https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 26 நவம்பர், 2021

அடையாளமாதல் * சொல்லப்படாத விதி *

 


ஶ்ரீ:பதிவு : 596  / 786 / தேதி 26 நவம்பர்  2021


* சொல்லப்படாத விதி  * ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 71.


பாலன் அறைக்கு வெளியே பலகணியில் உட்லன்ஸ் பாலாவுடன் பேசிக் கொண்டிருந்தார் . துக்கம் கொண்டவர்களைப் போல ஒருவர் கையை ஒருவர் அவ்வப்போது தொட்டு கொள்வதில் ஆதரவாகப் பேசும் பாவனை இருந்தது . தேர்தலில் பாலன் தோல்வியுற்றது அங்கு பேசு பொருளாய் இருக்கலாம் . எப்படி பட்டவரையும் அசைக்கும் கணம் . பல பத்து வருடங்களுக்கு பிறகு அரசியல் தன்னிலை பற்றிய பெரும் கனவு கொண்ட அனைவருக்குமான சூழல் இது . காங்கிரஸில் இதுவரை  முதல்வர் பதவி பற்றிய முடிவு இரு முதன்மைத் தலைவர்களுக்கு ஊடானது இப்போது அவர்கள் இருவரும் பார்வையாளராக வெளியில் இருகிறார்கள். புதுவை அரசியலில் பிழைத்திருக்க விரும்பும் எவருக்கும் அனுசரித்து செல்ல வேண்டியவர்களுக்கு இங்கு இடமில்லை . அதில் சேராதிருந்த கண்ணன் இதோ தான் வளர்ந்து நிற்கும் இந்த நாளை நிச்சயம் கனவு கண்டிருக்க வேண்டும் . ஒரு வகையில் அவருக்கு இணையாக பயணம் செய்யக் கூடியவரான பாலன் இன்று அரங்கின் உள்ளிருந்தால் அரசியல் வேனு களம் நோக்கி சென்றருக்கலாம் .அல்லது பாலன் கண்ணனை மீளவும் பின் தொடர்ந்திருக்கலாம். உச்சகட்ட குழப்ப நிலையை அடையும் போதெல்லாம் அவர் கண்ணனை நோக்கி நாகர்ந்திருக்கிறார் . வைத்திலிங்கம் தன்னை முன்வைத்து ஆட விரும்பாததை ஒரு நுண் அரசியல் நகர்வு என கொண்டால் அரங்கினுள்ளும் அவரின் ஆதரவாளராக அங்கு செயல்பட பாலனுக்கு வாய்ப்பில்லை . இப்போது நடந்து கொண்டருப்பது கண்ணனுக்கும் சண்முகத்திற்கான நேரடி அதிகார மோதல் மரைக்காயர் நுட்பமாக கரைந்து கொண்டிருப்பதை அங்கு யாரும் அன்று கணித்திருக்க முடியாது . என்னை பார்த்ததும் என்ன? என்றார் பாலன் . நான் அறையின் வாசலை கண்ணால் காட்டி அங்கு சென்றவுடன் சற்று இடைவெளி விட்டு வந்தார் . நான் அவரிடம் மரைக்காயர் அவரை கூப்பட்டதை சொன்னேன் கண்களில் வெறுப்பு தோன்றுவதாக பட்டது . அது என்னவாக இருக்கும் என தெரியவில்லை. சற்று நேர அமைதிக்கு பிறகு என்னிடம் மாநில நிர்வாகிகளைத் தவிர பிற அணைவரையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னவர் மாடி வராண்டாவில் கூடியிருப்பவர்களை அறைக்குள் சென்று காத்திருக்க சொல்லி , சில நிமிடங்கள் அங்கு வருவதாக சொன்னார் . மரைக்காயர் அழைத்ததை நினைவுறுத்திய போது பிறகுபிறகு பார்க்கலாம்என்றார். நான் மரைக்காயரை சந்திக்கமலிருக்க எதிர் வழியாக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி சென்றேன் .


