https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

அடையாளமாதல் * விழைவிற்கு பின்னால் *

 


ஶ்ரீ:



பதிவு : 640  / 830 / தேதி 16 செப்படம்பர்  2022



* விழைவிற்கு பின்னால் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 36 .






1999 களின் இறுதியில் கண்ணனால் திமுக தலைமையிலான அரசு கவிழ்கப்பட்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையும் வாய்ப்பு உருவான பிறகு கட்சிக்குள் முதல்வர் குறித்த பேச்சு உச்சத்தை அடைந்த போது அதில் முதன்மை போட்டியாளராக நாராயணசாமி உருவானார். போட்டி நாராயணசாமி, ரங்கசாமிக்கு இடையேயானதாக மாறியது. கண்ணன் தனக்குறிய வாய்ப்புக்கு சாத்தியமில்லாத நிலையிலும் அவரும் போட்டியில் இருந்தார். ரங்கசாமி வழக்கம் போல அமைதியாக அந்த நாளுக்கு காத்திருந்த போது போட்டியே இல்லை என்பது போல நாராயணசாமி வலம் வந்து கொண்டிருந்தார். சண்முகம் முதல்வராகும் தனது வாய்ப்பை அதன் போக்கில் விடுபவராக இருந்தபோது நானும் மாறனும் செய்த சில முயிற்சிகள் அவருக்கு எதிரானவராக கருதப்பட்ட கண்ணன் தனது பிடிவாதத்தை விட்டு வெளிய வரவழைத்து சண்முகத்தை சந்திக்கச் செய்தது. அந்த ஒரே இரவில் அத்தனை கணக்குகளையும் அது மாற்றயமைத்து. அதையொட்டி நடந்த அத்தனை முரணியக்கமும் விளைவும் அங்கிருந்து துவங்கியது. பின்னர் அந்த முயற்சியின் விளைவாக அவர் முதல்வரானார். நான் எடுத்த முயற்சியில் மிக தவறாகிப்போன ஒன்றாக அதை நினைக்கிறேன். சண்முகம் முதல்வரான பிறகு உருவான ஒரு வெற்றிடத்தால் நான் திகைத்தது போல மாறனும் திகைத்திருந்தான் . கட்சியின் போக்கை நிர்ணயம் செய்தது போல அரசாங்கத்தை கையாள்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை . வாசலோ ஜன்னல்களோ இல்லாத ஒரு சுவரின் முன் முட்டி நிற்பவர்கள் போலானோம். உள்நுழைய முடியாது என்றான போது நான் வெளியேறுவதை தேர்ந்தெடுத்தேன். இன்னுமொரு வாய்ப்பிற்கு காத்திருப்பதை தவிற எனக்கு வேறு வழிகள் இல்லை. மாறனால் அங்கிருந்து வெளியேறுவது இயலவில்லை . அவன் அதுவரை காத்திருந்தது இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை . யாருமே இது போல ஒரு மாற்றம் சட்டென வரும் என ஊகித்திருக்கவில்லை.மாறனுக்கு அவனுடைய எதிர்காலம் அந்த சுவற்றிற்கு அப்பால் இருந்ததை நம்பி அங்குள்ளவர்களுடன் நிபந்தனை இல்லாது சமரசம் செய்து கொண்டான். என்னால் அந்த சமரசங்களுக்கு பின்னால் சென்று முகமழிந்து காணாமலாவதைவிட வெளியேறுவது சிறந்தது என முடிவெடுத்து நான் முன்னெடுத்த அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் கைவிட்டு வெளியேறினேன். சமரசங்களினால் மாறன் மிகப் பெரிய அளவில் பொருளியல் லாபமடைந்தான் . நான் நினைத்ததைப் போல அதற்காக எந்த எல்லைக்கும் சென்றான். அவனுடைய தனிப்பட்ட வாழ்கையின் கடைசி முயற்சி என எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவனளவில் பெரிய வெற்றியை அடைந்தான் . அதன் துவக்கப் புள்ளி சண்முகம் . ஆனால் அங்கிருந்து தனக்கு கிடைத்த அத்தனை ஆபத்தான பயணத்தையும் அவன் மறுக்கவில்லை . இந்தப் பதிவுகள் வேறு காரணங்களுக்கானவை என்பதால் இங்கு அவனை பற்றிய வேறு விமர்சனங்களை முன் வைக்க விரும்பவில்லை ஆனால் சண்முகத்தின் அரசியல் வீழ்ச்சிக்கான துவக்கம் அவனிடம் இருந்து கிளைத்தது.


பின்னாளில் இது பற்றி அவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்ன அந்த வார்த்தை அவனையும் சண்முகத்தையும் அவரிடம் அவனுக்கான இடத்தையும் வரையறை செய்தது. எல்லோரையும் போல அரசியலின் இடைவெளிகளை மிகத் திறமையாக பயன்படுத்துக் கொண்டவன். “நான் எடுத்த முயற்சிகள் தலைவரால் ஒரு போதும் ஏற்கப்படவேயில்லை, ஆனால் எனக்கு வேறு வழிகள் இல்லை அவர் எனது செயல்பாடுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் தான் பொறுப்பல்ல என கண்டிப்பாக ஒருநாள் சொல்லுவார், அது நிகழும் போது எனக்கு எதிரான அவரது சொல் என்னை  பாதிக்கத தூரத்திற்கு நான் சென்றுவிட்டிருப்பேன்என்றான். மிக துல்லியமான கணக்கு. அது தான் நடந்தது. அவனுது இந்த நடவடிக்கைகளை நான் ஆழ்மனத்தால் எப்போதோ கண்டிருந்தேன். அதன் காரணமாகவே நான் அவனுடன் பெரிதும் முரண்பட்டாலும் மிக இயல்பாக அவனிடமிருந்து விலகினேன். 23 வருடங்களான பிறகு பிறிதொரு சந்தர்ப்பத்தில் அது பற்றி விவாதிக்கலாம். அது அன்றைய அரசியலை இன்னும் நெருங்கி ஆழமாக புரிந்து கொள்ள உதவலாம்


