https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 2 டிசம்பர், 2021

அடையாளமாதல் * ஏகமன தீர்மானம் *

 


ஶ்ரீ:



பதிவு : 597  / 787 / தேதி 02 டிசம்பர்  2021


* ஏகமன தீர்மானம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.




கண்ணனின் கடைசி முயற்சி தோல்விணைந்து விட்டதன் சாயல் தெரியத் துவங்கியதும் கார் பார்கிங் இடத்தில் அவரது ஆதரவாளர்கள் திரள ஆரம்பித்தார்கள் . என் கவனம் முழுவதும் பதட்டமாக ரவிச்சந்திரனை தேடிக் கொண்டிருந்தது , இறுதிவரை அவர் தென்படவில்லை. கலவர திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் . அப்போதுதான் மூப்பனார் நினைவிற்கு வந்தார் . அவர் புதுவை வந்திருந்தது சண்முகத்தின் திட்டமா? என உளம் மயக்கு கொண்டது . அரசியல் முடிவில்லா சாத்தியங்களை உள்ளடக்கியது , அங்கு எதையும் எதிர்பார்க்கலாம் . நான் பாலன் என்னை பார்க்கும் இடத்தில் சென்று நின்று கொண்டேன். என்னைப் பார்த்ததும் கண்களால் என்ன? என்றார். பிறிதொரு வராண்டாவை கண்களால் காட்டினேன் . அங்கு மூப்பனார் அரங்கில் இருந்து வெளிப்பட்டார் அவருடன் கண்ணனும் தனது உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாது விரிந்த சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார் . பாலன் அந்த கூட்டத்திலிருந்து விலகி  என்னை நோக்கி வந்தார் . அங்கிருந்தபடி இருவரும் கார் பார்கிங் பகுதியில் என்ன நிகழ்கிறது என பார்த்துக் கொண்டிருந்தோம் . என்னிடம் நிர்வாகிகள் தவிற பிற அனைவரும் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார் . அவரிடம் கலைந்து செல்லசொன்னது அவசியமில்லையோ என சொல்ல நினைத்தேன் ஆனால் சற்று முன்னர் நான் உணர்ந்த பதட்டம் நினைவிற்கு வந்தது இப்போது அதை நான் சொல்லுவது அபத்தம் . மூப்பனார் கார் நிறுத்துமிடம் நோக்கி சென்ற உடன் அவரை சுற்றி காவலர்கள் வளையமைக்க முயன்றனர் . மூப்பனார் அதை தடுத்து விட்டதால் கூட்டம் அவரை முற்றாக சூழ்ந்து விட்டது அனைவரும் அவரிடம் முறையிட முயல்வது தெரிந்தது . பலர் கண்ணீர் விட்டனர் . அங்கு யாரும் யாரையும் எதிர்க்கும் குரலெழவில்லை என்பதால் அந்த கூட்டம் மிக விரைவில் விசையிழந்து வெறும் குமுறலாக வெளிப்பட்டது . எதற்கும் பதில் சொலாத போதும் மௌனமாக அவர்களின் உணர்விற்கு ஆறுதலளிப்பவராக தலையசைத்தபடி தனது அறை நோக்கி சென்றார் . கண்ணன் அருகில் இருந்ததால் ஏதும் செய்ய வேண்டாம் என அவர்களுக்கு புரிந்திருக்கலாம் . அது அடுத்த சாத்தியங்களை குலைத்துவிடும் என நினைத்திருக்கலாம்


மூப்பனார் அறைக்குள் நுழைந்ததும் கண்ணன் உடன் சென்றார் . அவரது ஆதரவாளர்களில் முக்கியஸ்தர்கள் சிலர் அவருடன் சென்றனர். உணர்சிமிக்க கணம் . உட்கட்சி ஜனநாயக முறையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் . அது தடைபட்டதற்கு கூட்டணி அறமென ஒன்று அதைவிட பெரிதாக அதற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறது . அரசியலில் நியாயம் என்பதும் இடம் பொறுத்து பொருள் கூட்டிப் புரிந்து கொள்ளப்படுவது . சண்முகத்தின் அரசியலாக இதை பார்ப்பது ஒரு கோணம் என்றால் அவர் பக்கம் அதை வெறும் உணர்ச்சியால் செய்தார் என புரிந்து கொண்டால் அதற்கு ஜெயலலிதாவிற்கு என்ன நிர்பந்தம் என்பது அடுத்த முடிவில்லா கேள்வியை துவங்கி வைக்கிறது  . ஒட்டு மொத்த அதிகார அடுக்கு கண்ணன் முதல்வராவதை ஆழ்மனத்தில் விரும்பவில்லை . இல்லையென்றால் இன்று எந்த ரகளையும் இல்லாமல் அவர்களின் ஆழத்தில் சென்றமர்ந்தஅதுஎன்ன என்பது கேள்வியாக எழுந்தது . கண்ணன் எதையும் ஏற்று அமையும் ஆளுமையல்ல ஒருவேளை முழுத் திறமை ஒருவேண்டாமையின்குறியீடு போல . தடவித் தேடி அமர்ந்து கற்று தவறிழைக்கும் ஒருவர் அனைவருக்கும் தேவையாய் இருக்கலாம் . அந்தப் போதாமையை சரிசெய்ய ஈடுகட்ட இங்கே நிறைய பேர் தேவைபடுவர் என்கிற உள்கணக்கு புரிந்து கொள்ளக் கூடியதே.


பாலனின் கண்கள் கசிந்திருந்ததாக நினைத்தது எனது கற்பனையாக இருக்கலாம் . காலை மரைக்காயரிடம் பேசும் போது இருந்த அந்த பாலன் இப்போதில்லை . மனம் ஏற்புகளாலும் விலகல்களாலுமான மாபெரும் ஊசல் . அதில் நிலைத்தன்மை என ஒன்று இல்லை . மரைக்காயரிடம் அந்த தடுமாற்றத்தை பார்க்க முடியவில்லை, ஒருவேளை அரசியலில் வளர்ந்துவிட்டது என்பது இதுதான் போல . அந்த அரசில் கண்ணன் சபாநாயகராக அமர்ந்து வெறுமை கொள்ளத் துவங்கினார் . அந்த வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பாக 1994 களில் சண்முகத்தை எதிர்க்க கடந்த காலத்தை அவர் வைத்திலிங்கத்துடன் ஓரணியில் வருவதற்கு உடன்பட்டார்மரைக்காயர் சண்முகத்திற்கு எதிரான முயற்சியில் வெற்றி பெற ஒத்துழைத்தார் . இம்முறை ஏறக்குறைய தனது இலக்கை நெறுங்கினார் மரைக்காயர் . அத்திட்டம் சண்முகத்தை தலைவர் பதவியல் இருந்து இறக்குவது என்ற ஒற்றைப்படையானது . மரைக்காயர் அதிலிருந்து அடைவது ஒன்றுமில்லை . அது அவரது அரசியல் ஆணவ நிறைவிற்காக இருக்கலாம் , ஆனால் அரசியலில் எதாவது செய்து கொண்டேயிருந்தாக வேண்டும் . அவரது திட்டம் இறுதி வடிவம் அடையும் முன்னர் தலைவரை கழற்ற முடியாது என்கிற நிலை உருவானபோது அனைத்தும் நீர்த்துப்போனது .


மரைக்காயருக்கு எந்த ஆட்டத்தையும் முதலில் இருந்து துவங்க முடியும் என்பதுடன் உடன் வரும் எவரையும் அப்படி நினைக்க வைத்து விடுவது அவரின் அரசியல் . வைத்திலிங்கத்திடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தால் அவரது அமைச்சரவையில் இடம் பெற முடியாது, அதைவிடஉயர்ந்த இடத்தைஅவருக்க அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது கருணையால் அல்ல , அந்த அடுத்த கட்ட அரசியலிலும் கண்ணன் தோல்வியே அடைந்தார். சபாநாயகர் பதவி அவரின் உயரத்தை அளப்பது என்கிற அவரது ஆதாரவாளர்கள் முன்வைத்த கோட்பாடு செயலற்றுப் போனது . நான்கு வருடம் சபாநாயகராக இருந்த கண்ணனால் முதல்வர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் தொடர்ந்து அவமதிப்பிற்கு உள்ளானார் . மொத்த அமைச்சரவையும் அடிபட்டுக் கொண்டே இருந்தது. இறுதி ஒரு வருடம் தன்னை தொடர்ந்து முதல்வராக நிலைநிறுத்திக் கொள்ள 1994 களில் சண்முகத்தின் எதிர்ப்பு அரசிலுக்கு என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்தார் . அது அவருக்கு மிக சரியான வாய்ப்பை கொடுத்தது என்றே நினைக்கிறேன் . ஆனால் எல்லாவகையிலும் பிடித்த இடத்தை விடாமல் இருந்திருந்தால் ஒருவேளை அரசியல் மாற்றுத் தலைமையை அவரால் கொடுத்திருக்க இயலும் . ஆனால் தனது கால தாமத முடிவெடுக்கும் தன்மையால் அரசியல் நிர்வாக இயந்திரத்தை சரியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இயலாதவராக அதீத தயக்கத்தினாலும் குழுப்பமான நிலைப்பாட்டாலும் சண்முகத்தை எதிர்த்து பின் அது கட்டுபடியாகாமல் பின்வாங்கினார் . அவருடன் சமரசமாக போகும் சூழ்நிலை உருவாகி வந்தது. வலுவான தலைவராக உருவாகும் வாய்ப்பை உபோகப்படுத்தாமல் 1996 களில் முதலவர் பதவியை இழந்த ஒரு தொகுதிக்கு உரியவராக சிறுத்தார். 1997 களில் திமுக அரசை கவிழ்க்க முயற்சித்து சிபிஐ வழக்கை எதிர்கொண்டு அதுவரை அறியாத அரசியலின் கோர முகத்திற்கு மிக அருகே சென்று பார்த்தவர் போலானார் . பின்னர் அசாத்திய அமைதியில் கிடைத்ததை வைத்து ஆறுதல் கொள்பவர் என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...