https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 5 டிசம்பர், 2022

அடையாளமாதல் * விபரீத மாற்று சிந்தனை *

 


ஶ்ரீ:



பதிவு : 651  / 841 / தேதி 05 டிசம்பர்  2022



* விபரீத மாற்று சிந்தனை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 46 .




அரசியலில் சுற்றி எதிர்மறையாக நிகழ்வன அனைத்தும் உணர்வுகளாக உருமாறி மோதி மனதை கொந்தளிக்கச் செய்கின்றன, அவற்றில் இருந்து விடுபட அவை அனைத்தையும் தகவல்களாக மாற்றி மனதில் பதிந்து கொள்ள மிக நுண்ணிய அவதானிப்பு அவசியமாகிறது . அந்த நிகழ்வுகள் பின்னர் நினைவுகூரப்படுகையில் கூட அவை தகவலாக மட்டும் ஆழ்மனத்தில் இருந்து செயல்பாட்டு மனதில் கொண்டு வந்து வைக்கப்படுகிறது . அப்போது யார் யார் அன்று எப்படியெல்லாம் விணையாற்றினார்கள் என்பது கூட உணர்வு கழிக்கப்பட்டே  வெளிப்படுகிறது. அது கொடுக்கும் விடுதலை அளப்பரியது. கூர் மதியால் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைப்பதை மிகத் திறமையாக செய்யத் தூண்டுவது . பின் அவை விளையாட்டு காய்களைப் போல முன்னும் பின்னும் நகர்த்தக் கூடியதாக மாறிவிடுகிறது. உணர்வுகள் அங்கு எழுவதில்லை.புதுவை அரசியல் வரலாற்று தருணங்களை ஒரு கற்றலைப் போல இதில் தொகுத்துக் கொள்கிறேன் எனக்கு அரசியல்  குரு அதை எனக்கு கற்பித்தார். இதில் வேடிக்கை அது அவருக்கு பலமுறை கைவந்த கலையாக இருந்தாலும் ஊழினால்  உரிய நேரத்தில் கைவராது போனதை பார்த்து திகைத்திருக்கிறேன். அவை பல தலைவர்களின் ஏற்பும் மறுப்புமான உள முரணியக்கத்தால் உருவாகி நிலைபெறுவது. இவை உறுதியானது அதே சமயம் உறுதிப்படாததும் கூட. அவற்றை உறுதித்தன்மை அதன் நிலையாமை பற்றியாதாக இருந்தது. இதில் உரையாடும் அனைவரும் அது பற்றிய தகவல்களை சொல்லியிருந்தாலும் ஒரு வேதியில் ரசாயன மாற்றத்திற்கு அதை வைத்திருக்கும் பாத்திரம் ஒரு விணையாற்றுகிறது என்பது இன்னும் நுட்பபான புரிதல். அது மனித மனம் மிக விந்தையாக செயல்படுவதை குறித்து. திறமையால் அதை அனுமானிக்க வேண்டியிருக்கிறது . ஆனால் அது உறுப்படாத தகவல்கள் போல பார்க்கப் படுபவை . என்னிடம் அதன் வரலாற்றுப் பூர்வ பின்னணிகளை விவாதிக்கும் போது நான் அதன்கான உறுதியான தகவல்களை விவாதிப்பதில்லை


