https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 8 மே, 2022

அடையாளமாதல் * பதவி சுமப்பவர்கள் *

 


ஶ்ரீ:



பதிவு : 620  / 810 / தேதி 08 மே  2022



* பதவி சுமப்பவர்கள் * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 17.






அவர்கள் பலவேறு கருத்தால் மாறுபட்டிருந்தாலும் குறுங்குழு ஒன்று அவர்களை ஒட்டுமொத்தமாக இணைந்திருந்தது . அன்றாட நிகழ் அரசியலில் மிக எளிதில் தலைவர்களுடனான தொடர்புறுத்தலுக்கு ஏற்றவர்கள் யார்? என்பது குறித்த அத்தனை தகவல்களும் அனைவருக்கும் பொதுவில் இருக்கும் அந்தக் குறுங்குழு வழியாக அவர்களுக்குள் பரவியிருக்க வேண்டும். அதன்மூலம் என்னைப் பற்றிய தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் . அதை மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டேன் . அது எனக்கே என் இடம் எது என்கிற புரிதலை பின்னர் கொடுத்தது. அங்கிருந்து முன்னகரும் செயல்பாடுகளை அதன் பிறகே நான் உருவாக்கிக் கொண்டேன் . சிறுக சிறுக சிலர் வந்து என்னை வீட்டில் காலை வேளைகளில் சந்திப்பது ஒரு தற்செயல் என்றே ஆரம்பத்தில் புரிந்திருந்தேன். அவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பகுதி . அறிமுகமானவர்கள் மேலும் புதியவர்களை கொண்டுவந்தனர் . அனைவரையும் ஊசுடு பெருமாள் மிக மெல்லிய சரடு போல பிணைத்திருந்தான் . அது அவனது விருப்பமான அரசியல். அவர்களுக்குள் முன் பின் சந்தித்தவர்களுக்கு இடையே மேல் கீழ் அதிகார அடுக்கு உருவாகியிருக்க வேண்டும். 


ஒருவர் பற்றிய நமது புரிதலில் இருந்து அவரது திறமைகளும் அதற்கான இடத்தையும் நாம் தெரிவு செய்து அளிக்கிறோம் என நினைத்தால், அது அப்படி நிகழ்வதில்லை . தொடர் செயல்பாடுகள் நமது ஆழ்மனத்தில் எங்கோ அவர்கள் அறிந்தோ அறியாமலோ விதைத்துச்சென்றவை . ஆம் அது உண்மை.  ஊசுடுவில் கொடியேற்ற நிகழ்வு அன்றைய இரவு முடிவுறும் போது  எனது செயல்பாடுகள் வழியாக தலைவருக்கு நான் என்ன உணர்த்தினேன் என்பது பற்றிய தெளிவு எனக்கிருந்தது . அன்று காலை அங்கு வருவது வரை எது பற்றியும் எந்த திட்டமிலும் இல்லாமல் கூட்டத்தில் ஒருவனாக கலந்து கொள்ள அங்கு வந்தேன். ஆனால் அந்த நிகழ்வு முடிவுறும் போது அவர் என்னை எங்கு கொண்டு வைக்க வேண்டும் என நான் விழைந்து விதைத்தேனோ அங்கேதான் சண்முகம் என்னைக் கொண்டு வைத்தார் . ஆனால் அது அவரின் மௌனமான அங்கீகாரத்தின் வழியாக நிகழ்ந்தது . அரசியலின் அடிப்படை இயங்கு விதிகளில் ஒன்று . மௌன அங்கீகாரம் போல பிறர் விலக்க அஞ்சும் இடம் பிறிதில்லலை. 


அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்தில் சிக்கல் உருவாகுபவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் மாரிமுத்துவிற்கு அணுக்கமானவர்கள் . அணுக்கமானவர்களில் இருந்து எதிரி உருவாகிறார். இன்று அவர்களை மாரிமுத்துவிற்கு இணக்கமாக கொண்டு வர நாங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.  ஊசுடு பெருமாளின் பொருட்டு இவர்களை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஒருகாலத்தில் இருந்தது. இன்று அந்த கோடு அழிந்து போன நிலையில், இதற்கா? அன்று அவ்வளவு பெரிய சண்டை? என நினைத்துக் கொண்டேன். இன்று அவர்கள் அனைவரும் மாரிமுத்துவிற்கு எதிராக திரண்டிருந்தனர் . விந்தையின் உச்சம் பெருமாள் அவர்களிடையே மிகத் தீவிரமாக மாரிமுத்துவிற்குடனான ஒரு உடன்பாட்டிற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை ஒருவித திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன் . அவன் என்னை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் அவனுள் நிகழும் என நான் நினைத்த ஒன்று இறுதிவரை நடக்கவில்லை .உண்மையிலேயே சமரசம் செய்து வைக்கத்தான் முயல்கிறானா? மாரிமுத்துவிற்கு அணுக்கனாகி விட்டானா? . அது அவனது நீண்டநாள் கனவாக இருந்திருக்க வேண்டும். ஒரு பூச்சி போல அவர்களை சுற்றி சுற்றி வலையை பிண்ணிக் கொண்டே இருந்தான்.இங்கு எதிர்ப்புகள் நிலையானதல்ல. சமாதனத்திற்கும், மாரிமுத்து தங்களை திரும்பவும் ஏற்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பு உருவாகும் போது வெகுண்டு சீறி தங்களை எளிதில் சமாதானப்படுத்த முடியாது என்பது போல இல்லாத பாவனையை உருவாக்குகிறார்கள். அதை நம்பி அந்த முயற்சியை கைவிட்டால் தங்களை எளிதில் விலை பேச முடியதவர்களாக கற்பித்துக் கொள்கிறார்கள். கவனிக்கப்படாமலாகும் போது வருத்தமடைந்து பிறிதொரு சந்தர்பத்திற்கு காத்திருக்கிறார்கள் . அரசியல் எப்போதும் அப்படித்தான் நிகழ்கிறது . 


சிக்கலை உருவாக்குபவர்கள் எதிர்நோக்குவது இழந்து போன தங்களின் இடத்தை . அதை அவர்களுக்கு வழங்காமல் அவர்களை கடந்து செல்ல முடியாது . அதை கடந்த கால அனுபவத்தில் இருந்து கற்றிருக்கிறேன் . சிக்கலன் துவக்கம் என சந்தேகிக்கும் இடத்தில் எல்லாம் அவர்களை அடையாளம் கண்டு பெருமாள் என்னிடம் அழைத்து வந்தான். நான் அவர்களின் பிரச்சனை என்னவாக இருந்தாலும் அதுகுறித்து நாளை தலைவரை அவரது வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன். பிறகு வேலைகள் சூடுபிடித்தன. அதில் வேடிக்கை அவர்களில் பல பேருக்கு நாளை வேறு வேலைகள் உண்டு . அல்லது அவர்கள் தலைவரை வந்து சந்திக்கப் போவதில்லை. அல்லது இந்த தொடர்பை அவர்களுக்கு வேண்டிய காலத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்  வழக்கமான தங்களின் அரசியலின் பொருட்டு புதுவைக்கு வரும் சிலர் மட்டுமே எல்லாவற்றின் பின்புலமாக இருப்பவர்கள் . அவர்களை கையாள்வது எளிதல்ல. அவர்கள் தங்கள் நிலத்தில் விதைத்தவற்றின் அறுவடைக்கு இங்கு வருபவர்கள். வழக்கமாக தலைவர்களை சந்திக்க புதுவைக்கு வரும் அவர்களுக்கு யாரை எங்கு சந்திக்க வேண்டும் எப்படி அல்லது என்ன பேச வேண்டும் என்பது பற்றிய முன்னனுபவம் இருக்கும் . புதிய தொடர்புகள் உருவானால் முந்தயதை விட புதியது எவ்வளவு வலிமையானது என புரிந்து கொள்ளவாவது அவசியம் வருவார்கள்.


