https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 27 ஜூன், 2021

அடையாளமாதல் * விளையாடால் *

  


ஶ்ரீ:



பதிவு : 579  / 769 / தேதி 27 ஜூன்  2021


* விளையாடால்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 57.





அரசியல் உச்ச நகர்வு நிகழ்வது அதன் இறுதி கணம்வரை உறுதியானவையல்ல . பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் உருவாகும் ஊகம் அவரவர் நம்பிக்கையாக மாற்றமடைந்து பிறரின் கருத்தியலுடன் முரணியக்கங் கொள்ளத்துவங்கிய பிறகு  மெல்ல தன் களத்தை அடைகிறது. அரசியல் முதலில் அவர்களின் ஆழ்மனங்களில் நிகழ்ந்து பின் அனைவரையும் இணைத்து ஒற்றை மனப்பரப்பாகி யாரும் எண்ணியிராத ஒன்று அதன் உச்ச கணத்தில் உயிர்கொள்கிறது . அது குமுகத்தின் உறுப்புகள் எளிய மானுடர்களைக் கொண்ட சமூகத்தின் ஆழ்மனம் அன்றாடத்தில் உழலும் அவர்களின் ஊகிக்கமுடியாத கோணத்தை முன்வைப்பதாக இருந்தும் அதன் உறுப்பான அவர்களை அது பரவசம் கொள்ள செய்கிறது ஏற்புடையது, ஏற்க இயலாதது என இரட்டை உணர்வுகளில் இருந்து அதன் மேல் புதுப்புதுக் கணக்குகள் சென்று அமர்ந்து கொண்டே இருப்பதை  திகைப்புடன் பார்த்திருக்கிறேன். அனைவரிடமும் தொடர்ந்து சலிப்பில்லாமல் உரையாடும் சண்முகம் அவர்கள் முன்வைக்கும் மிகை கணக்குகளில் இருந்து தனது பாதையை கண்டடைபவராக இருந்திருக்க வேண்டும் . இல்லையென்றால் சாமான்யனுடனான கணக்கில்லாத  உரையாடல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதோடு வீண் நேர விரையம் . உரையாடலை எந்த சூழலிலும் தக்கவைத்துக் கொள்ளும் சண்முகம் கசப்படையாத சிந்தனையை தனது அரசியல் வழிகாட்டியாக கொண்ட காந்தி மற்றும் காமராஜர் போன்றவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் . முதன்மை இடத்தில் உள்ள தலைவர்கள் தங்களின் கணக்கு ஊகம் போன்றவற்றின் நிகழ்சாத்தியத்தை அந்த உரையாடலில் இருந்து அடைகிறார்கள் பின் அவர்கள் அதிலிருந்து தங்களுக்கானதை மிக தெளிவாக வரையறை செய்து வைத்துக் கொள்கிறார்கள் . அதுவரை அனைத்து அரசியல் ஊகமும் நம்பிக்கையும் அனைத்தும் தகவல்களினாலான குப்பைக் குவியல்கள் மட்டுமே. அரசியலில் முடிவுகள் அதிலிருந்து எட்டப்பட்டு செயல்படுத்தப்படுவதில்லை , அவை யாரும் எதிர்பாராமல் முடிவுறுபவைகள் , பின்னர் இறுதியில்ஏக மனதானதீர்மானங்களாவதுண்டு . 1991 புதுவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்தல் கிட்டதட்ட அப்படி நடந்ததுதான்.


கண்ணன் முன்மொழியப்பட்டு ஏறக்குறைய முதல்வர் தேர்வு நிகழ்ந்து முடியும் தருவாயில் மண்ணாடிப்பட்ட ராஜாராம் ரெட்டியார் எழுந்து தானும் முதல்வர் பந்தயத்தில் இருப்பதாக சொன்னபோது அங்கு கூடியிருந்த அனைவரும் ஒரு சொல்லில்லாது திகைத்தார்கள், அவர்களுள் சண்முகம் அணியினரும் இருந்தனர். அது போல ஒன்று நிகழும் என அனைவருக்கும் தெரியும் சண்முகத்தின் தரப்பிலிருந்து கூட அதை ஒரு நாடகீயத் தருணமாக  ஊகித்திருந்தனர்,அந்த இறுதிக் கணம் எழுந்தது வந்த போது அதை துவக்கி வைத்தவரையும் அவர் முன்வைத்த விதமும் அதிலுள்ள அதீத ஒழுங்கைத்தான் அங்கு  யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண்ணன் ஏற்கத்தக்கவரல்ல என பல கோணத்தில் மறுத்து எழுபவார்கள் என  எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு மத்தியில் சண்முகத்தின் அணியினரும் திகைத்து அமர்ந்திருந்ததை கண்டபிறகே கண்ணன் உட்பட அனைவரும் அந்த ஆடலின் நுட்பம் புரிந்து அதிர்ந்தனர்.மண்ணாடிப்பட்டு ராஜாராம் ரெட்டியார் அதிகம் பேசாத அமைதியானவராக அறியப்பட்டவர் முதன்முறையாக சட்டமன்றம் செல்பவர்நிகழ்வில் துவக்கத்தில் இருந்து தான் போட்டியில் இருப்பதாக வைத்தியலிங்கம் சொல்லவில்லை . கண்ணன் விலக்கப்படும் போது அந்தக் கணி நழுவி தானாக தன் கைகளில் விழும் என அவர் நினைத்திருக்கலாம். அதுவரை மரைக்காயர் ஊகித்திருந்தது வைத்திலிங்கமும் உணர்ந்திருக்க வேண்டும் . ஆனால் நடக்காது என்கிற ஏமாற்றம் அவருக்கு இருந்திருக்க வேண்டும் . ராஜாராம் ரெட்டியார் வைத்தியலிங்கத்தின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்தால் சண்முகம் வைத்திலிங்கத்தை ஏற்கவில்லை என அறிவித்துவிட்டார். என்பது அங்கிருந்த அதிர்வை கூட்டியது . புதுவையில் ரெட்டியார் சமூகம் பொருளியல் ரீதியில் பலம் பெற்று பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை முடிவுசெய்பவர்கள் . அவர்களில் ஒருவரை சண்முகம் முன்வைத்தது சிறந்த அரசியல் சூழ்தல். முதல்வர் பதவிக்கு தகுதி அல்லது முன்னனுபவம் என்பது அவசியமில்லாததாக  அது வழிகாட்டுபவரை முன்வைப்பது நிகழ்வது என்கிற செய்தி உரக்க வைத்தியலிங்கத்திற்கும் சொல்லப்பட்டது. அதுவரை 1985 காங்கிரஸ் ஆட்சியில் கண்ணன் , வைத்தியலிங்கம் இருவரும் அமைச்சராக இருந்தனர் என்பதால் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே முதல்வர் வேட்பாளராக போட்டியிட முடியும் என்கிற தகுதி ரத்து செய்யப்பட்டு வைத்திலிங்கத்தை அனைவருக்கும் மத்தியில் கொண்டுவைத்தார் . கண்ணனை மறுப்பதானல் வைத்திலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் தனக்கில்லை என்பதுடன் அவருக்கு தனது ஆதரவில்லை என சண்முகம் அறிவித்தது கூடி இருந்த அனைவரையும் குழுப்பத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது . அது எளிய அரசியல் ஆடலை முன்வைக்கவில்லை. சண்முகம் தேர்தலில் தோற்ற பிறகு அவரில்லாத அரசு அமைய இருக்கிற சூழலில் அதுவரையிலும் அணியாக இருந்தவர்களை சிதறடித்ததிருந்தது முதல்வராக சண்முகம் இல்லாத நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாடுகளை தாங்களே எடுக்க முடிவு செய்திருந்தார்கள் என்கிற உளவுச் செய்தியால் யார் எந்தப்பக்கம் இருக்கிறார்கள்  என முதன்மை தலைவர்கள் சண்முகம் , மரைக்காயர் இருவரும் அந்த அறுதிக் கணக்கை அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்திருந்தார்கள் . சட்டமன்ற உறுப்பினர்களில் தங்கள் தனிப்பட்ட ஆதரவாக முதல்வரை அனுகுவார்கள் என்கிற நிலையை உருவானால் அவர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பையும் அதற்குறிய பேரத்தையும் தனித்து நடத்த முயற்சிப்பவராக அறியப்படுவார்கள் . அதுவே நிகழும் என கண்ணனும் கணக்கிட்டிருந்தார் . அந்த நிலையே அவருக்கு சாதகமானதும் . எனவே எதுவும் நிகழும் என சண்முகம் முடிவு செய்திருக்க வேண்டும். வைத்திலிங்கத்தை ஆதரித்தால் மரைக்காயருடன் அனைத்தையும் பங்கிட நேரிடும் என அவர் கணக்கிட்டிருக்க வேண்டும். இந்த நகர்வில் முதலில் அடிப்பட்டது மரைக்காயர் . சண்முகமும் அதைத்தான் மூன்று வகையிலான நகர்வாக  கணக்கிட்டிருக்க வேண்டும்


ராஜாராம் ரெட்டியாரின் அறிவிப்பு எதிர்நோக்காத கோணத்தில் இருந்து வந்ததால் அதிர்ந்து போன கண்ணன் அவரை சமாதானம் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை . அது முதலில் பேரத்திற்கான கதவுகளை திறந்து வைப்பது என அவரால் பிழையாக பார்க்கப்பட்டது . வெகு விரைவில் அப்படி அல்ல என்கிற இடத்தை அடைந்தார் . ஒன்றுக்கு மேற்பட்டவர் எழுந்ததால் மறுமுடிவை எட்டவும் தில்லிக்கு தகவல் சொல்லவும் மற்றும் முண்ணனி தலைவர்களின் கணக்கை அறிந்து கொள்ள அந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது . சிறிது நேரத்திற்கு பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது . எங்கும் பரப்பான சூழல் . கூட்டம் நடந்த இடம் உப்பளம் அரசு விருந்தினர் மாளிகை . மூன்று புறம் தங்கும் அறைகளால் சூழப்பட்ட இரண்டடுக்கு கட்டிடம் மத்தியில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்கு அதிகமான இடம் கார் நிறுத்தத்திற்கு என்றாலும் கார் உரிமையாளர்கள் அங்கு ஒரு போர்காட்சியை எதிர்பார்த்து அஞ்சி அனைத்து வண்டிகளையும் விருந்தினர் மாளிகைக்கு வெளியே சாலையில் நிறுத்தி இருந்தனர். கலவரம் முற்றினால் தப்பி செல்ல அது சிறந்த வழியாக தோன்றியிருக்கலாம் . கார்கள் சாலையை இரு பக்கமும் அடைத்து நிரப்பப்பட்டதால் ரயில்வே நிலைய நீர்தேக்க தொட்டியிருந்து தொடங்கும் சாலை பின்னர் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம் வரையிலும் அடைத்து நிரப்பப் பட்டிருந்தது. அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பிதுங்கிய கூட்டம் சாலை முழுவதுமாக ஆக்ரமித்திருந்து. அங்கிருந்து டீ , சிகிரெட்டுக்கு சிதறிய கூட்டம் உள்ளே வருவதும் போவதுமாக சுற்றியிருந்தவர்களைக் கலக்கிக் கொண்டிருந்தது .


புதன், 16 ஜூன், 2021

அடையாளமாதல் * கையிருப்பு யதார்த்தம் *

 



ஶ்ரீ:



பதிவு : 578  / 768 / தேதி 16 ஜூன்  2021


* கையிருப்பு யதார்த்தம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 56.





முதியார இளமை கனவுகளையும் அதன்மீது அதீத நம்பிக்கையை ஏற்றிவைத்துக் கொண்டிருப்பதால் அதில் ஏற்படும் இழப்புகள்  அதற்கு பொருட்டாவதில்லை .காலம் கண்முன் விரிந்து விரிந்து சென்று கொண்டே இருக்கிறது அதில் நாளை தனக்கான காலம் என்கிற அதன் அசாத்திய நம்பிக்கை வியப்பளிப்பது . தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் வாய்ப்புகளாக பார்ப்பது . எந்தவொரு கட்டத்தில் அது உடைந்தாலும் அதைப் பற்றிய புதிய எண்ணங்கள் நம்பிக்கைகள் எழுந்தபடி இருப்பது.பிறர் தோல்விவுற்றதை பார்த்த பிறகும் தான் அதில் தோற்கப் போவதில்லை என அனைத்திலும் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கை கொள்வது அதுவே இயங்கு விதியின் அடிப்படை விசை . அப்படிப்பட்ட அவர்களின் முயற்சியால் பல அடிப்படை கணக்குகள் முற்றிலும் புதிய இடத்தில் துவங்குவதை பார்த்திருக்கிறேன். 1991 புதுவை சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது அதுவரை இருந்த புதுவை அரசியல் களம் முற்றாக மாற்றமடைந்து மரைக்காயர் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கும் , சண்முகம் அறிவிக்கப்படாத மாநில முதல்வர் வேட்பாளராக சட்டமன்றத்திற்கும் களமிறக்கப்பட்டிருந்தார்கள் . சண்முகத்தை எதிர்த்து முதல்வராக மரைக்காயரால் முன்வைக்கப்பட்டவர் கண்ணன். கண்ணனுக்கு அவரது சொந்த தொகுதி மறுக்கப்பட்டபோது மரைக்காயர் தனது தம்பி இக்பால் போட்டியிட விழைந்த காலாப்பட்டுத் தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுத்தார். கண்ணன் சட்டமன்றத்திற்கு செல்வதனூடாக அடுத்து நிகழ வேண்டியதை முடிக்க அவர் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டேயாக வேண்டும் என்கிற மரைக்காயரின் கணக்கு ரகசியமானதல்ல . அதே சமயம் அதன் அடியாழத்தல் பிறிதொரு கணக்கு கூர் கொண்டிருந்தது . சண்முகத்திற்கு அடுத்தாக கண்ணனை பற்றி மிகத் தெளிவாக வரையறை செய்து வைத்திருந்தவர் மரைக்காயர் அவர் ஒருபோதும் கண்ணன் முதல்வராவதற்கு ஒப்பமாட்டார், தன்னுடைய முதல்வர் பதவி கைநழுவியது தற்காலிகமானது அதற்கு பிறிதொரு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையால் மாநில அரசியலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பியிருக்கலாம், அல்லது முதல்வராக வருபவர் தனக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என நினைத்திருக்கலாம் . வைத்திலிங்கம் மிகச் சரியான தேர்வாக அவர் கணக்கிட்டருந்தால் அது சரியானதே. சண்முகத்தின் தோல்வியில்  எந்த வகையிலும் நேரடியாக ஈடுபடுவதை தவிற்தார் . எப்படியும் தனக்கு எதிராக அது குறித்த குற்றச்சாட்டு இருக்கும் என அவருக்கும் தெரியும். காங்கிரஸ் அரசியலில் இதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை , தோல்வியுற்றவர் அதை சதி என சொல்லுவதெல்லாம் எளிய கள விளையாட்டு மட்டுமே மேலிடம் அதை பொருட்படுத்தாது. அரசியல் கணக்கு மிக எளிதானது . அது நிகழும் போது ஒன்றை அடுத்து ஒன்றென நிகழ்வது . நீரின் ஒழுக்கு போல அதில் பங்குகொளுக்கும் பலரும் அதில் தங்களின் பலத்தை உபயோகித்து அதன் பாதையை மாற்ற முயற்சித்துக் கொண்டே இருக்க அது சலனமே இல்லாமல் அனைத்தையும் பெற்றுக்கொண்டு நகர்ந்து நகர்ந்து அவை அதற்கு தேவை என்பது போல பொருள் அளித்து தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது . ஆனால் அதில் பங்கு பெற்றவர்களுக்கு சில காலம் கழித்து தங்களின் முரண் செயல்களில் இருந்து விளைவதை கண்டு கசப்பு கொள்கிறார்கள் . அவர்களின் வாழ்கைக்கு அங்கு முற்றும் புதிய அர்த்தத்தை அது கொடுப்பது அதன் காரணமாக இருக்கலாம்.


சண்முகம் தேர்தல் தோல்வியுற்றால் சட்டமன்ற கட்சி அடுத்த தலைவரை முன்மொழியும் . அது ஒரு போதும் கண்ணன் அல்ல . சட்டமன்றக் கட்சியில் சண்முகத்தின் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் அவர்கள் கண்ணனை ஆதரிக்கமாட்டார்கள். மரைக்காயரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணனை முன்வைத்ததும் சண்முகத்தால் அது நிராகரிக்கப்படும் . கண்ணன் இந்த அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக்காய் மட்டுமே. மரைக்காயரை கண்ணன் நம்புகிறாரா? என்றால் இல்லை. அவருக்குத் தெரியும் மரைக்காயர் தன்னை ஒருபோதும் முதல்வராக ஏற்கமாட்டார் என . அவருக்குத் தேவை மரைக்காயர் தன்னை முன்வைக்க வேண்டும் என்பது மட்டுமே. காரணம் காங்கிரஸில் இரண்டு தரப்பு மட்டுமே அன்று இருந்து கொண்டிருக்கிறது . மூன்றாவது ஒன்றிற்கு பலமிக்க வாய்ப்பிற்கு அங்கு இடமில்லை. மூன்றாவது இடம் அரசியலில் சார்பு நிலை. அதற்கென தனித்து நிற்கும் பலமில்லை என்பதால் அது இரண்டு அதிகார மையத்தில் ஒன்றை ஆதரித்து பிறதொன்றை எதிர்த்து நிலைகொள்வது . அதன் வழியாக சமநிலையைக் குலைத்து ஒன்றை பிறதொன்று வென்று நிற்க உதவுவது . அதன் வழியாக மட்டுமே அது தன்னை நிறுவிக்கொள்ள இயலும் . கண்ணன் எதிர்நோக்குவது அதை. தன்னை மரைக்காயர் முன்வைத்ததும் அடுத்து ஆட வேண்டியது கண்ணன் . அவர் தனக்கான அனைத்து நகர்வுகளையும் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்களிடையே முன் வைத்திருந்தார் . அதுதான் ஏறக்குறைய நிகழ்ந்திருக்க வேண்டியது . அவரது நகர்வுகள் காங்கிரஸிற்குள்ளிருந்து எழும் அனைத்து சிக்கல்களையும் அதை எதிர்த்து நிறுவும் அனைத்தையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் தனக்கு எதிராக என்னென்ன நிகழும் என அனைத்தையும் அவரும் முன்பே கணத்திருக்க வேண்டும் . சண்முகமும் அதை அறிந்திருந்தார் . தில்லி அரசியல் களம் மிக தந்திரமானது . அவர்கள் இந்திய முழுவதிலும் உள்ள தலைவர்களை ஒருங்கிணைக்க அல்லது பிரித்துக் கையாள கற்றவர்கள் . அது ஒரு மாபெரும் வலைப்பின்னல் , அதன் மைய சரடு தகவலை அடிப்படையைக் கொண்டது , அது அனைத்து தரப்பிற்கும் வெவ்வேறு தலைவர்களின் தகவல்களைப் பெறும் , ஊகிக்கும் பின் பரப்பும் முறையை சார்ந்தது . அவை அரசியல் இடைத்தரகர்கள் மூலம் அவர்களது செல்வாக்கால் அனைத்து தளமும் இணைக்கப்படிருப்பது . செல்வாக்கின் அடிப்படையில் அல்லது அதிகாரப் பதவியை முன் வைத்து நீண்ட கால தொடர்புறுத்தலின் வழியாக அவை கட்டமைக்கப்பட்டது . அனைத்து தகவல்களுமே உண்மை நிலையை பிரதிபளிப்பவைகள் ஆனால் அவை தலைவர்களுக்குள் நிகழும் கணக்கிலடங்கா சந்திப்புகளினால் மாற்றமடைந்தும் திரிபடைந்து கொண்டும் இருப்பது . ஒரு அரசியல் நகர்வு நிகழும் முன்னர் அதன் இறுதி கணம்வரை அது உறுதி செய்யப்படாதவைகள். அவரவர் தங்களின் தகவல்களினால் முரணியக்கம் கொள்ளத்துவங்கிய பிறகு அது மெல்ல நிகழும் களம் நோக்கி பயணிப்பது . அங்கு அந்த கணத்தில் மட்டுமே அது உயிர்கொள்கிறது . அதுவரை அனைத்து அரசியல் ஊகமும் நம்பிக்கையும் தகவல்களினாலான குப்பைக் குவியல் மட்டுமே. அரசியலில் முடிவுகள் எட்டப்பட்டு செயல்படுத்தப்படுவதில்லை , அவை யாரும் எதிர்பாராமல் முடிவுறுபவைகள் இறுதியில் ஏக மனதான தீர்மானங்களாவதுண்டு . 1991 சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்தல் கிட்டதட்ட அப்படி நடந்ததுதான் .

