https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 16 டிசம்பர், 2021

அடையாளமாதல் * அரசியல் சரி *

 


ஶ்ரீ:



பதிவு : 599  / 789 / தேதி 16 டிசம்பர்  2021


* அரசியல் சரிநிலை * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 72.




பத்து வருடத்திற்கு ஒருமுறை மீள மீள நிகழும் புரிந்து கொள்ள முடியாதஆர்பரிக்கும்நிகழ்வு 1970 களில் துவங்கி இன்றளவும் நிகழ்து கொண்டிருக்கிறது . அதில் சாத்தியங்களும் நழுவல்களுமாக பலரின் வாழ்கையை அது பிணைத்து ஒழுகுகிறது . 2016 களின் தனது அரசு சூழ்தல் என்கிற ஒரே பலத்தால் பலரை பதறடித்து வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்த நாராயணசாமி பிறதொருஆர்பரிக்கும்சுழற்சியை உருவாக்கும் நிமித்தமாக காலத்தால் ஆட்சியில் அமர்த்தப்பட்டு பின் அவமானகரமாக வெளியேறியது மட்டுமின்றி மீண்டும் ஆட்சி கருக் கொள்ளமுடியாதபடி காங்கிரஸ் அமைப்பை சிதறடித்து வெளியேறினார் . நாராயணசாமி புதுவை காங்கிரஸின் ஒரு தீயூழ் போல நிகழ்ந்து முடிந்ததார் . கட்சியில் இருந்து பலர் வெளியேறி ரங்கசாமியின் NR காங்கிரஸ் மற்றும் பாஜக வில் இணைந்து காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு அரசை அமைத்தனர் . 2020 களில் இன்னதென்று வரையறுக்க இயலாத அந்தஆர்பரிக்கும்நிகழ்வு மீண்டும் நடந்தேறி தான் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை தெரிவித்தது . 2021 களில் நாராயணசாமி ஆட்சியை பறிகொடுக்க, ரங்கசாமி மீண்டும் நான்காவது முறையாக முதல்வரானார் . 2021 துவக்கமே  மற்றொருஆர்பரிப்பிற்கானசுழற்சி மையங் கொண்டிருப்பதாக அச்சுறுத்துகிறது . இம்முறை நாராயணசாமியின் இடத்தை அமைச்சர் நமச்சிவாயம் எடுத்துக் கொண்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை . அடுத்த 2030 களுக்கு ஒன்பது வருடம் இருக்கும் நிலையில் அந்த இடைப்பட்ட காலத்தில் எது வேண்டுமானலும் நிகழலாம். அது எப்போதும் போல பேரியற்கையின் வசம் . ஆம் அப்பேரியற்கையை வணங்குவோம்


1980 களில் அது போன்ற ஓர்ஆர்பரிப்பைபயன்படுத்தி அனைவரின் கணிப்பை மீறி புதுவை அரசியலில் முக்கிய ஆளுமையாக கண்ணன் உருவெடுத்தார் என்பது அதன் உச்சம்அவர் வெற்றி பெறாது போனதற்கான காரணங்கள் பல இருந்தாலும் குறுங்குழுவாக அவர் செயல்பட்டது அவர் மீது பிற அனைவரும் அவர் மீது நம்பிக்கையிழந்தனர் அல்லது அவர் பெறும் அதிகாரத்தை அஞ்சினர் . அவரது தோல்வி அதன் இடைவெளிகளில் அரசியல் அனுபவம் என சொல்லப்படுகிற ஒருவர் பிறிதொருவருக்கு கையளிக்கப்படும் ஒன்று தொடர்ந்து அறுபட்டுக் கொண்டே இருக்கிறது . எனவே ஒவ்வொரு முறையும் அது புதிது போல  முன்னெழுந்து வருவதையும், அதில் தொடர்ந்து வெகு சிலரே வெவ்வேறு வேஷத்துடன் காலத்திற்கேற்ப பல அந்தக் களங்களில் தோன்றியபடி இருக்கிறார்கள் . அவர்கள் மீட்பர் போல  தோற்றமளிக்கிறார்கள் ,ஆனால் அவர்களிடம் பிறருக்கு அளிப்பதற்கு ஒன்றுமில்லை .


இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனம் இந்திய அளவில் காங்கிரஸிற்கு பாதகமாக எதிரொலித்த போது அதன் தாக்கம் புதுவையையும் விட்டுவைக்கவில்லை . 1974 முதல் 1980 வரை காங்கிரஸிற்கு மாற்று கட்சிகள் ஆட்சி அமைத்தன. இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுலில் இருந்தது. 1981 காங்கிரஸும் கூட கூட்டணி அரசாங்கமே அமைக்க முடிந்தது . 1977 களுக்கு பிறகு அரசியல் குழப்ப நிலை காரணமாக நிலையற்ற அரசுகள் அமைவதும், கலைவதுமாக இருந்தன. காங்கிரஸ் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொண்ட கட்சியாக சில காலம் இருந்தது . புதுவையை தமிழகத்தோடு இணைப்பது பற்றி அன்றைய பிரதமர் மொராஜி தேசாய் போகிற போக்கில் ஏதோ சொல்லி வைக்க புதுவை கலவர பூமியானது . “ஆரோக்கியத்திற்கான மருந்து கசப்புதான்என்று பிரதமர் மொராஜி தேசாய் சொன்னதை ஆதரித்த அன்றைய தமிழக முதல்வர் MGR தான் உடனடி அரசியல் பாதிப்பை எதிர் கொண்டவர் . அதுவரை இரண்டு முறை தொடர்ந்து அதிமுக அரசு அமைத்தது . அது புதுவை அரசியலில்  பெரிய பாய்ச்சல் . தமிழகத்தைப் போல திராவிட கட்சிகளின் கைககளுக்கு சென்று விட்ட ஆட்சியை மீட்க முடியாது என அரசியல் கணிப்பாளர்கள் நினைத்தனர் . ஆனால் இரண்டு முறையும் சொற்ப ஆயுளுடன் அதிமுக ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து 1980 களில் நடந்த தேர்தலில்  முழு தோல்வியடைந்து ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இல்லாத கட்சியாகி பின்னர் இன்று வரை 3 சட்டமன்ற உறுப்பினர் என்கிற அளவில் குறுகியது . அதை தனது பிம்பத்திற்கான அவமதிப்பாக கருதிய MGR அதன் பிறகு எதன் பொருட்டும் அவர் புதுவைக்கு வரவேயில்லை.


காங்கிரஸ்புதுவை மக்கள் விரும்பும் வரை தனித்தன்மையோடு நீடிக்கும்என பிரென்ச் அரசாங்கத்திற்கு பிரதமர் நேரு சொன்ன உறுதி மொழியை தேர்தல் வாக்குறுதியாக முன் வைத்து தேர்தலை சந்தித்தார் சண்முகம் . இந்திரா காந்தியின்  நிர்பந்தம் காரணமாக திமுக வடன் தேர்தல் கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டது . 1983 களில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் முதல்வரனார் D.ராமசந்திரன். புதுவையின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்திற்கு திமுக வை சார்ந்த ஒருவரை அவர் முன்னிறுத்த , தன்னை கலந்து ஆலோசிக்காததை தனக்கான அவமதிப்பாக கருதிய சண்முகம் சில அரசியல் நகர்விற்கு பின் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெற திமுக காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது .  1985 தேர்தலை சந்தித்து முழு பலத்துடன் ஆட்சியில் காங்கிரஸ் அமைத்து,நிலுவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் இருக்க முற்றிலும் புதுமுகமான நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டு மாநிலங்கள் அவையில் கொண்டு அமர்த்தப்பட்டார் . சண்முகம் தனது வெற்றியாக மீள மீள சொல்லும் அந்நிகழ்வு பிற்காலத்தில் அவரது அரசியல் வீழ்ச்சியின் விதையாக அவரால் ஊன்றப்பட்டது முரண்நகை .


1977 முதலே காங்கிரஸ் தனது அடித்தளத்தை இழந்து கொண்டிருந்ததையும் மிக கவனமான நுண் அரசியல் கணக்குகளாலும் நெகிழ்வான சமரச முடிவுகளினால் மட்டுமே 1996 வரை அது தனது இடத்தை  தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது என்பதையும் புரிந்து கொள்பவர்கள் கட்சியை சமன் புள்ளியில் அமர வைத்ததின் பின்ணனியில் சண்முகத்தின் பங்கு மிக முக்கியமானவர் என்றும் புரிந்திருந்தனர் . 1991ல் அதன் சமநிலை குலையத் துவங்கியது . தலைவர் சண்முகமே அதைத் துவக்கி வைத்தார் என்பது வினோதம் . 1991ல் முதல்வர் வேட்பாளராக சண்முகம் களமிறங்கி கட்சி உள்ளூழலால் தோற்கடிக்கப்பட்டார் என்பது வெளித்தோற்றம். அவருக்கு செல்வாக்கான காரைகாலில் ஏதாவதொரு தொகுதியை முடிவு செய்திருக்கலாம் கண்ணனின் காசுக்கடை தொகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்தது அரசியல்பிழை . ஏறக்குறைய பாலனும் முதலியார்பேட்டையில் போட்டியிட முடிவு செய்தது அதே ஒரு கல் இரண்டு காய் கணக்கில் . சண்முகத்திற்கு தேர்தலில் ஓட்டுகளை ஒருங்கிணக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆரம்பம் முதலே வெற்றி பெற்றுவிட்ட மிதப்பிலும் இனி வெற்றி ஓட்டு வித்தாயசம் மட்டுமே என்கிற கணக்கு சொன்னார்கள் . முதல்வர் வேட்பாளர் சண்முகத்தின் கவனத்தைப் பெற முண்டியடித்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்ளவும் அவற்றை முன்வைத்து ஒருவர் பிறரை ஓரம்கட்ட முயற்சிக்கும் விளையாட்டை  முன்நிறுத்தி நிலையமயை சிக்காலாக்கி  அவர்களுக்குள் வெற்றுப் பஞ்சாயத்து செய்ய வேண்டிய சூழலை உருவாக்கி சண்முகத்தின் கவனத்தை சிதறடித்தனர்.தேர்தல சமயத்தில் கண்ணனின் முக்கிய ஆதரவாளர்கள் சிலருடனான முன் விரோதத்தினால் அவர்களை சீண்டி வீண் வம்பு வளித்துக் கொண்டுவந்து சண்முகத்திடம் விட நெருக்கடி குளவிக் கூட்டை கலைத்தது போலாகி அவர்கள் வஞ்சினம் உரைத்து சண்முகத்தை எதிர்த்து அவரை தோல்வியுறச் செய்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...