https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

அடையாளமாதல் * எல்லைகள் *

 
ஶ்ரீ:பதிவு : 600  / 790 / தேதி 24 டிசம்பர்  2021


* எல்லைகள்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.
எங்கிருந்தாலும் யானை காட்டை தன்னுள் இழக்காதிருப்பது போல சண்முகம் மனதளவில் காரைக்காலை விட்டு சற்றும் விலகாதவர். புதுவைக்கு வந்து நீண்ட அரசியலில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நிலைசக்தியாக இருந்தவர் ஆனால் உள்ளத்தே காரைக்காலை இழக்கவில்லை . சொந்த ஊரிலிருந்து யாராவது அவரை சந்திக்க வந்தால் முகம் மலர்ந்து விடும் . அவரிடம் அதுவரை கேட்காத தஞ்சாவூர் பாஷை வெளிபடும் . அனேகமாக எந்த சொல்லும் அழுத்தமான முடிவு கொண்டு வெளிப்படாமல் மொண்னையாக கரைந்து ஒலிப்பது போல தோன்றும் . அது வேறு மொழி அதற்கான தனி இலக்கனம் . அவர்கள் பேச்சில் வல்லவர்கள் நினைத்ததை சொற்களில் கொண்டு நிறுத்துவதை பார்த்து அசந்து போனதுண்மு  . “இதை போய் என்னத்துக்கு சொல்லஎன எந்த தயக்கமும் இல்லாதவர்களாக உள்ளத்தை வார்த்தையால் வடித்துவிடுவார்கள் . நீண்ட காலம் புதுவையில் இருந்தாலும் சண்முகம் தனக்கென சிறு மண்ணையும் புதுவையில் கொள்ளவில்லை . அரசியலில் இருந்து வெளியேறிய போது ஒருவித நிறைவின்மையால் ஆலைக்கழிக்கப்பட்டாலும் தெளிவாக புதுவையில் இருந்து காரைகாலுக்கு சென்றமர்ந்தார். அதன்பின் புதுவை வரும் போது அவரது நண்பர் சந்தானத்தின் இல்லத்தில் தங்கினார் . ஒரு விவாதத்தில் தனக்கு இன்னமொரு சுற்று இருப்தாக அவர் என்னிடம் சொன்ன போது , எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டாலும் சொல்லில் அது நிகழவில்லை . அவர் சொன்னதை முதன் முறையாக அவர் முகத்திற்கு எதிரே மறுத்தேன் . துரதிஷ்டவசமாக நான் சொன்னதே நடந்தது. அரசியல் அவரை விட்டு வலகி சென்று விட்டதை அவர் புரிந்திருக்க வேண்டும் . அதன் பின் புதுவையை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றார் .  1991 பிற அரசியல் தலைவர்களின் அரசு சூழ்தலில் சிக்கி முதல்வர் பதவியையும் பின்னர் தனக்கான ஒட்டுமொத்த இடத்தையும் இழந்தது 2001 களில். சமநிலை குலைந்த அர்த்தமற்ற கோபத்தினால் முதல்வர் பதவியை இழந்தாலும் அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்திக்க விழையும் இடத்தை மண்மறையும் வரை அவர் இழக்கவில்லை என்பதால் அவரது பதவி விலகல் ஊழின் முடிவல்ல என நினைக்கத் தோன்றுகிறது . அதன் பின்னர் அவர் வெளிப்படையான அரசியலுக்கு வராமல் போனாலும் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸிற்கு எதிரான மனநிலையில் முதல்வர் ரங்கசாமியை ஆதரிக்க துவங்கினார்


ரங்கசாமிக்கான ஆதரவை வெளிப்படையாக அறிவிக்காதது அவரது அரசியல் அறம், ஒரு போது்ம் காங்கிரஸில் இருந்து வெளியேறாதவராக இருந்தார் . பொறுப்புகளில் இருக்கும் சண்முகமும் ரங்கசாமியும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரான வழமையுள்ளவர்கள் ஒருபோதும் இணைந்து பயணப்பட இயலாதவர்கள் . தனது அரசியல் இறுதி கணம் காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்ந்ததன் பின்னணியில் ரங்கசாமி இருந்தார் , அந்த காலகட்டம் சண்முகத்தால் ஜீரணிக்க இயலாததாக இருந்திருக்க வேண்டும் . சண்முகம் எதையும் ஒரு நேர் ஒழுங்கோடு செய்யவிரும்புபவர் ரங்கசாமி அதற்கு நேர் எதிர் ஒரு புள்ளியில் அவருடன் சேர்ந்து பணப்பட திணறினார்ரங்சாமியை் முதல்வர் பதவியில் இருந்து விலக்க தில்லி மேலிடம் முடிவு செய்த போது கட்சித் தலைவராக அதற்கு சண்முகம் உடன்படாததால் அவரை தலைவர் பதவியில் இருந்து விலக்கிய சில வாரங்களுக்குள் ரங்காசாமி முதலவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . தன்னை நீக்கிய போது விடுதலையடைந்ததாக சண்முகம் உணர்ந்திருக்க வேண்டும் . அதன் பின் எந்த நிர்பந்தமும் இல்லாதவராக சுதந்திரமானவராக தன்னை உணர்ந்த போது ரங்கசாமியுடன் பயணிப்பது அவருக்கு தடையாக இருக்கவில்லை


காங்கிரஸ் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் . ரங்கசாமி அவரை மையப்படுத்தி இயங்கியதை அவர் மறுக்கவி்ல்லை அதே சமயம் காங்கிரஸிற்கு எதிராக தன்னை வெளிப்படையாக முன்வைக்கவில்லை . ரங்கசாமி பதவி இழந்து உள்ளூர் அரசியலாளர்களிடம் மனம் கசந்து கட்சியை விட்டு வெளியேறி புது கட்சி துவங்கி வென்று ஆட்சியில் அமர்ந்த போது நீண்ட காலம் அவரது அறையில் சோனியாகாந்தி படம் இருந்தது . அது ஒரு அரசியல் கோட்பாடாக அவர் முன்வைத்திருக்கலாம் அல்லது திரும்பவும் காங்கிரஸிற்குள் வரும் திட்டமிருந்திருக்கலாம் . ஒரு வகையில் இந்த பெரிய வெற்றியை அவர் ஊகித்திற்கு அப்பால் இருந்திருக்க வேண்டிம் . நாராயணசாமி ஆட்சியில் இருந்து அவமானகரமாக வெளியேற்றப்பட காரணமாக இருந்தவர் நமச்சிவாயம் . ரங்கசாமி வெளியேற அவர்தான் இறுதி மணியடித்தவர் . பஜக வில் இணைந்து ரங்கசாமியை மீளவும் முன் வைத்து தேர்தலை சந்தித்தவர் என்பது அரசியல் முரண்நகை . பஜக கூட்டணி அமைந்த பிறகு காங்கிரஸ் நோக்கிய மனச்சாய்வில் இருந்து அவர் வெளிவந்திருக்க வேண்டும் . அரசும் நிர்வாகமும் அவரை சுற்றி எப்போதும் போல இயங்கியது அந்த சலுகை கண்ணனுக்கு இல்லாதது . ராட்டினம் போல ஏற்றமும் இறக்கமும் அடுத்தடுத்த படிகளில் நின்று அவரை தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டிருந்ததுஅரசியலில் எதை நோக்கி பயணப்பட்டார் எந்தெந்த இடத்தில் விட்டுக் கொடுக்காமல் நின்றிருந்தார் என எதற்கும் இன்று எந்த அர்த்தமும் இன்றி இறுதியில் முற்றிருளுக்குள் சென்று அமர்ந்தார். அவருக்கு இன்னும் சுற்று இருப்தாக நான் நினைக்கவில்லை .

கண்ணன் மற்றும் வல்சராஜ் போன்றவர்கள் அதிகாரப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது தங்களை பிறருடன் இணைக்காதிருக்கும் அந்த கோடுகளுக்கு புது அர்த்தங்களை கொடுக்கலாம் ஆனால் அதை முன்னெடுப்பவர் அதில் புழங்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு  அளித்தது என்ன ? என்பதில் துவங்குகிறது . அதை செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கிறதா ? . இன்று சுமார் இருபது வருடம் கடந்து அன்று நான் கணக்கிட்ட அத்தனை அர்த்மின்மைகளும் நிகழ்ந்து முடிந்து இன்று புதுவை அரசியலில் காங்கிரஸின் இடம் என்ன என்பதையும், மாற்று ஏற்பாடுகளை தயங்காது முன்வைத்து அதை செய்தவர்கள் இன்று சென்று அமர்ந்திருக்கும் அரசியல் இருள் அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் செய்தது என்ன என்பதை தெளிவாக வரையறை செய்கிறது . அன்று நானெடுத்த முயற்சிகள் எனக்கு கலவையான பலன்களை கொடுத்திருந்தாலும் சராசரிகளுடன் அன்றாடங்களை நியாயப்படுத்துபவர்களில் இருந்து வேறுபட்டு, சரியென நினைத்ததை நம்பி முயற்சித்து பார்த்தவைகள் அளிக்கும் நிறைவை போல பிறிதில்லை. வெற்றியென்பது என்ன என்று கேட்டுக் கொள்கிறேன். வெற்றி என்பது அடையப்பட்டு தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதல்ல ஆவற்றில் திகழ்வது . முயற்சித்த நிறைவு ஒன்றே அதன் பலன் . ஒன்றில் வெற்றிபெறாமல் இருந்திருக்கலாம் ஆனால் இன்று இங்கு வந்து அமர்ந்து அவற்றை நினைவில் எடுத்து பார்க்கும் போது  சரியாக இருக்க முனைந்தவர்களுடன் இருந்திருக்கிறேன் . அரசியலின் பொதுவில் எதிரானவர்களை துணிந்து எதிர்த்திருக்கிறேன் என்கிற மன நிறைவு கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக