https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 28 ஆகஸ்ட், 2021

அடையாளமாதல் * ரங்கசாமி மூப்பனார் *

 


ஶ்ரீ:



பதிவு : 585  / 775 / தேதி 28 ஆகஸ்ட்  2021


* ரங்கசாமி மூப்பனார்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 63.






வக்கீல் முருகேசன் மூப்பனாரின் காலில் அத்தனை நூறு பேர்களுக்கு மத்தியில் சிறிதும் தயங்காது வீழ்ந்து வணங்கியது மிகுந்த திகைப்பை கொடுத்த நிகழ்வு . பல காலம் அது எனது நினைவுகளால் தொடர்ந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது . அது அவர் மீது எனக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது . அவரின் இறுதிக் கணம் வரை பல நிகழ்வுகளில் நாங்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் ஏற்படும் போதெல்லாம் காலம் என்னை அவருக்கு எதிராகவே கொண்டு நிறுத்தியது . தெய்வம்,குரு ,ஆன்மீகப் பெரியவர்கள் போன்றவர்களின் கால்களில் அப்படி அனைவரும் வீழ்ந்து வணங்கி பார்த்திருக்கிறேன். அதன் பிண்ணனியில் பெரும் மரியாதை , பக்தி முக்கியமானதாக இருக்கும் . அன்று நிகழ்ந்தது எந்த வரையறைக்குளும் வராமல் வெளியிலேயே நின்றிருந்து . 1994களில் துவங்கி 2001 அவர் மண்மறைய சில வாரங்களுக்கு முன்புவரை.இலும் மூப்பனாரை பலமுறை சந்தித்திருக்கிறேன் அதற்கு அடிப்படை காரணமாக இருந்த அவரது தம்பி ரங்கசாமி மூப்பனாரை இந்த சந்தர்ப்பத்தில் அவரை நினைவுகூர்வது எனக்கு மிக அவசியமானது என நினைக்கிறேன். முதல் முறை அவரை கும்பகோணம் சுந்தரப் பெருமாள் கோவில் அருகே கபிஸ்தலத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் சந்திக்க சென்றேன் . அது பாலனை நிலைநிறுத்த அவருக்கும் முதல்வராக இருந்த வைத்திலிங்கத்திற்கும் உருவாகி வரும் இடம் இளைஞர் காங்கிரஸிற்கு முக்கியமான ஒன்றாக அன்று இருந்தது . சண்முகம் முழுமையாக வாழப்படியை சார்ந்து நின்றிருந்த சூழலில் மூப்பனாரின்  ஆதரவாளர்களாக அறியப்பட்ட கண்ணன் சபாநாயகரானது மரைக்காயார் மத்தியில் அமைச்சர் பதவியில் இருந்து இறங்கியது போன்ற மிக முக்கிய கட்டத்தில் வைத்திலிங்கம் முக்கிய தலைவராக உருவெடுக்க அவருக்கு மூப்பனாரின் பின்புலம் தேவையாய் இருந்தது . அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கு மிக நெருக்கமானவராக கருத்தப்பட்ட அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர்ஜித் சிங் பிட்டா மூப்பனாரை தனது ஆசிரியர்களில் ஒருவராக கருதினார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தது சண்முகத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி அதன் பிண்ணனியில் மரைக்காயர் இருந்தார் . அது சண்முகத்தை பதவி விலகச் செய்யும் என்றும் புதிய தலைவராக ஜீவரத்திணம் உடையார் மரைக்காயரால் சிபாரிசு செய்யப்படுவார் என்றும் அதில் பாலன் மூத்த பொதுச் செயலாளராக பொறுப்பேற்பார் அது புதுவையின் அரசியில் புதிய களத்தை துவங்கி வைக்கும் என்றும் மரைக்காயரை மீளவும் புதுவை அரசியலில் நிறுவும் என கணக்கிடப்பட்டிருந்தது . அதற்கு ஊடாக பாலனுக்கு தனிப்பட்ட ஒரு கணக்கின் காரணமாக அவரை அடுத்து கமலக்கண்ணன் தலைவராவதை விரும்பாத பாலன் என்னை இளைஞர் காங்கிரஸ் தலவருக்கு சிபாரிசு செய்ய முயன்றார் . நான் இளைஞர் காங்கிரஸ் தலைவராக வருவது பாலன் இரு அமைப்பையும் தனது இருப்பில் வைத்திருக்க எண்ணியிருக்க வேண்டும் . ஆனால் மரைக்காயரின் எந்த அழுத்தத்திற்கும் சண்முகம் அசைந்து கொடுக்கவில்லை . அவர் தொடர்ந்து தலைவராக நீடிக்கும் வாய்ப்பு உருவானபோது மரைக்காயரின் அனைத்து திட்டமும் காலாவதியானது . அதில் தேவையற்று அடிப்பட்டது நான் . ஆரம்பம் முதலே என்னை இளைஞர் காங்கிரஸின் தலவராக கொண்டுவரும் திட்டத்தை நான் ரசிக்கவில்லை . என்னைப் பற்றி நான் கொண்டிருந்து மதிப்பீடுகள் வேறுவிதமானவை. அரசியல் பேசுகலை உள்ளவர்களுக்கானது. திக்கி திக்கி பேசும் எனது பிறவிக் குறைபாடே எனது முதல் தடைஒவ்வொரு மேடையிலும் அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் . ஆனால் என்னைப்பற்றிய புதிய பரிமாணத்தை நான் அறிந்து கொள அந்த நிகழ்வே அடிப்படை காரணமாகியது , என்னை நான் உருவாக்கிக் கொண்டது அதன் பிறகு.


சண்முகத்தை கட்சித் தலைவர் பதவியில் இருந்து இறக்க இயலாமல் போன பிறகு மரைக்காயரிடமிருந்து பாலன் விலக துவங்கினார் . பதவியை இழந்து பாலனை நிலையழியச் செய்தது . பித்துபிடித்தவர் போலானார் மீண்டும் தலைவராக வருவதற்கு முதல்வர் வைத்திலிங்கம் உதவ அவருக்கு நன்றிகடனாக புதுவையில் பெரும் விழா எடுத்து அதில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்கும் விழாவில் மூப்பனார் கலந்து கொண்டால் அது வைத்திலிங்கத்திற்கு பெரிய பின்புலத்தை உருவாக்கி கொடுக்கும் என கணக்கிடப்பட்டது . சண்முகம் அதன் உட்கூறுகளை உணர்ந்தவர் என்பதால் வக்கீல் முருகேசனை அனுப்பி மூப்பனாரை அதில் பங்கேற்க கூடாது என கேட்டுக் கொள்ள சொன்னார் . ஏறக்குறைய அதுதான் நடந்திருக்க வேண்டியது . அதை எதிர்கொள்ள பாலன் தரப்பில் சுப்புராயன் திட்டமாக அவருடன் ஆங்லோ பிரென்ச் நூற்பு ஆலையில் வேலை செய்யும் தனசேகருக்கு  மூப்பானாரின் தம்பி ரங்கசாமி மூப்பனாரிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்த எண்ணினார் . தனசேகர் ரங்கசாமி மூப்பனாரை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது . ஆனால் இதில் நான் ஏன் நுழைக்கப்பட்டேன் என புரிந்து கொள்ள முடியவில்லை. விழாவிற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் பாலனே அதை செய்திருக்கலாம் . ஆனால் சுப்புரானின் மிகை கற்பனைத் திட்டத்தை அவர் ரசிக்கவில்லை . அது எந்த வகையிலும் எடுபடாது என அவர் நினைத்திருக்க வேண்டும் . தனசேகருக்கு எந்த கட்சி அடையாளமும் இல்லாததால் அவருடன் கட்சி சார்பாக ஒருவர் செல்லவேண்டும். சுப்புரானின் கணக்கில் நான் தேர்வானேன் . மிக ரகசியமாக வைக்கப்பட்ட பயணம் அது . ஆனால் ஊழின் கணம் நான் உடன் செல்ல வேண்டும் என முடிவானது . பாலனுடைய மொத்த அரசியல் களத்தை கலைத்து போட்ட நிகழ்வு அங்கிருந்து துவங்கியது . அவருடைய வீழ்ச்சிக்கு நான் காரணமானேன் . அதன் பிண்ணனி பற்றியும் அதை நிகழ்த்த வேண்டிய சூழல் பற்றியும் என்னை நான் அனுகி புரிந்து கொள்ள முநல்வதைப் பற்றியும் எனது பழைய பதிவில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் இன்று உள்ள கூறுமுறை அதில் இருக்காதென நினைக்கிறேன். இன்று இங்கு இருந்து கொண்டு அவற்றை மீளவும் பிறதொரு முறை அனுகி் பர்க்கிறேன் . வாழ்வின் அர்த்தமும் அர்த்மின்மையுமாக அவை என்முன் எழுந்து விரிந்து  நிற்பதை உணர்கிறேன்  . நான் மீளவும் எனக்குள் கேட்டுக் கொள்வது நான் ஆற்றியது சரியா என்றால் அதை இப்படி புரிந்து கொள்ள முயல்கிறேன் . நான் கடந்து வந்த பாதையில நான் சென்று அமர்ந்த இடங்கள் எனது தகுதியை குறித்து எனக்கு உரிவானவைகள் அல்ல . ஆனால் அந்த இடத்தை அடைந்ததும்  மிக மெல்ல எனக்கான வடிவத்தை அது என்னிடம் கேட்கும் இடத்தை அடைந்து விடுகிறேன் . அந்த இடம் என்னிடம் என்ன கேட்கிறதோ அதை அளிக்க முயல்கிறேன் . அங்கு அமர வேண்டிய தகுதியை நோக்கி என்னை செலுத்திக் கொண்ட பிறகு அதிலிருந்து ஒருபோதும் சமரசம் கொள்வதில்லை . அந்த இடத்திற்கு ஏற்ப என்னை எந்த நெகிழ்வும் இல்லாமல் இறுக்கமாக உருவாக்கிக் கொண்டே முன்னகர்ந்திருக்கிறேன். எனக்கான புரிதலை அடைகிறேன்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

