https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 29 நவம்பர், 2017

அடையாளமாதல் - 253 * இருபுறத் தொடுகையின் இடைவெளியின்மை *

ஶ்ரீ:



பதிவு : 253 / 339 / தேதி :- 29 நவம்பர்    2017


* இருபுறத் தொடுகையின் இடைவெளியின்மை  *



“முரண்களின் முனைகள் ” - 22
கருதுகோளின் கோட்டோவியம் -02





என்னை அரசியலில் முதிரா இளைஞனாகவும் , தலைவருக்கான எனது ஆதரவு நிலைப்பாட்டை கண்மூடித்தனமான வழிபாடாக வல்சராஜ் பொதுவில் கருத்து கொண்டிருந்தார் என நினைக்கிறேன் . அதைபோலதன்று எனது நிலைப்பாடு என அவருக்கு சொல்லவேண்டிய தருணமிது. இப்போது அதை உறுதிபட சொல்லவில்லை என்றால் , அவர் சொன்ன முதிரா இளைஞன் என்கிற சொல்லே நான் உருவாக்கிக் கொள்ள விழையும் அடையத்திற்கு குறுக்கே நிற்கும் . நான் என் கடந்த கால அனுபவங்களிலிருந்து என்னை வடிவமைத்துக்கொண்டு வருகிறேன் . ஆனால் எங்கோ அழ்மனத்தில் அவற்றை நினைத்து செயும்போதெல்லாம் ,அதை முன்பே செய்திருந்த எண்ணத்தை அடைந்தபடி இருந்தேன். 

புறவயம் கொண்டு அகமும் உணரப்படும்போதுதான் , அது ஆளுமையாக முழுமையடைகிறது . வல்சராஜ் எனக்கான இடத்தையும் முறைமைகளையும் முழுமையாக அறித்திருந்ததால்தான்  இப்போது இந்த உரையாடலே நிகழ்ந்து கொண்டிருக்கிறது . “இதுதான் நான்” என என் நினைவில் நிற்ப்பதை இப்போது சொல்லில் வைக்க வேண்டும் . அதன் பொருட்டே நான் பேசியதாக இது இருக்கட்டும் என நினைத்தேன்.

எனது நீண்ட மௌனம் சில சமயங்களில் தவறான புரிதலை கொடுக்கவல்லது . நான் என்னை பற்றி பேச இது இடமல்ல என முடிவெடுத்து விட்டிருந்தாலும் , அவர் சொன்னதற்கு என் தரப்பு என ஒன்றை நான்  சொல்லியாக வேண்டிய அவசியம் எழுந்தது . நான் அவரிடம் “நீங்கள் சொல்வதிலிருந்து , நான் உங்களுக்கு புரியவைக்க வேண்டியது , எனக்கு நாராயணசாமியுடன் கசப்பென ஒன்றில்லை என்பதைத்தான்  . நான் என்னை மிக சரியாக புரிந்து வைத்திருக்கிறேன் என நினைக்கிறேன் , என்னால் யார் மீதும் எக்காலத்தும் கசப்படைய முடியாது . 

ஒருவருடைய செயல்கள்தான் என்னை கசப்படைய வைப்பவை . அப்படி எழுபவைகள் எல்லாம் அவர்களுடைய செயல்களுக்கு பின்னால் இருக்கும் அவர்களது எண்ணத்திலிருந்து துளிர்த்தவையாகவே அவை இருக்கிறது என்பதால்  . அந்த கசப்பும்  சில காலத்திற்கு பிறகு பருப்பொருள் போல நிற்காது களைந்து விடுகிறது  . நான் நாராயணசாமியிடமிருந்து விலகி நிற்க விரும்புவது, எனக்கான களம் அவரிடமில்லை என்கிற ஒரு காரணத்தினால் மட்டுமே . 

செயல்பாடுகளிலிருந்ததே ஒருவருடைய அடையாளம் புரிந்து கொள்ளப்படுகிறது . அடையாளமெனப்படுவது  எண்ணங்களினால் ஆனவை . அது அகமும் புறமுமாக இருபுறத் தொடுகையில் இடைவெளியே இல்லாதிருத்தல் . அவை செயல்களை கொடுப்பதும் பெறுவதுமாக இருக்கும் போது மட்டுமே செழிப்பது , ஒரு நல்ல உரையாடலைப்போலே  . செயல்பாடுகள் இல்லாத இடத்தில்தான் “ஆதரவு நிலைப்பாடு” என்பது வெறும் வழிபாடு போல தேங்கி நின்றுவிடுகிறது . தேங்குவதாலேயே அது ஊறி நொதித்து நாற முற்படுகிறது. அதை செய்வதற்கு அங்கேயே நிறைய பேர் இருக்கிறார்கள் . எனக்கு அங்கு செயக்கூடியது ஒன்றிருப்பதாக நான் எண்ணவில்லை” என்றேன் .

