவருக்கு அங்கிருந்து பிறிதொரு குரல் எதிர்மறையான எழந்து உலகியல் நியாயங்களை முன்வைத்து அறத்தின் குரலை பின்னுக்கு தள்ள முயல்கிறது , அதை ஏற்று அதனால் கொண்டு செல்லப்படுபவர் தனது சிந்தனை வழியாக ஆழ்மனதில் நிகழும் கோணலை அறிந்து கொள்வதில்லை . அது சிந்தனை போக்கையும் அதிலிருந்து எழும் செயல்பாடுகளையும் பாதிக்கிறது . தனது அறத்தை உலகியல் காரணங்களை கொண்டு மறுதளித்து வெல்வதாக நினைக்கும் ஒருவர் பின் ஒருபோதும் அதனுடன் உரையாட இயலாதாகிறார். அதன்பின் அது சாதகமான உலகியல் காரணங்களை மட்டுமே தொடர்ந்து முன் வைத்து கொண்டே இருக்கிறது . ஒரு மாளாப் போர் . உலகில் அறம் திகழ்ந்து கொண்டிருக்கிறது . உலகியல் கருத்துக்களை கடந்து செல்லும் ஒவ்வொருவருடனும் அது பழகிய விலங்கு போல அவன் விரும்புபவைகளை மட்டும் அவன் முன்னே எப்போதும் வைக்கிறது . அது புறவுகில் தன்னை நிலைதிறுத்தம் என நம்புகிறான் பின் ஓயாத போர் எங்கோ ஒரு புள்ளியில் புறம் வென்றுவிடுகிறது . இரண்டையும் இழக்கும் கணம் நிலையிழிவை உருவாக்குகிறது . நினைவுகளை அது தன் ஒழுங்கில் அடுக்கத்தொடங்கிவிடுகிறது அதன் பிறகு அதன் உச்சமென்பது கழிவிரக்கம் மட்டுமே. அங்கு தெய்வங்கள் பேருரு கொள்கின்றன . ஒவ்வொரு முறையும் உலகியல் நியாயங்களை மறுத்து உள்ளே ஆழத்தின் ஒலிக்கும் அறத்தின் குரலை கண்டடைகிறவனுக்கு அது அனுக்கமாகிறது .
அறம் இங்கே உலகம் உருவான காலம் முதல் நிலை கொண்டிருக்கிறது . ஆனால் காமம்,கோபம்,வருத்தம் போல அது மானுட இயல்பில் வைக்கப்படவில்லை . அது
தெய்வங்களின் ஆடல் களம். அதிலிருந்து காத்துக்க கொள்ள அறம் பற்றிய ஆயிரக்கனக்கான புத்தகங்கள் உருவாகி மனிதினில் நிலை கொள்ள முயன்று கொண்டே இருக்கிறது. அது உலகியலில் திளைப்பவர்களுக்கு எதையும் சொல்லவது நிலை நிறுத்துவது பற்றி கருதுவதில்லை. அதை தங்களது ஆழ்மனதில் உணராத யாருமில்லை. சமீபத்தில் ஒருவருடன் உரையாடும் போது அவர் சொன்னார் “நான் ஆழ்மனத்துடன் பேசுவதில்லை, அது எப்போதும் மிக மோசமானவற்றை முன் வைக்கிறது” என்றார். அவரது தவிப்பு எனக்கு ஒவ்வாமையை கொடுத்தது . தானாக எழும் ஆழ்மனம் எதிர்மறையாக முதலில் துவங்குவதை அறிந்திருக்கிறேன். நான் அவற்றில் மேலும் கவனத்தை குவிப்பதில்லை பதறுருவதில்லை அதை இல்லை இல்லை என ஓங்கித் தள்ள முயற்சிப்பதில்லை . தள்ளும் தோரும் அவை முன்னிலும் பெரிதாக வளர்வதை பார்த்திருக்கிறேன். அதை நோக்கி “ஆம் இப்போ என்ன”? என்கிற கேள்வியுடன் அதை கடந்திருக்க முயற்சித்திருக்கிறேன் . அதை செய்வதற்குறிய ஆற்றலை குரு கொடுக்கிறார் . அதை அவர்கள் பாடமாக சொல்லுவதில்லை, வாழ்ந்து நம்முன் வைக்கிறார்கள். அரசியலில் நான் சண்முகத்தை அப்படித்தான் பார்க்கிறேன். அவர் குறையற்றவர் என எப்போதும் சொன்னதில்லை . ஆனால் அவரது சம்காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னும் அவரை சுற்றி வாழ்ந்தவர்கள் எளிய உலகியலால் அரசியலின் உன்னதத்தை மாற்றி தங்களின் அசட்டுத்தனத்தை முன்வைத்த காலத்தில் அப்படி இல்லை அறம் என்கிற ஒன்றை பற்றி இந்த நவீன உலகிலும் நிலை கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை அளித்தார் . இந்த பதிவுகள் முழுக்க அவரைப்பற்றிய என் விமர்சனங்களை வைக்க எனக்கு தயக்கமில்லை . அதை சேர்த்தே அவரிடம் இருந்து பெற்றிருக்கிறேன்.
அன்று மதியம் வீட்டில் மதிய உணவின் போது யாரோ சந்திக்க வந்திருப்பதாக எனது தங்கை சொன்னார் . அது பாஸ்கரன் அனுப்பிய நபர் நான் அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்து வந்தேன் அவர் என்னை பற்றிய தகவல்களையும் கேட்டுப் பெற்று சில படிவங்களை நிரப்பி என்னை கையொப்பமிடச் சொன்ன பின் “மாலை சந்திக்கலாம் அதுவரை வெளியில் செல்லாதீர்கள் வீட்டில் இருங்கள்” என்றார் . அவருக்கு வழியனுப்ப வாசலுக்கு வந்த போது கவனித்தேன் அவர் வருவாயத்துறை ஜீப்பில் வந்திருந்தார் . தேர்தல் அவரசரம் என சிகப்பு மையில் அச்சடிக்கப்பட்ட காகிதம் ஒட்டப்பட்டருந்தது . அன்று மாலை நான்கு மணிக்கு மறுபடியும் அவர் வந்த போது எனது பிறப்பு சான்றிதழ் கொடுத்தார் . வருமானம் குறித்த சில ஆவணங்கள் மேலும் சில படிவங்கள் மேலும் சில கையெழுத்துகள் . மீண்டும் நாளை காலை சந்திக்கலாம் என்று சொல்லிச் சென்றார் . அவர் என்னிடம கொடுத்துவிட்டு சென்ற சான்றிழதழ்களை பார்த்துக் கொண்டிருந்தேன் அவை அரசாங்கத்தில் பல துறைகளில் இருந்து பெறப்பட்டவை . சில ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது , ஒன்றை பெற்று அதனடிப்படையில் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் கிடைப்பது . புதுவை நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் கொடுத்த தேர்தல் துறைக்கு கொடுக்கப்பட வேண்டுய விண்ணப்த்துடன் இணைக்க வேண்டியது . தனிப்பட்ட முறையில் அவற்றை விண்ணப்பித்தால் கிடைக்க சில வாரங்கள் மாதங்கள் கூட ஆகலாம் ஆனால் அவை அனைத்தும் இரண்டு மணி நேரத்தில் பெறப்பட்டிருந்தது உயர் மட்ட அரசியலின் செல்வாக்கை முதல் முறையாக அன்று உணர்ந்தேன் .
வேட்பாளர் இரண்டு முகவர்களை நியமிக்க வேண்டும் . இரண்டாவது முகவர் கரியமாணிக்கம் ஞானப்பிரகாச ரெட்டியார் என அதில் இருந்தது . அவர் வைத்திலிங்கத்தின் அனுக்கர் மட்டுமல்ல உறவினர் அவரை இரண்டாவதாக கொண்டு வந்திருந்ததால் கொடுக்கப்பட்டிருக்கும் பெருப்பின் கனம் தெரிந்தது . அரசியலில் தொடவேண்டிய முதல் இலக்கு அது என எடுத்துக் கொண்டேன். அரசியல் என்பதன் முழு பரிணாம் பற்றி தெரிந்து கொள்ள அது நல்ல துவக்கமாக இருந்தது . எனக்கான அரசியலை நான் பின்னர் 1997 களில் துவங்கிய போது அந்த பயணம் அரசு நிர்வாகத்துடன் பேசும் திறன் அடைவது குறித்து திட்டமிடப்பட்டது . அரசு நிர்வாகத்துடன் உரையாட சட்டமன்றத்திற்குள் சென்று அடையவேண்டிய ஒன்றல்ல . அங்கும் அவர்கள் அமைச்சர்களை சார்ந்து அதை செயல்பட வேண்டிருக்கும் . நான் கம்யூனிஸ பாணி அரசியலை கொண்டிருந்தேன் . அதில் அதன் ஆதீத லட்சியவாதம் இருந்ததில்லை . நான் என்னை நடைமுறைவாதியாக புரிந்திருந்தேன் . அரசு அலுவலர் முன் ஒரு திரள் ஒற்றைக் குரலை முன்வைக்கும் போது அது சொல்லுவதை அவர்களால் தவிற்க இயலாதது . அரசின் உள்ளூழல் காரணமாக அந்த குரல் புறக்கணிப்பட்டாலும் அதை எதிர்த்து பொது வெளியில் நின்று போராடும் வல்லமையை அடைவதை எனது அரசியலின் அடிப்படை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக