https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 டிசம்பர், 2021

அடையாளமாதல் * முகமற்றவர்களின் திரளில் கட்டுண்டவர் *

 



ஶ்ரீ:



பதிவு : 598  / 788 / தேதி 10 டிசம்பர்  2021


* முகமற்றவர்களின் திரளில் கட்டுண்டவர்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.




திமுக ஆட்சி வல்சராஜ் மற்றும் கண்ணன் கூட்டால் 1999 களில் கவிழ்ந்த போது எங்களுக்கான காலம் கனிந்திருக்கவில்லை . நான் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான அடிப்படை காரணமாக அந்த ஆட்சிமாற்றம் இருந்தது . அன்று வழக்கம் போல மாலை வல்சராஜை சந்திக்க போன போதுதான் அன்று நிகழவிருப்பதை அறிந்து கொன்டேன் . முதலில் அது ஒரு துனுக்குறலைத் தந்தது . சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருட காலமே இருக்கையில் யாருக்காக இந்த ஆட்சி மாற்றம் என கேட்டபோது அவர் தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார் . அதில் கண்ணன் , வல்சராஜ் என்கிற இருவரின் சொந்த கணக்கு தவிர வேறேதும் அவரால் முன்வைக்க முடியவில்லை . பதவியில் இருப்பவர்களின அரசியல் எப்போதும் அப்படித்தான் நிகழ்கின்றன . கனவு வளர நினைப்பவர்களுக்கானது, இன்னும் இலக்கை சென்றடையாதவர்களுக்கானது . இளைஞர் காங்கிரஸ் அமைப்பை முழுவதுமாக கட்டியெழுப்பும் அதை முன்னிலைப் படுத்தும் திட்டம் இந்த ஆட்சி மாற்றத்தால் நிரந்தரமாக செயலிழந்தது போகும் . கண்ணன் அவரது கட்சித் தலைவரான் மூப்பனாரிடம் அனுமதி பெறாமல் புதுவையில் திமுக விற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் கடிதம் ஆளுனரிடம் அளிக்க சென்று கொண்டிருக்கிறார் என்பது தான் அந்த செய்தி . கண்ணன் ஆளுனரை சந்தித்து வெளியே வரும் வரை அது ரகசியம் . நான் அங்கு தேவையில்லாமல் நுழைந்து விட்டேன் . என்னை அவரது அறையை விட்டு  செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார் . நிகழ்வதை சண்முகத்திடம் சென்று சொல்லிவிடுவேன் என அவர் அஞ்சியது காரணம் . என்னை உணர்ச்சிமிகையால் அடித்துச் செல்லப்படும் சண்முகத்தின் தீவிர ஆதரவாளில் ஒருவனாக கற்பித்துக் கொண்டார் . அது ஒரு தனித்தன்மையற்ற தொண்டன் மனநிலை . ஆரம்பம்முதலே வல்சராஜ் என்பைப் பற்றி கொண்டிருந்த கருத்து அதுதான் . அப்படியில்லை என நான் அவருக்கு தெளிவுபடுத்த விரும்பவில்லை . நான் இளஞர் அமைப்பை வல்சராஜை மறுத்து நிறுவிக் கொண்டிருந்தேன் . அதன் தலைவராக அவர் எனக்கு பங்களிக்க ஒன்றுமில்லைஎன்னை பற்றிய அவரின் அந்த பிழை மதிபீடு எனக்கு ஒரு கவசம் . அதை இழக்க விரும்பவில்லை . சட்டமன்ற உறுப்பினர் வலுமிக்க ஆளுமை என அழுத்தமான அடையாளங்கள் அவருக்கு இருந்தாலும் , நான் சண்முகத்தின் அனுக்கன் என்கிற மாயை அவரை அஞ்சச் செய்திருக்க வேண்டும் . நான் என்னை அப்படி ஒருபோதும் வரையறை செய்து கொள்ளவில்லை . சண்முகதுடனான எனது உறவு என்பது ஒரு ஆளுமையை உருவகிக்கும் ஒன்று மட்டுமேஅவர் எனது ஆசிரியர் . அவரிடம் வந்து சேர்ந்தது கற்றலின் பொருட்டு . அவர் அரசியலின் உலகியலுக்கு மாறுபட்டவர் . அந்த ஒன்று எனது ஆழ்மனதிற்கு மிக அனுக்கமானது . முகம்சுளிக்கக வைக்கும் எதையும் அரசியலின் பொருட்டு செய்யலாம் . அரசியலில் என்பதுவெற்றிஎன்கிற ஒற்றை கருதுகோளை கொண்டது அதை அடைய எவ்வளவும் கீழிறங்கலாம் அதில் தப்பில்லை என்பதை சண்முகம் எப்போதும் மறுப்பவர் . ஆரோக்கியமான சிந்தனை இல்லதாவன் நல்ல மனிதனில்லை பின் அவன் எப்படி தலைவானாக இருக்க முடியும் என்பார் . எனது ஆளுமை ஆற்றுப்படுத்துபவர். அங்கிருந்துதான் என்னை அரசியலுக்குள் செலுத்திக் கொண்டேன் . அரசியலின் அன்றாடங்களும் அவை சார்ந்த சமரசத்துடன் துவங்குகின்றன என்பதை சண்முகம் எப்போதும் மறுத்திருக்கிறார் . அந்த நிலைபாடு அவரை இன்று இங்கு ஒரு பெரும் ஆளுமையாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அவருடைய இறுதிகாலத்தில் அவர் செய்த குளறுபடிகள் அவரை அத்தனை வருட அரசியலில் இருத்து அவரை வெளியேற்றி விட்டதால் அவரது லட்சியங்கள் தோல்வியடைந்து விட்டதாக என்னால் எண்ண முடியாது . முடிவில்லாதவைகள் என இவ்வுலகில் ஒன்று இருக்க முடியாது . அனைத்தும் ஒரு புள்ளியில முடிவடைந்தே தீறுகின்றன . முதல்வர் யார் என்கிற கேள்விக்கு வல்சராஜ் கண்ணனை முன்மொழிந்திருக்கலாம்ஆனால் அன்று அது ஒரு சம்பிரதாயமான கேள்வி மட்டுமே . அதை பெரிதாக அவர் திட்டமிட்டிருக்கவில்லை . திமுக அரசில் இருக்க முடியாத புழுக்கம் அவரை அங்கிருந்து வெளியேறும்படி உந்தியது . அது பற்றிய முழுமையான தரவுகள் என்னிடமில்லை . அன்றைய சூழலில் யாரும் வைத்திலிங்கத்தை முன்னிறுத்த விழையவில்லை . ஆட்சி கவிழ்ப்பு பற்றி கட்சித் தலைவர் சண்முகத்துடன் ஆலோசிக்கபடவில்லை  என்கிற அரசியல் புதிய இலக்கைத் தொட்டிருந்தது . 1999 சண்முகம் முதல்வரான சண்முகம் அமைச்சரவையில் இடம்பெற்றார் . அது அவருக்கு வேறு விதமான இறக்கம். புதுவையின் முதல்வராக அமர்ந்து பின் அதனினும் உயர் பதவிகளுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து நிறைவுற்று ஓய்வுறும் நல்லூழ் மரைக்காருக்கு வாய்த்தது போல பிற யாருக்கும் அமையவில்லை . 2008 களில் முதல்வர் ரங்கசாமி எதிராக வல்சராஜ் முதல்வரை மாற்ற முயற்சிக்கு வைத்திலிங்கம் துணைக்க மறுத்திருக்க வேண்டும் . ஆனால் தனது முதல்வர் பதவியை அடைந்ததார் . 2008 முதல் 2011 வரையில் முதல்வராக அமர்ந்து தொடர் அலைக்கழிப்பினார் தனது அமைச்சரவையில் உறைநிலைக்கு சென்றார் .


2000 களில் முதல்வராகி வந்த சண்முகம் கடந்த காலங்களை கண்முன் கண்டும் , உணர்ந்தவைகள் எதுவும் கைவரப் பெறாமல் நாராயணசாமியின் சில்லறை சீண்டல்களாலும் தன்னைப் பற்றி மிகை எண்ணங்களினால் ஆணவம் தேவையற்று வெளிவந்து புறவுலகு அரசியலுடன் உரசி புண்ணாகி ஆதீத கோபத்தால் முதல்வர் பதவியை இழந்தார் . “ஆர்பரிக்கும்இயற்கையை 2011களில்  முழுமையாக பயன்படுத்திக கொண்டவர் ரங்கசாமி மட்டுமே . மாபெரும் எழுச்சி அதன் அத்தனை அலகுகளையும் ஒவ்வொருவரும் பிரமிப்புடன் பார்க்க முடிந்தது. 2011 முதல் ஆட்சியில் அமர்ந்து கட்சி ஆட்சி என இரண்டையும் ஒரளவு ஒரு புள்ளியில் இணைக்க முயன்றவராக அவரைப் பார்க்கிறேன். தனது பிம்பத்தை முழுமையாக முன்வைத்தவர், தொண்டர்களின் அதீத விளம்பரங்களின் வழியாக மாநில அனைத்து மூலைகளுக்கும் சென்று சேர்ந்தவர். கட்சி நடத்தும் திறனுள்ள பாலன் அவற்றை தன் சக்திக்கு ஒருங்கினார், ஆனால் தன் வழமையான தன்னைப் பற்றிய மிகை நம்பிக்கையால் கட்சி நிர்வாகிகளின் போக்கை புரிந்து கொள்ள முடியால் அனைவரின் காழ்ப்பை அடைந்தார்,அல்லது வழக்கம் போல ரங்கசாமி அவரை செயல்பட விடவில்லை , இரண்டில் ஒன்று . சட்டமன்ற உறுப்பினர்களின் அழுத்ததை நிரகாரித்து இறுதிவரை தனது கோட்பாட்டுக்குள் நின்று மீளவும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை 2016 களில் விரலிடுக்களில் தவறவிட்டார். ஆனால் தலைமை என்பது அனைவருக்கும் உகந்த ஒன்றை செய்வதல்ல . தன்னை முன்வைத்த அரசியலில் அவர் உறுதி மாறமலிருந்தது பிறரின் பார்வைக்கு தவறுபோல தெரிந்தாலும் நிலைபாடு என்கிற அளவில் அவரது உறுதி மிக சிறந்த ஒன்று என்றே நினைக்கிறேன் . பாலன் மன்மறைந்தது தனது அரசியலில் இடைவெளியை உருவாக்கி இருப்பதை மிக தாமதமாக அவர் உணர்ந்திருக்க வேண்டும் . அரசியலின் முகம் என்பது அனைவரின் மத்தியில் இருந்தாலும் கட்டுண்டு கிடப்பதல்ல .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...