கோவை 20-21.09-2022
கோவை ஜெ 60 நிகழ்வு. நானும் வேதாவும் சென்றிருந்தோம் எனக்கு அங்கு செய்ய இரண்டு முக்கிய வேலைகள் இருந்தது. ஒன்று கோவையில் நிகழும் ஜெயமோகன் மணிவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது. இரண்டு 13-10-2022 புதுவையில் நிகழ இருக்கும் எனது மணிவிழாவிற்கு அரைப்பிதழை கொடுப்பது.
முதல் நாள் மதியம் கோவை சென்றுவிட்டேன். மாலை மணிவிழா அரங்கில் விஷ்ணுபுர நண்பர்களை சந்தித்துக் கொண்டே இருந்தேன். விழா மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. பலர் வாழ்த்திப் பேசினர். கல்பற்றா நாராயணனின் பேச்சு மலையாளத்தில் இருந்தாலும் ரசிக்கும் படி இருந்தது சிற்சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் அவர் சொன்னதன் மையக் கருத்தை சென்றடைய முடிந்தது. பின்னர் மணவாளனின் சிறப்பான மொழிபெயர்பு படித்த போது அதன் பிதொரு ஆழம் அறிந்து கொள்ள முடிந்தது. இரண்டாவது பவா செல்லதுறை சொன்ன கதை. அது ஜெயமோகனின் “மாயப்பொன்” சிறுகதை. அதை அபாரமாக சொன்னார். பவா வின் கதைச் சொல்லை நேரில் கேட்பது தனி அனுபவம். அடுத்த நாள் காலை ஜெ தங்கியிருந்த விடுதிக்கு சென்று எனது மணிவிழா பத்திரிக்கை கொடுப்பது திட்டம். எப்போதும் ஐம்பது நணபர்கள் கூடியிருக்க அதன் மத்தியில் அமர்ந்திருக்கும் ஜெ மிஸ்ஸிங். அது சுவீட் பாணி விடுதி இரண்டு ரூம் மற்றும் ஒரு பெரிய வரவேற்பறையை கொண்டது என்பதால் நண்பர்கள் யாரும் இல்லை . கடலூர் சீனு, விஜயசூரியன்,அனங்கன் பின்னர் அரங்கா வந்து கலந்து கொண்டார். பின்னர் பேச்சு வேடிக்கையாக போய்கொண்மிருந்தது.
அரங்கா பேசும் போது ஜெயமோகனிடம் எனது மணிவிழா அழைப்பிதழை பார்த்து . “இது என்ன வெள்ளாழரில் வைணவரா” என்றார். பொதுவாக எங்கும் கேட்கப்படுவது. வெள்ளாழர்களில் அனைவரும் சைவர்களாகவே இருப்பார்கள் என்பது நடைமுறை புரிதல். ஜெ அதற்கு என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் ஶ்ரீபெரும்பூதூர் மடம் வட மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் சிலரை பயணம் செய்ய வைத்து வைணவர்களாக ஆக்கினார்கள் என்றார். அவர சொல்லுவது மிகச்சரி. ஆச்சயர்யமாக இருந்தது. அது மிக நுண்ணிய தகவல். அந்த சம்பிரதாயத்தில் உள்ள பலருக்கு தெரியாதது. உளவட்டத்தில் கூட அதை அறிந்து வைத்திருப்பவர்கள் மிக குறைவு. திருகோவலூர் மடத்தின் ஜீயர் ராமானுஜ நாவலர் என்கிற ஒருவரை அந்தப் பணிக்கு அனுப்பி வைத்தார் அவர் இங்கு வந்து ஆதிக்க சாதியை சேர்ந்த பலரை தீவிர வைணவர்களாக மாற்றினார். அவர் புதுவையில் நீண்ட நாட்கள் தங்கி இருந்து அதை செய்த தால் அவர புதுவை விலக்ஷ்னகவி ராமாநுஜநாவலர் என அழைக்கப்பட்டார். அவர் பல ஆக்கங்களை இயற்றினார். துரதிஷ்டவசமாக அவை இன்று புழக்கத்தில் இல்லை. இன்று தீவிர வைஷ்ணவர்கள் அவரது பரம்பரையில் வந்தவர்கள். அவர்களின் அந்த சிஷ்யப்பரம்பரை ஏறக்குறைய இல்லை என்கிற இடத்தை இன்னும் பத்தாண்டுகளில் அடைந்து விடும். எனது தந்தை வழியில் நானும் அந்த சிஷ்ய நிரையில் ஒரு கண்ணி.
பின்னர் அரங்கா வேடிக்கையாக சொன்ன ஒரு செய்தி என்ன ஜெ உங்கள் தீவிர செயல்பாட்டளர்கள் அனைவரும் வைணவர்கள் தான் போல என்றார். ஆஸ்டின் சௌந்தர்,ஜாஜா, காளி,அரங்கா, மணவாளன் என சொல்லிக் கொண்டே சென்றார். நான் எனது மணிவிழாவிற்கு ஜெ மற்றும் அருண்மொழி இருவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து விட்டு புதுவை திரும்பினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக