https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 12 ஏப்ரல், 2021

அடையாளமாதல் * பாதைகள் *

 



ஶ்ரீ:



பதிவு : 571  / 761 / தேதி 12 ஏப்ரல்  2021


* பாதைகள்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 49.





நிமித்தநூலுக்கு அடிப்படை ஒரு பெரிய மெய்நோக்கு. இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வென்பது தனித்த நிகழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது. மானுட வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மழையுடனும் வெயிலுடனும்கா ற்றுடனும் கலந்துள்ளது. இங்குள்ள உயிர்குலத்தின் வாழ்வுடன் அது இணைந்துள்ளது. இருப்பது வாழ்க்கை என்னும் ஒற்றைப்பெருநிகழ்வு.”


-வெண்முரசு - வெண்முகில்நகரம் - ஜெயமோகன்


குழந்தை பிறக்கப் போகிறது,இந்த வலியும் அசைவும் ரணமும் அதன் பொருட்டேஎன்று சொன்ன முன்னாள் அமைச்சர் காந்திராஜ் அந்தக்  கவித்துவமான வரி ,அது எவ்வளவு உண்மை என இப்போதும் நினைக்கிறேன். 2001ல் துவங்கி இரண்டு முறை முதல்வராக இருந்து 2008ல் வீழ்ந்து பின் இன்று உருவாகி நிற்கும் ரங்கசாமி முற்றிலும் வேறு ஒருவர் . 2011ல் அவர் எழுந்த வந்த சூழலைத்தான் காந்திராஜ் அன்று ஒருவாறு அப்படி உருவகித்திருந்தாரா ? என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் . ஆனால் அது மீள மீள புதுப்புது கணக்குகளை உருவாக்கிக் கொண்டே இருப்பது அதன் வினோதம் . ஏறக்குறைய பத்து வருடம் கழித்து அரசியலின் புதிய தலைமை உருவாகி வந்தது . வழக்கமான காங்கிரஸ் பொறுப்பாளர்களின் முன்முடிவாலும் அலட்சிய  போக்கினாலும்  சொதப்பல்களினாலும் அந்த வெற்றிடம் உருவாக ஆரம்பித்தது. புதுவை அரசியலில் முன்நிரைக்கு வர விரும்பாத சிலரின் சீண்டல்கள் அதன் பின்புலத்தில் இருந்தன . இந்தியா முழுவதும் இன்றைய காங்கிரஸ் அரசியலின் எதிர்காலமற்ற தன்மை என்கிற கருவிற்குள் இருந்து வெளியேறி எழுந்து வந்தவர்களே இன்று ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். புதுவையிலும் அது இரண்டு முறை நிகழ்ந்தது,நிகழ்த்தியவர்கள் இருவர், கண்ணன் மற்றும் ரங்கசாமி . இருவரும் காங்கிரஸில் இருந்து வெளியேறி தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்தவர்கள். ஆனால் இருவரையும் ஒரு அடைப்புக்குள் கொண்டுவர முடியாது. கண்ணன் மூப்பனாரை முன்னிறுத்தி சண்முகத்தை எதிர்த்து தனது கட்சியை வளர்த்தார். அவரது நிர்வாகத்தின் வழியாக எந்த விழுமியத்தையும் முன்வைக்காது இருத்தலின் கட்டற்ற சமரசங்களால் குறுங்குழுவாகி சிறுத்து பின் மறைந்து போனது . அகில இந்திய அளவில் காங்கிரஸ் பொறுப்பாளர்களின் எதார்த்த குருடினால் மக்கள் ஏற்காத சிலர் முன்வைக்கும் கோப்புகளின் அடிப்படையில் இந்தியா முழுவதும் அதிருப்தியாளர்களை உற்பத்தி செய்து அவர்களை தலைவர்களாக ஆக்கினார்கள் என்பது எளிய கருத்தியல், ஆனால் காந்திராஜ் சொன்னது 1998ல் அப்போது புதுவை அரசியலில் நான் மேலே சொன்ன எதுவும் நிகழவில்லை. அன்று மாற்றுத் தலைமையாக நின்று கொண்டிருந்தவர் திமுக கூட்டணி அரசாங்கத்தில் பங்கு கொண்டிருந்த கண்ணன் மட்டுமே. அந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சிக்குள் , ஆட்சியில் என்னவெல்லாம் நிகழ்த்தினாரோ அதையே அப்போதும் சற்றும் மாறாமல் செய்து கொண்டிருந்தார். மாற்றுத் தலைமையாக அவர் தன்னை முன்வைக்கவில்லை , தன்னை மையப்படுத்தும் வெறும் அரசியலை முன்வைத்திருந்தார், அவை அரசியலில் ஒருவரை பின்பற்ற நினைப்பவரின் ஆழ்மனத்தில்  அவநம்பிக்கைத்தான் உருவாக்கும் ,விந்தையான அந்த கூட்டு மனச்செயல்பாட்டினால் அது அவரது தலைமையை முற்றிலுமாக நிராகரிக்கும் . 1996 களில் தொடங்கி 1999 களுக்குள் அதுதான் அவருக்கு நிகழ்ந்து


காங்கிரஸிற்கு அகில இந்தியளவில் நிகழ்ந்தது இது போல ஒன்று . அது ஏறக்குறைய 1994 களில் துவங்கியது என நினைக்கிறேன் கால அளவு மாறுபட்டாலும் அது வீழ்ச்சிக்கு முன் நிகழும் பெரும் வெற்றியில் இருந்து அது துவங்குகிறது என நினைக்கிறேன். இரண்டும் ஏறக்குறைய ஒன்று போலவே . மூன்றாவதாக சண்முகத்திற்கு 1999 களில் துவங்கி 2001 அரசாங்க ரீதியிலும் பின்னர் 2006 களில் துவங்கி 2007 கட்சி ரீதியாக என அவர் இரண்டு அலகுகளிலும் வீழ்ந்து போனதும் அவர் ஒருபோதும் அரசியலின் மைய ஓட்டத்திற்குள் வர இயலாமல் ஆக்கியது . 2008 களில் அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட போது முதல் முறையாக அவரது அரசியல் நிலைபாடுகளின் தவறுகளை விவாதிக்கும் சந்தர்ப்பம் வந்தது. அதில் அவர் தனக்கு மற்றொரு வாய்ப்பு பற்றி கூறினார் அதை கடுமையாக மறுத்து இனி அவரால் ஒருபோதும் மைய அரசியலுக்குள் வர முடியாது எனக்கூறி இருந்தேன் . அது ஒரு ஆழ்மன வெளிப்பாடு என்றே உணர்கிறேன் . அரசியலில் மதுபெரும் தலைவர் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் எனது குரு ஆனால் அவரது கணக்கை நான் நிராகரித்தது பற்றி நான் நீண்ட காலம் நினைவில் வைத்திருந்ததுண்டு . துரதிஷ்ட வசமாக என் கணக்கே சரி என்றானது. சண்முகம் பின்னர் மைய அரதிநலுக்குள் வராமலாகி மன்மறைந்தார்.அனுபவத்திற்கு என்ன அர்த்தம் என்கிற முடிவிலா நீண்ட கேள்வியை அது எனக்குள் உருவாக்கி இருந்தது.நான் கேட்ட கேள்வியும் கந்திராஜின் அந்த கவித்துவமான சொல்லும் முற்றிலும் வேறொரு யதார்த்த அர்த்தத்தில் புரிதலில் காலத்தை கருத்தில் வைத்து சொன்னாதாக நான் இப்போதும் நினைக்கிறேன். அவர் சண்முகத்திற்கு மாற்றாக நாராயணசாமியை கருத்தில் வைத்தும் சொல்லியிருக்கலாம், அதற்கான வாய்ப்பே அன்று இருந்தது . அன்று சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றிருந்தது . ஆட்சி கவிழ்ப்பு சதி என முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் ஏறக்குறைய சிறை சென்றிருக்க வேண்டிய சூழல். தன்னுடன் ஆலோசிக்காது முன்னெடுத்த நிகழ்வு என குறைப்பட்டுக் கொண்டிருந்தார் சண்முகம் மறைமுகமாக தனது கையறு நிலையை வெளிப்படுத்தி இருந்தார் . ஒரு வகையில் ஆட்சி கவிழ்ப்பு அவரை விலக்கி நடந்திருக்கவும் வாய்ப்பு . புதுவை அரசியல் சண்முகத்தின் விரலிடுக்குகளின் வழியாக நழுவிக்கொண்டிருந்தது .


சட்டமன்றத்திற்கு மேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருடைய இலக்கும் அதிகாரப் நோக்கி,கிடைக்கும் சிறு சந்தர்ப்பத்தையும் அதை நழுவ விடாத முயற்சி,அதைத் தவிர வேறு எதையும் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒருவகையில் சண்முகம் வைத்தியலிங்கம்  மோதலில் துவங்கியது . காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு எப்போதும் சிக்கல் மிகுந்தது . இதற்கு முன் மரைக்கார் முதல்வராக இருந்த போதும் அது உக்கிரமாக நிகழந்ததுதான் . ஆனால் அவர்கள் இருவரும் எங்கோ ஒரு புள்ளியில் சமரசமடைவார்கள் . சண்முகத்தின் தில்லி அரசியல் செல்வாக்கு 1991 அவர் தேர்தலில் தோல்வியடைந்தது முதல் இறங்கு முகம் கண்டிருந்தது . 1996ல் இந்திரா குடும்ப ஆதரவு என்கிற மந்திரக் கோல் எதிர்பலனை கொடுக்கும் என்பதாலும் நரசிம்மராவுடன் நல்லுரவை தக்க வைக்க வேண்டியும் வேட்பாளர் தேர்வின் இறுதி முடிவு அடுத்த முதல்வராக வர இருப்பவர் கையில் என அகில இந்திய காங்கிரஸின் கொள்கை முடிவின்படி செயல்பட வேண்டிய இடத்தில் இருந்தார் . வேட்பாளர் தேர்வில் எப்போதும் சண்முகத்தின் கை ஓங்கியிருக்கும் பிற தலைவர்களின் முடிவையும் அதில் கருத்தில் கொள்வார் ஆனால் அகில இந்திய காங்கிரஸின் கொள்கை முடிவால் அது நிகழாது என்பதால் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்துடனா சமரச உடன்பாட்டின்படி கடந்தமுறை வென்றவர்கள் அனைவருக்கும் மற்றும் ஆதவளித்த சுயேட்டை உறுப்பினருக்கும் வேட்பாளர் சீட்டு என முடிவானது . முதல் கோணல் இது, பல முக்கிய தலைகள் உருளக் காரணமாகி ஆட்சி கை நழுவியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்