https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

அடையாளமாதல் * கவித்துவச் சொல் *

 ஶ்ரீ:பதிவு : 570  / 760 / தேதி 04 ஏப்ரல்  2021


* கவித்துவச் சொல் * ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 48.


முன்னாள் அமைச்சர் காந்திராஜ் என்னை அரசியலில் ஆற்றுப்படுத்தியவர் என்பதால் அவர் எனக்கு மிக முக்கியமானவர். என்னுடைய அரசியல் கோட்பாடுகள் முயற்சிகள் பங்களிப்புகள் போன்றவற்றை சண்முகம் அணியில் ஆரம்ப காலத்தில் திட்டமிட்டது நடைமுறைப் படுத்தியது என பல முக்கிய தருணங்கள் என்னுடன் இணைந்து அவர் பயணப்பட்டார் . அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர் பல சந்தர்பங்களில் எனது அனுகுமுறையை , திட்டத்தை திறந்த மனத்துடன் அவர் அனுகியது எனது செயல்பாடுகளுக்கு பெரிதும் ஊக்கம் தருவதாக இருந்ததுடன் மிகச் சரியான பாதையில் பயணிக்கும் நம்பிக்கையை கொடுத்தது . என்னை சிறந்த அரசியலாளனாக அவர் ஏற்பதை அடிப்படையாக வைத்து அவருக்கும் எனக்குமான உறவை இரு வேறு வகையில் வரையறை செய்து கொள்ள முயல்கிறேன். வயதில் என்னைவிட குறைந்தது பத்து வருடம் மூத்தவர் . யாரையும்அண்ணன்என்று விளிக்கும் அவரது ஆழ்மனதை புரிந்து கொள்ள முயல்கிறேன் . அவரது மூத்த சகோதர் அருள்ராஜும் பிறரை அப்படி அழைப்பதை பார்த்திருக்கிறேன் . அதில் அர்த்ப்பொதிவு  ஒன்றில்லை , ஒரு விளிச்சொல் . கறாரானவராக பார்வைக்கு தெரிபவர் பழகுவதில் மிக எளிமையாக  இனிமையானவராக அனுக்கமானவராக அவரை அறிந்திருக்கிறேன் . கருத்தியல் அடிப்படையில் என்னில் மிக ஆழமான செல்வாக்கை செலுத்தியவர் . அந்த செல்வாக்கு எனது செயல்பாடுகளை நான் மிகச் சரியாக வைத்துக் கொள்ள உதவியதுடன் என்னை மெல்ல மெல்ல அரசியலின் அதிவேக சாலைக்கு இட்டுச் சென்றன . இரு வகையில் அவரது ஆற்றுப்படுத்தல் எனக்கு உதவின . ஒன்று தலைவர் சண்முகத்தை நான் சென்று சந்திக்க வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார் அதற்கு மறுத்து நான் முரண்பட்ட பிறகும் என்னை வலிந்து அழைத்துச் சென்றார்அந்த சந்திப்பு என்னை அரசியலின் மையத்தில் கொண்டு நிறுத்திய துவக்கப் புள்ளி , இரண்டு அந்தகவித்துவமானசொல். அது என்னுள் வேகத்தையும் அடுத்து செல்ல வேண்டிய திசையையும் அதற்கான உந்துசக்தியை கொடுத்தது . அந்த சொல் ஒரு நிமித்தகனின் வாக்கு போல என்னுள்ளே ஏறி அமர்ந்து கொண்ட அந்த நிமிடம் முதல் என்னை இறக்கி வைத்த பிறிதொரு தருணம் வரை எனது இலக்கை நோக்கி தெளிவான பாதையை  வகுத்தும் நகர்த்தியும் கொண்டு சென்றது  . என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் முதலில் சிறு சிறு சம்பவங்களை ஒட்டித் துவங்கி பின்னர் ஒன்றுடன் ஒன்று இணைந்து இணைந்து அழுத்தமான ஒரு முழு வரைபடமாக என் கற்கனையை விரித்தெடுத்தது . முழு வடிவம் அடையும்வரை என்னுடைய அரசியல் செயல்பாடுகளின் வழியாக விளைந்தவை அனைத்தும்தற்செயல்கள்என்கிற வரையறைக்குள் நின்று கைநீட்டிக் கொண்டே இருந்தன . நான் இங்கு ஆழமாக அவதானிப்பது ஒன்று உண்டு . துவக்கம் முதல் இறுதிவரை சிறு சிறு நிகழ்வுகளாக , சந்திப்புகளாக நான் உருவாக்கி எடுத்தவைகள் அனைத்தும் சட்டென மாற்றமடைந்து அந்த வரைபடைத்தை நோக்கி நகர்ந்தன . எனது நிரையில் ஒருவர் பின் ஒருவராக வந்து இணைந்தவர்கள் அனைவரின் பின்னணியில் உள்ள ஒத்திசைவும் ஒருங்கிணைவும் இன்றும் வியக்க வைப்பவை . அதுவே வெற்றியின் கனம் என் மண்டையில் ஏறாது பார்த்துக் கொண்டது போல . அவை பெரும்பாலும் அந்தந்த சமயங்களில் நான் எடுத்த முடிவுகளின் வழியாக நிகழ்ந்தவை என்றாலும் ஒரு மாயையை போல என்னைச் சுற்றி சூழ்ந்திருந்தது . அது ஒரு கற்பனை தோற்றம் என்று எடுத்துக் கொண்டாலும் என்னை செலுத்திய மைய விசை அது .


எனது கற்றலை , புரிதலை மற்றும் தேடலை இப்படி வரையறை செய்து கொள்வேன் . ஒரு மாபெரும் வரைபடத்தில் சென்று பொருந்தக்கூடிய சிறு சிறு பகுதிகளை எந்த உபயோகத்திற்கு என தெரியாமல் வாழ்நாள் முழுவதுமாக சேகரித்திருக்கிறேன் என அவை என்னை நம்பவைத்தன . இன்று அனைத்திலிருந்தும் விடுபட்டு விலகி நின்று கொண்டு, எடுத்து சேகரித்தவற்றை அந்த வரைபடத்தில் பொருத்தி, சேர்த்துப் பார்க்கையில் பெருமளவு அந்த வரைபடம் பற்றிய எனது புரிதலுடன் மிகச்சரியாக பொருந்துகிறது என நினைக்க வைக்கிறது . இதில் விந்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் சார்ந்து நின்ற துறைகளுக்கு பொருந்துவதாக அந்த வரைபடம்  உளமயக்த்தை கொடுத்தது . அவற்றை பிழைப் புரிதல் என ஒருநாளும் கருதியதில்லை. அங்கிருந்து எனது இலக்கும் எல்லைகளும் உருவாகி வந்தன . அவை புரிதல்களாக தோன்றுவதும் புது அர்த்தங்களை சேர்க்க முயற்சிப்பதுமே எப்போதும் அதில் நிகழ்ந்து கொண்டிருப்பது . நான் எடுத்துச் சேர்த்தவைகளை மிச்சமில்லாமல் உள்வாங்கிக் கொள்ளும் ஒன்றாக அது எப்போதும் இருந்ததுஎன் எண்ணத்திற்கேற்ப அவற்றில் புது விளக்கங்களை ஊகித்தவுடன் அது அடுத்து நான் நிகழ்த்த வேண்டிய செயல்களை எனக்கு வகுத்து அளித்துக் கொண்டே இருந்தது  . அரசியலில் தீவிரமாக இருந்த போதுதான் முதன்முதலில் அதன் முகம் போல ஒன்றை பார்த்தேன் . அது ஒன்றைச் தீவிரமாக சொல்லவருவதாக தோன்றியது . அதன் தொடக்கத்திலிருந்து மெல்ல நகர்ந்து செல்லும் அது சுட்டும் இடம் தோரும் விரல்களால் அதில் ஊர்ந்தபடி இருந்திருக்கிறேன் . அதன் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கிறது . நுண்மையாக , அடர்த்தியாக , செறிவாக என்கிற நுட்பங்களுடன் . அவை அது மட்டும் தானா? என்றால் இல்லை . அரசியலில் இருந்து வெளியேறிய பிறதொரு மனநிலையில்  அனைத்திலிருந்தும் விலகியதை என் ஊழின் நிர்பந்தம் என அறிந்திருந்தேன் .அந்த இருத்தலை சிறை உணர்ந்ததும் அதில் இருந்து விலகு விலகு என ஓயாது என்னிடம் மன்றாடிய ஒன்றின் குரலை கேட்ட போது அது என்னுடைய  விடுதலையை நோக்கிய எண்ணமாகத் திரும்பியது.


ரிஷகேசத்தில் இருந்த போதுதான் எப்போதும் இல்லாத ஆக்ரோஷத்துடன் அதைப்பற்றி சிந்திக்க துவங்கினேன் . அந்த எண்ணம் மிக தீவிரமாக  வலுப்பட ஆரம்பித்திருந்தது . அதுவரை எனது திட்டமான அறக்கட்டளை துவங்கும் பூர்வாங்க வேலைகள் முடிந்து ஆடிட்ரிடம்  படிவத்தில் கையெழுத்திட்டருந்தேன் . தேவையான நிதி ஆதாரம் எனது வியாபார நிறுவனத்தின் லாபத்தின் கனிசமான தொகை வருடம் தோரும் அதற்கு மடைமாற்றும் படி அது ஒருங்கியிருந்தது . அறக்கட்டளை துவக்கும் எண்ணமே ஒரு வகையில் வியாபாரத்திலிருந்து ஒதுங்கும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டவை . வியாபாரத்தில் அதுவரை வளர்த்தெடு்த்ததை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்யும்  பொருட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . அவை அனைத்துமே தன்னளவில்  வெற்றிகரமாக செயல்படுத்தும் எண்ணத்தை முன்வைத்தவைநிர்வாகம் நிதி ஆதாரம் மற்றும் வெளிநாட்டு கொள்முதல் பற்றி திட்டம் எல்லாம் அடங்கியவை . அப்போது எதிர் கொண்ட சிக்கல்கள் அனைத்திற்கும் அதில் தீர்வு இருந்ததாக தோன்றியது  . ஆனால் ஒரு கட்டத்தில் புதிய சவால்களும் அது என்னை இன்னும் மிகத் தீவிரமாக உள்ளிழுத்துக் கொள்ளும் என்கிற உண்மை வெளிப்பட்டப் போது அனைத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தி வெளியேற முடியாத பொறியில் சிக்கியது போல மூச்சிளைக்கத் துவங்கினேன் . தேடலின் விசை ஒரு ஒழுங்கிற்குள் வராததால் ஏற்பட்ட கொந்தளிப்பின் வெளிப்பாடாக ரிஷிகேசத்தில் இருந்த போது பொருளியலை முன்வைத்த அனைத்து திட்டத்தையும் ஏறக்குறைய கைவிட்டேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...