“இப்போது  என்னை இங்கு அழைத்துவந்தீர்கள் , நீங்கள் அல்லாது வேறு எவரும் என்னை இங்கு அழைத்து வந்திருக்க முடியாது . காரணம் நான் என்னை  இங்கு உங்களுக்கு பிறகு என நிறுவிக் கொண்டேன் . எனக்கு முன் ஒருவர் நிற்பாரென்றால் , அவர் எனக்கு வழிகாட்டக்கூடியவராக , அல்லது எனக்கு உரிய மரியாதையை பெற்றுத்தருபவராக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான் . அதனாலேயே நான் உங்களுடன் ஏதும் சொல்லாது இங்கு வந்தேன் . நாராயணசாமியின் தேர்தலில் வேலுகளில் முழுதாக பங்கெடுக்க உன்னால் முடியும் என நினைக்கிறாயா ?என்று  நீங்கள் என்னை கேட்டால்  நான் அதற்கு ஆம் என்றே பதில்  சொல்லுவேன்” என்றேன்.  அவர் திகைத்திருபதை என்னால் உணர முடிந்தது.

அதன் பிறகு சிறிது நேரம் மெளனமாக இருந்தவர் . நான் பேசியவைகளிருந்து நேரடியாக எடுத்து பேசாமல் பிறிதொரு கோணத்திலிருந்து துவங்குவார் என தெரியும் . அது அவரது சாமர்த்தியம் என அறிந்திருக்கிறேன் . நான் தலைவருக்கு பிறகு கட்சிக்குள் யாரையாவது மதிப்பேன் என்றால் அது வல்சராஜ் மட்டுமே . “அரசியலென்பது ஒரேமாதிரி எல்லா இடங்களிலும் முன்னெடுக்கப்படுவதில்லை . அது தலைமை ஏற்கும் அந்தந்த நபர்களையும் தாண்டியது என்பது உனக்கு புரியுமா? என்றார் .  “பாலனிடம் பார்த்ததை பிறிதொரு தலைமையான சண்முகத்திடம் அதிலிருந்து பெரிதும் மேம்பட்டு பார்த்ததாலேயே ,அவர் மட்டுமே உனக்கானவர் என்றும் , அதுவே நேர்மறையான அரசியலென்றும் உனக்கு தோன்றி இருப்பது ஒருவகையான வழிபாட்டு உணர்வே . ஒரே விதமான வழிமுறைகளுக்கு தன்னை பழக்கியவன் அதை தாண்டி பிறிதோர் வழிமுறையை காணும்போது, திகைப்பதும் அது தனக்கானதில்லை என நினைப்பதும், முடியுமானால் அதை எதிர்க்கவும் அவர்கள் தயங்குவதில்லை" என்றார் .
"அரசியல் செயல்பாடுகள்  இதைப்போன்ற பதட்டத்திலிருந்தும் , அச்சத்திலிருந்தும் , பேர்விழைவிலிருந்தும், புரியாமையின் குழப்பத்திலிருந்தும் எளிய மனிதர்களால்  எழுந்து வருபவை . அதுதான் அரசியலை உயிர்ப்புடன் வைத்துள்ளது . அதனாலேயே ஒருவரை நோக்கியும் ,விலக்கியும் பலரை ஓடவைப்பதும் , இருக்குமிடத்தை உறுதியாக பற்ற வைப்பதும் , ஒன்றை கைவிட்டு பிறிதொன்றை பிடிக்க முயலுவதும் நடைபெற்றபடி இருக்கிறது” ஏன்றார் . சற்று கடினமான கோட்பாடு இது , மூளையை சொடுக்குவது , அதன் வழியாக மனதின் தொடர்பை துண்டிப்பது . இத்தைகைய தருணங்களில்தான் , எவர்க்கும் அவர்களின் இருளிலிருந்து அவர்கள்  பிறிதொருவராக எழுந்து வருகிறார்கள். பலர் நெறியென கூறி இதற்கு தலை கொடுக்க தயங்குவதில்லை  , அதனாலேயே  சிலர் சில காலம் வெற்றியடைகிறார்கள்.


செவ்வாய், 28 நவம்பர், 2017

அடையாளமாதல் - 252 * புறத்தை தொடும் அகத்தின் தருணம் *

ஶ்ரீ:



பதிவு : 252 / 338 / தேதி :- 28 நவம்பர்    2017

* புறத்தை தொடும் அகத்தின் தருணம் *


“முரண்களின் முனைகள் ” - 21
கருதுகோளின் கோட்டோவியம் -02



வல்சராஜ் என்னிடம் "நமது ஆதரவை யாராக இருந்தாலும், நாம் கொடுத்தே பிறர் பெறுவேண்டியத  அது மாறி வரும் சூழலுக்கு ஏற்ப்ப , நிலைப்பாடுகளிலிருந்து எழுந்து வருவது . யாரும், யாருக்கும் அதை சாஸ்வதமாக கொடுப்பதோ பெறுவதோ முடியாது . இதை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து , அவர் நான் என்னையும் என் ஸ்தானத்தையும் பலத்தையும், அறிந்து கொள்ளாத சிறிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம் . ஏன் அப்படி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நான் என்னை நிறுத்திக் கொள்கிறேன் என்கிற புரியாமை அவருக்கு இருப்பதை என்னால் உணர முடிகிறது . அது அப்படியல்ல  என நான் அவரிடம் விளக்கிக்கூற முடியும் . ஆனால் இப்போது அதற்கு அவசியமிருப்பதாக நினைக்கவில்லை . என்னை நான் என் அகத்திலிருந்து வெளிப்படுத்தி ஒரு தனி ஆளுமையாக முன்னிறுத்த முயல்கிறேன் . ஆனால் என்னை என் அடிப்படையாலேயே அங்கீகரிப்பவர்களால்  மட்டுமே அதை ஏற்க முடியும் , என்பது ஒரு சிறிய கோட்பாடு.

தங்களை  பிறர் எப்படி புரிந்துகொள்ளவேண்டும் , எதை போன்ற வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற தெளிவு அவர்களின் விழைவிலிருந்தே நமது அடையாளமாக எழுந்து வருவது . எல்லோருக்குமே தங்களை பற்றி பிறருக்கு அப்படி ஒரு பார்வையோ எண்ணமோ இருக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கவே செய்கிறது . ஆனால் பிறிதொருவரால் அப்படி பார்க்கப்பட்டால் மட்டுமே அதை முன்னெடுக்க முடியும் . இல்லை எனில் அது ஒரு சுமையான கனவு மட்டுமே என எஞ்சும்  . நான் என்னை பிறர் எப்படி பார்க்க வேண்டும் என் விழைகிறேனோ அதன் படி எனது செயல்பாடுகளை  அமைத்துக்கொள்கிறேன் . நான் அவற்றை ஒருபோதும் நடிப்பாக செய்வதில்லை . நடிப்பு ஒரு நாள் உண்மையல்ல என வெளிபட்டேயாகும்.

தலைவர் , வல்சராஜ் ,நாராயணசாமி மூவரின் பார்வையில் நாராயணசாமியை தவிர , நான் என்னை வெளிப்படுத்திய  கோணத்திலேயே நான் பார்க்கப்பட்டேன் . தலைவர் என்னை, நான் வெளிப்படுத்திய ஆளுமையாக எடுத்துக்கொண்டார். ஆனால் அதற்கு அவருக்கு என்னை நான் நிரூபிக்க கிடைத்த சந்தர்பத்தில் அதை சரியாக செய்ததால் அவரால் அங்கீகரிக்கப்பட்டேன் . 

அங்கீகாரமென்பது பிறரால் சிலருக்கு மட்டுமே  வழங்கப்படுவது   அதற்கு காலமும் துணைக்க வேண்டும் . ஒன்று அதுவரை தான் நினத்தது சரி என்றோ ,அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயம் , சந்தர்ப்பத்தை உள்ளடக்கியதாக அவை எப்போதும் இருக்கும் . மாற்றமடைந்தபடி இருக்கும் அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டி , ஒவ்வொரு முறையும் அதற்கான அனுமதியை பெற்றே இயங்குதல் முறைமை . அது சாமானயர்களின் வழி . நான் அந்த வட்டத்திற்குள் என்னை நிறுத்திக்கொள்வதில்லை . என் பொறுத்தவரை அங்கீகரிக்கப்படுவது, சூழலால் இல்லை ;அது ஒரு நபரை அவரது தனி ஆளுமையைப் பற்றியது என்பதே .

அரசியல் என்பது நித்தமும் கால பாகுபாடு இன்றி பல அலகுகளாக இயக்கம் கொண்டிருப்பது  . அது அணிகளாக சதா முயங்குவதால் பல்வேறு முரண்களின் தொகுப்பாகவே அது எப்போதும் இருந்து கொண்டிருப்பது . தலைமையிடம் ஒவ்வொரு முறையும் சூழலை விளக்கி பெறும் அனுமதியால் நடைபெறுவதல்ல அரசியல் . அது எப்போதும் களத்தில் முடிவு செய்யப்படுவது . அங்கீகாரம் அதை செய்பவனுக்கானது , செயல்களுக்களுக்கானதல்ல . அந்த நம்பகதத்தன்மையை அடைவேண்டியது செயலாற்றுபவனே. அவனை ஒருமுறை அவனது செயல்பாடுகளிலிருந்து அவதானித்த  பிறகு , அதை ஒவ்வொரு முறையும் செய்வதைப்போல மடமை பிறிதொன்றில்லை . அது நட்ட செடி முளைத்ததை உறுதி செய்ய , நித்தம் பிடுங்கி பார்த்து பின் மீளவும் நடுவதை போல.  

வல்சராஜுக்கு என்னை புரிந்து கொள்ளவதற்கான சந்தர்ப்பத்தை நான் தனித்து அவருக்கு கொடுக்காத போதும் என்னை அனுமானித்து அவரது தனி ஆளுமை காரணம். என்னை தனித் திறம்வாய்ந்தவனாக அவர் எப்படி கணக்கிட்டார் என தெரியவில்லை . தலைவருக்கும் அவருக்கும் , அது மரபார்ந்த மற்றும் நவீன புரிதலுக்குமான வித்தியாசமாக இருக்கலாம் . நான் நாராயணசாமியால் அவதானிக்கவே அவசியமில்லாதவனாக தோன்றி இருக்கலாம் ,அல்லது அந்த இருவரையும் விட மிகத்துல்லியமாக , நான் ஒருக்காலும் அவருக்கு அணுக்கமான நிலைக்கு வரமாட்டேன் என , எனது உடல் மொழியிலிருந்து புரிதலை அவர் அடைந்திருக்கலாம் .

இப்போது வல்சராஜ் என்னுடன் பேசிக்கொண்டிருப்பதற்கு தனித்த சில காரணங்கள் அடிப்படையாக இருக்கலாம் . என்னை தலைவரின் ஆதரவு மனநிலையிலிருந்து நிகர்நிலைக்கு நகர்த்துவது . அல்லது இவையெல்லாம் முற்றாக என் கற்பனையாகவும் இருக்கலாம் . ஆனால் அனைத்தையும் கடந்து ஒன்று நிஜம். வெகு விரைவில் ஒரு பிளவு நிகழ இருக்கிறது . அதற்கான முதல் நிலை அடையாளங்களை என்னால் பார்க்க முடிகிறது, அதனாலேயே இதைப் போன்ற உரையாடல்களின் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.


இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் வல்சராஜ் இருப்பதால் அவருக்கு அடுத்த ஸ்தானத்திலிருக்கும் நான் அவருக்கு சரியான இடத்தில இருந்ததாக வேண்டியது அவரது அரசியலுக்கு உகந்தது என் எண்ணுகிறார்  என நினைக்கிறேன். அரசியலில் முதிரா இளைஞனின்  கடுமையான ஆதரவு நிலைப்பாடு யாரை நோக்கி இருந்தலும், அது கண்மூடித்தனமான வழிபாடாகத்தான் வல்சராஜ் போன்றோரால் பார்க்க முடியும் என புரிந்திருந்தேன்  . ஆனால் நான் என் கடந்த கால அனுபவங்களிலிருந்து என்னை வடிவமைத்துக்கொண்டு வருகிறேன் . ஆனால் எங்கோ அழ்மனத்தில் அவற்றை நினைத்து, செயும்போதெல்லாம் அதை முன்பே செய்திருந்த எண்ணத்தை அடைந்தபடி இருந்தேன். புறவயம் கொண்டு அகமும் உணரப்படும்போதுதான் , அது ஆளுமையாக முழுமையடைகிறது . வல்சராஜ் எனக்கான இடத்தையும் முறைமைகளையும் முழுமையாக அறித்திருந்ததால்தான்  இப்போது இந்த உரையாடலே இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது .

புதிய பதிவுகள்

மணிவிழா - 97. * கண்கலில்லா காட்சிகள் *

  ஶ்ரீ : மணிவிழா - 97 19-10-2026 * கண்களில்லா காட்சிகள் * யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்க...