ஶ்ரீ:
பதிவு : 595 / 785 / தேதி 19 நவம்பர் 2021
* முகங்களின் பின்புலம் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 70.
நான் கண்ணன் அணியின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனை அந்த கூட்டத்தில் தேடினேன். அவர் தேர்வு நடக்கும் அரங்கின் நுழைவாயில் அருகே நின்று கொண்டிருப்பதை சற்று முன்னர் பார்த்திருந்தேன் . அரங்கின் கதவிற்கு அருகே காவலர் குவிக்கப்பட்டிருந்தாலும் அவரை அங்கிருந்து வெளியேற்ற காவலர்கள் துணியவில்லை அதன் அருகே இருப்பதால் அவருக்கு முதன்மை தகவல்கள் தெரிந்து கொண்டிருந்தது . ஆனால் இப்போது அவர் அங்கு இல்லத்தால் மெல்லிய பரபரப்புடன் சுற்றி நோக்கிய போது தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் உள்ளிருந்து மரைக்காயர் வெளியே வர அவருடன் ஆவேசமாக பேசியபடி வந்து கொண்டிருந்த ரவிச்சந்திரனை நான் என் அருகே நின்றிருந்த சுப்புராயனை மெல்லத் தொட்டு சுட்டிக் காட்டினேன். பார்த்த உடன் சுப்புராயன் சிறிது பதட்டமடைவது தெரிந்தது . சுப்புராயன் நாங்கள் இருந்த இடத்திற்கு நேர் எதிரே அறைக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தில் யாரையோ தேடினார் . தாமோதரனையும் கமலக்கண்ணனையும் பார்த்தும் வருமாறு கையசைக்க அருகில் வந்தனர் அவர்களுக்கு மரைக்காயர் அறைக்கு வெளியே அவருடன் விவாதித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரனை காட்டினார் . அதற்கு என்ன அர்த்தம் என எங்கள் அனைவருக்கும் சொல்லாமல் தெரியும் . மரைக்காயர் ரவிச்சந்திரனை அமைதிப் படுத்திக் கொண்டிருக்க, சுப்பிராயன் தாமோதரனிடம் மரைக்காயரிடம் என்ன நிகழ்கிறது என விசாரித்து வர சொன்னார். அடுத்து என்ன செய்வது என நாங்கள் முடிவெடுக்க முதன்மை தகவல் முழுமையாக வேண்டும்.
தாமோதரனும் கமலக்கண்ண்னும் மரைக்காயரை நோக்கி நகர்ந்ததும் சுப்புராயன் என்னையும் அவர்களுடன் செல்லுமாறு சைகை செய்தார் நான் முதலில் தலையசைத்து மறுக்க அவர் மறுபடியும் உறுதியாக என்னை உடன் செல்லுமாறு சொன்ன பிறகு நான் சற்று இடைவெளியில் அவர்களை பின்தொடர்ந்தேன் . என்னை திரும்பிப் பார்த்த கமலக்கண்ணனுக்கு நான் உடன் வருவது ரசிக்கவில்லை . தாமோதனிடம் ஏதோ சொல்ல அவர் கமலக்கண்ணனிடம் இப்போது பேச வேண்டாம் என்றார் . நான் எதையும் பொருட்படுத்தாது அவர்களை தொடர்ந்தேன். மரைக்காயருக்கு மிக அருகில் சென்றோம் . நாங்கள் அனுகி வருவதை பார்த்து ரவிச்சந்திரன் அங்கிருந்து விலகினார் . நாங்கள் மரைகாருக்கு அருகில் சென்றவுடன் எங்களை நோக்கி நட்பாக புண்ணகைக்க தாமோதரன் “என்ன நடக்குது…ண்ணே ” என்றதற்கு மரைக்காயர் “முதல்வர் தேர்வு கண்ணனக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது என செய்திகள் சொல்கின்றன. சண்முகம் நாராயணசாமி வழியாக இறுதி நிகர்வை செய்கிறார்” என்றார் . “நாராயணசாமி எங்கிருக்கிறார் என கண்டறிய இயலவில்லை , அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதைப் பொருத்தே சண்முகம் நினைப்பதை ஊகிக்க முடியும்” என்றார் . மேலதிக தகவல்களை எங்களுக்கு சொல்ல அவர் விரும்பவில்லை என தெரிந்தது . நாங்கள் அவரிடம் இருந்து விலகி சுப்புராயனுக்கு தகவல் சொல்ல திரும்பினோம் . மரைக்காயர் என்னை பார்த்து “பாலன் எங்கே” என்றார் . நான் அவர் தேர்தல் நிகழும் அரங்கிற்கு அருகில் இருப்பதை சொன்னேன். என்னிடம் உடனே அவரை அழைத்து வரச் சொன்னார் . மரைக்காயர் என்னடம் பேசுவதை பார்த்து சற்று திகைத்தவர் போல பார்த்துக் கொண்டிருந்தார் தாமோமரன் . கமலக்கண்ணன் கண்களில் வெறுப்பு தெரிந்தது . நான் பாலன் இருக்கும் இடம் நோக்கி வேகமாக சென்றேன்.