காலை 9:00 மணிக்கு சேதராப்பட்டில் துவங்கிய கொடியேற்ற விழா கரசூர் வரை பொலிவிழந்திருந்தாலும் தொண்டமானத்தம் பிறகு உயிர் கொண்டது . அந்தந்த ஊர் கோயில் மரியாதை இணைந்து கொள்ள திருவிழா களைகட்டியது . மேளம் முரசு பறை என ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான வாத்தியங்கள் இணைந்ததும் ஊர் பொதுமக்கள் வேடிக்கப் பார்கக் கூடினர். துவக்கத்தில் சண்முகம் மட்டும் மக்களிடையே பேசுவது என்பது மாறி சிறு தலைவர்கள் முதல் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் வரை பேச துவங்க ஓரொரு ஊரிலும் நிகழ்வு சிலமணிநேரம் எடுத்துக் கொண்டது . கொடியேற்ற நிகழ்வு முடிந்ததும் அவருடன் அந்தந்த ஊர் பெரியவர்கள் இணைந்து கொள்ள மெல்ல ஊர்வலம் போல அது உருவானதை யாரும் எதிர்பார்க்கவில்லை . இத்தனைக்கும் சமீபத்தில் நடந்த தேர்தல்லில் அதிக வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது . கூட்டம் கூடி கூடி வரும் போது எல்லோருடை முகத்திலும் ஏன் தோற்றோம்? என்கிற குழப்பம் தெரியத் துவங்கியது

திங்கள், 2 மே, 2022

அடையாளமாதல் * அடுக்குகளின் நிழல் *

 



ஶ்ரீ:



பதிவு : 619  / 809 / தேதி 02 மே  2022



* அடுக்குகளின் நிழல் * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 16.





புதுவை மாநில தேர்தல் அரசியல் தமிழகத்தின் பிற பகுதிகளிலில் இருந்து சற்று வேறுபட்டது . மிக சிறிய எண்ணிக்கையில் இருக்கும் வாக்காளர்கள் அதன் காரணம். இப்படி இருக்கும் எல்லா இடங்களிலும் இதுவே அடிப்படை விதியாக இருக்கலாம் . அரசியல் பற்றிய விழிப்புணர்வு அதில் தங்களின் இடம் குறித்த புரிதல் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் ஒரு எகத்தாளம் தெரியும். நேரில் பார்க்கும் போது காரியத் தேவைக்கு இருக்கும் குறுகளை பணிவு என எண்ணிக் கொள்ளக் கூடாது என அறிந்திருக்கிறேன். அங்கிருந்து அரசியலின் மையத்திற்கு தங்களை அழைத்து செல்லும் ஒரு சந்தர்ப்பத்திற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பது அதன் உச்சம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவின் மேல் எழுந்து நின்ற நான்கு வருட அதிருப்தி அவர் தோல்வியுற்றதும் கூரிழந்தது. தண்டித்தவனின் இரக்கம் போல. தங்களது தேவை பற்றிய தெளிவோ அவை அத்தனையையும் ஒரு சட்டமன்ற உறுப்பனரால் செய்து கொடுக்க முடியுமா? என்கிற அறிதலோ இல்லாமல் தங்களால் வெற்றி பெற்றவர் என்று அவர் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்றிவைத்து  கொள்வதும், பொய்த்து போகும் போது ஊஞ்சல் போல எதிர்நிலை நோக்கி பாய்வது மட்டுமே அவர்களின் அரசியல் .  இனி புதிதாக் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தோற்கும் காலம் வரை அவர்கள் மாரிமுத்துவை நோக்கி வந்து கொண்டேயிருப்பார்கள்.  அது சாமான்யர்களின் அரசியல் இயங்குவிசை 


அன்று அவர்களது அரசியலில் நிகழ்ந்தது கூடுதலான ஒன்று அது “நான்” என நினைக்கிறேன். ஆனால் எனக்கு எந்த முன் திட்டமிடலும் இல்லை. அது முழுக்க மிக இயல்பாக நடந்தது. அங்கு நிலவிய குழுப்பமான சூழல் எதை கேட்டதோ , அதை பிறர் அறிவுத்தல் இன்றி நானாக எடுத்துக் கொண்டேன். ஒரு இடத்தை நோக்கி நகர அந்த நிகழ்வு எனக்கொரு வாய்ப்பை உருவாக்கித் அளித்தது . அரசியலின் அடிப்படை . அதுவே நடந்தாலும் நான் அறியாமல் பின்னர் மெல்ல அவர்களின் கணக்குகளுக்குள் வந்து சேர்ந்திருந்தேன். அன்று மாநிலம் முழுவதிலும் இருந்த வந்திருந்த அனைத்து கட்சி மூத்தவர்களின் கண்களில் பட்டு அவர்களின் மனத்தால் ஏற்கவும், விலக்கவும் பட்டுவிட்டேன். இதன் மத்தியில் கூடப்பாக்கத் தகராறு எனது முதல் எதிர்மறைக் கணக்கை துவக்கி வைத்தது . அதைப்பற்றி விரிவாக முன்பே பதிவு செய்திருக்கிறேன். கூடப்பாக்க தகராறு . அது மாரிமுத்தை குறிவைத்து நடந்தது என எனக்குத் தெரியாது ஆனால் அதன் மையமாக என்னைக் கொண்டு நிறுத்திய போது அவர்கள் அவசரப்பட்டுவட்டார்கள் என நினைத்தேன் . ஆனால் அது அனைத்து வகையிலும் எனது கணக்கை நிராகரிக்க செய்த நுட்பமான சீண்டலாக பின்னர் மாறியது  . அதில் தலைவர் எடுத்த நிலைப்பாடு ஊசுடுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத நான் அதன் முக்கியஸ்தராக உருவெடுக்க வைத்தது. அது பின்னாளில் தொகுதித் தலைவர்கள் மாற்றி அமைப்பது வரை என்னை கொண்டு சென்று . அதுவும் கூட நான் எண்ணிய கணக்கு அல்ல வழக்கம்போல சிலர் எடுத்து முடிவு என்னிடம் அதை கொண்டுவந்தார்கள். அவர்களை தலைவரிடம் அழைத்துச் சென்றது மட்டுமே நான் செய்தது அதில் என் முடிவு என ஒன்றுமில்லை . அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கும் போது அதற்கு எண்ணி எண்ணி செய்வது போல ஒரு தொடர்த்தன்மை வந்துவிடுகிறது. நீண்டு நடக்கும் உரையடல்கள் வழியாக அது தடையற்று நடந்து கொண்டிருந்தது . அங்கிருந்து தொடங்கி எனது இடத்தை அது மிக பலமுள்ளதாக மாற்றும் என்பதை அறிந்திருந்தேன்.


புதுவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மை மக்கள் காங்கிரஸை ஆதரித்ததால் இங்கு தொடர்ந்து ஆட்சியில் அமர முடிந்தது. அவர்கள் முரண்படும் போது வேறுகட்சிகள் மெல்லிய பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சிக்கு வருகின்றன. ரங்கசாமி மட்டுமே பெயரளவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை கொண்டுவந்திருக்கிறார் . காங்கிரஸ் கட்சியில் நல்ல தலைமை இல்லாததால் ஒருங்கிணைப்பு சிதறி இது நிகழ்ந்திருக்கிறது. இழந்து போன ஒருமையை திரும்ப கொண்டுவர வேறுவிதமான தலைமை உருவாகி வரவேண்டும். அதற்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சாத்தியமும் தென்படவில்லை . இன்று கட்சி அமைப்புகள் வேறு வடிவங்களை எடுத்துவிட்டது. பழைய கோட்பாடுகள் இனி கைகொடுக்காது .


தலித் சமூகத்தினர் புதுவையின் முக்கிய புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறு சிறுக் குழுக்களாக விரவியிருக்கிறார்கள் . ஏறக்குறைய அனைவரும் கட்சி அல்லது அரசியல் மனச்சாய்வு கொண்டவர்கள். தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி அன்றாட வாழ்கையின் பல்வேறு சிக்கலான கூறுகளை சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். அவர்களை இங்கிருந்து கொண்டு புரிந்து கொள்வது அறிவு செயல்பாடாகாது என நினைக்கிறேன். அனைவரும் உருவகிப்பது போன்ற வரையறை செய்யப்பட்ட வாழ்கைக்குள் அவர்கள் சென்று அமர்வதில்லை முற்றாக வேறொரு உலகியல் சூழலில் வாழ்கிறார்கள். ஒரு வேட்டைகாரர்களின் மனநிலை . உயிர் வாழ்வதைப்பற்றிய எண்ணம் போல ஒன்று என நினைத்துக் கொள்வேன் . பிறருக்கு அவர்கள் திறந்து கொடுக்கும் மிக சிறிய ஜன்னல் வழியாக அவர்களை முழுவதுமாக பார்கவோ புரிந்து கொள்ளவோ இயலாது . குடும்ப உள்ளுறவுகளில் இருந்து துவங்கி சமூகத்தில் அவர்கள் புகுந்து புழங்குவது வரை எல்லையற்ற சாத்தியகூறுகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் ஒரு அலகில் இங்கு அரசியலில் பல புதிய தலைமைகளை உருவாக்கியும் நிராகரித்தும் சென்று கொண்டிருக்கிறார்கள் . 

முரண்களுக்கு இடையே ஒவ்வொரு குழுவிற்கும் ஒன்றுடன் ஒன்று மெல்லிய தொடர்பு இருந்தாலும் வேறுபாடுகள் காரணமாக அவர்கள் இன்றுவரை இணைந்து தங்களின் ஒற்றை குரலை அவர்கள் ஒருபோதும் பதிவு செய்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் ஒருங்கிணைத்து கையாளும் வெளித்தலைமை தேவைபட்டபோது உருவாக்கியும் கடந்தும் சென்றுவிடுகிறார்கள் . அதனால் அவர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். வெளி பார்வைக்கு தோன்றும் வளர்ச்சி , வீழ்ச்சி என்பது இதை கணக்கில் எடுத்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது . நான் அவர்கள் உருவகித்த அல்லது உருவாக்கிய பல ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்பது விந்தையானது.


புதன், 27 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * அனைத்தின் மறு பாதி *

 



ஶ்ரீ:



பதிவு : 618  / 808 / தேதி 27 ஏப்ரல்  2022



* அனைத்தின் மறு பாதி * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 15.





தொண்டமானத்தத்தில் இனி அனைத்தும் மிகச் சரியாக நிகழும் எனத்தோன்றிய பிறகு மேலதிகமாக ஏதாவது ஒன்றை செய்யலாம் என அந்த ஊர் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலுக்கு சென்று வணங்கி பின்னர் அங்கிருந்த பட்டரிடம் தலைவர் வரும் போது அவருக்கு சிறிய மாலை போட முடியுமா? என கேட்டேன்.அவர் “பூர்ணகும்பம்” கொடுக்க ஒத்துக் கொண்டார்! . ஒவ்வொரு இடத்திலும் இப்படி உருவாகி நின்று கொண்டிருக்கும் அரசியல் தனது வெளிப்படல் நேரத்திற்காக காத்திருக்கிறது. அதை சென்று யார் தொட்டாலும் அங்கிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அது தயங்குவதில்லை. என் அரசியல் நுழைவு கூட அப்படி யாரோ ? எதுவோ? தொட்டுசென்ற ஒன்று. ஆனால் அதை அங்கிருந்து வளர்த்தெடுக்க இளம் மனமும் கற்பனையுமாக ஒன்று தேவையாகிறது . முடிவில்லா கற்பனையில் திளைப்பதன் வழியாக தனக்கு உகந்த ஒரு சூழலை அது உருவாக்கிக் கொண்டு காத்திருக்கிறது . அதற்கு வயதோ அனுபவமின்மையோ ஒரு தடையில்லை.  அதன் பின்னர் கொடியேற்ற நிகழ்வு தொடர்பு அறாமல் அங்கிருந்து துவங்கி அனந்தபுரத்தில் எதிர்பாராது நிகழ்ந்த வரவேற்பு வெடிவிபத்தில் ஒருவர்  கண்ணை இழந்தல் என்கிற திடுக்கிடும் குறியீட்டுடன் முடிய இரவு 11:00 மணியானது. தலைவரை வீட்டில் கொண்டு நான் விடும்போது இரவு 12:45 . நாள் முழுவதும் அந்த மொத்த தொகுதியையும் நடந்தே கடந்ததால் பெரும் உடற்சோர்வுடன் வீடு சென்றேன். 