அடையாளமாதல் * கருப்பையா மூப்பனார் *

 


ஶ்ரீ:



பதிவு : 584  / 774 / தேதி 17 ஆகஸ்ட்  2021


* கருப்பையா மூப்பனார்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 62.





காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் வக்கீல் முருகேசன் தலைமையில் மாநில கங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் நின்று கொண்டிந்தனர் அவர்களில் பலரை முதன்மையாக பார்க்க முடிந்தது . கட்சியின் நிர்வாகிகள் என்பதால் கட்சி சார்பாக நின்று மூப்பனாரை வரவேற்கும் பொறுப்பில் இருப்பவர்கள் . கட்சியின் முன்னனித் தலைவர்களான அவர்களை அங்கு ஒருங்கே பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது . அனைவரும் சண்முகத்தின் முகங்களாக அறியப்பட்டவர்கள், அவரின் அரசியல் நகர்வின் விரல்கள் கட்சி என்னும் பெரிய இயந்திரத்தின் உறுப்புகள் . அங்கில்லாத பிற எவரும் அவர்களது இடத்தை அரசியல் ரீதியில் விழைபவர்கள் . அவர்கள் ஒரு உடலென அங்கு நின்றுகொண்டிருந்தாலும் தனி ஆளுமைகள் பல முகம் கொண்டவர்கள். முதன்மை தலைவர்கள் , மரைக்காயர் மற்றும் கண்ணன் என யாரும் அங்கு இருப்பதற்கான அறிகுறியில்லை . அவர்கள் அந்த விடுதியின் மூடிய அறைகளுக்கு பின்னால் ஆலோசனையில் இருக்கிறார்களாம் . அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளுக்கு உள்ளே இருக்கலாம் . அந்த அறைகளுக்கு வெளியே நடையாதை முழுக்க அவர்களது ஆதரவாளர்கள் நிரம்பிக் காணப்பட்டார்கள் . அவர்கள் கீழே நடப்பதை எந்த பதட்டமும் இன்றி , இறங்கி வர எந்த முயற்சியும் செய்யாதவர்களாக அங்கேயே இருந்து கொண்டிருந்தனர் . நான் பங்கேற்கும் முதல்அசலானகட்சி நிகழ்வு அது . ஒரு திருவிழா மனநிலையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன் . அங்கிருந்து கிடைத்த புரிதில் வழியாக பின்னாளில் அவர்களுடன் இணந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது அவர்களுக்குள்ளே ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கும் முரண் அலையில் சிக்கிக் கொள்ளாமல் அவர்களுக்கு இடையே ஊடாடும் இடத்தில் என்னை நானாக நிலைநிறுத்திக் கொள்ள அந்த சம்பவம் உதவியது . வக்கீல் வைத்தியநாதன், காசுக்கடை செல்வம் , வினாயகமூர்த்தி, பன்னீர்செல்வம் , தங்கப்பிரகாசம்,ஜோதி நாராயணசாமி, ஊசுடு அண்ணமலை ரெட்டியார், ஏப்பலம் ஜானகிராமன் ரெட்டியார் , உருளையன்பேட்டை சுந்தரம் போன்றவர்கள் முக அளவில் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் . ஒட்டுமொத்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இவர்களை எப்போதும் அஞ்சினர். இவர்களுக்கு தலைவராக சண்முகம் அனைவரின் துர்சொப்பனம்


பிற அணிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் காணப்படவில்லை, அல்லது அவர்களை எனக்கு தெரியாது . மற்றபடி அங்கு நெருக்கியடித்தபடி இருந்தவர்கள் எளிய தொண்டர்கள் மட்டுமே . மூப்பனாரின் கார் மித வேகத்தில் விடுதி உள்நுழைந்து வலப்புறம் உள்ள முக்கியஸ்தர்கள் தங்கும் விடுதி முற்றத்தை நோக்கி ஊர்ந்து சென்றது . அந்த சிறப்பு விருந்தினர் மாளிகை மாளிகை இரண்டடுக்குகளைக் கொண்டது மொத்தம் ஆறு தங்கும் அறைகள். ஒவ்வொன்றிலும் வரவேற்பரை உணவு அருந்தும் இடம் மற்றும் படுக்கை அறை என சிறு வீட்டின் முழு வசதியான அமைப்பைக் கொண்டிருந்தது . மூப்பனாருக்கு கீழ் தளத்தில் அறை ஒருங்கப் பட்டிருந்தது . அவரின் கார் வந்து அந்த விடுதி முற்றத்தில் நின்று அசைவிழந்ததும் அவரை வாழ்த்தி ஓங்கி ஒலிக்கும் முழக்கத்துடன் கட்டவிழ்ந்த திரள் ஒரு வித விசையால் செலுத்தப்பட்டவர்களை போல மூப்பனாரின் காரை நோக்கி வேகமாக நகர்ந்தனர். காவல்துறையினர் யாரும் அங்கு பாதுகாப்பிற்கு இல்லாதது எனக்கு வியப்பை அளித்தது. அது கட்சி தலைவர்கள் தொண்டர்களுக்கானது என்பதால் அவர்களே அதற்கு பாதுகாப்பாக இருக்க கூடியவர்களாக கருதப்பட்டிருக்க வேண்டும் . அல்லது நிலைசக்தியை எதிர்கும் போக்கு அங்கு இல்லை , காரணம் அதை இப்போது கைலெடுக்க முயல்பவர்கள் அதை வெளிக்களத்தில் போராட வேண்டிய அவசியத்தில் இல்லாதவர்கள் . இதுவரை போராடியது இங்கு வந்து சேர . பின் இங்கிருந்து அரசு அவர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது . அதற்கு முன் நிகழ வேண்டிய முதற் சடங்கு நாளை நடக்க இருக்கிறது . அது கட்சி இயந்திரத்தை அரசு இயந்திரத்துடன் இணைக்கும் ஒட்டு பசை . அதுவரை இனி பிறருக்கு உணர்த்த வேண்டியது ஒன்றுமில்லாதால் ஏற்பட்ட வெறுமையாக அது இருக்கலாம் . நாளை காலை நடக்க இருக்கும் பலப்பரிட்டசை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குள்ளே நிகழ வேண்டியது. அது கருக் கொண்டு பல காலமாகிறது அதற்கு மேலதிகமாக எதையும் வெளியில் இருந்து செலுத்தும் அவசியமின்மையை அவர்கள் அறிந்திருந்தார்கள் .


பாலன் தனித்து காரில் இருக்க நான் அவர்களிடம் இருந்து மெல்ல விலகி மூப்பனாரின் காருக்கு மிக அருகில் சென்று நின்று கொண்டேன் .எதிர்பார்ப்பு மிக்க பரபரப்பு எனக்குள் முழுவதுமாக நிறைவதை உணரமுடிந்தது . அனைவரும் காரின் அருகில் செல்ல முயன்றதால் நான் அனைத்து பக்கமும் அலைக்கழிக்கப் பட்டேன் ஆனால் அது சிறிது தேரம்தான், பின்னர் அங்கு மெல்ல பிறிதொரு விசை உருவாவதை அறிந்து கொள்ள முடிந்தது. ஒருவரைத் தாண்டி ஒருவர் முண்டியடித்தாலும் ஒருவரை பிறிதொருவர் தங்களது  இருக்கைகளாலும் தடுத்து நிறுத்திக் கொண்டனர் . அது அவரின் காரின் கதவு திறந்து கொள்ளவும் அதிலிருந்து அவர் இறங்கும் அளவிற்கான இடத்தை உருவாக்கியது . பின்னிருந்து உந்தித் தள்ளுபவர்களின் விசையை  முன்னால் நின்றவர்கள் தாங்கிக் கொண்டனர் . அது அந்த திரளை காரின் மீது மோதி வழிந்து விடாமல் இருக்க உதவியது . உருவாகிய வளயத்தில் மெல்ல காரில் இருந்து மூப்பனார் இறங்கினார் . பளீரிடும் வெள்ளை கதர் சட்டை வேட்டி எளிய வெள்ளை நிற ரப்பர் செருப்புடன் அணிந்து மிக ஒழுங்காக ஒட்ட வெட்டிவிடப்பட்ட நரைத்த சுருள் தலைமுடி அலையலையாக  மழுங்க சவரம் செய்யப்பட்ட முகம் வெற்றிலையால் சிவந்த வாய் கருகிய பல் ஏதோ ஒரு சொல்லால் உறைந்த உதடு என தனிப்பட்ட ஆளுமையாக அனைவரையும் வசீகரிப்பவராக தோன்றினார். எது அந்த வசீகரத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது என அவதானிக்க முயன்று கொண்டிருந்தேன். வேறு எந்த சிந்தனையும் இன்றி அங்கு நிகழ்வதற்குள் இழுக்கப்ப்டடு மிக அருகில் இருந்த அவரை பார்த்தபோது ஏற்பட்ட முதல் உளப்பதிவு அவரை ஒரு ஆப்பரிக்க கருப்பின மனிதரை ஒத்தவராக நினைக்கத் தோன்றியது . ஆனால் அத்தனை கருப்பல்ல ஒரு வித சாம்பல் நிறத்திலிருந்தார் . மற்றபடி அந்த சாயல் நான் முன்பு நினைத்ததேதான்.


சட்டென ஒரு அதிர்வு உருவாகி நான் என்ன ஏது என திகைத்துப் பார்கையில் யாரும் எதிர்பார்க்காத சூழலில் யாரோ தள்ளிவிட்டு ஒருவர் அந்த வளைத்திற்குள் வந்து விழுந்துவிட்டார் என நினைத்தேன் . எனக்கு முதலில் என்ன நிகழ்ந்தது என புரியவில்லை பதட்டத்துடன் யார் விழுந்தது என எட்டிப் பார்க்க முயல முன் வரிசை மனித சங்கிலியின் விசை என்னை பின்னோக்கித் தள்ளியது . விழுந்தவரை யாரும் தூக்கி விட முயலாமல் ஏன் அந்த வட்டத்தை மேலும் விரியச் செய்கின்றனர் என யோசிப்பதற்குள் நான் மேலும் மேலும் பின்னோக்கி தள்ளப்பட்டேன். என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அந்த கூட்த்தை முழு பலம் கொண்டு முன்னால் உந்தி பார்த்போது அது வக்கீல் முருகேசன் மூப்பனாரின் காலில் வழுந்து ஆசி வாங்குகிறார் என தெரிந்தது . நான் திகைத்து மூப்பனாரை பார்க்க அவர் இன்னதென சொல்ல முடியாத முகமும் உதடும் விரிந்த பாவனையால் அதை ஏற்றுக் கொண்டார்


செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

அடையாளமாதல் * காத்திருத்தல் *

 



ஶ்ரீ:



பதிவு : 583  / 773 / தேதி 10 ஆகஸ்ட்  2021


* காத்திருத்தல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 61.





மூப்பனாரை சந்திக்க காரில் அவர்களுடன் நான் புறப்பட்டு, காரில் அடுத்த என்னப் பேசப் போகிறார்கள் என அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன் . முன்னிருக்கையில் பாலன் அமர்ந்திருக்க பின்னால் என்னுடன் பூங்காவனம், கமலக்கண்ணன் தாமோதரன் இருந்தனர் . பிற அனைவருவரும் எங்களுக்கு முன் உப்பளம் அரசினர் விடுதிக்கு சென்றுவிட்டிருந்தனர் . அரசியல் ரீதியான சந்திப்புகளைப் பற்றி நிறைய பேசிக் கேட்டிருந்த எனக்கு அன்று ஒரு பெரிய தலைவரை நேரில் சந்திக்கும் முதல் வாய்ப்பு . ஒவ்வொரு சந்திப்பும் அரசியல் நகர்வின் திருப்புமுனை , அதற்கு காரணமான அவர்கள் முன்வைக்கும் தரவுகள் மற்றும் அரசுசூழ்தல் சாதுர்யம் என பல முறை என் முன்னால் அடுக்கப்பட்டதை வாய்திறந்து கேட்டிருக்கிறேன். அரசியல் தலைவர்கள் என்பவர்கள் நடப்புகளை மாற்றும் திறனுள்ளவர்களின் நிரை என்றும், எனக்கு புரியாத ஒன்றை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது எனது புரிதலாக் இருந்தது . அவர்கள் நான் அன்றாடம் சந்திக்கும் எளிய மானிடர்கள்தான் ஆனால் அரசியல் சந்திப்புகளின் போது தெய்வம் ஏறியவர்களாக சன்னதம் கொண்டர்வரகளாக மாறிவிடுகிறார்கள் என்பது  அவர்களை ஒருபோதும் சாமான்யர்களுக்கு மத்தியில் வைக்க என்னை தயங்கவைத்தது . இதோ எனக்கு முன்னால் அப்படி ஒரு வரலாற்று நிகழ்வு நடக்க இருப்பதும் அதை அது நிகழும் முதற் கணத்தில் நான் அதன் அருகிருந்து கொண்டிருக்கிறேன். என்ன ஒரு மகத்தான தருணம் . நான் என் வாழ்நாளில் காத்திருந்தது இதோ இப்போது என் முன்னே நிகழ இருக்கிறது . அதிலிருக்கும் அரசியலை முற்றாக கற்றுத் தேற இதோ நான் அவர்களுக்கு மத்தியில் ஒரு மாணவனாக அமர்ந்திருக்கிறேன் பரவசத்துடன். அத்தகைய உணர்வுகள் அலையாயும் மனத்துடன் அவர் பேசிக் கொள்ள இருப்பதை எதிர்நோக்கி காத்திருந்தேன்அங்கு இருந்த அமைதியை தள்ளி வழக்கம் போல ஐம்பது அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் பூங்காவனம் தான் முதலில் பேசினார் . தனது எளிய அப்பாவித்தனமான கேள்விகளுக்கு அவர் புகழ் பெற்றவர். அத்தகைய கேள்விகளால் தான் தொடர்ந்து சிறுமை செய்யப்படுவதை எதையும் அவர் பொருட்படுத்துவதில்லை . அதே சமயம் மிக ஆழமாக உள்ளத்தை சென்று நெருடும் பலவற்றை அவர் துணிந்து சபையில் முன் வைத்த போதெல்லாம் பலர் அதற்கு பதில் சொல்ல திணறுவதை பார்த்திருக்கிறேன். அந்த இருமைகளே அவரை தவிற்க முடியாதவராக அவர் முன் வைக்கும் கேள்விக்கு பகடியாகவாவது சிலவற்றை சொல்லியாக வேண்டிய கட்டாயம் பிறருக்கு ஏற்படுவதை பார்த்திருக்கிறேன்


தனது கேள்வியாக அல்ல கருதாக அவர் முன்வைத்தது , மூப்பனார் புதுவை வந்திருப்பது மரைக்காயர் மற்றும் கண்ணனுக்கு சாதகமானதாக, சண்முகம் ஒருபோதும் மூப்பனாருடன் இணங்கிச் செல்லாதவர் ஆகவே இந்தமுறை கண்ணனுக்கு எதிர்ப்பாக சண்முகத்தின் நகர்வு வேலை செய்யாது  . மூப்பனாரை புதுவைக்கு வரவழைத்தற்கு பின்னால் மரைக்காயர் இருக்க வேண்டும் அல்லது அது தற்செயல் நிகழ்வு , எப்படி என்றாலும் சிக்கல் என்பது அவரது கருத்தாக இருந்தது . அதற்கு பாலன்கண்ணன் ஒருபோதும் மூப்பனாருக்கு ஆதரவானவர் அல்லர். மூப்பனாருக்கு அது வெளிப்படையாக தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு . வக்கீல் முருகேசன் அதை அவருக்கு சொல்லியிருப்பாரா என தெரியாது. அதை வலுவாக முன்வைப்பது மட்டுமே இன்று செய்யக்கூடியதுஎன்றார் பாலன் . அதிலிருந்து நாம் அடையப்படுவது என்ன என்கிற கேள்விக்கானது அல்ல அவர் அப்போது சொன்னது  அல்லது அந்த கேளவிக்கு பதில் சொல்ல அவர் விரும்பவில்லை . மரைக்காயருடன் இணைந்து முக்கிய அரசியல் நகர்த்தலில் பாலனுக்கு பங்கிருக்கிறது என இளைஞர் காங்கிரஸாரால் நம்பப்பட்டிருந்தது . வைத்திலிங்கம் முதல்வராக வருவதுனூடாக பாலனைத் தலைவராக கொண்ட இளைஞர் காங்கிரஸை ஆதரிக்கும் ஒரே மாநில அதிகாரமிக்க தலைமையாக அவர் இருப்பார் என்பது அதன் அடிகோடிட்ட ஊகமாக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டது . காரணம் மரைக்காயரை சார்ந்து இயங்க நிர்வாகிகளுக்குள் இருந்த அடிப்படை கருத்து முரண்பாடு . அந்த நிமிடம் வரை கண்ணனை ஆதரிப்பதாக மரைக்காயர் வெளிப்படையாக அறிவித்திருந்தார் அதனுள்ளாக நடக்க இருப்பது அரசுசூழ்தல் என அதை சாதாரண தொண்டனுக்கு புரியவைக்க முடியாது .புதிய முதல்வர் தேர்தலில் பாலனுக்கு பெரிய பங்கில்லை அல்லது அவரை மீண்டும் கண்ணனை சார்ந்து நிற்க சொல்லி மரைக்காயரால் நிர்பந்திக்கப்படுகிறார் என்கிற அலர் நிலவியது . அந்த சூழலில் மூப்பனாரை சந்தித்து தனது இயக்க நிலைபாடாக தன்னால் கண்ணனை ஆதரிக்க முடியாது என வெளிப்படையாக அறிவிக்க நினைத்தார், ஆனால் அதை அந்த சிறு நிர்வாகிகளுக்கு மட்டுமேயாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் நினைத்திருக்கலாம் அல்லது அதுவும் மரைக்காயருடைய முதல் அரசியல் நகர்வுகளில் ஒன்றாக இருக்கலாம். கண்ணன் மூப்பனாருக்கு ஆதரவானவர் அல்ல என அவர் சொல்ல விழைந்தது  எதைவைத்து என எனக்கு அப்போது தெரியவில்லை. பின்னாளில் அது அவரது ஆழ்மன வெளிப்பாடு என உணர்ந்திருக்கிறேன் . சில சமயங்களில் மிக ஆழ்மனத்தின் வெளிப்பாடாக தனக்கு சிக்கலை உருவாக்கும் செய்திகளைக்கூட அவர் தயங்காது வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறேன்


நாங்கள் உப்பளம் அரசினர் விடுதிக்கு சென்று சேர்ந்தோம் அங்கு நான் எதிர்பாரத்த கூட்டம் ஏதுமின்றி இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. மூப்பனார் புதுவைக்கு வந்திருக்கும் செய்தி இன்னும் சரியாக கட்சிகாரர்களிடம் சென்று சேரவில்லை அல்லது அங்கு குழும வேண்டிய கூட்டத்தின் அளவு தேவைக்கு ஏற்ப தலைவர்களால் நிர்வகிக்கப்படுவது என கருதினேன் . அந்த இடம் நிறைய கார்களாலும் தலைவர்களாலும் நிரம்பி வழிந்தது . அங்கிருந்த பரபரபின்மையால் மூப்பனார் அங்கு இல்லை என புரிந்து கொண்டோம் . நாங்கள் வந்த காருக்கு அருகில் நின்று கொள்ள ஊசுடு பெருமாள் கூட்டத்தில் இருந்து வெளி வந்து பாலனை பார்த்துமூப்பனார் கவர்னரை சந்திக்க சென்றிக்கிறார்என்றான் . அது மரியாதை நிமித்தமான சந்திப்பு . நாளை நடக்க இருக்கும் சட்டமன்ற தலைவர் தேர்தலில் கவர்னரின் கருத்தை அறிந்து கொள்ள அங்கு சென்றிருக்கலாம். அங்கு அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்பதால் அங்கேயே காத்திருக்க முடிவெடுத்தோம் . சற்று நேரத்திற்கெல்லாம  மூப்பனாரின் கார் உள் நுழைவதை பார்த்த பிறகு அங்கு சட்டென பதற்றம் ஒரு அலை போல அடிப்பதை பார்க்க முடிந்தது . அது கண்களுக்கு தெரியாத ஒரு சரடு போல அனைவரையும் ஒரே இடத்தில் பிணைத்தது . முக்கிய தலைவர்கள் என  யாரும் இல்லாத நிலை அந்த ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்