சுப்புராயன் , கமலக்கண்ணன், தாமோதரனை வழியில் சந்தித்து பாலன் சொன்னதை சொன்னேன் . தாமோதரன் கீழ்படிகள் வழியாக இறங்கிச் சென்றார் . வந்திருக்கும் தொண்டர்களை மெல்ல கலைந்து போக சொல்ல செல்கிறர் என புரிந்து கொண்டேன் . அங்கு எழும் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லி அவர் மேலே மீண்டு வர எப்படியும் அரைமணி நேரமாகும். நாங்கள் அறைக்கு வெளியே கூடியிருந்தவர்களை உள்ளே செல்லச் சொன்னோம் . எல்லா ஜண்ணல்களை திறந்து வைத்தும் அறை புழுக்கமாக வெப்பமடித்தது . யார் என்ன என்கிற கேள்விக்கு அங்கு பதில் சொல்லக்கூடியராக கமலக்கண்ணன் இல்லை அவரே குழம்பியவராக காணப்பட்டார் . சுப்புராயன் அரசியலின் முகமல்ல. சுடு சொல்லை பேசுபவர்  அவரிடம் யாரும் எதும் கேட்கும் நிலையில் இல்லை . கூட்டம் தனக்குள் நிகழ்த்திய உரையாடல் சொல்லின்றி காரவையாக எழுந்தது . நாங்கள் பாலனுக்கு காத்திருந்தோம் .


உள்ளே நுழைந்ததும் பாலன் ஒற்றும் பேசவில்லை சற்று நேரம் கழித்துநிர்வாகிகள் தவிர பிற எல்லோரையும் போகச் சொல்லியாச்சா”? என்றார் . தாமோதரன் சென்றிருப்பதை சொன்னேன் . அங்கு அறையில் சுற்றி நின்று கொண்டிருந்த கூட்டம் அவரை எரிச்சல் படுத்தியிருக்க வேண்டும் . “மாநில நிர்வகிகள் தவிர எல்லோரையும் கிளம்பச் சொல்லுங்கள்என்றார். ஏறக்குறைய அறை காலியானது . நாங்கள் மொத்தம் எட்டு பத்து பேர் இருப்போம் . கதவை மூடச் சொன்னவுடன் மூடப்பட்டது . நான் சுப்புராயனைத் தேடினேன் அவர் இரையெடுத்த பாப்பு போல பின்பக்க கடை கோடியில் இருந்தார். “கண்ணனைத் கூட்டம் ஏறக்குறைய தேர்ந்தெடுத்தது . சண்முகம் சென்னையில் நாராயணசாமி மூலம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியை சந்தித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கேட்க சென்றிருக்கிறார்கள்.அதிமுக வுடன் கூட்டணி என்பதால் அவர்களது ஆதரவு கடிதம் ஆளுனரிடம் கொடுக்கப்பட வேண்டும் . கண்ணன் முதல்வராக வர ஜெயலலிதாவின் ஆதரவில்லை என தில்லிக்கு வாய்மொழியாக சொல்லப்பட்டிருக்கிறது அதை உறுதி செய்ய  நாராயணசாமியும் வாழப்படி ராம்மூர்த்தியும் ஜெயலலிதாவை சந்திக்க சென்றிருக்கிறார்கள் . செய்தி உண்மையானால் வைத்திலிங்கம் முதல்வராக தேர்ந்தெடுக்கபடலாம். இன்னும் சற்று நேரத்தில் அது உறுதியாகவிடும் . முடிவு வெளியான பிறகு கண்ணனின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் அதனால் தான் தொண்டர்களை வெளியேற சொன்னேன் . மரைக்காயர் துரோகம் செய்ததாக நினைத்தால் நாம்தான் முதலில் தாக்கப்படுவோம் . முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு நீங்கள் முதலியார்பேட்டை அலுவலகத்திற்கு சென்று காத்திருங்கள் ஓரிருவர் இங்கு இருங்கள், அரி நீ என்னுடன் வாஎன்றார்.


நான் பாலனை தொடரும் போது சுப்புராயனை பார்த்து விட்டுச்  சென்றேன் . சற்று இடைவெளியில் ஊசுடு பெருமாளும் விஜயனும் வருவது தெரிந்தது . நான் சற்று பதட்டமானேன். விஜயனைப் பாலன் பார்த்தால் சிக்கல் என்ன செய்வதென்று தெரியவில்லை . அவனை நான் வரவேண்டாம் என சொல்ல முடியாது அது அவனுக்கும் பாலனுக்குமானது .உள்ளே அரங்கில் முடிவுகள் எட்டப்பட்டு எந்த நேரத்திலும் அறிவிக்கபட இருக்கிற என்பது அங்கு நிலவிய சூழலில் புரிந்து கொள்ள முடிந்தது . நான் திரும்பவும் ரவிச்சந்திரனை தேடினேன் . முதல் முறையாக ஒரு வன்முறை நிகழ இருப்பதை தெரிந்து கொண்டதன் பலன் என் நெஞ்சு அடித்துக் கொள்வதை நானே கேட்க முடியும் என உணர்ந்து கொண்டதுதான் . பாலன் மரைக்காயரின் அறைக்குள் சென்றார்  நான் உள்ளே நுழையும் தருணத்தில் அரங்குக்குள்ளிருந்து செய்தி வந்து விட்டது . வைத்திலிங்கம் முதல்வராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அனைவரும் அரங்கின் வாசலில் குழுமத் துவங்கிவிட்டதால் இடம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானது . நேற்று யாருமில்லாமல் வந்தவரை திரும்பிக் கூட பார்க்காத இந்தக் கூட்டம் இன்று அவரது கடைக்கண் பார்வை பெற முண்டியடிக்கிறது . பதவியின் அதி வினோதங்களில் ஒன்று . இனி அவரது நண்பர்கள் உறவினர்கள் அனுக்கர்கள் என பலர் உருவாகி வந்து கொண்டே இருப்பார்கள். மரைக்காயர் அறையில் இருந்து வெளிப்பட்டார் . நான் அவரது முகத்தை பார்க்க விரும்பினேன். சற்றும் சலனமற்று இருந்தது . பின்னால் பாலன் இறுகிய முகத்துடன் வர மொத்த கூட்டமும் அறைக்குள்ளிருந்து வழிந்தது . உட்லன்ஸ் பாலா உற்சாக சிரிப்புடன் பிரமாண்டமான ரோஜா மாலை அதன் பூக்கள் அனைத்துப் பக்கமும் சிதறிப் பரவ வந்தார் . அந்த ஏசி அறையில் இருந்து பன்னீர் ரோஜாவின் மிகையில்லாத வாசனை எங்கும் சூழ்ந்து கொண்டது


அரங்கில் இருந்து முதல்வராக வைத்திலிங்கம் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வெளிப்பட்டார். எனக்கு பக்கத்தில் இருந்தவர் எனது காது ஜவ்வு கிழியமுதல்வர் வைத்திலிங்கம் வாழ்கஎன்றார் . நான் கண்ணனை தேடினேன். வைத்திலிங்கம் மரைக்காயரை நோக்கி வர மரைக்காயர் தனது பக்கத்தில் மாலையுடன் நின்றிருந்து உட்லன்ஸ் பாலா கைகளில் இருந்து மாலையை எடுத்து வைத்திலிங்கத்திற்கு அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து சொன்னார் . மாலையை பரிகொடுத்த உட்லன்ஸ் பாலாவிற்கு அங்கு என்ன நிகழ்கிறது என புரிவதற்குள் அவரை முன்டியடித்த கூட்டம் பின்னுக்கு தள்ளும் போதுதான் அவருக்கு கண்ணன் முதல்வரில்லை என்பது புரிந்திருக்க வேண்டும் . அது கண்ணனுக்காக என்று சொல்லி கட்டப்பட்ட மாலை . அவரை மேலும் மேலும் கூட்டம் பின்னுக்க தள்ள வயதான அவர் அதற்கு ஈடு கொடுக் முடியாமல் தள்ளாடியபடி பின்னால் சென்று மறைந்தார். நான அவரை திகைப்புடன் பார்த்தேன்

வாழ்க கோஷத்துடன் வைத்திலிங்கம் அந்த கூட்டத்தால் அடித்து செல்லப்பட்டு கானாமலானார் . மனதில் சட்டென ஒரு கசப்பு எழுந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...