மாநில அளவிலான ஒரு பெரிய நிகழ்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை ஒரு சிறிய தொகுதி ஏன் எடுத்துக் கொண்டது? என்பதும் தேர்தலில் தோல்வியுற்ற மாரிமுத்துவால் சில நாட்களுக்குள் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்களை திரட்ட முடியுமானால் இந்த பலம் அவரது தேர்தல் வெற்றிக்கு ஏன் உதவவில்லை . ஆனால் அடிப்படையில் இதில் ஆச்சர்யமடைவதற்கு ஒன்றுமில்லாத மிக எளிய அரசியல் கணக்கு . அரசியலாளர்களை விட சமூகம் தேர்தல் அரசியலை முடிவு செய்கிறது அதிலிருந்து திரண்டதை மட்டும் அரசியலாளர் பெற்றுக் கொள்கிறார். சமூகத்தின் கூரிய பகுதியாக சில மனிதர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒயாமல் பேசி பேசி அதை உருவாக்குகிறார்கள். பெரும்பாலும் மிகச் சிறிய முதலீட்டில் டீக்கடை தையற்கடை இருசக்கர பழுது பார்ப்பவர் என வந்தவர் சற்று நேரம் அமர்ந்திருக்க வேண்டிய தொழில் செய்பவராக இருப்பார். அவரே அந்த சமூகத்தின் திரண்ட பகுதியின் முணை . அவரது கடை சிறு கூட்டம் தொடர்ந்து வந்து சந்திக்கும் இடமாகவும் இருக்கும் இப்படி அந்த மொத்த சமூகமும் அவரை ஒரு மாதத்தில் சில தடவை அவரை சந்தித்துவிடுகிறது. அங்கு பேசு பொருள் எங்கு சுற்றினாலும் அது உள்ளூர் வம்பு மற்றும் அரசியலாக இருப்பது தவிற்க இயலாது. அந்த கடை உரிமையாளர் பலர் வந்து ஒயாமல் பேசிக் கொண்டிருக்கும் ஒரு கருத்தால் மின்னூட்டம் போல ஒன்றை அடைகிறார். தொடர்ந்து பேசப்படுவது கருத்தியலைப் போல ஒன்று உருவாகிவிடுகிறது . அதில் சொந்தக் கணக்கு ஏதாவது இருந்தால் அது இன்னும் உயரழுத்தம் கொண்டாதாகிறது. அன்னைத்தும் ஒரு பகடிபோல முன்வைக்கப்பட்டு செறிவாகி விவாதத்தை நோக்கி நகர்கிறது. எதை சொன்னாலும் அதற்கு எதிர்மறை வைக்கும் போக்கு எங்கும் உள்ளது போன்றே இங்கும் அவர்கள் அங்கு பேசப்படுவதை வேறு உயரத்திற்கு கொண்டு செல்கிறார்கள். கடை உரிமையாளர் எல்லா சமயங்களில் நடுவராக இருப்பார் . அல்லது வேறு வேலையற்ற ஒருவர் அந்த இடத்தில் அமர்ந்து கொள்வார் .


