https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 22 டிசம்பர், 2025

மணிவிழா. 69. அதனினும் பெரிது

 






ஶ்ரீ:



மணிவிழா - 69


22.12.2025


* அதனினும் பெரிது  *





1996 களில் கட்ட முக அலங்காரம் செய்யும் தொழில் வேண்டாம் என நான் முடிவு செய்தமைக்கு முக்கிய காரணம் நிர்வாகத்தில் இரண்டாம் நிலை ஊழியர்களுடன் மிக இயல்பாக இணைய முடிந்த என்னால் அவர்கள் செய்யும் பிழைகளில் இருந்து உருவாகும் சிக்கல்களில் அவர்களுடன் சமரசம் செய்து கொள்வது இயலாமலானது. அவர்கள் நேரடியாக என் கீழ் வருவது எனது ஒவ்வொரு நாளையும் மிக கடுமையானதாக்கியது. தொழில் நுட்பம் குறித்து மட்டுமே அவர்களுடன் என்னால் உரையாட இயன்றது. அவர்கள் கடமைகளை செய்ய தூண்டும் எந்த கருவியும் என்னிடம் இல்லை என்பதுடன் அது எனது துறையல்ல என்பதை மிக தெளிவாக உணர்ந்திருந்தேன். எனவே அவர்களை நிர்வகிக்க என்னை விட மிக திறமையாக மனிதவளத்துறை நிபுணர் செயல்பட முடியும். ஆனால் அவர்களில் சிறப்பானவர்களை கண்டடைய நிறுவனத்திற்குள் கொண்டுவரும் அடிப்படையான பொருளியல் அப்போது என்னிடம் இல்லை வருடத்திற்கு பல லட்சம் விற்றுமுதல் செய்யும் நினுவனத்திற்கு அவர்கள் போன்றவர்களை உட் கொண்டு வருவது செலவேறியது. மேலும் திட்டமிடப்பட்ட விற்றுமுதல் இலக்கு என்பது எப்போதும் உத்திரவாதமில்லாமல் இருந்தது. ஒவ்வொரு வருட இறுதியில் நிகழும் தணிக்கை அறிக்கை நிர்வாகம் மிக சிறப்பான விற்றுமுதல் செய்திருக்கிறது என்பது தெரியவரும். ஆனால் அவை திட்டவட்டமான ஒன்றாக இல்லை அவற்றில் பல எதிர் நோக்காத இடத்தில் இருந்து சட்டென கிடைத்தவை ஆர்டர்கள். அந்த அதிருஷ்டம் எப்போதும் உடன் வரும் என சொல்வதற்கில்லை என்பதால் அதன் விரிவாக்கம் சாத்தியமில்லை என நினைத்தேன். அதை சாத்தியப்படுத்தும் திட்டம் என்னிடமிருந்தது ஆனால் அதை செய்ய எனது நிறுவனத்திற்கு மனிதவளத்துறை வேண்டும் என்பதற்கும் அதை மையப் படுத்தி உருவாக்குவதன் மூலம் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என உறுதியாக இருந்தேன். ஆனால் அன்று அது ஒரு கனவு மட்டுமே நடைமுறை படுத்திப் பார்க்க மிகுந்த தயக்கம் இருந்தது. ஒரு புள்ளியில் அது வேண்டாம் என முடிவெடுத்த போது அந்த தொழிலும் வேண்டாம் என முடிவு செய்தேன்.


எனது கனவுகள் எப்போதும் கனவுகளாக மட்டும் இருப்பதில்லை அது நிறைவேறும் சந்தர்ப்பத்தை இயற்கை பேரிருப்பு உருவாக்கும் போது நான் தயங்கி நிற்பதில்லை. நண்பன் மேத்யூ அதற்கான துவக்கத்தை உருவாக்கி முன்னெடுத்த சூழலில் நான் சற்று தயங்கினாலும் அது என்னை மீறி நிகழ்ந்து முடிந்தது. துவக்கத்தில் புதுவையில் ஆரம்பம் முதல் நான் உருவாக்கிய Aluminum joineries எனது பிரதான தொழிலாக இருந்தது. பொது சந்தையில் அதற்கான இடம் மிக சிறியது. அதை நம்பி அந்த தொழிலை இயக்க இயலாது. அரசாங்கம் தான் மிகப் பெரிய சந்தை. அதனுள் நுழைய நிறைய தடைகள் இருந்தன. முதலாவது தடை அது கட்டுமான நிறுவனங்களின் மொத்த ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக இருந்ததால். அரசாங்க ஒப்பந்தக்காரர்களிடம்  இருந்து எங்களுக்கான ஆர்டரை பெற வேண்டும். அவர்கள் தர நினைக்கும் மிக சொற்ப லாபத்தில் இயங்குவது ஆபத்தானதுஅரசு அவர்களுக்கு நிர்ணயத்த விலையில் இருந்து மிக குறைந்த விலைக்கே அவர்களால் எங்களுக்கு அளிக்கப்பட்டது. பல ஒப்பந்தகாரர்களின் பொருளியல் பலம் பற்றிய நம்பகத்தன்மை கேள்விக்கு உரியது. நான் அரசிடம் இருந்து நேரடி ஒப்பந்தம் பெறும் முயற்சியில் இருந்தேன். அன்றைய சூழலில் புதுவை மற்றும் மத்திய பொதுப்பணித் துறையில் மும்பையை சேர்ந்த பெரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அலுமினிய பொருள்களின் specification அவர்களே உருவாக்கி கொடுத்திருந்தனர். அவர் கூறும்  பொருட்கள் எவையும் பொது சந்தையில் கிடைக்காது. அதன் உரிமை அந்த நிறுவனத்தின் சொத்தாக இருந்தது என்பதால் அரசு ஆர்டர்கள் முழுவதும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்க அந்த monopoly வழி வகுத்தது. அவர்கள் இந்தியா முழுவதும் ஆர்டர் எடுத்து அவர்களின் பெரிய தொழிற்சாலையில் முழுவதுமாக தயாரித்து பின் கட்டுமான இடத்தில் ஒருங்கிணைப்பது அவர்களின் பாணி என்பதால் அதீத தாமதம் தவிர்க்க இயலாது. இந்த இடம் மட்டுமே எனக்கு சாதகமானதாக பார்த்தேன். அந்த சூழலில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரிய நிறுவனங்களுடன் மோதுவது என்பது நான் எடுத்த முடிவு. அதற்கு மாற்று நான் தயாரிக்கும் அனைத்து பொருட்களின் வேலைகளயும் கட்டமான இடத்தில் தயாரிப்பது அரசிற்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அடுத்த சவால் அவர்களின் monopoly market உடைப்பது.


சுற்றுச்சூழல் நிலைபாடுகள் காரணமாக அரசாங்கம் இயற்கையை பாதுகாக்க அரசு கட்டுமானங்களில் மரத்திற்கு மாற்றான அலுமினியத்தைத்தான் உபயோகிக்க வேண்டும் என்கிற விதியை உருவாக்கியது. அந்த உத்தரவை ஒட்டி மத்திய மற்றும் மாநில பொதுப்பணித் துறைகள் அதற்குறிய தரவுகளை உருவாக்குவதில் பெரும் சங்கடம் இருந்தது. ஆகவே மும்பையை தலைமையிடமாக கொண்ட பெரிய நிறுவனத்தில் இருந்து அவர்களின்  specification  பெற்று அதை அப்படியே தங்கள் ஒப்பந்த புள்ளிகளில் பதிந்தார்கள்.


அந்த நிறுவனத்தின் ஸ்பெசிபிகேஷன் அவர்களின் ஒரு வித மொனோபுலி திட்டத்தை மறைமுகமாக கொண்டது . அவர்களின் specification படி அவர்கள் தயாரித்து அனைத்திலும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொருள்களை கொண்டதாக இருந்தது. அலுமினியம் சட்டகங்கள் பெரும் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது. மும்மை அஜித் இந்தியா போன்ற கம்பெனிகள் தங்கள் தனிப்பட்ட டைகளை இன்டால்கோ போன்ற பெரும் கம்பெனியிடம் கொடுத்து தங்களுக்களுக்கானதை பிரத்தேகமாக பெற்றுக் கொள்வார்கள். Monopoly மார்கெட்டை தவிற்க அந்த நிறுவனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அது போன்ற வார்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் என விதி இருந்தாலும் அதில் உள்ள சிக்கல் ஒவ்வொரு ஐட்டத்திலும் 1000 கிலோ ஆர்டர் செய்ய வேண்டும். ஒரு ஜன்னல் செய்ய குறைந்தது ஆறு அல்லது ஏழு ஐட்டம் தேவைபடுகிற இடத்தில் சிறு தொழில் செய்பவர்ககளுக்கு அது சாத்தியமில்லாதது. மேலதிகமாக அந்த குறிப்பட்ட டை நாம் செய்து கொடுக்கவேண்டும் அந்த டையே பல லட்சம். இந்த சிக்கலை கடக்க பொதுப்பணித்துறையின் உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் தொடர்ந்து செயற் பொறுயாளர்களை உதவி பொறியாளர்கள் மற்றும் drawing பிரிவு என அவர்களை தொடர்ச்சியாக சந்தித்து உதவி கேட்டபடி இருந்தேன். அவர்கள் அனைவருக்கும் நான் சொல்வதில் உள்ள நடைமுறை யதார்த்தம் புரிந்திருந்தாலும் அரசு ஒரு மாபெரும் இயந்திரம் அதில் தனிமனித கருத்திற்கும் புதிய முயற்சிகளுக்கும் பெரிய இடமில்லை.இருப்பினும் ஆழ்மனம் ஒன்றை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது என்பதால் இடையறாது முயன்று கொண்டிருந்தாலும் அதிலிருந்து பலன் கிடைக்க மிக நீண்ட காலம் எடுத்தது. எனக்கான ஒருவரை கண்டடையும் வரை அது நீடித்தது.அவர்களுக்கு சிக்கல் எழும் காலம் வரை அப்படி ஒன்று நிகழவில்லை


சட்டென ஒருநாள் செயற் பொறியாளர் ஸ்பெஷல் பில்டிங்ஸ் டிவிஷன் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவரை சென்று சந்தித்தேன். கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் இரண்டாவது விங் நீண்ட காலமாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அலுமினியம் ஜன்னல் மற்றும் கதவுகளுக்காக காத்திருந்து. ஒப்பந்தக்கார்ர் பல தவணை சொல்லிவிட்டார் என்பதால் செயற்பொறியாளர் எரிச்சல் அடைந்திருந்தார். நேரடியாக அவரது அலுவலகம் அஜித் இந்தியா மும்பை தலைமையகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அவர்களுக்குறிய இடத்தை அவர்கள் அளிக்காமல் அலட்சியமாக பேசியது அவர்களை சீண்டி இருக்க வேண்டும் என்கிற தகவல் மட்டும் என்னிடம் இருந்தது. அந்த கட்டித்திற்கான aluminum joinery ஆர்டர் ஏற்கவே அஜித் இந்தியா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகிறது. கட்டட ஒப்பந்தக்காரர் செல்வகாந்தி அவரை புதுவை அரிமா சங்கம் வழியாக அறிவேன். ஒருவித மேட்டிமை மனநிலை கொண்டவர். அவருடன் பல சங்க விஷயங்களில் முரண்பட்டிருக்கிறேன் அதன் வழியாக அவருடன் எனக்கான உறவு எப்போதும் சரியாக இருந்ததில்லை அந்த காரணத்திற்காக அவர் எடுத்திருக்கும் எந்த அரசு ஒப்பந்தங்களின் ஆர்டர்களையும் நான் பெற முயற்சித்ததில்லை.


இப்போது அவர் எடுத்திருக்கும் கட்டிடத்தில் சிக்கல். அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என தெரியவில்லை. முடிந்தவரை கீழ்நிலை ஊழியர்களிடம் இருந்து பெற வேண்டிய தகவல்கள் அனைத்தையும் பெற்றுவிட்டேன். அதிலிருந்து நான் உருவகித்துக் கொண்டவை அஜித் இந்தியாவிற்கு மாற்றாக யாரையாவது உட்கொண்டுவர இயலுமா என நினைக்கிறார்கள். அதில் எனக்குள்ள நடைமுறை சிக்கலை அவர்களை ஏற்க வைத்தால் அன்றி என்னால் செய்வதற்கு ஒன்றில்லை. இரண்டாவது பொருளின் விலை. அலுமினிய சட்டகங்களின் அளவை கணக்கில் கொள்ளாமல் உள்ள ஜன்னல்களின் 5 அடி உயரம் அதனால் வீணாகும் பொருளினால் உருவாகும் விலை அதிகரிப்பு என பலவற்றை பேசி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கும். இதில் எந்தளவிற்கு அவர்களின் ஒத்துழைப்பு இருக்கும் என தெரியவில்லை