1996 களில் துவங்கிய இருவரின் நட்பும் மிக வேகமாக வேர்விட்டு வளர்ந்திருந்தது.என் தனிப்பட்ட நட்பு வளையத்திற்கு அவனை அறிமுகம் செய்தேன். அவன் காட்டுத் தீ போல பற்றும் எதையும் மிக விரைவில் அனைத்தையும் ஆக்ரமித்துக் கொள்வான். அவனது எதிர்காலம் பற்றிய கணக்குகள் என ஏதும் வகுத்துக் கொள்ள முடியாமல் போனாலும் அவனக்கானதை அங்கிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனபதில் உறுதியிருந்தது. அவன் இன்னும் இன்னும் என வளர்ந்து கொண்டே இருந்தான். அவன் பிறந்த எளிய குடும்ப சூழல் அவனை அப்படி உருவாக்கி இருக்கலாம் . பொருளியல் வெற்றித் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவனாக வாழ்வியல் இடர் அவனை வனைந்திருக்க வேண்டும் . தனது வாய்ப்பை அடைய எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவன். எந்த கோட்பாட்டு சிக்கலிலும் தன்னை வைத்துக் கொள்ளாதவன். அனைத்து சந்தர்ப்பத்திலும் பிறரிடம் அதை தயக்கமே இல்லாமல் வெளிப்படுத்தியும் இருக்கிறான். நான் அந்த சூழலில் அவற்றை பொருட்படுத்தியதில்லை. எங்களுக்குள் அவரவர் நிலைப்பாடு பற்றிய தீவிர பேச்சு எழும் போதெல்லாம் நாங்கள் நட்பு ரீதியாக உரசிக் கொண்டதுண்டு. பெரிய பிளவை அடைந்தது அவன் என் அரசியலில் குறிக்கிட்ட போது நிகழ்ந்தது . அரசியலை சாராத நபர் முக்கிய அதிகார மையமாக அல்லது தூது என்கிற அடைமொழியுடன இடைதரகராக உருவாகும் போது அரசியல் நிகழ்வுகள் தேவையற்ற வளைவை அடைந்து தேக்க நிலையை உருவாக்கி விடுகிறது. இன்று எழுதும் இந்த சொற்களாக அன்று எழுந்தவைகள் அல்ல . நடப்பவற்றை இது சரியல்ல . இது நல்ல முடிவுகளை கொண்டு வராது என்கிற ஆழ்மன பதைப்பை அடைந்திருந்தேன். அவர்களுடன் வெளிப்படையாக கசப்படைந்தேன் அல்லது அவர்களிடம் இருந்து விலகி நின்றேன். நெடுமாறன் அது போல ஒரு தேக்க நிலையை உருவாக்கும் எதிர்மறை சக்தியாக உருவெடுத்தது புதுவை அரசியலில் பெரும் குழப்பம் உருவாக காரணமானது.


தில்லியில் இருந்து வரும் மேலிடப் பார்வையாளரை புதுவைக்கு அழைத்து வர விநாயகமூர்த்தியுடன் அன்று இரவை கிளம்பி சென்னை சென்றேன் . மாறனும் எங்களுக்காக சென்னை உடுப்பி பவனில் காத்திருந்தான். சென்னையில் அவனுக்கு வீடு இருந்தும் அன்று இரவு என்னுடன் தங்கி விட்டான். நானும் அவனும் ஒரு அறையில் தங்கிக் கொள்ள விநாயகமூர்த்திக்கு தனி அறை ஒருங்கி இருந்தது. அவன் என்னுடன் தங்குவற்கு  என்னிடம் சொல்ல வேண்டிய ஏதோ ஒன்று இருந்தது என பிறகு அறிந்து கொண்டேன் . இரவு உணவருந்த வெளியில் சென்றோம். பேச்சினூடாக நாராயணசாமியிடம் அவன் பேசிய சில விபரங்களை எனக்கு சொன்னான். அன்று என்னுடன் தங்க வேண்டிய காரணம் புரிந்தது. அவன் அரசியலென பேசிக் கொண்டே இருந்தான் எனது கவலைகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் கூடுமானவரை அவற்றை களத் தகவல்களாக எடுத்துக் கொண்டேன். “ஏன் நாராயணசாமியுடன் மோதிக் கொண்டிருக்கிறாய் ?” என தனது பேச்சை துவக்கினான். நாராயணசாமி குறித்த எனது அவதானிப்புகள் ஒரு நீண்ட புரிதலின் தொகுப்பு ஒரு பேச்சில் அதை அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்றோ எனது நிலையை அவன் ஏற்க வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. அது நடக்காது என எனக்கே தெரியும். அரசியலில் இருப்பதன் வழியாக

அவனக்கு வேறு தேவைகள் இருந்தன என்பதால் நானும் அவனும் ஒருபோதும் சந்திக்கும் புள்ளி என ஒன்றில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...