ஶ்ரீ:
பதிவு : 554 / 747 / தேதி 27 டிசம்பர் 2020
* அருகமர்ந்த காலமிருகம் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 32.
தலைமைப் பண்பு என்பது அடிப்படையில் தங்களை பற்றி அவர்கள் வைத்திருக்கும் தன்மதிப்பு அவர்களை பிறரிடம் இருந்து விலக்கிக் காட்டுகிறது .எந்த விவகாரத்தைக் குறித்தும் தனக்கான ஒரு வலுவான கருத்தியலை உருவாக்கிக் கொள்கிறார்கள் அல்லது திரண்டு வந்தவைகளில் , சந்தித்து மேலெழுந்து வந்தவற்றில் தவறில்லாதது என ஆழ்மனம் சொல்லுவதை வரித்துக் கொள்கிறார்கள் . தொடர் உரையாடல்களின் வழியாக அதை வடிவமைத்துக் கொள்வதுடன் , அதற்கு முரணான எதையும் ஒப்புநோக்கி ஏற்பதும் அல்லது மறுப்பதன் மூலமாக தங்களை நிறுவிக் கொள்கிறார்கள் . சூழ்நிலை அவர்களை அல்லது அவர்களது கருத்து நிலைப்பாடுகளை மறுக்கும் இடத்தில் தயக்கமில்லாமல் வெளியேறி விடுகிறார்கள் . தலைவர் சண்முகத்திடம் அத்தகைத் தீவிரம் கொண்டவராக பார்த்திருக்கிறேன் . “தலைவர்கள் உருவாவதில்லை பிறக்கிறார்கள்” என ஒரு சொல் உண்டு.
அதே சமயம் ஊழின் வசத்தால் தலைமை பொறுப்பைப் பெற்று பின் பல நிகழ்வுகளினால் உந்தப்பட்டு முன் நகர்கர்ந்து மெல்ல தங்களுக்கானதை கண்டடைய இயலும் என நினைப்பவர்கள் ஆபத்தானவர்கள் . அவர்கள் தங்களுக்கு அரசியல் தலைமை பொறுப்பின் வழியாக எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டு விட்டதாக நம்புகிறார்கள் , நடிக்கிறார்கள் . தோல்வியுறும் சர்சைக்குரிய அனைத்து முடிவிற்கும் சூழலை காரணம் சொல்லி வெளியேறப் பார்ப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் தங்களையும் தன்னை சார்ந்தவர்களையும் பெரும் அழிவில் கொண்டுவிடுகிறர்கள். நிர்பந்தந்தால் மனதிற்கு உகக்காத ஒன்னறையும் செய்யத்தான் வேண்டியிருக்கும் என்பது போல பசப்பு பிறிதில்லை . இதை சொல்பவர் தலைமை பொறுப்பிற்கு சற்றும் அருகதை அற்றவர்கள் . அவர்கள் சொல்லும் “அரசியல் நிர்பந்தம்” என்பது ஒரு மாயச்சொல் . காலம் அவர்கள் அனைவரையும் தன்னிடையே கொண்டுவந்து அவர்களின் பொய்த்தோற்றத்தை ஒரு நாள் கட்டுடைகிறது . தலைவன் என்பவன் அது போன்ற ஒன்று தனக்கு நிகழ இடம் கொடுக்காதபடி தனது இருப்பை வகுத்துக் கொள்கிறான்.காங்கிரஸ் போன்ற இயக்கத்தில் ஒருவர் தன்னிருப்பில் அரசியலை வைத்துக் கொள்வது எளிதில் இயலாத ஒன்று. ஆனால் கொண்ட தன்னுறுதி அந்த முதிர்ச்சியை அளிக்கிறது. அவை நிகழ்வுகளை கசப்பு மற்றும் முன்முடிவுகள் இன்றி அனுகுவதில் இருந்து உருவாகி வருகிறது என நினைக்கிறேன். அதை இழக்கும் கணத்தில் யாருக்கும் அனைத்தும் கைவிலகி போகின்றது , அவர் எத்தனை அனுபவம் பெற்றவராக இருப்பினும் . வாழ்நாளில் இன்றுவரை சண்முகம் தவிர பிறிதொருவரை தலைவர் என உளம் கொள்ளவில்லை. 1999 களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் பல சிக்கல்களை உருவாக்கி இருந்தது . சண்முகமும் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. ஆனால் அது இரண்டாம் நிலைத் தலைவர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அதை உருவாக்கி கொடுத்த போது . ஒரு புதிய தலைமுறை எழுந்து வருவதையும் அதிலிருந்து அரசியலின் அடிப்படைகள் மாறி வருவதை எடுத்துக் காட்டின.
1999 களில் பொறுப்பேற்ற சண்முகம் 2001 களில் முதலவர் பதவியில் இருந்து அவமானகரமாக விலகி வெளியேறிய பிறகு அவரது அனுகுமுறைகள் எதிர்மறையாக மாற்றமடைந்த படி இருந்தன . அது போல ஒன்று நிகழப் போவதை ஆழ்மனம் எங்கோ உணர்ந்திருந்தது . அப்போதும் அவர் மீது ஏனோ நம்பிக்கை இழக்கவில்லை. இத்துடன் இது முடியப்போவதில்லை , இன்னும் ஒரு சுற்று பாக்கி இருக்கிறது என எங்கோ ஒன்று சொல்லிக் கொண்டே இருந்தது . அது உண்மை என்றாகி 2005 களில் அவர் மீளவும் மாநில கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய அரசியல் கணக்குகள் உருவாகி வந்தன . அந்த சூழலில் மிக யதார்த்தம் கொண்டவராக மாநில கட்சி அமைப்பில் அடுத்த தலைமுறையை அறிமுகம் செய்பராக பெரும் ஊட்டம் கொண்டவராக இருந்தார் . அதில் தெளிவான எதிர்கால கணக்கு இருந்தது , மிக நிதானமாக அதை நோக்கி நகர்பவராக வியப்பளிக்கும் நடவடிக்கை கொண்டவராக இருந்தார் . கட்சியில் செயல்பாட்டில் புதிய நம்பிக்க கொடுப்பவராக பழைய அனுகுமுறையை மாற்றிக் கொள்பவராக புதிய எண்ணங்களை முன்வைப்பவராக மாறி இருந்தார். ஆனால் ஒரு நாள் அவை சற்றென மறைந்து அவருள் இருந்து பிறிதொருவர் எழுந்து வந்தார்.
முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அதனது தவறுகளில் இருந்து மீண்டு வந்ததாக நினைத்தேன் . தில்லிக்கு அளித்த புதிய நிர்வாகிகள் பரிந்துரையில் அது முழுமையாக வெளிப்பட்டது . முதல் நிலை தலவர்களில் பலர் பொது செயலாளர்களாகவும் இரண்டாம் நிலைத் தலைவர்களை உருவாக்கும் பொருட்டு அவர்களை இணைச் செயலாளர்களாக நியமிகப்பட்டனர். மூத்த தலைவர்கள் கட்சி அலுவலக நிர்வாகத்திற்கும் இரண்டாம் நிலை நிர்வாகிகள் களத்திலும் செயல்படும் திட்டத்தை முன்வைத்தார் . தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு தேர்தல் வேலைகள் அவற்றை ஆக்ரமித்துக் கொண்டன . 2006 சட்டமன்றத் தேர்தலில் கட்சி மீண்டும் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைத்து . கட்சியின் அடுத்த சீர்திருத்த வேலைகளை தொடங்குவதற்கு முன்பாக 38 ஆண்டுகள் கழித்து உள்ளாட்சி தேர்தல் நடத்தபட வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவும் அதன் பின்னர் நிகழ்ந்தவைகளும் அனைத்தையும் கலைத்துப் போட்டது போது அவரையும் அவரது சூழலை புரிந்து கொள்ள முடிந்தது . உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் முதல்வர் ரங்கசாமியின் அனுகுமுறையால் அவர் மீது கடும் கோபமும் கசப்பும் கொண்டவராக மாறினார் . அவர் நினைத்த எதையும் செய்ய முடியாதவரானார் 2007 களின் இறுதியில் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட போது இருளின் ஆழத்திற்கு சென்றார் . அது நான்னறியாத வேரொருவர் . அதன் பிறகு அவரது அரசியல் கணக்குகள் அனைத்தும் பொய்த்தன. தனது இறுதி காலத்தில் கசப்பும் வெறுப்பும் கொண்டவராக மாறிய போது அவரது தன்னுறுதியும் தன்னிருப்பும் அவரை கைவிட்டது . முதுமையின் கரணமாக தன்னுறுதியை அவர் இழந்த போது காலம் கொடிய மிருகம் போல நீண்டகாலம் அவர் பக்கத்தில் காத்திருந்தது போல அவரை வேட்டையாடியதை உளம் பதற வேடிக்கை பார்க்க நேர்ந்தது என் தீயூழ் என நினைக்கிறேன் .