புதன், 9 ஜூன், 2021

அடையாளமாதல் * ஒற்றைச் சொல் *


ஶ்ரீ:



பதிவு : 577  / 767 / தேதி 09 ஜூன்  2021


* ஒற்றைச் சொல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 55.





1992 களி்ல் புதுவை முதல்வர் வைத்திலிங்கம் தனது தவறுகளில் இருந்து அரசியல் என்பதே தலைவர்களுக்கு இடையேயான ஆளுமை சிக்கல் , அதன் மைய இயங்கு விசை என்ன எனப் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கையில் சண்முகத்தின் கவனம் மரைக்காயர் மீது முழுவதும் பதிந்திருந்தது . தனது தேர்தல் தோல்விக்கு அடிப்படைக் காரணமாக அவரை புரிந்திருந்தார். அப்போது நரசிம்மராவின் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவியில் இருந்தார் மரைக்காயர்  . மந்திரிசபையில் இருந்து அவரை கழற்றும் முயற்சியில் வெற்றிபெறும் இறுதிக்கணத்தில் சண்முகம் இருந்தார். சண்முகம் மரைக்காயரை மத்திய அமைச்சரவையில் இருந்து கழற்றி மீண்டும் மாநில அரசிலுக்குள் தனது கவனத்தை திருப்பிய போது ,மரைக்காயர் மாநில அரசியலில் வேறுவித நகர்வுகளை செய்து முடித்திருந்தார். எனக்கு அது அரசியலின் கற்றலைக் கொடுக்கத் துவங்கிய பரவசமான காலம். பதவியை இழந்து புதுவைக்கு திரும்பும் மரைக்காயருக்கு அவர் விட்டு சென்ற அனைத்தும் அப்படி அதனதன் இடத்தில் இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் காட்ட நினைத்தனர் . அது ஒரு அசட்டுத்தனம் என அனைவருக்கும் தெரியும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுவைக்கு வரும் வழியில் அவருக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடாகியிருந்தது . வைத்திலிங்கம் மரைக்காயர் கோஷ்டியாக அறியப்பட்டதால் பாலன் முதல்வருக்கும் மரைக்காயருக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருந்தார். ஆகவே அந்த வரவேற்பில் கலந்து கொள்ள எங்களுக்கும் அழைப்பிருந்தது . நான் பாலனுடன் ஜிப்மர் அருகே காத்திருந்த போது அங்கு வந்து சேர்ந்தவெள்ளாழத்தெருகிருஷ்ணமூர்த்தி என்னையும் ஏம்பலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகத்தையும் அங்கிருந்து சற்று தூரத்தில் இருந்த விஜிபி நகர் என்கிற பகுதிக்கு அழைத்துச் சென்றார். இது பாலனை சீண்டுவது, பாலன் அமைதியாக இருக்க நான் அவருடன் சென்றேன் . திண்டிவனம் புதுவை சாலையின் அந்த பகுதி வளைவுகளற்று நேராக இருந்ததால் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் வண்டியைக்  பார்க்க இயலும் . அங்கு காத்திருந்தோம் . சற்று நேரத்தில் மரைக்காயரின்  பெனஸ் வண்டியை பார்த்தும் அனைவரும் பரப்பரப்பாயினர். ஏறக்குறைய நடு ரோட்டில் அவர் கார் மறிக்கப்பட்டு, எங்களை நோக்கி இறங்கி வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வியாரெல்லாம் ஓடிப்போனார்கள்என்று . மாநில முதன்மை ஆளுமையின் அந்த நேரடித்தன்மை என்னை துணுக்குற வைத்தது. பதில் சொல்லாமல் புன்னகையுடன் மரைக்காயருக்கு தெய்வநாயகம்  சால்வை அணிவித்தார் அது எதற்காக என்று திகைப்படைந்தேன். தான் இன்னும் அவருடன்தான் இருப்பதாக அவருக்கு சொல்ல நினைத்திருக்கலாம் . அனைவரும் புதுவையை நோக்கி புறப்பட்டதும் கிருஷ்ணமூர்த்தி மரைக்காயர் காரில் ஏறுக்கொள்ள நானும் தெய்வநாயகமும் என் காரில் தொடர்ந்தோம் . மரைக்காயர் தன்னை நோக்கி கேட்டதை மறுமுறை சொல்லி தெய்வநாயகம் வெடித்துச் சிரித்தார் . தலைவர்கள் வேறு மாதிரியானவர்கள் அவர்கள் பேச்சிலும் நடத்தையிலும் அந்த வித்தியாசம் தெரியும் என ஒரு மாதிரி புரிந்து வைத்திருந்தேன் . அது ஒரு அசட்டுத்தனம் முதிரா இளைஞனின் கற்பனை . ஒரு சிக்கலில் அனைவரும் ஒரே போலத்தான் சிந்திக்கிறார்கள் தலைவர்கள் தொண்டர்கள் என்கிற வேறுபாடு அதில் இல்லைப் போல என நினைத்துக் கொண்டேன். அது ஒரு சுதந்திர காற்றை சுவாசிப்பது போல இருந்தது.


இளைஞர் காங்கிரஸ் என்னும் சிறிய வட்டத்தை விட்டு நான் மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தேன் . அதைத் துவக்கி வைத்தது பாலன். 1991 தேர்தல் தோல்விக்கு பிறகு பாலன் அனைத்தின் மீதும் தனது நம்பிக்கை இழந்திருந்த நேரம். மரைக்காயர் மற்றும் வைத்திலிங்கம் என இருவருடனும் பாலன் இனக்கமாக இருந்தார். அரசியலை நம்பி அவரை அதுவரைப் பின் தொடர்ந்து கூட்டத்திற்கு அவர் ஏதாவது உதவிட இயலும் என்கிற எண்ணமும் ஆட்சி அமர்ந்து இரண்டு வருடமாகிய பின்னரும் அனைத்தும் கல் போல ஒரே இடத்தில் எப்பக்கமும் நகராமல் இருந்து கொண்டிருந்தது . பாலன் மீது வருத்தமும் கோபமும் இருந்தாலும் எல்லோரும் அமைதி காத்தனர். நிலைமை சரியில்லை என புரிந்து கொண்ட பாலன் தன்னை தக்கவைத்துக் கொள்ள கூட்டிய கூடுகையில் முதல் நிலைத் தலைவர்கள் அவர் மீது தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தி பேசினர் . அவர்களுக்கு அதைச் செய்யும் நிர்பந்தம் இருந்தது.   மூத்த துணைத் தலவரான பூங்காவனத்தால் அந்த நிலையை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை அவரை போன்றவர்கள் 45 அகவையை கடந்தவர்கள். தங்களுக்கான எதிர்காலம் என ஒன்றில்லை என்கிற ஆதங்கம் அவரது பேச்சில் வெளிப்பட்டது ஏறக்குறைய அது குமுறளின் எல்லையில் அழுகையாக வெளிப்பட்ட போது அனைவரும் அவரது உணரச்சிகரத்தால் அடித்துச் செல்லப்பட்டதை பார்க்க முடிந்தது . பூங்காவனம் தனது கோரிக்கையை பிறர் பொருட்டு முன்வைத்தார்,அதை கோரிக்கை என்பதை விட அது ஒரு மன்றாட்டு . முழு கூட்டமும் உணர்ச்சி கொந்தளிப்பின் விளிம்பில் இருந்தது . கையறு நிலையில் ஒரு அரசியல் இயக்கம் நின்று கொண்டிருந்ததை நான் முதலும் கடைசியுமாக அங்குதான் பார்த்தேன். அந்த நோடி அந்த இயக்கத்தின் மரணம் .இறுதியில் பேசிய பாலன் அவரை கண்டித்து பேசிய சில வார்த்தைகள் எனக்கு அவர் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது . அரசியலின் உண்மையான களத்திற்கு வெளியே இவர்கள் இவ்வளவு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எந்த எதிர் காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள் . அப்படி ஒன்று அவர்களுக்கு இருக்கிறதா? அப்படி ஒன்று இருந்தால் அங்கு அவர்களுக்கு என்ன உறுதி யாரால் அளிக்கப்படும் என்கிற கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. பாலன் சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை மாநில அரசியலின் மைத்திற்கு அழைத்து செல்வார் என நினைத்துக் கொண்டருந்தவர்கள் மத்தியில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன் . ஆனால் அவர் அங்கு என்னை அழைத்துச் செல்வார் என நான்  நம்பிக்கையை இழந்துவிட்டருந்தேன். இருப்பினும் அவர் சட்டமன்றத்திற்கு செல்வதனூடாக திறக்கும் கதவுகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கி் தரும் என்றுத,பின் அது அங்கிருந்து வெளியே செல்லும் சுதந்திரத்தை எனக்கு திறந்து வைக்கும் என உறுதியாக நினைத்திருந்தேன்


பூங்காவனத்தின் மன்றாட்டிற்கு ஆறுதலாக எதாவது சொல்லுவார் என எதிர்பார்த்த எனக்கு அவருக்கு கண்டனம் போல ஒன்றை பாலன்  முன் வைத்த போது என்னால் அதை ஏற்க இயலவில்லை. அது யாருக்கும் முக்கியமில்லாத ஒரு தருணம் யாரைப்பற்றியும் யாருக்கும் எந்த அக்கரையும் அற்ற அந்த புள்ளி அதிலிருந்து நான் வெளியேற நினைத்துக் கொண்டிருந்தேன். எப்படி எங்கு எந்த கேள்விக்கும் அப்போது என்னிடம் பதிலில்லை .அரசிலில் ஈடுபடுவது என்கிற எண்ணம் தோன்றியதும் இளைஞர் காங்கிரஸ் எனது தேர்வாக இருந்தது . அதன் தலைவராக இருந்த பாலனை ஏற்பது மட்டுமே எனக்கான வழி. அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை . இன்றுவரை அந்த முடிவு தவறானதாக நான் நினைக்கவில்லை. பின்னர் அது நான் நினைத்த உச்சத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது . அதன் செயல்பாடுகளிலும் பின்னர் நான் தனிப்பட்டு முன்னெடுத்த அனைத்து விஷயங்களுக்குமே இளைஞர் காங்கிரஸ் களம் எனக்கு சொல்லிக் கொடுத்ததே. அதனால் தான் நான் பாலனை விட்டு வெளியேற நினைக்காமல் அங்கிருந்து எனக்கான உயரத்தை நோக்கிய பயணம் பற்றிய கனவிலிருந்தேன். எங்கோ ஒரு கதவு திறக்கும் என்கிற என் ஆழ்மன நம்பிக்கையை எப்போதும் போல அப்போதும் நான் கைவிடவில்லை.

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்