https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 5 ஜூன், 2018

அடையாளமாதல் - 345 * கனவு காண்பவன் *

ஶ்ரீ:




பதிவு : 345 / 527 / தேதி :- 05 ஜூன்  2018

* கனவு காண்பவன் *



நெருக்கத்தின் விழைவு ” - 39
விபரீதக் கூட்டு -04.





1983 ஆட்சி கவிழ்ப்பு நிகழ்வும் அதனால் விளைந்ததை பற்றியும் நானும் ஆனந்தபாஸ்கரனும் பல காலம் விவாதித்திருக்கிறோம் .இந்த ஒரு கூறே பல திறப்புகளை கொடுக்க வல்லதாக இருந்தது. அவருடனான எனது தொடர் உரையாடல்கள் சிறு முரண்களையும் கலைந்து கொடுத்தது . என் மீதிருந்து அபிப்ராயம் காரணமாக , நான் செல்லும் சிறு கூடுகைகளுக்கு திடீரென வந்து அவற்றை வேறொரு தளத்திற்கு நகர்த்தி விடுவார் . நான் என் மனத்தில் தோன்றுகிற அணைத்து எதிர்கால திட்டம் பற்றி எந்த தயக்கமின்றி அவருடன் விவாதிக்க துவங்கினேன் . அரசிலை நோக்கிய எனது நம்பிக்கை பெருகியது இந்த சந்தர்பத்திற்கு பிறகுதான்.

ஆனந்தபாஸ்கரனுக்கும் எனக்கும் பொது நண்பராக வைத்தியநாதன் இருந்தார். அரசியல் இரட்டைகளை கொண்ட ஒன்றல்ல , முரண்படுபவருடனும் சில நகர்வுகளை இணைந்தே செய்யவேண்டி இருக்கும். அதற்கு வயதிற்கு மீறிய அனுபவம் ஒரு பெரிய பலம் . நான் வல்சராஜ் மற்றும் ஆனந்தபாஸ்கரன் என்கிற இரு பெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் என்னை எப்போதும் வைத்திருந்ததால் , ஒரு பாதுகாப்பு இருந்தது. ஆனால் எனக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

வைத்தியநானின் அழுத்தம் கொடுக்கும் விளையாட்டில் சிக்கிக் கொள்ளமல் இருக்க நான் டெல்லிக்கு பயணப்பட்ட ஓடும் ரயிலில் இருந்து குறிப்பது தவிற பிற வழிகள் தூர்ந்து போயின . அது ஒரு அபாயகரமான முடிவு . பல வித கலசலான எண்ணங்களுடன் புதுவைக்கு அதிகாலையில் திரும்பிய நான் , வீடு வந்ததும் குளித்து காலை 5:00 மணிக்கெள்ளாம் ஆனந்தபாஸ்கரனை சந்திக்க வில்லியனூர் புறப்பட்டேன்.

அவர் என்னிடம் கேட்ட எதற்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை . அவரிடம் தில்லி செல்ல விமான டிக்கெட் எடுத்துத்தர சொன்னேன் . தான் பார்த்துக்கொள்வதாக சொன்னார். “மாலை 6:00 மணி விமானம்என்றேன் . மேலதிக பொருளியல் உதவி தேவையா? என்றவரிடம் . கௌரவமாக வேண்டாம் என சொல்லி விட்டேன் . அவரிடம் பணமா பெறுவது அரசியலுக்கு உகந்ததல்ல என்பது எனது எண்ணம் . வேறு சில நண்பர்களின் துணையுடன் வேண்டிய பொருளியல் உதவிகளை பெற்று மதியம் சென்னை பயணமானேன் .

அன்று மாலை விமானத்தில் தில்லிக்கு பயணமானேன் . அதற்குள்ளாக நண்பர்கள் அனைவரும் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக மாநில வாரியாக இறக்கிவிடப்பட்டு ,அவர்களுக்கு தில்லியில் நான் ஏற்பாடு செய்திருந்த விடுதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து சென்று விட்டனர் . நான் தில்லியை அடையும்போது இரவு 10:00 மணியாகி இருந்தது . அனைவருக்கும் பழைய தில்லியில் நிஜாமுதீனுக்கு பக்கம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அந்த நேரத்தில் அவர்களைத் தேடி அந்த விடுதிக்கு செல்ல முடியாது , நான் வேறு வழியில்லாது வல்சராஜு தங்கியிருந்த சாணக்கியபுரி பாண்டிசேரி விடுதியை தங்கிக்கொண்டேன்ரயிலில் வரவில்லையா என வல்சராஜ் கேட்டபோது , வேறு காரணத்தை சொன்னேன் . உண்மையை சொல்லியிருந்தால் தில்லியில் இருக்கும் நாள் முழுவதும்என் கதையே இளிவரலாக பேசி சிரித்து மாய்ந்திருப்பார்கள்

அன்று இரவு தில்லியின் கடும் பனிக்கு இடையில் அனைவரும் அமர்ந்து பேசிக்பவண்டிருக்க . நான் கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ந்ததை தொகுத்தபடிருந்தேன் . ஆனந்தபாஸ்கரனுடன் சில கருத்துக்களை விவாதம் என்கிற எல்லைக்கு கொண்டுசெல்லாமல் ,அதை ஒரு உரையாடல் என்கிற தளத்திறகு நான் நகர்த்த முயன்றபோது , அவர் தன்னுடனான சிக்கலில் இருந்து வெளிவந்தார் . ஆனால் அது எளிதில் நிகழ்ந்துவிடவில்லை . அது ஒரு உடைவு போல தோன்றி பிறகு மெல்ல விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தினால் மாறி வந்தது . என்னைகனவு காண்பவன்என்கிற அடைமொழிக்குரியனாக பிறிதெப்போதும் சொல்ல துவங்கினார். நான் தில்லியல் அவர் சொன்னதுபோல கனவு காண்பவன் என்கிற பட்டம் ஒரு வசைபோல தோன்றியது.

திங்கள், 4 ஜூன், 2018

அடையாளமழித்தல் - 13 -ஓருடலின் பல ஆளுமைகள் -


ஶ்ரீ:


பதிவு : 526 / தேதி :- 04 ஜூன்  2018





ஓருடலின் பல ஆளுமைகள் 





மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவந்து அணியமுடியாது”. “அவ்வுரு உங்கள் உள்ளே முன்னரும் இருந்துகொண்டிருக்கவேண்டும். உங்கள் விழியிலும் உடலசைவிலும் அதுவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும். அரசே, மானுட உடலில் ஓர் ஆளுமை மட்டுமே குடியிருப்பதில்லை. ஒரு மரத்தில் பல தெய்வங்கள் என நம்முள் பலர் உள்ளனர். ஒருவரை நாம் நம்பி மேலெழுப்பி பிறர்மேல் அமரச்செய்கிறோம். அவருக்கு பிறரை படையும் ஏவலும் ஆக்குகிறோம். அவ்வாறு நம்முள் உள்ள ஒருவரை மேலெழுப்புவதே மிகச்சிறந்த மாற்றுருக்கொள்ளல்.”

அவரும் நம்முருவே என்பதனால் நாம் எதையும் பயிலவேண்டியதில்லை. அடக்கப்பட்டு ஒடுங்கியிருந்தவராதலால் அவர் வெளிப்படுகையில் முழுவிசையுடன் பேருருக்கொண்டே எழுவார். அவரை எழுப்பியபின் அவருக்கு நம் பிறவுருக்களை ஒப்புக்கொடுத்தால் மட்டும் போதுமானதுதமனர் தொடர்ந்தார்அவர் நமக்கு ஒவ்வாதவராக முதல்நோக்கில் தோன்றலாம். ஏனென்றால் அவ்வெறுப்பையும் இளிவரலையும் உருவாக்கி அதை கருவியெனக் கொண்டே நாம் அவரை வென்று ஆள்கிறோம். அவரைச் சூடுவதென்பது முதற்கணத்தில் பெருந்துன்பம். சிறு இறப்பு அது. ஆனால் சூடியபின் அடையப்பெறும் விடுதலை பேருவகை அளிக்கக்கூடியது. ஒருமுறை அவ்வுருவைச் சூடியவர் பின்னர் அதற்கு திரும்பிச்சென்றுகொண்டேதான் இருப்பார்.” என்கிறது வெண்முரசு .

நிகழ்வுகள் அல்லது அதை நிகழ்த்துவரை பொறுத்து நாம் தூண்டப்படுகிறோம் , அதனால்  நம்மை நாம் உள்நோக்கி திரும்பி சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்திக்கொள்கிறோம் . நிகழ்வுகளினால் வெளிப்படும் உணர்வினால் சீண்டப்படாது , உள்ளிருக்கும் பல உருவும் கருத்து தொகையான  அதிலிருந்து ஒன்றை அடைவதும்பின்னர் அதை மட்டுமே உற்று நோக்கி அத்துடன் பயணித்து புதிய பாதைகளை கண்டடைவதில் அது  முடிகிறது . அதைதான் ஜெயமோகனின் ஓருடலில் வாழும் பல ஆளுமை என்கிறார் என நினைக்கிறேன் . ஒன்றிலிருந்து பிற உள்ளுறை ஆளுமைக்கு நுட்பாக மாறுவதை அவயல்லது தொடுவதைத்தான்சிறு இறப்புஎன குறிப்பிடுகிறார் போலும் . ஆம் , ஒரு மரணத்திற்கு ஒப்பான தருணமாக அவற்றை உணர்ந்துள்ளேன். இதைக் கேள்வியை நான், அடையாளமாதல் பதிவு தொடங்கியபோது கேட்டுக்கொண்ட பிறகே அதன் பிரமாண்டத்தை அறிய முடிந்தது . சில சமயம் இது எனது கிருக்குத்தனமோ? என்று கூட அஞ்சியதுண்டு.

வெண்முரசு அத்தகைய புரிதலை கொடுத்த போது இப்போது வைப்பது போல இந்தப் பதிவை துவங்கியது போது  துல்லியமாக என்னால் எடுத்து வைக்க இயலவில்லை . காரணம் எனது மொழி பற்றாக்குறை . அதை சீர் செய்திட இயலுமா ? என்கிற தேடலே இவ்வலை பூத்தளம் தொடங்கிட காரணமாக இருந்தது . இதுபற்றி விரிவதாக வேறு பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.

சரி , இப்போது மனத்தின்,பிரம்மாண்டத்தை அறிந்து கொண்டாயா? எனக் கேட்டால் , “ஆம் அறிந்து கொண்டேன் , அதை ஒரு நாளும்,அறிந்து கொள்ள முடியாது என்று . அது மட்டுமுன்றி எந்த வகைமைகுள்ளும் அதைக் வைத்து நம்மை வெளியே கொண்டு வந்துவிட முடியாது என்கிற பேருண்மையையும் அதன் இணைப்பாக புரிந்து கொண்டேன்


உடலில் கரந்துள்ள மனதே ஆன்மாவையும் உடலையும் ஊடுபாவும் ஒன்று என்பதால் . அதை புரிந்து கொள்வதே தன்னை புரிந்து கொள்வதாகிறது. தான் என்கிற இருப்பு உடல் அல்லவே . அது ஆத்மா , பின் உடலை பற்றிய அறிதல் அவசியமா? எனக்கேட்டுக்கொண்டால் . வாடகைவீட்டின் தன்மையையும் அதன் உரிமையாளரையும் தெளிந்து கொள்வது , அதில் இருக்கும் வரை நமதுதன்மானமும், தன்னறமும்பாதிக்காது பார்த்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு எண்ணம் மட்டுமே . பின்,உடலின் உரிமையாளர் யார்?, இந்திரியங்கள் அவற்றின் உரிமையாளர் . மனம் இந்திரியங்களின் வழியாகவே தான், சுகப்படுவதாக நினைக்கிறது.அதற்காகவே பல உலகியல் நியாயங்களை அது உருவாக்கிக் கொள்கிறது போலும். ஆனால் உடலில் ஆத்மா சுகப்படவே முடியாது என்கிறது நமது சிந்தனை மரபு.

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 96 அழைப்பிதழ்