https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 12 ஏப்ரல், 2021

அடையாளமாதல் * பாதைகள் *

 



ஶ்ரீ:



பதிவு : 571  / 761 / தேதி 12 ஏப்ரல்  2021


* பாதைகள் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 49.





“நிமித்தநூலுக்கு அடிப்படை ஒரு பெரிய மெய்நோக்கு. இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வென்பது தனித்த நிகழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது. மானுட வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மழையுடனும் வெயிலுடனும்கா ற்றுடனும் கலந்துள்ளது. இங்குள்ள உயிர்குலத்தின் வாழ்வுடன் அது இணைந்துள்ளது. இருப்பது வாழ்க்கை என்னும் ஒற்றைப்பெருநிகழ்வு.”


-வெண்முரசு - வெண்முகில்நகரம் - ஜெயமோகன்


“குழந்தை பிறக்கப் போகிறது,இந்த வலியும் அசைவும் ரணமும் அதன் பொருட்டே” என்று சொன்ன முன்னாள் அமைச்சர் காந்திராஜ் அந்தக்  கவித்துவமான வரி ,அது எவ்வளவு உண்மை என இப்போதும் நினைக்கிறேன். 2001ல் துவங்கி இரண்டு முறை முதல்வராக இருந்து 2008ல் வீழ்ந்து பின் இன்று உருவாகி நிற்கும் ரங்கசாமி முற்றிலும் வேறு ஒருவர் . 2011ல் அவர் எழுந்த வந்த சூழலைத்தான் காந்திராஜ் அன்று ஒருவாறு அப்படி உருவகித்திருந்தாரா ? என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் . ஆனால் அது மீள மீள புதுப்புது கணக்குகளை உருவாக்கிக் கொண்டே இருப்பது அதன் வினோதம் . ஏறக்குறைய பத்து வருடம் கழித்து அரசியலின் புதிய தலைமை உருவாகி வந்தது . வழக்கமான காங்கிரஸ் பொறுப்பாளர்களின் முன்முடிவாலும் அலட்சிய  போக்கினாலும்  சொதப்பல்களினாலும் அந்த வெற்றிடம் உருவாக ஆரம்பித்தது. புதுவை அரசியலில் முன்நிரைக்கு வர விரும்பாத சிலரின் சீண்டல்கள் அதன் பின்புலத்தில் இருந்தன . இந்தியா முழுவதும் இன்றைய காங்கிரஸ் அரசியலின் எதிர்காலமற்ற தன்மை என்கிற கருவிற்குள் இருந்து வெளியேறி எழுந்து வந்தவர்களே இன்று ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். புதுவையிலும் அது இரண்டு முறை நிகழ்ந்தது,நிகழ்த்தியவர்கள் இருவர், கண்ணன் மற்றும் ரங்கசாமி . இருவரும் காங்கிரஸில் இருந்து வெளியேறி தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்தவர்கள். ஆனால் இருவரையும் ஒரு அடைப்புக்குள் கொண்டுவர முடியாது. கண்ணன் மூப்பனாரை முன்னிறுத்தி சண்முகத்தை எதிர்த்து தனது கட்சியை வளர்த்தார். அவரது நிர்வாகத்தின் வழியாக எந்த விழுமியத்தையும் முன்வைக்காது இருத்தலின் கட்டற்ற சமரசங்களால் குறுங்குழுவாகி சிறுத்து பின் மறைந்து போனது . அகில இந்திய அளவில் காங்கிரஸ் பொறுப்பாளர்களின் எதார்த்த குருடினால் மக்கள் ஏற்காத சிலர் முன்வைக்கும் கோப்புகளின் அடிப்படையில் இந்தியா முழுவதும் அதிருப்தியாளர்களை உற்பத்தி செய்து அவர்களை தலைவர்களாக ஆக்கினார்கள் என்பது எளிய கருத்தியல், ஆனால் காந்திராஜ் சொன்னது 1998ல் அப்போது புதுவை அரசியலில் நான் மேலே சொன்ன எதுவும் நிகழவில்லை. அன்று மாற்றுத் தலைமையாக நின்று கொண்டிருந்தவர் திமுக கூட்டணி அரசாங்கத்தில் பங்கு கொண்டிருந்த கண்ணன் மட்டுமே. அந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சிக்குள் , ஆட்சியில் என்னவெல்லாம் நிகழ்த்தினாரோ அதையே அப்போதும் சற்றும் மாறாமல் செய்து கொண்டிருந்தார். மாற்றுத் தலைமையாக அவர் தன்னை முன்வைக்கவில்லை , தன்னை மையப்படுத்தும் வெறும் அரசியலை முன்வைத்திருந்தார், அவை அரசியலில் ஒருவரை பின்பற்ற நினைப்பவரின் ஆழ்மனத்தில்  அவநம்பிக்கைத்தான் உருவாக்கும் ,விந்தையான அந்த கூட்டு மனச்செயல்பாட்டினால் அது அவரது தலைமையை முற்றிலுமாக நிராகரிக்கும் . 1996 களில் தொடங்கி 1999 களுக்குள் அதுதான் அவருக்கு நிகழ்ந்து . 


காங்கிரஸிற்கு அகில இந்தியளவில் நிகழ்ந்தது இது போல ஒன்று . அது ஏறக்குறைய 1994 களில் துவங்கியது என நினைக்கிறேன் கால அளவு மாறுபட்டாலும் அது வீழ்ச்சிக்கு முன் நிகழும் பெரும் வெற்றியில் இருந்து அது துவங்குகிறது என நினைக்கிறேன். இரண்டும் ஏறக்குறைய ஒன்று போலவே . மூன்றாவதாக சண்முகத்திற்கு 1999 களில் துவங்கி 2001 அரசாங்க ரீதியிலும் பின்னர் 2006 களில் துவங்கி 2007 கட்சி ரீதியாக என அவர் இரண்டு அலகுகளிலும் வீழ்ந்து போனதும் அவர் ஒருபோதும் அரசியலின் மைய ஓட்டத்திற்குள் வர இயலாமல் ஆக்கியது . 2008 களில் அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட போது முதல் முறையாக அவரது அரசியல் நிலைபாடுகளின் தவறுகளை விவாதிக்கும் சந்தர்ப்பம் வந்தது. அதில் அவர் தனக்கு மற்றொரு வாய்ப்பு பற்றி கூறினார் அதை கடுமையாக மறுத்து இனி அவரால் ஒருபோதும் மைய அரசியலுக்குள் வர முடியாது எனக்கூறி இருந்தேன் . அது ஒரு ஆழ்மன வெளிப்பாடு என்றே உணர்கிறேன் . அரசியலில் மதுபெரும் தலைவர் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் எனது குரு ஆனால் அவரது கணக்கை நான் நிராகரித்தது பற்றி நான் நீண்ட காலம் நினைவில் வைத்திருந்ததுண்டு . துரதிஷ்ட வசமாக என் கணக்கே சரி என்றானது. சண்முகம் பின்னர் மைய அரதிநலுக்குள் வராமலாகி மன்மறைந்தார்.அனுபவத்திற்கு என்ன அர்த்தம் என்கிற முடிவிலா நீண்ட கேள்வியை அது எனக்குள் உருவாக்கி இருந்தது.நான் கேட்ட கேள்வியும் கந்திராஜின் அந்த கவித்துவமான சொல்லும் முற்றிலும் வேறொரு யதார்த்த அர்த்தத்தில் புரிதலில் காலத்தை கருத்தில் வைத்து சொன்னாதாக நான் இப்போதும் நினைக்கிறேன். அவர் சண்முகத்திற்கு மாற்றாக நாராயணசாமியை கருத்தில் வைத்தும் சொல்லியிருக்கலாம், அதற்கான வாய்ப்பே அன்று இருந்தது . அன்று சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றிருந்தது . ஆட்சி கவிழ்ப்பு சதி என முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் ஏறக்குறைய சிறை சென்றிருக்க வேண்டிய சூழல். தன்னுடன் ஆலோசிக்காது முன்னெடுத்த நிகழ்வு என குறைப்பட்டுக் கொண்டிருந்தார் சண்முகம் மறைமுகமாக தனது கையறு நிலையை வெளிப்படுத்தி இருந்தார் . ஒரு வகையில் ஆட்சி கவிழ்ப்பு அவரை விலக்கி நடந்திருக்கவும் வாய்ப்பு . புதுவை அரசியல் சண்முகத்தின் விரலிடுக்குகளின் வழியாக நழுவிக்கொண்டிருந்தது .


சட்டமன்றத்திற்கு மேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருடைய இலக்கும் அதிகாரப் நோக்கி,கிடைக்கும் சிறு சந்தர்ப்பத்தையும் அதை நழுவ விடாத முயற்சி,அதைத் தவிர வேறு எதையும் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒருவகையில் சண்முகம் வைத்தியலிங்கம்  மோதலில் துவங்கியது . காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு எப்போதும் சிக்கல் மிகுந்தது . இதற்கு முன் மரைக்கார் முதல்வராக இருந்த போதும் அது உக்கிரமாக நிகழந்ததுதான் . ஆனால் அவர்கள் இருவரும் எங்கோ ஒரு புள்ளியில் சமரசமடைவார்கள் . சண்முகத்தின் தில்லி அரசியல் செல்வாக்கு 1991 அவர் தேர்தலில் தோல்வியடைந்தது முதல் இறங்கு முகம் கண்டிருந்தது . 1996ல் இந்திரா குடும்ப ஆதரவு என்கிற மந்திரக் கோல் எதிர்பலனை கொடுக்கும் என்பதாலும் நரசிம்மராவுடன் நல்லுரவை தக்க வைக்க வேண்டியும் வேட்பாளர் தேர்வின் இறுதி முடிவு அடுத்த முதல்வராக வர இருப்பவர் கையில் என அகில இந்திய காங்கிரஸின் கொள்கை முடிவின்படி செயல்பட வேண்டிய இடத்தில் இருந்தார் . வேட்பாளர் தேர்வில் எப்போதும் சண்முகத்தின் கை ஓங்கியிருக்கும் பிற தலைவர்களின் முடிவையும் அதில் கருத்தில் கொள்வார் ஆனால் அகில இந்திய காங்கிரஸின் கொள்கை முடிவால் அது நிகழாது என்பதால் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்துடனா சமரச உடன்பாட்டின்படி கடந்தமுறை வென்றவர்கள் அனைவருக்கும் மற்றும் ஆதவளித்த சுயேட்டை உறுப்பினருக்கும் வேட்பாளர் சீட்டு என முடிவானது . முதல் கோணல் இது, பல முக்கிய தலைகள் உருளக் காரணமாகி ஆட்சி கை நழுவியது .

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

அடையாளமாதல் * கவித்துவச் சொல் *

 ஶ்ரீ:



பதிவு : 570  / 760 / தேதி 04 ஏப்ரல்  2021


* கவித்துவச் சொல் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 48.






முன்னாள் அமைச்சர் காந்திராஜ் என்னை அரசியலில் ஆற்றுப்படுத்தியவர் என்பதால் அவர் எனக்கு மிக முக்கியமானவர். என்னுடைய அரசியல் கோட்பாடுகள் முயற்சிகள் பங்களிப்புகள் போன்றவற்றை சண்முகம் அணியில் ஆரம்ப காலத்தில் திட்டமிட்டது நடைமுறைப் படுத்தியது என பல முக்கிய தருணங்கள் என்னுடன் இணைந்து அவர் பயணப்பட்டார் . அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர் பல சந்தர்பங்களில் எனது அனுகுமுறையை , திட்டத்தை திறந்த மனத்துடன் அவர் அனுகியது எனது செயல்பாடுகளுக்கு பெரிதும் ஊக்கம் தருவதாக இருந்ததுடன் மிகச் சரியான பாதையில் பயணிக்கும் நம்பிக்கையை கொடுத்தது . என்னை சிறந்த அரசியலாளனாக அவர் ஏற்பதை அடிப்படையாக வைத்து அவருக்கும் எனக்குமான உறவை இரு வேறு வகையில் வரையறை செய்து கொள்ள முயல்கிறேன். வயதில் என்னைவிட குறைந்தது பத்து வருடம் மூத்தவர் . யாரையும் “அண்ணன்” என்று விளிக்கும் அவரது ஆழ்மனதை புரிந்து கொள்ள முயல்கிறேன் . அவரது மூத்த சகோதர் அருள்ராஜும் பிறரை அப்படி அழைப்பதை பார்த்திருக்கிறேன் . அதில் அர்த்ப்பொதிவு  ஒன்றில்லை , ஒரு விளிச்சொல் . கறாரானவராக பார்வைக்கு தெரிபவர் பழகுவதில் மிக எளிமையாக  இனிமையானவராக அனுக்கமானவராக அவரை அறிந்திருக்கிறேன் . கருத்தியல் அடிப்படையில் என்னில் மிக ஆழமான செல்வாக்கை செலுத்தியவர் . அந்த செல்வாக்கு எனது செயல்பாடுகளை நான் மிகச் சரியாக வைத்துக் கொள்ள உதவியதுடன் என்னை மெல்ல மெல்ல அரசியலின் அதிவேக சாலைக்கு இட்டுச் சென்றன . இரு வகையில் அவரது ஆற்றுப்படுத்தல் எனக்கு உதவின . ஒன்று தலைவர் சண்முகத்தை நான் சென்று சந்திக்க வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார் அதற்கு மறுத்து நான் முரண்பட்ட பிறகும் என்னை வலிந்து அழைத்துச் சென்றார்.  அந்த சந்திப்பு என்னை அரசியலின் மையத்தில் கொண்டு நிறுத்திய துவக்கப் புள்ளி , இரண்டு அந்த “கவித்துவமான” சொல். அது என்னுள் வேகத்தையும் அடுத்து செல்ல வேண்டிய திசையையும் அதற்கான உந்துசக்தியை கொடுத்தது . அந்த சொல் ஒரு நிமித்தகனின் வாக்கு போல என்னுள்ளே ஏறி அமர்ந்து கொண்ட அந்த நிமிடம் முதல் என்னை இறக்கி வைத்த பிறிதொரு தருணம் வரை எனது இலக்கை நோக்கி தெளிவான பாதையை  வகுத்தும் நகர்த்தியும் கொண்டு சென்றது  . என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் முதலில் சிறு சிறு சம்பவங்களை ஒட்டித் துவங்கி பின்னர் ஒன்றுடன் ஒன்று இணைந்து இணைந்து அழுத்தமான ஒரு முழு வரைபடமாக என் கற்கனையை விரித்தெடுத்தது . முழு வடிவம் அடையும்வரை என்னுடைய அரசியல் செயல்பாடுகளின் வழியாக விளைந்தவை அனைத்தும் “தற்செயல்கள்” என்கிற வரையறைக்குள் நின்று கைநீட்டிக் கொண்டே இருந்தன . நான் இங்கு ஆழமாக அவதானிப்பது ஒன்று உண்டு . துவக்கம் முதல் இறுதிவரை சிறு சிறு நிகழ்வுகளாக , சந்திப்புகளாக நான் உருவாக்கி எடுத்தவைகள் அனைத்தும் சட்டென மாற்றமடைந்து அந்த வரைபடைத்தை நோக்கி நகர்ந்தன . எனது நிரையில் ஒருவர் பின் ஒருவராக வந்து இணைந்தவர்கள் அனைவரின் பின்னணியில் உள்ள ஒத்திசைவும் ஒருங்கிணைவும் இன்றும் வியக்க வைப்பவை . அதுவே வெற்றியின் கனம் என் மண்டையில் ஏறாது பார்த்துக் கொண்டது போல . அவை பெரும்பாலும் அந்தந்த சமயங்களில் நான் எடுத்த முடிவுகளின் வழியாக நிகழ்ந்தவை என்றாலும் ஒரு மாயையை போல என்னைச் சுற்றி சூழ்ந்திருந்தது . அது ஒரு கற்பனை தோற்றம் என்று எடுத்துக் கொண்டாலும் என்னை செலுத்திய மைய விசை அது .


எனது கற்றலை , புரிதலை மற்றும் தேடலை இப்படி வரையறை செய்து கொள்வேன் . ஒரு மாபெரும் வரைபடத்தில் சென்று பொருந்தக்கூடிய சிறு சிறு பகுதிகளை எந்த உபயோகத்திற்கு என தெரியாமல் வாழ்நாள் முழுவதுமாக சேகரித்திருக்கிறேன் என அவை என்னை நம்பவைத்தன . இன்று அனைத்திலிருந்தும் விடுபட்டு விலகி நின்று கொண்டு, எடுத்து சேகரித்தவற்றை அந்த வரைபடத்தில் பொருத்தி, சேர்த்துப் பார்க்கையில் பெருமளவு அந்த வரைபடம் பற்றிய எனது புரிதலுடன் மிகச்சரியாக பொருந்துகிறது என நினைக்க வைக்கிறது . இதில் விந்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் சார்ந்து நின்ற துறைகளுக்கு பொருந்துவதாக அந்த வரைபடம்  உளமயக்த்தை கொடுத்தது . அவற்றை பிழைப் புரிதல் என ஒருநாளும் கருதியதில்லை. அங்கிருந்து எனது இலக்கும் எல்லைகளும் உருவாகி வந்தன . அவை புரிதல்களாக தோன்றுவதும் புது அர்த்தங்களை சேர்க்க முயற்சிப்பதுமே எப்போதும் அதில் நிகழ்ந்து கொண்டிருப்பது . நான் எடுத்துச் சேர்த்தவைகளை மிச்சமில்லாமல் உள்வாங்கிக் கொள்ளும் ஒன்றாக அது எப்போதும் இருந்தது .  என் எண்ணத்திற்கேற்ப அவற்றில் புது விளக்கங்களை ஊகித்தவுடன் அது அடுத்து நான் நிகழ்த்த வேண்டிய செயல்களை எனக்கு வகுத்து அளித்துக் கொண்டே இருந்தது  . அரசியலில் தீவிரமாக இருந்த போதுதான் முதன்முதலில் அதன் முகம் போல ஒன்றை பார்த்தேன் . அது ஒன்றைச் தீவிரமாக சொல்லவருவதாக தோன்றியது . அதன் தொடக்கத்திலிருந்து மெல்ல நகர்ந்து செல்லும் அது சுட்டும் இடம் தோரும் விரல்களால் அதில் ஊர்ந்தபடி இருந்திருக்கிறேன் . அதன் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கிறது . நுண்மையாக , அடர்த்தியாக , செறிவாக என்கிற நுட்பங்களுடன் . அவை அது மட்டும் தானா? என்றால் இல்லை . அரசியலில் இருந்து வெளியேறிய பிறதொரு மனநிலையில்  அனைத்திலிருந்தும் விலகியதை என் ஊழின் நிர்பந்தம் என அறிந்திருந்தேன் .அந்த இருத்தலை சிறை உணர்ந்ததும் அதில் இருந்து விலகு விலகு என ஓயாது என்னிடம் மன்றாடிய ஒன்றின் குரலை கேட்ட போது அது என்னுடைய  விடுதலையை நோக்கிய எண்ணமாகத் திரும்பியது.


ரிஷகேசத்தில் இருந்த போதுதான் எப்போதும் இல்லாத ஆக்ரோஷத்துடன் அதைப்பற்றி சிந்திக்க துவங்கினேன் . அந்த எண்ணம் மிக தீவிரமாக  வலுப்பட ஆரம்பித்திருந்தது . அதுவரை எனது திட்டமான அறக்கட்டளை துவங்கும் பூர்வாங்க வேலைகள் முடிந்து ஆடிட்ரிடம்  படிவத்தில் கையெழுத்திட்டருந்தேன் . தேவையான நிதி ஆதாரம் எனது வியாபார நிறுவனத்தின் லாபத்தின் கனிசமான தொகை வருடம் தோரும் அதற்கு மடைமாற்றும் படி அது ஒருங்கியிருந்தது . அறக்கட்டளை துவக்கும் எண்ணமே ஒரு வகையில் வியாபாரத்திலிருந்து ஒதுங்கும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டவை . வியாபாரத்தில் அதுவரை வளர்த்தெடு்த்ததை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்யும்  பொருட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . அவை அனைத்துமே தன்னளவில்  வெற்றிகரமாக செயல்படுத்தும் எண்ணத்தை முன்வைத்தவை.  நிர்வாகம் நிதி ஆதாரம் மற்றும் வெளிநாட்டு கொள்முதல் பற்றி திட்டம் எல்லாம் அடங்கியவை . அப்போது எதிர் கொண்ட சிக்கல்கள் அனைத்திற்கும் அதில் தீர்வு இருந்ததாக தோன்றியது  . ஆனால் ஒரு கட்டத்தில் புதிய சவால்களும் அது என்னை இன்னும் மிகத் தீவிரமாக உள்ளிழுத்துக் கொள்ளும் என்கிற உண்மை வெளிப்பட்டப் போது அனைத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தி வெளியேற முடியாத பொறியில் சிக்கியது போல மூச்சிளைக்கத் துவங்கினேன் . தேடலின் விசை ஒரு ஒழுங்கிற்குள் வராததால் ஏற்பட்ட கொந்தளிப்பின் வெளிப்பாடாக ரிஷிகேசத்தில் இருந்த போது பொருளியலை முன்வைத்த அனைத்து திட்டத்தையும் ஏறக்குறைய கைவிட்டேன் .

திங்கள், 29 மார்ச், 2021

அடையாளமாதல் * சாத்தியக்குறுகள் *


ஶ்ரீ:



பதிவு : 569  / 759 / தேதி 29 மார்ச்  2021


* சாத்தியக்குறுகள் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 47.





அரசியல்வெளி இன்று வேறொரு தலைமுறைக்கானதாக மாறியிருப்பதை பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது . ஒவ்வொரு பத்தாண்டுகளில் அது தீவிர மாறுபாட்டை அடைந்து கொண்டே இருக்கிறது . உற்று நோக்குபவர் அன்றி பிற அனைவரும் அதை நோக்கி குறை சொல்லும் இடத்திலேயே இருக்கிறார்கள் என்பது வேடிக்கையானது . இது எப்போதும் உள்ளதுதான் அவை கால மாற்றத்திற்கு ஏற்ப தீவிரமடைந்தபடி இருப்பவை . என்னுடைய பார்வையில் இருந்து இன்று நிலவும் இந்த அரசியல் நகர்வு சிக்கல் மிக தற்செயலான ஒன்றிலிருந்து துவங்கியது . அரசியல் பயனாளிகள், தவிற்க இயலாதவர்கள் மற்றும்  கொந்தளிப்பானவர்கள் என அவர்கள் மூன்று அடுக்குகளில் உள்ளவர்கள். அரசியலில் திறமையற்ற தலைமை வந்து அமரும் போதும் அல்லது அவர்களின் தவறாக முடிவுகளினாலும் கசந்து சிலர் வெளியேற , பலர் ஒதுங்கிக் கொள்கிறார்கள் . அப்போது உருவாகும் பெரும் வெற்றிடத்தை நிரப்ப மூன்றாம் அடுக்கு மனிதர்கள் உள்நுழைகிறார்கள் தங்களது மிதப்பான செயல்கள் மூலம்  பிறரின் வெளியேற்றத்தை மேலும் துரிதப்படுத்துகிறார்கள். சுயலாபத்தை வெளிப்படையாக முன்வைப்பது பற்றிய கூச்சம்மில்லாதவர்களாக எப்போதும் எதிலும் கொந்தளிப்பவர்களாக இருப்பவர்கள். முதல் இரண்டு நிலைத் தலைவர்களின் உதவிகளை அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு எதிரில் தங்களின் குறைகளை முனுமுனுப்பாக தயக்கத்துடன் ஒரு காலத்தில் முன் வைத்தவர்கள் பிற மூத்த தலைவர்களை கண்டதும் அடக்கி வாசிப்பவர்கள் . அத்தகையவர்களை கொண்டு கட்சியின் அனைத்து இடத்தையும் நிரப்புகின்ற போது  அரசியலின் அடிப்படை கோட்பாடுகள் விபரீத உச்சத்தை அடைகின்றன . உச்சக்கட்டக் குறுங்குழு மனநிலை  தவறில்லை என்கிற பார்வையை அது ஒரு புள்ளியில் நியாயப்படுத்திவிடுகிறது . பின் யாரும் யாருடனும் இணங்கிச் செல்வதே கூட  குற்றமெனப் பார்க்கப்படுவது தொடங்கி, முரண்படுவதை  செயல்பாடுகள் என நினைத்துக் கொள்வதில் முடிகிறது . ஆகவே அவர்கள் தங்கள் எண்ணங்களை ஓங்கிச் சொல்கிறார்கள் . எல்லா இடத்திலும் முட்டி மோதுகிறார்கள் . அனைத்து ஒளியின் கீழும் சென்று தயக்கமில்லாமல் நிற்கிறார்கள் . சர்சைக்குரிய, நியாயமற்ற கருத்துக்களை கூச்சமில்லாமல் ஆக்ரோஷத்துடன் முன்வைக்கிறார்கள் . அவர்களின் செய்கைகளால் எஞ்சி இருக்கும் மிச்ச மிதவாதிகளும்  கசப்படைபவர்களும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள் . அகில இந்திய காங்கிரஸின் இன்றைய நிலை அதற்கு சிறந்த உதாரணம்.


ஒரு பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் செயல்பாடு கூட்டு நனவிலியில் நிகழ்வது . இந்தியா முழுவதையும் காற்றென இணைப்பது . சிறு சிறு மாறுபாடுகளுடன் நாட்டின் ஒட்டு மொத்தமாக அனைவரையும் ஒற்றை மனம் என்கிற கருதுகோளில் இணைப்பது . அதன் துவக்கத்தை 2001 களில் பார்த்திருக்கிறேன் ஆனால் வெகு சீக்கிரத்தில் அது தனது உச்ச இடத்தை அடையக்கூடும் என அவதானிக்க தவறினேன் . எனது இந்த கூற்று பொதுவாக வெளியேவர்கள் சொல்லும் குறையா  என்றால் , இல்லை . எனக்கு எதன் மீதும் எந்த வருத்தமும் காழ்ப்பும் இல்லை அனைத்திலிருந்தும் எனக்கான புரிதலை நோக்கிய பார்வையினூடாக இவற்றை இங்கிருந்து  தொகுத்துக் கொள்ள முயல்கிறேன் . 1995 களில் நின்று கொண்டு எதிர்வரும் 2005 களில் எங்களுக்கான இடம் எப்படி எப்படி உருவாகி வரும் என்பது பற்றிய எனது மதிப்பீடுகள் ஏறக்குறைய சரியாக இருந்தது ஆச்சர்யமில்லை . நிகழும் போது அதை ஒட்டி எழுவிருக்கும்  முரண்பாடுகள் அதனூடாக எழும் விலகல்கள் மற்றும் துரோகங்கள் குறித்து நான் ஊகித்திருந்த காலத்தைப் பற்றிய கணிப்புதான் தவறாகிப்போனது .  2010 களில்  நடக்கக் கூடியது என நினைத்திருந்தது பத்து வருடங்களுக்கு முன்னராக அதாவது 2001 களில் துவங்கி 2005 களில் வேறொன்றாக மாறி முடிவுற்று நின்றதால் அந்தக் கனவு கலைந்து போனது . இளம் தலைவர்கள் என நான் உருவாக்கியவர்கள் எல்லோருக்குமான கதவு திறக்கும் காலத்திற்கு சிறிது காத்திருப்பார்கள் என்று கணித்திருந்தேன். ஆனால் காத்திருக்க பழகாத ஒரு தலைமுறை உருவாகி இருந்ததை இன்று இங்கிருந்து பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. அன்று நினைத்ததை நோக்கிய மிகச் சரியாக நகர்விற்கு எனக்கு தேவை சிறிது அவகாசம் . அது கிடைக்காமல் போன வருத்தம் மட்டுமே அன்று எஞ்சி இருந்தது. சில காலம் அது குறித்து வருத்தமாக இருந்தாலும், அந்த அரசியல் முன்னெடுப்புகளும் திட்டங்களும் தனிப்பட்ட “உனக்கானது இல்லை” என்று நம்பினால் “மௌனமாக வெளியேறு” என எனக்கு நான் சொல்லிக் கொண்டே அனைத்திலிருந்தும் வெளியேறினேன் . அது மீள மீள எனக்கு நானே சொல்லிக் கொண்ட “மெய்மை சொல்லை” போல அது எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுவித்தது.


1997 களில் 2010 பற்றி எனக்கு ஒரு அரசியல் கனவு இருந்தது . அது கட்சி மூத்த பொதுச் செயலாளர் காந்திராஜுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அது  சட்டென உருவாகி வந்தது . இன்றளவும் அந்த கருதுகோள் சரி என்றே உணர்கிறேன் . காந்திராஜ் புதுவையின் புகழ்பெற்ற குற்றவியல் சட்ட நிபுணர் . சிறந்த அரசியல் ஊகவியளாலர் சிந்தனையாளர். 1996 தேர்தல் களத்தில் மிக எளிதில் தோற்கடிக்கபட்டு அமைச்சர் பதவியை இழந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைக்க கூடுதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேவை என்கிற நெருக்கடியில் பல ஜாம்பவான்கள் தோற்றுப்போனார்கள் . கட்சியின் கள செயல்பாட்டாளர்கள் தேர்தலில் வெல்லும் மற்றும் தோற்பவர் குறித்த பட்டியலில், தோற்பவர்கள் நிரையில் காந்திராஜ் பெயர் முன்னிலையில் இருந்தது . அவர் தோல்வியுற இருப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் . காந்திராஜ் கூர்மதியாளர் அரசியல் கணிப்பாளர் என்றாலும் அவரின் தன்னுடை களம் குறித்து கொண்டிருந்த நம்பிக்கை  சற்று வினோதமானது . தனது ஊகங்களை ஏன் அவர் தனக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை அல்லது அவரில் அது ஏன் எடுபடவில்லை என நினைப்பதுண்டு . ஒருவேளை தலைவர்களையும் காலத்தையும் கணிக்க இயல்வது போல மக்களை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல போல . அவருடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அந்த ஊகத்திற்கு சட்டென வந்து சேர்ந்தேன். அன்று புதுவை அரசியலில் கடும் தேக்க நிலையும்  எப்பக்கமும் நகர முடியாத சூழலால் முதன்மை அரசியல் தலைவர்கள் மெல்ல தங்களது செல்வாக்கை இழந்து கொண்டிருந்தார்கள் . அது ஒரு மெல்லிய புகை மூட்டம் போல  எல்லா கட்சியையும் சூழ்ந்து  தலைவர் தொண்டர் என்னும் மேல் கீழ் அடுக்குகளை காலாவதியாகிக் கொண்டிருந்து . எதிர் காலத்தைக் குறித்து நம்பிக்கை கொள்ள ஏதும் இல்லை என்கிற திகைப்புடன் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் ”குழந்தை பிறக்க போகிறது இன்றைய அரசியலின் ரணத்திற்கு அதுதான் காரணம்” என்றார். அவர் அதைக் கவித்துவமாக சொன்னாலும்  என்னை சொடுக்கிய விசை அது . அவர் சுட்டும் வெற்றிடத்தையும் அதில் உள்ள பிரகாசமான வாய்ப்புகளையும் என் ஆழ்மனம் முன்பே ஊகித்திருந்தது . அவர் சொல்லி முடித்ததும் அனைத்து காய்களும் அதனுள் சட்டென நுழைந்து அமர்ந்து கொண்டன . அடுத்த வழிநடத்த போவது யார் என்கிற  கேள்வி அர்த்தமற்ற தன்மையும் இனி அது போல நிகழப்போவதில்லை , நீ எதிர் நோக்கும் ஆளுமை அல்லது தருணம் எழுந்து வருவது எப்போதைக்குமாக இல்லை . நீ உனக்கான பாதையை உருவாக்கி கொள் உடன் பயணிக்க இருப்பவர்களை தேர்ந்தெடு இனி வழிநடத்துபவர் இல்லை எதிர்பார்பது நிகழப்போவதில்லை , தெளிவான திட்டமிடலே அனைத்தையும் வழிநடத்தும் என்கிற குரல் உள்ளிருந்து எழுந்தவுடன் அது ஒரு முதிரா சிறுவனின் சாகசக் கனவு போல அது தொடர்ந்து விரிந்து கொண்டே இருந்தது நிகழ்கால சவால்களை எதிர்க்கத் துணிந்தேன் பிறர் எதிர்க்க அஞ்சுபவரை உறுதியுடன் எதிர்த்து நின்றது போன்றவை இன்று மெல்லிய புன்னகையை கொடுத்தாலும் அன்று அவை ஆவேசமான நாட்கள் , புரிதல்கள் உச்சகட்ட கற்றல்கள் என எங்கும் பரபரவென்றிருந்தேன் .


புதிய பதிவுகள்

மணிவிழா - 97. * கண்கலில்லா காட்சிகள் *

  ஶ்ரீ : மணிவிழா - 97 19-10-2026 * கண்களில்லா காட்சிகள் * யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்க...