கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடைந்தது. நிறைவு உரையாடலை நண்பர் சிவாத்மாவும் ஏழாவது நூல் முவுறும் விழாவினை சிறப்பிக்க நண்பர் ராஜகோபால் வந்திருந்தார். நிகழ்வின் துளிகள்.
இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
சனி, 25 நவம்பர், 2023
வெள்ளி, 24 நவம்பர், 2023
ஜெ.அடியடைவு பதிவு கனவு கடிதம்
24.11.2023
புதுவை.1
அன்பிற்கினிய ஜெ,
வணக்கம். ஒருவகையில் இது 23.11.2023 அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சி. வழக்கமாக அதிகாலையிலேயே உங்கள் தளத்தை வாசித்து முடித்து விடுவேன். என்ன காரத்தினாலோ நேற்று வாசிக்கவில்லை. உங்களுக்கு எழுதிய கடிதத்தை அனுப்பலாம வேண்டாமா என குழுப்பி பின் அனுப்பி வைத்தேன்..அதன் பிறகே உங்கள் தளத்தை வாசித்தேன்
உங்கள் “அடியடைவு” வாசித்து முடித்த பிறகு அதிர்ச்சி. உங்கள் முன்னோருக்கு நீங்கள் அளித்த நீர்கடன் திகைப்பை தந்தது. உங்களை சந்தித்த இந்த 13 வருடத்தில் நீங்கள் அடைந்து வரும் மாற்றத்தை அறிந்திருக்கிறேன் . நீர்கடன் கொடுத்து முடித்த பிறகு நீங்கள் அடைந்த அந்த மனநிலையை மிக அணுக்கமாக உணர்கிறேன். அவை வார்த்தைகளால் விவரிக்க இயலதவை. அதை ஒட்டி இந்த கடிதத்தை எழுத நினைத்தேன்.
எனது தினசரி பூஜை துவக்கம் நீர்கடனுடன் துவங்கும் . நான்கு நிரைகளில் நான் எனக்கு குருவாக நினைக்கும் அனைவருக்கும் அதில் நீர்கடன் கொடுப்பது வழக்கம்.
முதல் என் தாய் தந்தை வழி
இரண்டு என்அரசியல் குரு பரம்பரை சண்முகம் காமாராஜர் காந்தி என ஒரு நிரை
பின்னர் மூன்றாவது நிரை வியாச சுகப்பிரமம் என தொடங்கும் நிரையின் இறுதியில் வெண்முரசு மூலம் உங்களிடமிருந்து பெற்றவைக்கு நன்றி சொல்லும் விதமாக பாகுலேய பிள்ளை விசாலாட்சி அம்மாள் என நிறைவுறும்.
நான்காவது நிரை பிரம்மா தொடங்கி துருவன், சிவன் ,மகாபலி ,பகிரதன், கங்கை , பீஷ்மர் என நிறைவுறும்.பின்னர் குல வழக்கமான விஷ்ணு வழிபாடு.
நான் உங்களை பற்றிய எழுதிய கனவிற்கும் உங்கள் பதிவிற்கும் உள்ள தொடர்பு போல ஒன்று இருப்தாக மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
நான் காசியில் தாய் தந்தைக்கு நீர்கடன் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன அத்தனை விரிவாக இல்லை.
நன்றி
கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
வியாழன், 23 நவம்பர், 2023
இரண்டு கனவு .ஜெ கடிதம்
23.11.2023
புதுவை-1
அன்பிற்கினிய ஜெ,
வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன்.
கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப்பது போன்ற கனவுகள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாது வருவதுண்டு . ஆனால் இந்த இரண்டு கனவுகள் வேறுவிதமானவை , அதிலிருந்து விழித்து எழுந்த பிறகும் அந்த கனவின் அதிர்ந்த உணர்வு நிலை விழித்து எழுந்த பிறகும் நீண்ட நேரம் உடலில் நீடித்திருந்தது புதிய அனுபவம். அது பற்றி உங்களுக்கு எழத வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக இந்த கடிதம்.
கனவுகளுக்கு அர்த்தமில்லை என்றாலும் தொடர் கனவுகள் வந்து போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன் இன்று காலை கண்ட கனவு இந்த கடிதத்தை எழுத தூண்டியது. இரண்டு கனவுகள். முதல் கனவு நான் இன்னதென்று அறிய முடியாத ஒரு பழங்கால அல்லது புராதன இடத்தை பார்க்கச் சென்றிருக்கிறேன். அது பாழடைந்த கோவிலும் கோட்டையும் கலந்தது போன்ற இடம்.
அந்த கட்டுமானம் கற்கள் என ஏதுமின்றி முழுவதும் பித்தளையினாலும் வேறு உலோகங்களினாலும் ஆன உலகம். எங்கு திரும்பினாலும் லட்சக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக சக்கரமும் விசைகளும் கதவுகளைக் கொண்டதாக பச்சை களிம்பேறி இருந்தது . அது எந்த மாதிராயான இடம் என அறிந்து கொள்ள உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன். பின்னர் ஒரே குழப்பம் அலைபேசி எங்கே என தேடிக் கொண்டிருக்கிறேன் .பின்னர் எப்போது அலைபேசி கிடைத்தது என தெரியவில்லை. உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன் . அங்கிருந்தவர்கள் அலைபேசியை உபயோகப்படத்த கூடாது என்றார்கள். மேற் கொண்டு உங்களுடன் பேச இயலவில்லை.
ஒரு முக்கிய இடம் என சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள் சில லிவர்களை இழுக்க எங்கும் சக்ரமும் விசையுமாக நின்றிருந்தது இடம் திடீரென உயிர் கொள்கிறது . ஒட்டு மொத்த அமைப்பே உருமாறிக் கொண்டிருந்தது. அது இயங்கும் ஓசையை என் உடலால் அதிர கேட்டுக் கொண்டிருக்கிறேன். சட்டென ஒரு ஓராள் நுழையும் அளவிலான பித்தளை தரைக் கதவு திறந்து கொள்ள அதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உலோகத்திலான சுருள் படிகெட்டுகள் ஆழமாக இறங்கிச் செல்கின்றன் அருகில் இருந்த சிலர் என்னை அதில் இறங்கி போகச் சொல்லுகிறார்கள்.
முதலில் அதில் இறங்கிச் செல்ல முயன்ற போது மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டு திணற துவங்கினேன் . என் உள்ளே ஏதோ ஒன்று “அது மீள இயலாத பாதை முயற்சிக்காதே என எச்சரிக்க” நான் அதிர்ந்து பின்வாங்கி விடுகிறேன். கனவு சட்டென கலைந்து விட்டது. விழித்த பின் உண்மையில் மூச்சுக்கு தேம்பியதால் பதறி விழித்துக் கொண்டிருக்கிறேன். விழித்துக் கொண்ட பிறகும் உடலில் சில வினாடி அந்த சக்கர சுற்றலால் உண்டான உச்சகட்ட அதிர்வில் உடல் இருந்து கொண்டே இருந்தது ஏன் என்று புரியவில்லை.
மனம் அந்த மொத்த இடத்தையும் மூளையென சொல்லியது. அந்த தரைக் கதவு ஆழ்மனம் என்றும் அதில் இறங்கி இருந்தால் வெளியேற இயலாது சிக்கி கோமா போன்ற மரணத்திற்கு இணையான ஒன்று எனக்கு நிகழ்ந்திருக்கக் கூடும் என்றது. அதை உண்மைதான் என இன்னொரு பகுதி ஏற்றது. அரை மணி தேரம் உடலின் இருந்து கொண்டிருந்த அந்த அதிர்வு நீங்கவே இல்லை.
இரண்டாவது கனவு. இன்று அதிகாலை மீண்டும் ஒரு விசித்திரமான கனவு உங்களை சந்திக்க உங்கள் வீட்டிற்கு வருகிறேன் ஏதோ விசேஷம் போல வீடு நிறைந்திருந்தது. பலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். வரவேற்பறை போல இருந்த இடத்தில் அரை இருட்டில் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்கை வணங்கி அருகிருந்த நாற்காலியில் அமர்ந்ததும் பக்கத்தில் இருந்தவர் அது நீங்கள் இல்லை “அஜிதன்” என்றார் நான் திரும்பவும் பார்த்த போது அது அஜிதன் தான் சில மாத தாடியுடன். அருகில் நீங்களும் இருந்தீர்கள். இரண்டு பேரும் கரு நீல முழுக்கை சட்டை முழங்கை வரை ஏறி இருந்தது. நீங்களும் அதே ஜாடை தாடியுடன் இருவரும் ஒரு மாதிரி உடல் அசைவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன் .