பொதுப்பணித் துறையின் ஸ்பெஷல் பில்டிங்க்ஸ்  அலுவலக உதவி பொறியாளர்கள் பலரை  பலமுறை சந்திருந்தேன். இம்முறை செயற் பொறியாளரிடம் இருந்து நேரடி அழைப்பு. அழைப்பின் பின்புலம் நான் ஊகித்தது மட்டுமே அவர்களின் உண்மை மனநிலை  தெரியாது. செயற் பொறியாளர் மிக அமைதியானவர்.

எனக்கு எங்கிருந்து துங்குவது என புரியவில்லை. அவர்கள் கேள்வியாக முன்வைத்தால் அதை பற்றி எனது மேலதிக தகவல்களை அவர்களுக்கு தெரிவிக்கலாம் என நினைத்தேன். அவர்தான் தனது கேள்வியை முன்வைத்தார். என்னிடம் இருந்து அவர்கள் பெற்ற கொட்டேஷனில் உள்ள அளவு மாறுபாடுகளுக்கான காரணம் பற்றி அறிய விரும்பினார். அலுமினிய ஜார்னரி பற்றியும் அதன் நடைமுறை சிக்கல் பல பெரிய நிறுவனங்களால் வலிந்து உருவாக்குபவை என அவருக்கு புரிய வைத்தேன். அதில் உள்ள ஊழலும் அதற்கான காரணத்தையும் சொன்னேன். ஒரு வியாபாரியாக சம்பிரதாய பேச்சும் குழைவும் கொண்ட ஒருவரை எதிர்பார்தது இருந்த அவருக்கு நான் அவரிடம் விளக்கிய பேசி முறை அதிர வைத்தாலும் அதை உதவேகமுள்ள இளைஞன் என்கிற கோணத்தில் புரிந்து கொண்டார் என நினைத்தேன்


அரசு பொதுப்பணி துறைக்கு அந்த நிறுவனங்கள் கொடுத்தவை கிடைப்பதில் சிக்கல் உள்ள பொருள்கள். அதன் செயற்கை தடை அதை உருவாக்கும் பெரிய நிறுவனங்கள் அதில் அவர்கள் அடையும் கொள்ளை லாபாம். பின் எனக்கான தடை அதை தீர்க்கும் வழிமுறை அதில் உள்ள அரசியல் அதன் பின்புலத்தில் உள்ள ஊழல் என அனைத்து பற்றி பேசியது அவர் அதுவரை கேட்காதது. நான் சொன்ன அனைத்தையும் உண்மை என்பதற்கான நிரூபனவாதம் அதில் உள்ள கொள்ளை விலை அதற்கு பின்னால் உள்ள ஊழல் அதை உருவாக்கும் செயற்கை தடை. ஆகவே விலை பற்றி பேசினேன். அவர்கள் சதுரடிக்கு .2500.00 பெரும் அதே பொருளை அதே தரத்துடன் அதே கம்பெனி பொருளை என்னால் வெறும் .600.00 தர இயலும் என சொன்ன போது அவர் அதிர்வடைவதை பார்க்க முடிந்தது. எனது கடைசி ஆயுதமும் தூண்டிலும் அந்த சொல் என நன்கு அறிவேன். தாங்கள் ஏமாற்றபடுகிறோம் என்பதை யாராலும் பொருத்துக் கொள்ள இயலாது. என்றாலும் உடனடியாக அதன் மீது முடிவெடுக்க அவர்களால் இயலவில்லை. அவதானிக்க சற்று அவகாசம் தேவை என்பதால் மீண்டும் சந்திப்பதை பற்றி எந்த முடுவும் எடுக்காமல் அந்த கூட்டம் கலைந்தது. அந்த கூடுகை எனக்கும் செயற்பொறியாளர் மற்றும் அவரது உதவியாளர் மட்டுமாக இருந்தது. அவர் தன்னை சரியாக தொகுத்துக் கொண்டு என்னை அழைப்பார் என நினைத்தேன். எப்படியும் சில காலம் எடுக்கும். காத்திருக்க முடிவு செய்தேன்


அன்று மாலை மீண்டும் வந்து சந்திக்க சொல்லி தகவல் வந்தது. செயற்பொறியாளரை சென்று சந்திக்க அவரது அலுவலகம் சென்ற போது கூட்டம் டிசைன் மற்றும் எஸ்டிமேட் மத்திய கூடத்தில் என தகவல் சொன்னார்கள். மிகுந்த தயக்கத்துடன் அந்த கூட அறைக்குள சென்ற போது ஒட்டுமொத்த பொதுப்பணித்துறையின் முக்கிய அதிகாரிகள் பலர் குழுமி இருந்தனர். துவக்கத்தில் பெரும் தயக்கம் எனது பேசுதல் குறையாடு சிக்கல் விஸ்வரூபம் கொண்டு நின்றது. என்னால் அதை கடக்க முடியுமா என தயங்கினேன். இது ஒரு சவால் நான் அன்று காலை பேசிய விஷயம் அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். அதை பொதுப்பணித்துறையின் அனைத்து கிளை அமைப்பின் முக்கிய அதிகாரிகள் குவிந்திருந்தனர். நான் அதை கேள்வி பதில் போல உருவகித்துக் கொண்டேன் பின்னர் அந்த கூட்டம் மிக இயல்பானதாக இருந்தது. பல முணைகளில் கேள்வி அனைத்தும் அந்த ஐந்து மடங்கு விலை குறைப்பு பற்றியே இருந்தது. தரம் முக்கியமானதாக அவர்கள் கருதுவதும் நான் வைக்கும் வாதம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. நான் அந்த சிக்கலின் மொத்த உருவகம் அதை அவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற அச்சம் இன்றி முன் வைக்க முடிவு செய்தேன். அதை நான் செய்யாது போனால் எனது நம்பகத்தனமை குறையும்


அவர்களை குற்றம் சொல்லுவது எனக்கு சாதகமானது அல்ல என்பதை மீறி அதை முன்வைத்தால் அவர்கள் ஒட்டு மொத்தமாக என்னை நிராகரிக்க கூடும். இந்த புள்ளியில் நான் சட்டென ஒரு முடிவிற்கு வந்தேன். அங்கு நிகழ்வது ஒரு அறைகூவல் அதை எதிர் கொண்டே ஆகவேண்டும். இப்போது அவர்கள் எனக்கானவர்கள் அல்ல. அவர்கள் தங்களுக்கு வேண்டிய தரவுகளை என் மூலம் பெற நினைக்கிறார்கள். அதை செய்யாமல் இருந்தால் கிடைத்த வாய்ப்பை வீண்டித்த வருத்தம் கொள்ள வேண்டி வரும். நான் அங்கு கள நிலவரங்களை முன்வைக்க துவங்கினேன்.அரசு பொதுப்பணித்தறையில் மரப் பொருள்களுக்கு மாற்றாக அலுமினிய நவீன பொருட்களை பயன்படுத்தும் மைய அரசின் உத்தரவு அனைத்தும் உடனடி என்பதால் நடைமுறையில் உள்ள ஒப்பந்த புள்ளிகளை தவிர்த்து இனி அலுமினிய பொருட்களை உபயோகப்படுத்தும் ஒப்பந்த புள்ளிகளை தயாரித்து நடைமுறை படுத்த சொல்லியது


அலுமினியப் பொருட்கள் பிரத்யேக நிறுவனங்கள் பரிந்துறைகளை பெறுவது என முடிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அதை கோரிப் பெற முயற்சிக்கும் போது பிறிதொரு சிக்கல் எழுந்தது ஜின்டால் மற்றும் இன்டால் போன்ற இந்திய நிறுவனங்கள் பல துறைகளுக்கு அலுமினிய புரபைல் தயாரிக்கிறார்கள். முதன்மையாக கம்ப்யூட்டர் குளிர்விக்கும் பாகங்கள், அனுஉலை , பஸ் போன்று அது தேவைபடாத துறையே இல்லை. அதில் ஒரு சிறு பாகம் கட்டத்துறை சார்ந்தது. இந்திய பொதுப்பணித்துறையின் ஸ்பெசிபிகேஷன் முழு அலுமினயம் ஜாய்னரிக்கானது அதில் அலுமினியம் 45% மட்டுமே பிற கண்ணாடி முதல் லேபர் வரை அதில் சேர்க்க வேண்டி இருப்பதால் பேப்ரிகேட்டரை அனுக வேண்டிய தேவை எழுந்தது. அவர்களின் ஸ்பெசிபிகேஷன் அவர்களை தவிற பிற யாரும் அனுக முடியாத சிக்கலை கொண்டதாக அவர்களால் உருவாக்கி பொதுப்பணித்துறையிடம் வழங்கப்பட்டது. அதில் சொல்லப்பட்டிருப்பவைகள் பற்றிய புரிதல் இல்லாமல் அந்த துறை அதை தங்களுடைய specification போல் முன்வைக்க அது அஜித் இந்தியா போன்ற பெரும் நிருவனங்கள் தங்களின் monopoly சந்தையை அடைந்தனர்


Aluminium joineries பற்றிய புரிதல்களும் தரவுகளும் அவர்களிடம் இல்லாமையால் இது போன்ற specification சந்தையில் என்ன விலைவுகளை உருவாக்கும் என்பதை அறியாதவர்களாக தங்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கட்டிடங்களை முடித்து அந்தந்த துறையிடம் ஒப்படைப்பதில் கவனம் கொண்டார்கள். இப்போது கால அவகாசம் எல்லை கடந்து போவதால் அதற்கு மாற்று என்ன என யோசித்த சந்தர்ப்பத்தில் என நுள்நுழைவு நிகழ்ந்திருக்க வேண்டும். வழக்கமான நிறுவன உரிமையாளர்கள் தங்களின் தேவைக்கு துறை அதிகாரிகளிடம் காட்டும் பணிவு எப்போதும் அவர்களின் குறுகலாக மட்டுமே புரிந்து கொள்ளப்படும். அது அளிக்கும் இடத்தை முதல்நிலை அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்வரை தங்கள் சந்தர்பங்களாக உபயோப்படுத்திக் கொள்வார்கள். அவர்களும் ஒரு ஊழியம் போல அனைவருக்கும் கட்டுப்பட வேண்டிய சூழலில்சிக்கிக் கொள்வதை பார்த்திருக்கிறேன். அது எனக்கு நிகழக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதிகாரிகளை அனுகும் முறையை எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்திருந்தது. அதே சமயம் அரசியல்வாதிகள் செய்யும் எந்த மிடுக்கையும் காட்டுவதில்லை. என்னை பற்றிய பின்புலங்கள் அவர்களுக்கு மிக தெளிவாக தெரியும்படி கீழ்நிலை மற்றும் பிற ஒப்பந்தக்காரர்களிடம் காண்பிக்க நான் தவறுவதில்லை. அவர்கள அந்த தகவல்களை எனக்கு சாதகமாக அல்லது பாதகமாக தங்கள் மேலடுக்குகளுக்கு கொண்டு செல்வார்கள். அது எந்த மாதிரியான தகவலான இருந்தாலும் அது என் அதிகாரத்தை பற்றி சொல்வது. ஒவ்வொரு முறை அதிகாரிகளை நான் சந்திக்கும் போதும் என்னைப்பற்றி அறிந்த பிறகு அவர்கள் எதிர்பார்க்கும் ஆணவத்தை ஒரு போதும் அவர்களிடம் காண்பித்ததில்லை எனது இயல்பான பணிவை மட்டுமே அவர்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறேன். அது எனக்கான இயல்பான முகமாக வெளிப்பட்டிருக்கிறது. எல்லா இடங்களில் இது செல்லுபடியாகும் என சொல்வதற்கில்லை. மிக சில இடங்களில் என்னால் உளநுழைய முடியாதபடியும் ஆகியிருக்கிறது


அந்த கூட்டத்தில் முக்கியமானது அவர்கள் பெரிய நிறுவனங்களின் தரத்திற்கு என்னால் இந்த குறைந்த விலைக்கு தர முடியும் என்கிற கருத்தை ஏற்க இயலவால்லை. அது புரிந்து கொள்ளக் கூடியது. நான் அவர்களிடம் எனது தரப்பு வாதத்தை வைக்க துவங்கினேன். அஜித் இந்தியா போன்ற எந்த இந்திய நிறுவனங்களும் அலுமினிய சட்டங்களை உருவாக்குவதில்லை. இன்டால் கோ மற்ற்றும் ஜின்டால் போன்ற பெரு நிறுவனங்கள் பலவித அலுமினிய profile உருவாக்குகிறார்கள் அதில் கட்டக்கலைக்கு தேவையானவைகளும் உள்ளன அந்த நிறுவனங்களிடம் இருந்து அலுமினிய சட்டகப் பொருட்களை பெற்று கட்டுமான இடத்திற்கு தேவையானவற்றை joinery களை ஒருங்கிணைக்கும் வேலையை மட்டும் செய்கிறார்கள்.அவர்கள் உற்பத்தியாளர்கள் அல்ல. அவர்கள் எதையும் உற்பத்தி செய்வதில்லை. அலுமினிய joinery களில்  அலுமினிய சட்டகங்களின் பங்கு என்பது அடிப்படையில் 30 முதல் 40 சதவிகிதம் மட்டுமே பிற கட்டுமான உப பொருட்கள் கண்ணாடிகள் மற்றும் லேபர் என பல விஷயங்களை இணைத்தது  இந்திய பொதுப்பணித்துறை உருவகிக்கும் பொருளை தர இயலும். அதில் அலுமினிய தரம் மற்றும் மூலப்பொருள்களை anodization என சொல்லப்படுகிற வேதியில் பூச்சு அதனால் அது இழந்து பின் அடையும் எடை முக்கிய spesication ஆக இருக்கிறது. பொதுப்பணித்தறை அலுமினிய சட்டங்கள் ஒரு மீட்டருக்கு இத்தனை கிராம் என்றும் கண்ணாடியின் மொத்தம் எத்தனை மில்லிமீட்டர் என சொல்லி பின் மேலதிகமாக அதனால் கட்டுப்படுத்தக் கூடிய எதையும் தெளிவாக வரையறை செய்யாமல் ஒரு எல்லையில் நின்றுவிடுகிறது. அதுவே அஜித் இந்தியா போன்ற பெரு நிறுவனங்களுக்கு பிறரால் நெருங்க முடியாத இடத்தை அளிக்கிறது


என்னுடைய வாதமாக நான் முன் வைத்தது. அஜித் இந்தியா தயாரிக்கும் அதே தரமுள்ள அலுமினிய சட்டங்களைத்தான் நானும் பயன்படுத்துகிறேன். கண்ணாடியும் அதே தரம் பிற அனைத்தும் அதே தரம் கொண்டதாக இருக்கும். இதில் நடைமுறை சிக்கல் அந்த அலுமினிய சட்டங்களின் அளவுகளில் உள்ள குழுப்பம். அதே profile என்னால் கொண்டுவர இயலாது என்பதுதான் நடைமுறை சிக்கல் அவர்கள் கொடுக்கும் அதே profile அளவை விட சில மில்லிமீட்டர்கள் குறைந்து காணப்பட்டாலும். பொதுப்பணித்துறையின் specification குறிப்பிட்ட எடையை விட நான் முன்வைக்கும் profile கூடுதல் எடை கொண்டது என்பதால் அரசிற்கு நஷடமில்லை எனவே அந்த அளவு அல்லது எடை இதில் முக்கியமானது எடை என்பதால் அதை வலியுறுத்தி சிறிய மாறுதல் கொண்டுவந்தால் என்னால் அதற்கு இணையான தரம் எதிர்பார்க்கும் நேரம் தர இயலும். மேலும் அன்றாடும் நிகழும் வேலைகள அனைத்தும் அந்த கட்டுமான இடத்தில் நிகழ்வதால் அரசு அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் அதன் தரத்தை பரிசோதிக்கலாம் சந்தேகம் இருந்தால் அந்த வேலையை உடன் நிறுத்தி விடவும் முடியும் என்றேன். கூட்டம் எந்த முடிவையும் எட்டாமல் கலைந்தாலும் அனைவரின் மனத்திலும் எனது வாதம் ஆழமான செல்வாக்கை செலுத்தி இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசி கூடுகை 91 சில தருணங்கள்