விலக்கி வைக்கப்பட வேண்டிய வில்லங்கத்தை இப்போது விலக்குவது பெரும் தவறாகக் கூடியது என பல முறை முயன்று அவனுக்கு அதை புரியவைக்க முயன்று முடியவில்லை. அதை ஏன் நான் மாறனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்கிற வெறுப்பு ஏற்பட்டாலும் , இன்று தலைவரை முடிவெடுக்க வைக்கும் விசை கரூர் பாஸ்கர் அவரின் பின்னால் மாறன் இருக்கிறான். இந்த கருத்து ஒரு போதும் அரசியல் பொதுவெளியில் விவாதிக்கும் இடத்தை இழந்திருந்தது முக்கியமான காரணம் அரசியலில் சிந்திப்பது பலவகையில் மீபொருண்மை கொள்கைக்கு ஒப்பானது. கற்பனையால் அதன் அத்தனை சாத்தியங்களையும் விரித்தெடுத்துக் கொள்ள முடியும். நான் அதை விருப்பு வெறுப்பில்லாமல் செய்ய முயலுவேன். பிறருக்கு அதற்கு நிரூபனவாதம் போல ஒன்றை ஒரு போதும் முன்வைக்க முடியாது . எனது பல ஊகங்களும் கற்பனைகளும் காலத்தில் உண்மையானதை பார்த்திருக்கிறேன். அதில் நமது இடம் பிற மானுட உளவியல் குறித்த புரிதல் மட்டுமே. அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் உளவியல் அவரது இலக்கு , வாய்ப்பு தாங்குதிறன். விட்டுக்கொடுக்கும் புள்ளி, அனுசரித்து செல்லுதல், தலைமைப்பண்பை வெளிப்படுத்துதல் போன்ற பல காரணிகளை கொண்டது. தலைவரின் பெயரை சொல்லி அவரிடமிருந்து தனக்கான ஒப்புதல் இல்லாமல் அரசியலில் ஈடுபட்ட மாறன் தான் சிக்கும் இடம் குறித்த பதட்டம் காரணமாக விரைந்து தனது செயல்பாடுகளில் வழியாக லாபமடைந்த பிறகு வெளியேறும் அனைத்து வழிகளையும் திறந்து வைத்திருந்தான். அவனுடன் பொருந்தி செல்லாமயை உருவாக்கியது அவனது அந்த வெளியேறும் உக்தி. அவனது மொத்த அரசியலுமே அந்த ஒற்றை கதவை நோக்கி இருந்தது.அதற்கு இயந்து நான் எனது அரசியலை செய்ய இயலாது. அவனது ஒவ்வொரு முயற்சிக்கும் அதற்கு பின்னால் இருப்பதும் சொந்த லாபமாக மட்டுமே இருக்க முடியும். அது அரசியலில்  எதிர் மனநிலை கொண்ட ஆளுமை அதை எப்போதும் நான் தவிற்த்திருக்கிறேன்


அன்றைய முதல்வர் ஜானகிரமனுக்கு தூதுவர் போல இருந்தவர் தினசரி நாளிதழின் முக்கிய பொறுப்பாளர். கண்ணனுக்கும் பிற முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் அல்லது அவர் அப்படிக் காட்டிக் கொண்டார். தனது இடத்தின் வசதியால் பதவியால் அவரால் ஒரு பேட்டி எடுப்பது போல் யாருடனும் தீவிர அரசியலுக்குள் சட்டென இறங்கி விவதிக்க முடியும். வெவ்வேறு தரப்பு தலைவர்களின் இடையேயான அவர்களின் சார்பு நிலை, பிறர் பற்றிய கசப்பு மற்றும் மந்திரிசபைக்குள் நிலவிய ஐயங்களை தீர்த்து வைக்க கூடியவராக இருந்தார். அரசியலில் ஐயங்களை ஒருபோதும் ஒப்பு நோக்க இயலாது. யாரிடம் என்ன தகவல் இழுக்கிறதோ அதிலிருந்து அடுத்து நிகழ்த்திக் கொள்ள வேண்டியதை முடிவு செய்வார்கள். அவற்றிலு் மிகப் பெரும்பாலும் பிறிர் வழியாக அறிந்து கொண்ட செய்திகள் பிரதானமாக இருக்கும். தகவல்களாக பறிமாறப்படுபவை யாரைப்பற்றியும் நல்ல செய்திகளாக இருக்காது. எதிர்மறை செய்திகளைப் போல சட்டென ஆர்வம் கொள்ள வைப்பது பிறதில்லை. அதுபிற்றி அணுக்கர்களிடம் பேசினால் இன்னும் பல்கிப் பெருகும். அந்த இடத்தை மிக கவனமாக தேர்ந்தெடுக்கும் சில அரசியல் தூதுவர்கள் அந்த சூட்டை தனிக்க முயல்வார்கள். நேர்மறை செய்தியாக சில பேசப்படும் போது அந்த சமரசப்புள்ளி தற்காலிகாமவது உருவாகிவிடும். பின் அது தொடர்ந்து நீடிக்கும் . அடுத்த சிக்கல் உருவாகும் வரை. சில மணிக்கணக்கில் காலாவதியாகிவிடுவதுண்டு .அவரை பார்த்து அதே பத்திரிக்கையில் வேறு சிலரும் அதே போல உருவெடுத்திருந்தனர். அவர்களில் ஒரு புகைப்படக்காரர்

அடைந்த உச்சம் அதை அவர் முன்னிறிருத்து பேசும் பாணி குமட்டலெடுக்க வைப்பது


அவர்கள் அரசிலுக்கு அப்பால் தங்கள் கற்பனைகளை  கொண்டு செல்பவர்கள் என்பதால். அனைத்து சிக்கலும் ஐயங்களும் ஒருவருக்கொருவர் இடையேயான முரண்பாடுகள் தீர்கப்படாமலேயே அவற்றை நீர்த்து போக செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அவை சில குறுகிய கால லாப நோக்கோடு அடிப்படைக்கு எதிராக செயலபட தூண்டும் . அது சிலவற்றை சில காலம் நிறுத்தி வைக்கும். ஆனால் அதன் தேவை முடிந்து விசை வடிந்த பிறகு முன்பை விட பல மடங்கு வன்மத்துடன் அது மீண்டும் எழுந்து வருவதை பார்த்திருக்கிறேன். அத்தகைய போலி சமாதன முகவர்களால் ஆவதொன்றுமில்லை. அது அரசியலில் அதுவரை இல்லாத ஒரு தேக்க நிலையை புதுவை அரசியலில் உருவாக்கியது. அரசின் முக்கிய பதவிகளில்  இருக்கும் ஓரிவருக்கு  சாதகமாக இருந்திருக்க வேண்டும். அதை இணைத்து வைப்பதால் அந்தப, தினசரி பத்திரிக்கை நிர்வாகி தனிப்பட்ட முறையில் அல்லது வியாபார ரீதியாக லாபமடைந்திருக்கலாம்.


இந்தப் போலி முயற்சிகளை உண்மையான முயற்சிகளுடன் ஒப்பிடுவதென்பது அரசியலில் உள்ள மெய்யான முயற்சியையும் அர்ப்பணிப்பையும்  அவமதிப்பது. ரசனையை அவமதிப்பது. காலப்போக்கில் அதை அழிப்பது. இதில் குரூரமான ஒரு கறார்த் தன்மையுடன் மட்டுமே இருந்தாகவேண்டும். ஆனால் அவசர அரசியலில் அதை நிதானக்க நேரமில்லை. அங்கு துவங்கிய அரசியல் சிக்கல் பின்னாளில் அரசில் இருந்து வெளியேறி ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாகி பல புதிய தலைவர்கள் உருவாகி விட்டில் பூச்சிகளை போல அதே நெருப்பில் காணாமலாகி பல மூத்த தலைவர்கள் காலாவதியாக்கினார்கள்.


வெள்ளி, 2 டிசம்பர், 2022

மணிவிழா - 37

 


ஶ்ரீ:


மணிவிழா - 37


02.12.2022



*  *








பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க செல்லும் முன்பு அவருடன் எந்த விவாதத்திற்குள்ளும் செல்லுவதில்லை என முடிவு செய்திருந்தேன். சந்திப்பு ஆயிரமாவது ஆண்டு விழா துவக்கம் பற்றி அவருக்கு நேரடியாக சொல்ல வேண்டும் . பிறிதொருவர் வழியாக அறிந்தால் அவருள் எழும் தன்மதிப்பு பற்றி சிக்கலை பின்னர் எவ்வகையிலும் சரி செய்ய இயலாது. சமாதான முயற்சிகள் மேலும் மேலும் சிக்கலானதாக உருவெடுக்கும். அடுத்தடுத்த செயல்பாடுகள் நீண்ட நேரத்தை கோருவதால் ஒருவர் பின் ஒருவராக சமாதானம் செய்வது வீண் வேலையாக முடியும். என்னால் புது சிக்கல்கள் உருவாக வேண்டாம் என இருந்தேன். நான் அவரிடம் விழா துவக்கம் பற்றி பேசவில்லை. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்திற்கான எனது முன்வரைவை அவருக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தேன். “திறந்த அரங்கம்பற்றிய கருத்தியல் சொல்லத் துவங்கிய போது அவரில் இருந்து வேறொருவர் எழுந்து வந்தார். அவரின் வழக்கமான வன்மம் அதில் இல்லை என்பது வியப்புகுறியது. நான் நினைத்திருந்த மாற்றம் அவருள் நிகழாமல் இருக்கலாம். ஆனால் காலம் தனக்கான வேலையை எப்போதும் செய்து விடுகிறது. தனது முத்திரையாக வடகலையினர் உள் வருவதை எதிர்த்தார். இதில் வேடிக்கை அதைவிட அடர்த்தியான சிக்கல்கள் நிறைந்ததிறந்த அரங்கத்தின்கருத்தியலை அவர் முழுயமையாக உள்வாங்கவில்லை. நான் எனது வைப்பு முறைப் பற்றி பேச வேண்டிய தேவை எழுந்ததை உணர்ந்தேன். அவரிடம் நேரடியாக விவாதிக்க முடிவு செய்தேன்


இரண்டிற்குமான பேதங்களை களைய முடியுமா அல்லது அதன் தத்துவார்தமான விஷயங்களை பேசி புரிய வைத்துவிட முடியுமா அதை யார் செய்கிறார்கள். யார் ஏற்கிறார்கள். யாருக்கு அது தேவை. ஆன்மீக உலகம் முழுவதும் எல்லா சம்பிரதாயங்களும் கலந்து திரண்டு பக்தி என்றான பிறகு, தத்துவ விவாதம் ஆர்வமுள்ள யாரோ ஓரிருவருக்குள் நிகழவேண்டியது. அதற்கும் பார்வையாளர்கள் யாருமில்லை. அதில் ஆர்வமோ புரிதலோ இல்லாமலாகி பல ஆண்டுகள் கடந்து விட்டது. நீங்கள் சொல்லும் அத்தனை விஷயமும் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறது. எஞ்சிய சிலர் அதை தங்களது அரசியல் அதிகாரத்தை பற்றிக் கொள்ள பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை எக்கலாத்திலும் யாரும் தீர்க்கப்போவதில்லை. அது தீர்க்கபட வேண்டும் என யாரும் எதிர் பார்க்கவுமில்லை. இந்த பிடிவாதம் எதை நோக்கியும் நகர்ந்து செல்லாத முட்டு சந்து. இதற்குள் அமர்ந்து கொண்டு பல நூற்றாண்டுகாளக தர்க்கித்துக் கொண்டிருப்பவர்களுடன் நான் ஏன் இணைய வேண்டும் என நினைக்கிறீர்கள்.நீங்கள் இதை தொடர்ந்து வலியுறுத்து கடைபிடித்து அடைந்த வெற்றி என்ன. உங்களை ஏற்பவர்கள் யார்?”. 


இன்றளவும் திருவஹீந்திபுரம் பெருமாள் கோவில் மணவாள மாமுனிகள் சர்ச்சைக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் எந்தளவில் உங்களுக்கு உதவியது. இத்தனைக்கும் வருடத்தில் பத்துநாள் பல லட்சம் நிதியில் உற்சவங்களை நடத்தும் முக்கியஸ்தர்களும் அங்குள்ள வடகலை பெருமாள் கோவிலை அனுசரித்தே அதை நிகழ்த்துகிறார்கள். நீங்கள் மீண்டும் ஒரு நூற்றாண்டிற்கு் பின்னோக்கி என்னை இழுத்துச் செல்ல முயல்கிறீர்கள். இன்னும் சில பத்தாண்டுகளில் இப்போதுள்ள துண்டுபட்ட நிலையும் முழுவதுமாக இல்லாமலாகப் போகிறது”. “ஶ்ரீபெரும்பூதூர் கோவில் நிர்வாகம் ராமாநுஜரை தரிசிக்க ராகு காலம் சிறந்தது என அங்கு அறிவித்திருப்பது பற்றி நீங்கள் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள்என்றேன்.விவாதித்து தனது கருத்துக்களை என் மீது திணிக்க முடியாது என அவர் உணர்ந்திருக்க வேண்டும்


வேளுக்குடி ஸ்வாமி விழாக் குழுவின் துவக்கத்தில் பங்கு கொள்ள வருவது அவரால் ஏற்க முடியாததாக இருந்தாலும். அவரே விழாக்குழுவின் இன்றைய மைய விசை. இது எப்படி நிகழ்ந்தது என அவருக்கு ஆச்சர்யமளித்திருக்கலாம். அவர் மட்டுமின்றி விழாக்குழுவின் பிற அனைத்து நிர்வாகிகளுக்கும் அதே உணர்வு. விவாதம் எந்த முடிவும் இல்லாமல் நிறைவுற்றது. பெருமாள் ராமாநுஜம் தன் ஒத்துழைப்பை முழுவதுமாக தருவதாக கூற நான் அவரிடம் இருந்து விடை பெற்றேன். பெருமாள் ராமாநுஜம் வேளுக்குடி ஸ்வாமியைக் கொண்டு எனக்கு கடிவாளமிட முடியும் என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும்

வியாழன், 1 டிசம்பர், 2022

மணிவிழா - 36

 



ஶ்ரீ:


மணிவிழா - 36


01.12.2022



*  *







கிருஷ்ணப்பிரமி ஸ்வாமி கேட்ட ஒரு கேள்வியையும் அது கொடுத்த புரிதலையும் வைக்க நினைக்கிறேன். உலகம் பிரம்மத்தால் படைக்கப்பட்டது. அது அழிவை நோக்கி செல்வதாக நம்பப்பட்டால் பிரம்மமும் எளிய மானுடனைப் போல உலகை செய்து சிக்கலை எதிர் கொண்டு பின் திருத்திக் கொள்கிறதா? என்கிற கேள்வி எங்கிருந்து எழ முடியும். சாங்கிய தரிசனம் சொல்லும் எங்கோ ஒரு புள்ளியில் நிகழும் முக்குண சமநிலை குலைவு உருவாக்கிய இந்த பிரபஞ்சம் மீண்டும் தனது சரி நிலைக்கு திரும்புவது உலகியலில் இன்று காணும் சீரழிவின் வழியாகவா?. 


உலகியல் மாற்றங்கள் திவிர்க்க இயலாதவை. அவை நம்மால் காணமுடியாத பிறிதொரு தேவையை உலகிற்காக நிவர்த்தி செய்ய உருவாகி வருகிறது. நிச்சயமாக நேற்றைய விட நாளை நம்பிக்கை தருவதாக இருக்கிறது. என் தந்தைக்கு போதுமானதாக இருந்த நேற்றைய உலகம் இன்று எனக்கு போதுமானதாக இருக்கவில்லை. அது எனக்கான புதிய ஒன்றை நிர்வகிக்க கொடுத்திருக்கிறது. ஒரு பத்து வருட இடைவெளியில் இது நிகழ்கிறது என்றால் இன்னும் இருபத்தி ஐந்து அல்லது ஐம்பது  வருடம் கழித்து உருவாகி நிற்கும் உலகிற்கு இதுவும் போதாமலாகும். அதை உணராது நடைமுறை சிக்கலை அறியாது பல நூற்றாண்டிற்கு முந்தைய ஆச்சார அனுஷ்டானங்களே பிரபஞ்ச மார்க்கத்திற்கு உகந்தது என இன்று உபதேசித்து தனிமைபடுகிறார்கள்


தத்துவங்களுக்கு அழிவில்லை .ஆனால் ஒன்றில் இருந்து பிறிதொன்றாக அது வளரும்போது அதை அனுசரித்து அல்லது மறுத்து கையாளும் பிற சம்பிரதாயங்கள் அவற்றின் சில கூறுகளை எடுத்து அவற்றை தனக்கானதாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. இதில் காலம் என்கிற கருதுகோளின் முரணியிக்கம் வழியாக அது நிகழ்கிறது என்பதை மறுத்தால். நிறுவப்பட்ட தத்துவத்தின் தவறுகள் கண்டையப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது என பொருள் கொண்டுவிடும். சங்கரரின் அத்வதை சித்தாந்தத்தை மறுத்து உருவானதில்லை ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம்.அது அத்வைதத்தை விசேஷித்து சொல்ல வந்தது. அவற்றை எளிமைபடுத்த அல்லது விசேஷித்து சொல்லுவதற்கு அன்றைய சமூகத்தின் மனநிலை காரணமாக இருந்திருக்க வேண்டும். அல்லது இன்றைய தேவை இது மட்டுமே என்கிற எளிமை படுத்துதலாக இருக்க்லாம்


பிற சமயத்தை மறுத்தல் வாதம் பக்தியின் மேலுள்ள நிஷ்டையை கறார் படுத்தி சொல்ல வந்தவை . பரம்பொருள் நிர்ணயக் கொள்கை சர்ச்சயாக உருவெடுத்த காலத்தில் அவை சொல்லபட்டன. இந்த காலகட்டத்தில்பிரம்ம விசாரம்நடப்பதாக தெரியவில்லை. இந்த காலகட்டத்திற்கு அதற்கான தேவை யாரோ சிலருக்கு. பிறர் தங்கள் அன்றாடங்களின் தேவைகளை ஒட்டிய எதிர்பார்ப்பும் நேர்ச்தையும் கொண்டவர்கள்


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு துவக்கம் பற்றி பெருமாள் ராமாநுஜத்திடம் சொல்ல வந்தபோது அவர் வழமையாக வைக்கும் அதே கேள்விகளை அவரிடம் எதிர் கொண்டேன். ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் அவர் இப்போது முன்வைப்பவைகளில் அவரது இயல்பான அடர்த்தி குறைந்ததாக இருந்ததை அறிய முடிந்தது. வழமையான அவரது அறிவுரையும் எச்சரிக்கையும் கடந்து நான் எனது நிறைவு கேள்விக்கு வந்து நின்றேன். “பிரமாண்ட விழா என ஆயிரமாவது ஆண்டை கோவில் மண்டபத்தில் நிகழ்த்துவதில் உள்ள தடையை உங்களால் எப்படி கடக்க முடியும். வைணவ தலைமை பீடம் என சொல்லப்படுகிற ஶ்ரீரங்க முதல் பிற கோவில் நிர்வாகம் இப்போது யார் வசத்தில் உள்ளது. நீங்கள் நின்றிருக்கும் தென்கலை பீடமான வானமாமலை மடத்தின் இன்றைய நிலை என்ன. எங்கு இதை விழாவாக கொண்டாட இயலும். கோவில் என வந்தாலே அரசாங்கம் வந்து அங்கு உட்கார்ந்து கொள்ளும். அரசிற்கு இந்த விழாவை கொண்டா வேண்டிய தேவை என்ன. எல்லாவற்றிலும் மிக முக்கியமானது. வட,தெண்கலை சிக்கல். அதை முன்வைத்தால் வடகலை அமைப்புகள் இன்று பிரமாண்டமான பொருளியல் பலத்துடனும் ஆதரவுடன் விளங்குகிறது. இப்போது எதற்கு அவர்களிடம் மீளத சர்சசையை தொடர விரும்புகிறீர்.நான் அவர்களை உள்ளடக்கி குழுவை அமைக்க விரும்புகிறேன் என்றேன்


புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...