யாரோ நீங்கள் வெளி அறையில் இருப்பதாக சொல்ல எழுந்து வந்து உங்களை பார்க்கும் போது உடல் முழுவதுமாக முடி மழிக்கப்பட்டு ஆடைகள் இல்லாமல் சமணத் துறவி போல ஒரு கால் மீது மறுகால் போட்டு உட்காரந்து கைகளை மடிமேல் வைத்துக் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு பின்னால் சுவர் அகல உயர கண்ணாடி அலமாரியில் சற்று முன்னர் யாரோ மூன்று பேர் சப்பிட்டுச் விட்டச் சென்ற பெரிய வாழையிலை அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தது அதில் செம்பருத்தி பூ போல சிவந்த நிரத்தில் சாப்பிட்ட மிச்சல் . அதன் கீழ் அடுக்கில் அதே போல ஆனால் அந்த இலைகளை விட சற்று சிறிய அளவில் சாப்பிட்ட இலைகள்.
யாரோ மிக மிக முக்கியமானவர் வந்து உணவருந்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் புனிதர் என்கிற புரிதலைக் கொடுத்தது. நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் இறுதியில் யார் அந்த இலைகளில் உணவருந்தியது என சொல்லப் போகிறீர்கள் என புரிந்தது காத்திதிருந்தேன்………. கனவு கலைந்து விட்டது.
நன்றி
ஆழ்ந்த நட்புடன்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
செவ்வாய், 21 நவம்பர், 2023
புதன், 15 நவம்பர், 2023
வெள்ளிமலை பிரபந்த முகாம் கடிதம். ஜெ தளத்தில்
https://www.jeyamohan.in/192752/
அன்பிற்கினிய ஜெ,
வணக்கம்,நலம் நலனை விழைகிறேன்.
திவ்ய பிரபந்த பயிற்சி முகாம் வெள்ளிமலையில் ஒருங்கிய உங்களுக்கும் அதை வெற்றிகரமாக நிகழ்த்தி கொடுத்த நண்பர் ராஜகோபாலன் மற்றும் நண்பர் மாலோலன் அவர்களுக்கும் என் உளம் நிறைந்த நன்றிகள். ஒரு நீண்டநாள் கனவு மெய்பட்டது போன்ற உணர்வு. கடந்த இருபதாண்டுகளாக நீடித்த ஒன்று. பல முறை முயன்று முடியமால் போனது. உபண்யாசம் மற்றும் காலஷேபம் போன்றவை நிகழ்த்து கலைக்கு ஈடானவை அவர்களால் அதன் ஓட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக ஒன்றை செய்ய இயலுவதில்லை. முயற்சித்த சிலர் பாதியில் தொடர்பு சரடு அறுந்தவர்கள் போலாவதை பார்த்து திகைத்திருக்கிறேன். பிரபந்த பாசுரங்கள் எளிய தமிழின் சொல்லழகும் கவித்துவமும் மிளிர அதன் உச்சத்தை அடைவது மரபில் சாத்தியமில்லை எனப் புரிந்து கொண்டேன். ஆனால் நவீன இலக்கியம் வாசித்தவர் ஒருவர் அந்த உச்சங்களை அனாயாசமாக சென்றடைய முடியும் என்பதை இந்த முகாமில் அனுபவிக்க முடிந்தது. நண்பர் ராஜகோபால் அதை தனது அனுபவத்தால் நிகழ்த்தி காட்டிய போது ஒவ்வொரு முறையும் உள்ளம் விம்மியது .
இன்றைய நவீன இலக்ககிய வாசகர்களுக்கு பக்தி மரபிலக்கியம் நோக்கிய தேவை இது போன்ற ஒரு நிகழ்வு பெரிய அளவில் உதவும் . இன்று சாமான்யர்களுக்கு தமிழ் இன்னும் தூரத்தில் உள்ளது . துரதிஷ்டவசமாக மரபான உபண்யாச முறைகளில் பிரபந்தம் மற்றும் கம்ப ராமாயணமே கூட மொழியில் அழகும் அதன் அறிதலும் நிகழ்வதில்லை. தத்துவ விளக்கம் வியாக்கியாணம் என பெரிய சொற்காடுகள் உருவாக்கும் போது தமிழின் சொல்லழகும் உச்சக் கவித்துவமும் பிரித்தெடுத்து ரசிக்க முடியாமல் போய்விடுவதுடன் பகத்தியில் அதன் உள் பொதிவு தேவையற்றது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.
உபண்யாசம் கேட்பதாலேயே “கதி மோட்டசம்” போன்ற எண்ணத்தை உருவாக்கி விடுவதால் அங்கு அமர்ந்து கேட்பவர்களுக்கு அதைக் கடந்து பிறிதொரு எண்ணமில்லாமல் அந்த சொற் பெருக்குகளை செவியளவில் உள்வாங்கி புண்ணியத்தை சேர்த்து பின்னர் தங்கள் அன்றாடங்களுக்கு திரும்பிவிடுகிற்றார்கள் அங்கு கற்றல் ஒருபோதும் நிகழப்போவதில்லைய. காலஷேப முறை வகுப்பு போல எடுக்கப்பட்டாலும் சம்ஸ்கிரத சொல் உபயோகம் கேட்பவரை அன்னியப்படுத்தி விடுவதுடன் கவனத்தை சிதறடித்துவிடுவதை பார்த்திருக்கிறேன்.
மரபு இலக்கியத்தில் நவீன வாசிப்பின் வழியாக நிகழக் கூடியது என்ன என்பதை முதலில் அறிந்து கொண்டது எழுத்தாளர் சுஜாதாவின் மரண தருணத்தில் நீங்கள் நம்மாழ்வார் பாசுரங்கள் சிலவற்றை அன்றைய இரவு முழுவதும் வாசித்துக் கொண்டிருந்ததைப் பற்றிய கட்டுரை கொடுத்திருந்தது. இரண்டாவது நீங்கள் புதுவை வெண்முரசு கூடுகைக்கு முதல் முறையாக வந்திருந்த போது நண்பர்கள் அலவலாவல் மத்தியில் பெரியாழ்வாரின் “புறம் புல்குதல்” பற்றிய பத்து பாசுரத்தில் இருந்து சிலவற்றை சொன்ன போது அந்த சிலிப்பை அடைந்தேன். பின்னர் பல சந்தர்பங்களில் அது போன்ற நிகழ்வை நான் நடத்துவது பற்றி உங்களிடம் உரையாடி இருக்கிறேன் . அதுவே பின்னர் புதுவை வெண்முரசு கூடுகையாக உருவெடுத்தது.
சமயம் கிடை்க்கும் போதெல்லாம் கடலூர் சீனு,மணிமாறன், தாமரைக்கண்ணனுடன் இது பற்றி பேசி இருக்கிறேன். கடந்த மாத வெண்முரசு கூடுகையின் இறுதியில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களை நவீன பாணி கவிதைகளாக மாற்றி பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்
சில நாள் கழித்து நண்பர் தாமரைக்கண்ணன் “கிளப்ஹவுஸ்” செயலி அதில் நண்பர் ராஜகோபால் அவர்களின் உரையாடல் குறித்து சொன்னது பின்னர் வியப்புடன் அதை முழுவதுமாக கேட்ட கொண்டிருந்த சந்தர்பத்தில் நீங்கள் வெள்ளிமலை திவ்ய்பிரபந்த வகுப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டிருந்தீர்கள் . நான் தற்செயல் வாதத்தை நம்பாதவன். இதை ஒரு நல்லூழாக எடுத்துக் கொண்டேன். அதே செயலியில் “இம்பர்வாரி” என கம்பராமாயணத்தை வாசிக்கிறார்கள் கேட்க மிக அற்புதமான அனுபவமாக இருந்தது
இன்றைய மரபிலக்கியம் ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு சொல்ல ஓன்றுமில்லை அது இளநிலை மாணவர்களுக்கு முதுகலை கற்பிப்பது போன்ற பாவனையுடன் சொல்லப்படுகிறது எனது தந்தை வருத்தமாக சொல்வதுண்டு.
முகாமை துவக்கி நடத்திய கணம் முதல் இறுதிவரை நண்பர் மாலோனின் அருகமர்வு வழியாக முகாமை நடத்திச் சென்றது மிக சிறந்த அணுகுமுறை .தயக்கமில்லாமல் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் தங்களை இணைத்துக் கொண்டது நிகழ்வை உயிர்புள்ளதாக்கியது. பலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் அது உருவாக்கியது.நண்பர் ராஜகோபால் அவற்றை உள்வாங்கி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை வேறொரு உச்சத்திற்கு அவர் கொண்டு சென்றதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு உரையாடலுக்கும் இறுதியில் அவர் சென்றடையும் உச்சம் மேடையில் உருவாகி அது நிகழும் கணம் அதில் திளைத்தல் என அவை அவரது மேடை அனுபவத்தை காட்டியது .
ஆழ்வார்களின் பாடலில் உள்ள தமிழ் கவிச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்த அதே சமயம் தத்துவம் குறித்த மிகையற்ற “சிறு கிள்ளல்” உப்பு அதன் சுவையை மிகப் பெரிய அளவில் கூட்டியது.
நண்பர் மாலோலன் அருகமர்வு வகுப்பை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது.மிக சிறப்பான ஏற்பாடு. பாடல்களை மரபான சந்தையில் வாசிக்கப்படும் போது உருவாகும் உணர்வு நிலை கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டது . பிரமாதமான ஏற்பாடு.எனது நீண்ட நாள் கனவு இது போன்ற ஒரு நிகழ்வு.நிகழ்வு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பாசுர கவித்உவமான விளக்கம் பின்னர் அதன் இறுதியில் தத்தும் பற்றிய சிறிய அறிமுகம் மிக சரியாக கோர்கப்பட்டிருந்தது. முதல் நாள் துவக்கத்தில் வைணவ தத்துவ கட்டுமானத்தை வைக்காமல் அன்று இரவு அதை செய்திருந்தது மற்றைய இரண்டு நாள் கற்றலுக்கு உதவியாக இருந்தது.
மரபான வியாக்கியான முறைகளின் படி சொல்பவர்களை அதில் திளைக்கச் செய்துவிடுகறது அத்தகைய உரைகளில் பார்வையாளர்கள் சில உச்சங்களை மட்டும் சேகரித்துச் செல்கிறார்கள். அது அவர்களுக்குள் விதையாக விழுவதில்லை.
கடந்த சில வருடங்களாக அலோபதி மருந்துகளால் உருவான தொடர் உடல் உபாதைகளுக்கு அஞ்சி பயணத்தை தவிற்த்து வந்தேன். ஒவ்வொரு வெள்ளிமலை முகாம் பற்றிய அறிவிப்பு வரும் போதெல்லாம் கலந்து கொள்ள இயலாமை குறித்து மனம் குழைந்து வருந்தியதுண்டு. இம்முறை வாய்ப்பை தவறவிடுவதாக இல்லை சென்றேயாக வேண்டும் என கிளம்பினேன். வியாழக்கிழமை இரவு 11:30 மணிக்கு புதுவையில் இருந்து தனியாக கிளம்பி அதிகாலை 6:00 வெள்ளிமலை சென்றடைந்தேன். இடையில் அந்தியூரில் நண்பர் பெங்களூர் ஹரீஷ் வந்து இணைந்து கொண்டார் அந்தியூரல் இருந்து மலை ஏற்றம் துவங்கியுடன்
உங்களின் முதல் தத்துவ முகாமிற்கு புதுவையில் இருந்து அங்கு விட்டு வந்து எனது ஓட்டுனர் அங்கு நடந்ததாக சொன்ன கதை. நண்பர் அந்தியூர் மணி விளக்கமாக எழுதிய மின்னஞ்சல் போன்றவை ஏற்படுத்தி பீதி காரணமாக இருள் விலகா காலையின் இடையில் மலையேற்றத்தில் சில மணிநேரம் வெளிச்சம் வரும்வரை காத்திருந்தது ஒரு வகை திகில் அனுபவம். வழியில் சற்று முன்னர் யானை கடந்து சென்றதற்கான சான்று போன்றவை அந்த இருள் விலகா காலையை திகிலுடன் அழகாக்கியது.
நன்றி
கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
புதுவை
புதிய பதிவுகள்
-
புதுவை வெண்முரசு கூடுகை தனது 75 வது கூட்டம் 12.09.2024 வியாழன் அன்று காலை 10:20 க்கு துவங்கியது . இது எழுத்தாளர் ஜெயமோகன் புத...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : மணிவிழா - 56 24.01.2023 என் மீதான அவநம்பிக்கையால் “ வேளுக்குடி ” சொல்ல நினைத்ததை மீள மீள எனக்குள் எழுப்பிக் க...
-
ஶ்ரீ : பதிவு : 269 / 356 / தேதி :- 16 டிசம்பர் 2017 * மறுமுனையைத் தேடி * “ ஆளுமையின் நிழல் ” - 15 கருதுகோளின...
-
ஶ்ரீ : பதிவு : 137 / 210 தேதி :- 24 ஜூலை 2017 * கற்பிதத்தின் பிழை * இயக்க பின்புலம் - 63 அரசியல் ...
-
வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...
-
ஸ்ரீ: பதிவு : 244 / 330 தேதி :- 20 நவம்பர் 2017 * பல திறப்புக்களின் வாய்ப்பு * “முரண்களின் முனைகள் ” - 13 ” கரு...