https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 நவம்பர், 2021

அடையாளமாதல் * நகரும் பலிகள் *

 


ஶ்ரீ:



பதிவு : 594  / 784 / தேதி 14 நவம்பர்  2021


* நகரும் பலிகள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 69.





உப்பளம் அரசு விருந்தினர் விடுதியில் மரைக்காயரால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளின் வெளி வராண்டாவில்  நின்று கொண்டு எதிரே உள்ள அரங்கில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தின் முடிவுக்காக காத்திருந்தோம் . அந்த விடுதி ஏறக்குறைய ஆங்கில் “U” வடிவ அமைப்பு கொண்டது அதன் ஒரு முனையில் இருந்து கொண்டது இரண்டு முனையும் இணையும் மையப் பகுதியில் இருந்த அரங்ககை எந்த தடுப்பும் இன்றி பார்க்க முடிந்தது . முதல் அமர்வில் கண்ணனுக்கு எதிராக மண்ணாடிப்பட்டு ராஜராம் ரெட்டியார் தானும் முதல்வர் பந்தயத்தில் இருப்பாதாக சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்திய பின் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட இப்போது மீண்டும் கூடியிருக்கிறது . தில்லி மேலிடம் முதல்வர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற தனது மரபில் உறுதியாய் இருந்தது , அதே சமயம் அதை நியமனம் செய்ய விரும்பவில்லை என்பதையும் தெளிவாக சொல்லிவிட்டார் பிரதமர் நரசிம்மராவ் . தெலுங்கை தாய் மொழியாக கொண்ட வைத்திலிங்கம் தான் போட்டியில் இல்லை என்பதை முன்னமே சொல்லி விட்டார் . இந்த மொத்த ஆட்டத்தின் பின்னணியில் நரசிம்மராவ் இருந்தார் என்கிற அலர் உண்டு . ஆனால் அது எந்த ஆதாரமும் ஒரு ஊகம் மட்டுமே .


நேற்று இரவு நாங்கள் மூப்பனாரை சந்தித்து வெளியில் வந்து உள்ளே பேசிக் கொண்டிருந்த பாலனுக்கு காத்திருந்த போது வைத்திலிங்கம் தனியாக காரில் வந்திறங்கி மூப்பனாரை பார்ப்பதற்கு காத்திருப்பு அறைக்குள் சென்றார் . உடன் யாருமில்லாமல் தனித்து வந்திருந்தது அவரது தேர்ந்த அரசியல்  அனைவரையும் திகைக்க வைத்தது . எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் நாளை அவர் முதல்வர் என்று . ஆனால் அப்படி ஒன்று இல்லை என்பது போல தனியாக வந்திருந்தார் . தனது செல்வாக்கை காண்பிக்க வேண்டுய நிர்பந்தம் தனக்கு இல்லை என சொல்லவந்தாரா , அல்லது தன்னை அனைத்து முன்னணி தலைவர்களுக்கு பொதுவில் இருப்பது தன்னை தேர்ந்தெடுக்க வேண்டிய சிறந்த அரசியல் முன்வைப்பதாகவும் இருந்தது . பிறரைப் போல கும்பல் கூட்டி மெனக்கெட வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தாரா ? எனத் தெரியவில்லை . நான் ஆச்சர்யத்துடன் அவர் உள்ளே செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன் . வைத்திலிங்கம் அங்கு வெளியே  மூப்பனாருக்கு காத்திருப்பது உள்ளே தெரிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் பாலன் உள்ளிருந்து வெளியே வந்து வைத்திலிங்கத்துடன் பேசிய பின் நாங்கள் அனைவரும் அங்கிருந்து  கிளம்பிச் ணென்றோம்


அரங்கத்தின் வெளியே நிலவிய அமைதி உள்ளே ஒன்றுமே நடக்கவில்லை என்கிற உள மயக்கைக் கொடுத்தது அடுத்து என்ன நிகழ்கவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கையில் நேரம் கடந்து கொண்டேயிருந்தது . பொறுமை இழந்து நானும் சுப்புராயனும் வராண்டா வழியாக அரங்கத்திற்கு வெகு அருகில் சென்று நின்று கொண்டோம்எங்களுடன் ஊசுடு பெருமாளும் வந்து சேர்ந்த கொண்டான் . காவல்துறையினர் நாங்கள் அங்கு நிற்பதை அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்தேன் . ஆனால் அவர்கள் சில படிகள் கீழ் நின்று கொண்டு மேலே வருபவர்களை மட்டும் தடுத்துக் கொண்டிருந்தனர் . காவலர்கள் மீது எனக்கு  இன்னதென அறியாத ஒவ்வாமை உண்டு எப்போதும் அவர்களிடமிருந்து விலகி இருந்திருக்கிறேன் . அரசியலின் முதல் பாடம் காவல் துறையை கடந்து செல்லவது என பின்னாளில் அறிந்து கொண்டேன்அங்கு பேசிக் கொண்டிருப்பவற்றிற்கு நான் காது கொடுக்க . சுப்புராயன் நின்றிருந்த  கூட்டத்திற்கு உள் நூழைந்து சிறிது நேரத்திற்கு பிறகு வெளியேறி என் அருகே வந்து நின்று கொண்டார். சற்று நேரம் ஏதும் பேசவில்லை . கண்ணை சுழற்றிஇரண்டாம் சுற்று பேச்சு வார்தை கண்ணனுக்கு சாதகம்,ஏறக்குறைய அவர் முதலவாராவது உறுதிஎன்றார் . அது துக்க செய்தி போல இருந்தது . கண்ணன்முதல்வராவது எந்தெந்த இடத்தில்  எங்களுக்கு எதிராக அது நிற்கும் என என்னால் ஊகிக்க முடியவில்லை . கூட்டம் உள்ளிருந்து திருபுவனை விஜயன்  ஓட்டமும் நடையுமாக எங்களை நோக்கி வந்தான் . விஜயன் ஒரு வித்தியாசமான ஆளுமை பாலனுடன் இருந்தாலும் பிற எல்லா அணியோடும் இணக்கமாக இருப்பவன் . பாலன் செல்லும் எல்லா இடங்களுக்கும் அவருக்கு முன்பாக சென்று நின்றிருப்பான் அது போல பாலனை பற்றியெரியச் செய்வது பிறிதில்லை . ஏன் அப்படி செய்கிறாய் என்றால் அதிலொரு அரசியல் உண்டு என்று சொல்லி சிரிப்பான் . அவனிடம் அது விபரீத விளையாட்டு என பல முறை எச்சரி்த்திருக்கிறேன் . பலரை உதாசீனப்படுத்திய பாலனால் அவனுக்கு எதிராக நேராடியாக எதுவம் செய்ய முடிந்ததில்லை . திருபுவனை சட்டமன்றம் தனித்தொகுதி பெருமான்மை மக்கள் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் மத்தியில் கண்ணனின் அனுக்கனான ஜெயபாலுடன் முரண்பட்டு தன்னை வளர்த்தெடுத்தவன். பாலனின் தொண்டர் திரட்டும் அணியில் முக்கிய இடத்தில் இருப்பவன் என்பதால் அவனை எவ்வளவு காய்ந்தாலும்  பாலனால் அவனை ஒதுக்க முடியாது . கண்ணன் முதல்வராக வந்தால் அரசியல் ரீதியில் அடிபடும் முதல் ஆள் . அவனின் பதற்றம் புரிந்து கொள்ளக் கூடியது .


எங்களிடம்வாக்கெடுப்பில் கண்ணன் முதல்வராக தேர்ந்துக்கப்பட்டார் ஆனால் முடிவை தில்லித் தலைமைக்கு அறிவித்த போது சற்று காத்திருக்க சொல்லி இருப்பதாக செய்தி வந்திருக்கிறது என்று அவன் சொன்னவுடன் எங்கள் அருகே நின்று கொண்டிருந்த பெருமாள் வினோத ஒலி ஒன்று எழுப்பி உற்சாகத்தில் கைதட்டினான் . நங்கள் மிரட்சியுடன் அருகில் இருந்தவர்களை பார்க்க ஒரு கூட்டம் செய்தி அறிய வேகமாக எங்களை நோக்கி வந்தது . என்ன தகவல் என அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கலாம் ஆனால் இப்போது யாரை நம்புவது என தெரிநவில்லை . சுப்புராயன் ஊசுடு பெருமாளை சத்தமாக கண்டித்து அங்கிருந்து வெளியே அனுப்பினார் . விஜயன் கொண்டு வந்த தகவல் தான் அந்த கூட்டத்திலும் பேசிப்பட்டது . அங்கு கண்ணனின் ஆதர்வாளர்களே அதிகம் . கண்ணன் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகும் முடிவு அறிவிப்பது தடை பட்டதால் கொந்தளிக்கும் கூட்டம் எந்நேரத்திலும் தில்லி பார்வையாளர்களின் கவனத்தை எளிதாய் பெற வன்முறையில்  இறங்கும் . அது அங்கு முதல் நாளில் இருந்து நிலவிய அலர் . இப்போது நாங்கள் அதற்கு பலியாக கூடிய சூழலை பெருமாள் உருவாக்கித்தால் சுப்புராயன் அவனை கடிந்து அங்கிருந்து வெளியேற்றினார்  . கூட்டம் எங்களை விட்டு விலகி சென்றாலும், அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்நோக்கி இருந்தனர் . நான் கண்ணன் ஆதரவாளர் ரவிசந்திரன் எங்கிருக்கிறார் என் தெரிந்து கொள்ள விரும்பினேன் . அப்போதைய சூழலில் ரவிச்சந்திரன் வெளியே தென்பட்டால் அங்கு கலவரம் நிச்சயம் . அவர் கண்ணனின் வன்முறை முகம் . விடுதி முழுவதும் சுற்றிப் பார்த்த போது அரங்கின் வெளிச்சுற்றில் முதன்மை தலைவர்களுக்கு ஒதுக்கிய அறையின்   உள்ளிருந்து  மரைக்காயர் வெளி வர அவருடன் ஆவேசமாக பேசியபடி ரவிச்சந்திரன் வெளிவருவதை பார்த்தேன் . மரைக்காயர் அவருடன் சிரித்தபடி இருந்தாலும் சற்று கடுமையாக பேசுவதாக தெரிந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்