https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 22 செப்டம்பர், 2022

அடையாளமாதல் * காற்றும் தூற்றலும் *

 



ஶ்ரீ:



பதிவு : 641  / 831 / தேதி 22 செப்படம்பர்  2022



* காற்றும் தூற்றலும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 37 .







நெடுமாறன்”. எல்லாரும் அழைக்கமாறன்அவனது விளிப் பெயரானது . அவன்  தலைவரின் வீட்டில் தங்கி இருந்ததும் அவரின் உறவினன் என்கிற அடையாளமும் அவனுக்கு பல கட்சி பிரமுகர்களுடன் அரசியல் பேசும் தகுதியை பெற்றுக் கொடுத்திருந்தது . தொடர்புறுத்தலுக்கு ஏற்றபடி முன்னணி தலைவர்களுடன் தீவிர அரசியல் பேசும் இடத்தால் கிடைக்கும் வசதி அது . புதுவை தலைவர்களுடன் அரசியல் பேசுவது ஒன்றும் அவ்வளவு சிக்கலானதல்ல. யாரும் யாரிடமும் பேசாலாம் என்பதே இங்குள்ள சூழல் . ஆனால் தங்களின் முக்கிய இடத்திற்கானதை அவர்கள் தனிமையில் முடிவு செய்வார்கள். அதற்கு யாரெல்லாம் துணைப்பார்கள் என எந்த குறியீட்டையும் வைத்துக் கொள்ள முடியாது . மாறன் செய்ய நினைத்தது ஒருவகையில் தனது இடத்தை மிக வலுவாக கட்டமைக்கும் முயற்சி . அவன் தன்னையும் தனக்கு தேவையானதையும் மிகத் தெளிவாக வரையறை செய்திருந்தான். நேரடி அரசியலில் அவனுக்கு எந்த இடமும் உருவாகாது என்பதால் அதில் எந்த ஈடுபடும் ஆர்வமும் எதையும் காட்டவில்லை. தனது எண்ணங்களை உரையாடல்கள் போல அமைத்துக் கொள்வான். அதன் பேசுபொருள் அனைவரையும் மிக எளிதல் தன்னுடன் இணைத்துக் கொள்வது. ஒரு இடைதரகராக மிக நேர்த்தியாக பேசக் கூடியவன் அவன் விரும்பிய இடம் அது. அரசியலில் தொடர்புறுத்தலினால் வரும் இடத்தை எங்காவது ஒரு புள்ளியில் பொருளியல் லாபமாக மாற்றிக் கொள்ள முடியும். அதை தெளிவாக அறிந்திருந்ததால் பேச்சின் அனைத்தையும் அதை நோக்கியே செலுத்தினான்.


2001 நடக்க இருக்கும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பிருந்ததை பொதுப் புரிதலில் வழியாக அறிந்திருந்தான். அது நிகழும் போது தனது இடம் உறுதிப்பட்டுவிட்டால் தனக்கான வாய்ப்புகள் உருவாகிவிடும் என நினைத்திருக்க வேண்டும் . தலைவர் முதல்வராகும் வாய்ப்பு பற்றியெல்லாம் அப்போது யாருடைய கணக்கிலும் இல்லை. அவனது அரசியல் ஒரு ஒற்று செய்தி போல முன்னெடுக்கப்பட்டது.“சண்முகத்தின் கோணம் அல்லது பார்வைஎன்று பிறரிடம் அவன் உரையாடும் போது நேரடியாக சொல்வதில்லை என்றாலும் அவனது முதிரா சிறுவனின் உற்சாகத்தை சண்முகத்தின் மறைமுக தூதாக பிறரால் பார்க்கப்படும் என அவன் ஊகித்திருந்தான் . அது மிகச் சரியான கணிப்பு. அரசியலில் அவனை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பிறரின் ஆவலை மிக எளிதில் தூண்டக் கூடிய தேர்ந்த பேச்சு ஒரு வலை போல விரிக்கப்பட்டது. அதிலிருந்து பிறர் தப்புவது கடினம். அவன் பேசும் அரசியல் அனைத்து தரப்பில் இருந்து திரட்டிக் கொண்டவை என்பதால் அதில் உள்ள சமகாலத்தன்மை தரவுகள் நிஜம் என்பதால் எவரையும் வசீகரிக்கக் கூடியவை. அதில் சிக்காமல் இருப்பதுதான் கடினம் . ஒரு புள்ளியில் தனது அரசியலின் கணக்கு குறித்து என்னிடம் விவாதிக்க துவங்கி இருந்தான். அவை பற்றிய எனது ஊகங்கள் அவனது அரசியில் பற்றிய என மன ஓட்டத்தை முழுமையாகப் அவனிடம் பகிர்ந்து கொள்வதில்லை. சில சமயங்களில் நான் முற்றும் அறியாத புதிய தகவல்களை அவன் சொன்னதுண்டு. எந்த புள்ளியில் இருந்து அது நண்பர்களின் உரையாடல் விலகி அரசியலாளர் விவாதமானது என்பது ஒரு விந்தையான கணக்கு . சண்முகம் முதல்வராக நாங்கள் செய்த முயற்சிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சட்டென எதிர்பாரத பலனை கொடுத்தவை. அதன் கூறுகள் அவரை முதல்வர் போட்டியாளர் என்கிற இடத்திற்கு நகர்த்தியது. சிக்கல் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் துவங்கியது


சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக குடும்பத்தை தனது அரசியலில் இருந்து முற்றாக ஒதுக்கி வைத்திருந்த சண்முகம் 1998 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதை மறு பரிசீலனை செய்யவேண்டிருந்தது. குடும்பத்தாரை அரசியலில் கொண்டுவந்தால் என்ன சீரழிவு நடக்குமோ அத்தனைனையும் அதன்பின்னர் நிகழ்ந்து முடிந்ததுஅந்த பாராளுமன்ற தேர்தல் போட்டியிடுவது என்கிற முடிவு பின்னர் எல்லா வகையிலும் அபத்தமானதாகியது  . ஆனால் அந்த சூழலில் அவரால் செய்யக்கூடியது பிறிதொன்றில்லைஅன்று அது ஒரு வித அரசியல் கட்டாயம் . கூட்டணி இல்லாமையால் அவர் எதிர்பார்த்த அனைத்து பொருளியல் உதவி செய்வதாக வாக்களித்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவரை கைவிட்டனர். சிலர் முற்றிலுமாக பாரமுகமானார்கள். சிலர் மிக அற்ப தொகையை கொடுத்தனுப்பினர். அரசியலில் அவை மிக சாதாரணம் என்றாலும் தேர்தல் தேரத்தில் வெற்றி தோல்வியை அவை மட்டுமே முடிவு செய்பவை. எதிர்பாராமல் அவரது அண்ணன் மருமகன் கரூர் பாஸ்கரின் மூலம் பொருளியல் உதவி கிடைத்த போது மறுக்க முடியாமலானார் . அதுவரை குடும்பதினரிடையே அரசியல்வாதியாக சண்முகத்திற்கு பெரிய இடமெல்லாம் ஒன்றுமில்லை. அண்ணன் மத்திய அரசாங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். வீட்டில் அரசியலில் ஈடுபடும்உருப்படாத இளவல்பட்டம்திருமணம் செய்து கொள்ளாத வாழ்கை போக்கு போன்றவை அவருக்கு இடத்தை பெற்றுத் தராமலானது . அதை அவரது உறவினர்கள் வீடுகளில் தலைவருடன் உணவருந்த செல்லும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அந்த மௌன உளவிலகளை உணர்ந்திருக்கிறேன் . திராவிட கட்சிகளில் தங்கள் குடும்ப  அரசியல்வாதிகளை சூழ்ந்து கொண்டாடுவதைப் போல காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைப்பதில்லை. பொருளியில் லாபம் தவிற பிற எதையும் எண்ணாதப் போக்காக அது இருக்கலாம். அல்லது சண்முகத்திற்கு தன்னியல்பில் யாருடன் ஒட்டாத போக்கு உருவாக அது காரணமாக இருக்கலாம். அவர் அடைந்த அரசியல் வெற்றிகள் அவரது குடும்பத்தாரால் உணரப்படவேயில்லை. ஏறக்குறைய குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டவர் போலானார். ஆனால் அது அனைத்தும் சண்முகத்தின் அண்ணன் மருமகன் கரூர் பாஸ்கர் புதுவை நுழையும்வரை தான். அதன் பின் அனைத்தும் மாறிவிட்டன. சண்முகம் முதல்வராக வர இருந்து உட்கட்சி பூசலில் தவறவிட்ட பிறகு குடும்பத்திற்குள் அது தீவிர விவாதப் பொருளாகியிருக்க வேண்டும். அதன் இந்த வாய்ப்பை தவறவிடகழ கூடாது என அவரது குடும்பம் முடிவெடுத்திருக்க வேண்டும்


1998 தேர்தல் செலவிற்கு அவர் எதிர்பார்த்த நன்கொடைகள் வரவில்லை. அப்போதிருந்த திமுக தலைமையிலான ஆட்சி அல்லது அதன் அமைச்சரான கண்ணனின் பங்கு அதில் இருந்திருக்க வேண்டும். பொருளியல் தெருக்கடியின் உச்சத்தில் ஒருநாள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு மாறனுடன் வந்த அந்த மனிதரை அலுவலகம் முழுவதும் நோக்கி நின்றது. கதர்சட்டைகளும் வேட்டிகளும் புழங்கிக் கொண்டிருந்த அந்த இருட்டு நடையில் சட்டென படியேறி வந்து நின்ற அந்த மனிதர் அப்படித்தான் எல்லோராலும் பார்க்கப்பட்டார். உயரமான உருவம் சற்று பிதுங்கிய வயிறு வழுக்கை தலை வயது நாற்பதுகளின் இறுதியில் கையில் சூட்கேசுடன் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாதவராக தெரிந்தார். கட்சி தொண்டர் கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்த தலைவருக்கு அவர் அங்கு வந்திருப்பது தெரிவிக்கப்பட்ட சில நொடிகளில் அவருக்க அழைப்பு வந்தது. சூரியநாராயணனிடம் வந்தவர் யார் என கேட்கசண்முகம் அண்ணன் மருமகன்என்றார். அப்போது எனக்கு அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வது பற்றிய திட்டமிடலின் போது மாறன் என்னை கரூர் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினான். தேர்தல் குறித்து சில விஷயங்களை கேட்டறிந்து கொண்டார். கம்பெனி விஷயமாக கரூர் செல்ல வேண்டி இருப்பதால் அவரது கம்பெனி ஊழியர் இருவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தேர்தல் வேலைகளை அவருடன் தொடர்புறுத்த சொன்னார் . அவர்கள் அனைத்து செய்திகளையும் தனக்கு தெரியப்படுத்துவார்கள் என்றும் ஒருவாரம் கழித்து திரும்ப வரும்போது சந்திப்பதாக சொன்னார். அவருடைய நிர்வாக ஆட்கள் அடுத்த இரண்டு மாதம் தலைவர் வீட்டில் மாறனுடன் தங்கியிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்