பல சமயம் ஒரு கருத்து உறுதியாவதற்கு அவர் சொல்லும் சில சொற்களே போதுமானவை. எவருடனும் அவர் விவாதிக்க வேண்டியதில்லை, அது அவரது வியாபார லாபத்திற்கு எதிராக சென்றுவிடக் கூடும் என்பதால் அதை  செய்வதில்லை . அது தன்னை எதிர்மறையாக கொண்டு நிறுத்தும் என தெரியும் . இருபக்கமும் நிகரெடை கொண்டு நிற்கும் போது கூரிய ஒரு சொல் போதும் அதன் நிகர்நிலையை குலைக்க . பின் அந்த கருத்தியல் நிலைகொண்டுவிடும். அவரின் மனச்சாய்வை பற்றி அறிந்தவர்கள் கூட ஒரு புள்ளியில் அவருடன் இணைந்து கொள்கிறார்கள். இந்த சிறு தொழில் செய்பவர்கள் வெளிப்படையான கட்சி சார்புடையாவராக சில மேலிடத் தொடர்புகளை கொண்டவராக இருந்துவிட்டால் அவரை நோக்கி சிறு குழு வந்து இணைந்து கொண்டேயிருக்கும். ஒரு முக்கிய கேந்திரம் போல உருவாகிவிடுகிறது . நகரின் மையத்தில் ஒரு சிறிய முடித்திருத்தம் செய்யும் கடையில் நாள் முழுவதும் அமர்ந்திருந்து, அங்கேயே அமர்ந்து சிலநாட்கள் உணவருந்துவதை வழக்கமாக கொண்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை பார்த்திருக்கிறேன். அவரின் அந்த சகிப்புத் தன்மை அந்த முடித்திருத்துபவர் அளவிற்கானதல்ல.புறநகர் பகுதிகளிலும் சில சமயங்களில் நகர் பகுதிகளிலும் கூட அப்படிப்பட்ட இடங்களே அனைத்திற்கும் குவிமையம். அங்கு “சட்டாம்பியாக” அமர்ந்திருப்பவர் பல சமயங்களில் அதை இயக்கும் விசை கொண்டவர்களாக இருக்கின்றார் . தங்களுக்கு எதிரானவர்களை அங்கு அமர்ந்து கொண்டு தொடர்ந்து அவருக்கு எதிரான போர் ஒன்றை நிகழ்த்துவது போல அவர் முற்றும் மதிப்பிழக்கும் வரை அவரை பற்றி பேசுவதை அவர் ஒழிவதில்லை. அவர்களின் வாய்க்குள் சிக்கியவர் பின் ஒருபோதும் அதிலிருந்து மீண்டதில்லை. 


தொகுதியை கையகப்படுத்த மாரிமுத்து செய்தது இதை போல குவி மையங்களுடன் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டது . உள்நுழைய மிக எளிதான வழி அது . அப்படி ஊருக்குள் இருந்த சிலரை நெருக்கமாக வைத்திருந்தது அவர் தேர்தலில் வெற்றி பெற உதவியது. அவரை அறிமுகம் செய்து வைத்தது அந்த குழிவின் உறுப்பினர் ஒருவராக இருக்க வேண்டும். எதிர்பார்ப்பும் நிறைவேற்றுதலும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் இணைந்திருக்க முடியாத எல்லை என ஒன்று எல்லையுண்டு.

அங்கு அவர்கள் தன்நிலை அறியாதவர்களாக மிக கற்பனையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களாக அவர்களின் ஒருவருக்கு கூட அதிகாரத்தில இருப்பவர்கள் அவர்கள் விழைதை வாழ்நாளெல்லாம் அவர்களுக்கு செய்து கொடுத்தாலும் நிறையாதவர்கள். பற்றி எரியும் நெருப்பை போல உண்ணுவதன் வழியாக மேலும் பெருகிக் கொண்டே இருப்பார்கள் . வென்றவர் தன்னையே தங்களுக்கு முன் வைக்கக வேண்டும் என நினைப்பவர்கள். அவர்கள் முன்னே பதவியில் உள்ளவர்கள் சிறுத்து நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள் , நிற்க வைப்பார்கள் . சமூகத்தின் ஆணவத்திற்கு முன் நிற்கக் கூடியவர் எவருமில்லை. அதன் ஆழமனம் எதிலும் நிறைவடைவதில்லை. 


கடந்தகால ஆட்சியில் பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கம் அளித்ததிருந்த கார் இது போன்ற ஒருவரின் கிராமத்து வீட்டின் முன் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .அதில் கட்டிவைத்திருந்த அவரின் வீட்டு மாடு ஒரு குறியீடு போல அங்கு நின்று கொண்டிருந்தது . அவர்களே கூரிய அரசியலாளர்கள். வாக்காளர்களில் திரண்ட பகுதி . எளிய மனிதர்கள் மீது தங்களின் அரசியலை ஏற்றி வைக்கிறார்கள். அதன் வழியாக முடிவெடுக்க தூண்டுகிறார்கள் . 


புதிய பதிவுகள்

மணிவிழா - 97. * கண்கலில்லா காட்சிகள் *

  ஶ்ரீ : மணிவிழா - 97 19-10-2026 * கண்களில்லா காட்சிகள் * யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்க...