அரங்கிற்கு அருகே சென்றதும் வெளியே நின்றிருந்த காவலர் என்னை தடுக்க முனையாதது ஆச்சர்யமளித்தது அவர் என் அருகில் வந்ததும் அவரிடம் “பாலனை பார்த்தீர்களா”?. என்றேன் அங்கிருந்த தலைமைக் காவலர் என்னை அடையாளங் கண்டு கொண்டது போல தலையசைக்க அந்த தடுப்பு விலக்கப்பட்டு வழி உருவாகியது . அறைக்கு அருகில் இருந்த அறையை காட்டினார்கள். என்னை அவர்களுக்கு எப்படித் தெரியும் என வியந்து கொண்டேன் . அரசியலாளர்களுக்கு காவல்துறையினர் ஒரு பொருட்டாகவில்லை அவர்களை கடந்து செல்பவரே முதல் கட்டத்தை கடக்கிறார்கள் . காவலர்கள் அரசியலில் நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் என்பதால் அரசியலின் அனைத்து கட்ட முதன்மைத் தலைவர்கள் , முக்கியஸ்தர்கள் என அனைவரையும் அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் . ஒரு இடத்தை அனுகமுடியாது அவர்கள் அமைத்து வைத்திருப்பது ஒரு மாய வேலி தயக்கமில்லாது அதை கடந்து செல்பவர்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வெளியாகும் வரை நம்மைத் தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. அவர்களுக்கு இடத்திற்கு தக்கவாறு நடந்து கொள்வது சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது அதில் எப்போதும் நெகிழ்வு தன்மை இருக்கும். ஆளுக்கும் சூழலுக்கும் தக்கபடி தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள் யாருடைய உத்தரவுமின்றி சரியாக செயல்படுகிறார்கள் .
அரசியலில் மாறுதல் நிகழ்வதை தனது இருத்தலியல் காரணமாக காவல்துறையே முதலில் கவனிக்கிறது பின் அங்கிருந்து மாநில முதன்மை அரசு நிர்வாகிகளை தொடர்புறுத்தலின் வழியாக துவங்கி வலிமை கொள்கிறது . அங்கிருந்து சங்கிலித் தொடர்போல அனைத்தையும் இணைக்கும் கண்ணியாக உருவெடுக்கிறது . வெற்றிகரமான அரசு என்பது உளவை முற்றிலும் சார்ந்து இயங்கு போது மட்டுமே நிகழ்கிறது . ஆனால் உளவு நிறுவனம் தரும் செய்திகள் ஒற்றப்படை தன்மை கொண்டது எந்த செய்தியையும் நேரடியாக சொல்லாது, அதில் விடப்பட்டிருக்கும் இடத்தை நிஜமான செய்தி மட்டுமே இட்டு நிரப்ப முடியும் . அதை மிகச் சரியாக ஊகிப்பதன் வழியாக யாரை எங்கு நிறுத்த வேண்டும், யார் எதை செய்யக்கூடும், யாரிடம் எதை எதிர் நோக்கலாம் ,யாரை ஒருபோதும் நப்பக்கூடாது ,யார் கலகக்காரர்கள் ,யார் நேர்மையாளன் என அரசு தலைமைக்கு முடிவெடுக்க அதற்கு அரசியல் சூழியல் கணிப்பு மற்றும் மானுட உளவியலில் அனுபவம் வாய்ந்தவர் தேவைபடுவர் . அவர்களை முன்னமே உருவாக்கி வைத்திருப்பவர் வெற்றிகரமான அரசுகளை அளிக்க முடிகிறது.
முதலவராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இவற்றை தொகுக்க நீண்ட காலமெடுத்தாலும் அது வெற்றிகரமாக இருப்பதில்லை. எந்த முன்னேற்பாடின்றி தற்செயலாக உயர் அதிகாரத்திற்கு வந்து சேருபவர்கள் அனைத்தையும் சிதைக்கிறார்கள் என்பதற்கு அதிமுக முதல்வர் s.ராமசாமி சரியான உதாரணம். சரியாக ஒருங்கப்பட்ட நிர்வாக அமைப்பு தனக்கு கிடைக்கும் உளவில் இருந்து சமூக உலவியலையும், அரசியல் தலைமை அனுபவத்திலிருந்து அதை நடைமுறைப்படுத்த சிறந்த நேரத்தையும் முடிவு செய்கிறது . அதைத் தொடர்ந்து எழும் அடுக்கடுக்கான முரணியல் தகவல்களை கூராய்வு செய்யும் தகுதியை உருவாக்கிக் கொடுப்பதுடன் அரசு,அதிகாரி,கட்சி அமைப்பினர்,பொதுமக்கள் என அனைத்தையும் மிகச்சரியாக தொடர்புறுத்துகிறார்கள் .
கண்ணனுக்கு மிகத் தெளிவான அதிகாரி வட்டம் அவர் தற்காலிக முதல்வராக வந்த போது அவருக்கு உருவாகியிருக்க வேண்டும் அது அரசியலில் அவரை எங்கு கொண்டு வைக்கும் என அறிந்தவர்கள் அஞ்சினர் . அரசாங்கம் அமைந்த பிறகு முதல்வர் தொடங்கி அமைச்சர்களின் தனி மற்றும் உதவி செயலாளர்கள் பெரும்பாலும் வருவாய்த்துறையில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள் . மிக மிக அரிதாக அனுபவமுள்ள அமைச்சர்கள் வேறு அரசுத் துறைகளில் இருந்து தங்களது உதவியாலளர்களை கேட்டுப் பெறுகிறர்கள். இருந்தும் அவர்களின் உதவியாளர்களில் ஒருவர் வருவாய்த் துறையினாராக இருப்பதையே பார்த்திருக்கிறேன் . வருவாய்த்துறையில் இருந்து வருபவர்கள் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கையாளக் கற்றவர்கள் என்றாலும் அவர்கள் தங்களது குறுகிய பல மட்ட இணை அரசயிலால் அனைத்தையும் முட்டு சந்திற்கு இட்டு செல்கிறார்கள் என்பதால் வெற்றிகரமான அரசு நிர்வகத்திற்கு அது உதவுவதில்லை என்பதுடன் கட்சி அமைப்பை சிதறிடித்து விடுகிறது . அவர்களுக்கு வருவாய்த்துறையில் இருந்த அனுபவம் யாரையும் கையாளமுடியும் என்கிற அசட்டுத்தன்மையைக் கொடுத்துவிடுகிறது ஆனால் பல கட்சி அமைப்பை சார்ந்தவர்களுடன் அரசை தொடர்புறுத்தும் போது விபரீதமாக இடத்தை சென்று தொட்டுவிடுவதை பார்த்திருக்கிறேன் . சண்முகத்தின் அறுபது வருட அரசியல் அனுபவம் அவர் செயலாளர்களின் சொதப்பலால் வீழ்ந்து போனது . தனியாளுமையை தக்கவைத்து கொள்ளும் அரசியல் தலைவர்களால் கூட தங்களின் முகத்தை காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை . காங்கிரஸில் மரைக்காயர் மற்றும் திமுக வின் D. ராமசந்திரன் போன்றவர்கள் அரசு நிர்வாக செயல்பாட்டளவில் மிக சிறப்பானது என்று சொல்லலாம். அதன் வெற்றிக்கு பின்புலம் அவர்களுக்கு அமைந்த உளவுத்துறையின் மிகச் சீரான உள்கட்டமைப்பு . மிக சரியான செயலாளர்களை தேர்ந்தெடுத்து போன்றவை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக