ஶ்ரீ:
பதிவு : 572 / 762 / தேதி 18 ஏப்ரல் 2021
* இடைச்செறுகல் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 50.
முதல்வர் ரங்கசாமி மற்றும் வல்சராஜ் இருவேறு சந்தர்பங்களில் என்னிடம் சொன்ன சில விஷயங்களை அடிப்படையாக வைத்து இதை இப்படி ஊகிக்கிறேன் . 2008 களில் முதல்வராக இருந்த ரங்கசாமியை மாற்றும் பொருட்டு அவருக்கு எதிராக வல்சராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிந்து கட்டிக் கொண்டிருந்த நேரம் . 2001ல் தலைவர் சண்முகம் முதல்வர் பதவில் இருந்து விலகியதில் இருந்து வல்சராஜ் புதுவை அரசியலில் எதிர்க இயலாத தனியாளுமையாக எழுந்து கொண்டிருந்தார். அவரை நான் அறிந்த வரை அவரின் கரவுத்தண்மை அவரை அரசியலில் வலிமையுள்ளவராக்கியது அவரது பலவீனமும் அதுவே . பிறரின் கவனத்தை ஈர்க்காத அரசியல் பாணி அவருடையது. 2001 இறுதியில் தலைவர் சண்முகம் இரண்டாம் முறை முதல்வரான அந்த இடைப்பட்ட காலத்தில் சண்முகம் வல்சராஜ் இருவருக்குள் முரண்பாடுகள் உள்ளூறப் புகைந்து கொண்டு இருந்தது கொதிநிலையடைந்தது . அதன் துவக்கம் 1996 களில் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்தது . இருவருக்குள் நிகழ்ந்த அரசியல் நிலைப்பாடுகள் வல்சராஜை தலைவர் அணுக்கர் என்கிற கோட்பாட்டிலிருந்து வெளியே தள்ளி அவர்களின் உறவை கடுமையாக பாதித்திருந்தது . 1996 களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தட்டிக்கழித்தார் என சண்முகம் மீது வல்சராஜ் வைத்த முதற் குற்றச்சாட்டு . அது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் பொதுக் கருத்தும் கூட . அந்த தேர்தலில் காங்கிரஸின் முதல் நிலை தலைவர்களில் பலர் தோல்வியுற்றதால் ஆட்சி அமையுமானால் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்ததே அவர்களின் பதட்டத்திற்கு காரணம் . சண்முகம் ஆட்சி அமைப்பதில் ஆர்வம் காட்டாதது அவர் மீது வெறுப்பு உருவாகினாலும் அவர் மீதிருந்த ஆச்சம் காரணமாக அதை வெளிப்படையாக பேசத் தயங்கினர். அந்த கால கட்டத்தில் நாராயணசாமியும் சண்முத்திடம் இருந்து விலகல் துவங்கியது . வல்சராஜ் எப்போதும் நாராயணசாமிக்கு அணுக்கர் என்பதால் அந்த விலக்கத்தினால் ஊக்கம் பெற்று சண்முகம் எதிரான விம்சனத்தை வெளிப்படையாக வைக்கத் துவங்கினார் . ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியையும் அதற்கான வாய்ப்பிற்கு பிற எல்லோரையும் போல வல்சராஜ் காத்திருக்காமல் அது நிகழும் வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தார் . 1997 களில் நிகழ்ந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தை முதன்மை குற்றவாளியாக்கி மத்திய புலனாய்வின் கைகளுக்கு சென்றது அனைவரையும் சில காலம் வெருளச் செய்திருந்தது . அதன் பின் ஆட்சி கவிழ்ப்பை மறந்து ஆட்சி மாற்றம் பற்றி யோசிக்க துவங்கினர் . ஆட்சியில் இருந்த முதல்வர் ஜானகிராமன் மற்றும் கண்ணனுக்கு இடையேயான இழுபறிகள் அந்த வாய்ப்பை எளிதாக்கி ஊகங்களை உலவிட்டது . 1998 மாநிலங்களவை தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டாம் என சண்முகம் முடிவெடுத்தது மற்றொரு அரசியல் பிழை . அரசியல் தனிப்பட்ட காரணங்களே முக்கிய மாற்றங்களை கோருபவை என்றாலும் கோட்பாடுட்டு ரீதியாக யாரும் மறுப்பு சொல்ல இயலாமல் அவற்றை முன்வைப்பதே அரசியல் என்பது , சண்முகத்தின் பலமே அனைத்தையும் அத்தகைய கருத்தியலுக்குள் கொண்டுவருவது . அம்முறை அவரால் அது இயலவில்லை . அனைத்து தரப்பின் முற்றுகையில் இருந்தது முதல் காரணம் மற்றும் அரசியல் அடுத்த தலைமுறைக்கு கைமாறி இருப்பதை கணிக்க தவறியது இரண்டாவது காரணம் . வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு போட்டிடுவது கட்சி கடமைகளில் ஒன்று . அவர் நாராயணசாமி போட்டியிடுவதை தவிற்க விரும்பினார் அல்லது அவருக்கு மாற்று யாராவது அவரது திட்டத்தில் இருந்திருக்கலாம், கட்சி கூட்டத்தில் அதை சரியாக முன்வைக்க மிகுந்த தயக்கம் எழுந்ததற்கு, நாராயணசாமியுடனான முரண் வெளியில் தெரியவேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம் . ஆனால் அது ஒரு சிறு கணக்கு மட்டுமே. பதவியுள்ள நாராயணசாமியை அவர் அஞ்சினார் என்பது உள்முகம் . அவரது எதிர்பை மேலிட தலையீடினால் கடந்து 1998ல் நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நாராயணசாமி தோல்வியடைந்தார் . அதிமுகவின் ஆதரவின் அடிப்படையில் அவர் வென்றிருக்கும் வாய்ப்பிருந்ததாக வல்சராஜ் உறுதியுடன் சொன்னார் . சண்முகம் தமிழக முதல்வருடனான நெருக்கம் அதை நிகழ்திக் கொடுத்திருக்கலாம் . அவர் அதற்கு முயற்சிக்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக எழுந்தது . அனைத்து காட்சிகள் மாறத் துவங்கியது அதன் பிறகு . 1998 நாடாளுமன்ற தேர்தலில் போட்டிட்ட சண்முகம் தோல்வியுற நேர்ந்தது அதே அதிமுகவின் ஆதரவின்மையால் . நாராயணசாமியின் மாநிலங்களவை தேர்தலில் சண்முகம் அதிமுகவின் ஆதரவை கேட்டுப் பெற்றிருந்தால் காங்கிரஸ் அதிமுகாவின் கூட்டணிக்கான வாய்ப்பு உருவாகியிருக்கலாம் . மொத்த அரசியலும் வேறொரு இடத்தை அடைத்திருக்கும் .
அதன் பிறகு ஆட்சி மாற்றத்திற்கான எல்லா வாய்ப்பிற்கும் வல்சராஜ் தயக்கமில்லாது முயற்சிக்க ஆரம்பித்திருந்தார் . அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதும் சண்முகத்தின் அணுக்கர் என்கிற அவரது முயற்சிகளின் பின்னணியில் சண்முகம் இருப்பதைப் போன்ற தோற்றம் இருந்தது . அதை மறுக்கும் இடம் தலைவர் சண்முகத்திற்கு இல்லை. மாநிலகட்சித் தலைமையை தாண்டி வல்சராஜ் எடுத்த முயற்சிகள் சண்முகத்திற்கு பெரும் கொதிப்பை கொடுத்திருக்க வேண்டும் . அவரது நீண்ட அரசியல் அனுபவம் அவற்றை மௌனமாக கடக்க சொல்லிக் கொடுத்திருந்தது . அவர் வழமை அவரது பலமாக இருந்தது . அனைத்தையும் சாதகமாக எடுத்துக் கொண்டு காய் நகர்த்த துவங்கி ஒரு கட்டத்தில் வெற்றி அடைந்தனர். 1999 ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் வல்சராஜ் மற்றும் கண்ணன் இடத்தில் இருந்தனர் . அது சண்முகம் நினைக்காத காலத்தில் நிகழ்ந்து புதுவை அரசியல் சண்முகத்தின் பிடியிலிருந்து நழுவியது . அவரது வீழ்ச்சி துவங்கியது அந்த புள்ளியில் . அவரது வீழ்ச்சி சட்டென நிகழவில்லை .1999 களில் முதல்வராகி பின்னர் இறக்கங்கள் நிகழ்ந்து பின் அவரால் தவிற்க இயலாம ஒரு தருணத்தில் அது திகழ்ந்து முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக