ஶ்ரீ:
பதிவு : 573 / 763 / தேதி 25 ஏப்ரல் 2021
* வளர்ச்சியின் பயனின்மை *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 51.
2008ல் தலைவர் சண்முகம் சொல்லி நான் முதல்வர் ரங்கசாமியை சென்று சந்தித்தேன் , 2001ல் முதல்வராக பதவியேற்ற பிறகு அதுதான் அவரை முதல்முறையாக சந்தித்தது. கட்சித் தலைவர் நாராயணசாமியுடனான முரண்களினால் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை 2001ல் இழந்த பிறகு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை விட்டு விலகி, மாற்று அரசியல் மூலம் காங்கிரஸில் நாரயணசாமிக்கு எதிரானவர்களை ஓரணியில் திரட்ட முயன்று கொண்டிருந்தேன். இளைஞர் காங்கிரஸின் தலைவர்கள் கண்ணன் தொடங்கி பாலன் வரை அவர்கள் முன்வைத்த குறுங்குழு அரசியலால் காங்கிரஸில் புதிய தலைவர்கள் எழுந்து வரும் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டிருந்தது. கண்ணன் மட்டும் பிரபலமான தலைவராக உருவெடுத்திருந்தார். புதிய தலைவர்கள் என அவர் அமைப்பில் யாரும் இறுதிவரை உருவாகிவரவில்லை, பாலன் அவருடன் முரண்பட்டு வெளியேறிய பின் தலைவராக உருவெடுத்தார் . அவரது அரசியல் கனவுகள் அதன் கணக்குகளின் உள்ளெடை தாங்காது முறிந்தது. அவருடன் நான் இளைஞர் காங்கிரஸில் இருந்த இறுதி நாட்களில் அவரது செயல்பாடுகள் புதிய தலைமுறை உருவாகும் பாதைகள் என ஏதும் இல்லை என்பதுடன் முழு அமைப்பையும் இருளுக்கு அழைத்துச் சென்றார் என்கிற உண்மை மிகுந்த வருத்தத்தை அளிப்பது . அடுத்த நிரை தலைவர்களை உருவாக்கும் முயற்சியில் பாலனுடைய எதிர் அனுகுமுறையால் வெறுப்புற்று 1994 களில் அவரிடமிருந்து ஒதுங்க நேரிட்டது . அதுவரை நான் முன்வைத்த அனைத்து அரசியல் முன்னெடுப்புகளும் விளிம்பிற்கு வந்ததை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய என்னுடையப் புரிதலை ஆழமாக்கியது . காந்திராஜின் வற்புறுத்தலால் சண்முகத்தை சென்று சந்திக்கும் வரை அவற்றை முயற்சிக்க பிறிதொரு வாய்ப்பு சாத்தியமில்லை என்றே நினைத்தேன் . அமைப்பின் வழியாகவே எனக்கான அரசியல் களம் உருவாகும் என் உறுதியாக இருந்ததற்கு அடிப்படை நான் என்னைப் பற்றிய வரையறையில் தேர்தலரசியலில் நான் ஈடுபடுவதில்லை என்பது முதன்மையானது . அமைப்பின் பலத்தினால் மட்டுமே ஒருவருக்கான எதிர்காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என முழு நம்பிக்கை கொண்டிருந்தேன் . அமைப்பை செறிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இளைஞர் காங்கிரஸில் இருந்த போது உருவானது. மாநிலம் தழுவியதாக அதன் அரசியல் இருப்பதால் அதற்கான விழுமியங்களை உருவாக்கி முன்வைத்து மட்டுமே புதிய தலைவர்களை அடையாளம் காணமுடியும். அவர்களது எதிர்காலம் பற்றிய தெளிவான வரையறைகளின் வழியாக அவர்களுக்கான வாய்ப்பு அதன் எல்லைகள் என அவர்களுக்கு முழு சித்திரத்தையும் காட்டியாக வேண்டிய சூழல் உருவாகிவிட்டருந்தது . கண்ணன் , பாலனை போன்றோர் அழைத்து சென்றி காணாமலாகிய தலைவர்களோடு இளைஞர் காங்கிரஸின் சித்தாந்தம் செயல்பாடுகள் அதன் வழிமுறைகள் போன்றவை காணாமலாகி இருந்தது . புதிநவர்கள் அதைப்பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர்கள் . நான் சந்தித்தவர்களில் 90 விழுக்காடு அரசியல் குறித்து புரிதலும், நம்பிக்கையும் அற்றவர்கள் ஆகவே அனைத்தையும அடிப்படையில் இருந்து அவை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது அதன் முதன்மை சவால் .
1994 களில் பாலனிமிருந்து முரண்பட்டு வெளியேறியது அந்த விழுமியத்திற்கு எதிராக நிற்கும் அவருடைய போக்கு என்பது ஒரு அடிப்படைக் காரணம் . ஆனால் வெறுப்புற செய்தது அவர் யாரையும் அஞ்சியது, யாரையும் நம்ப மறுப்பது அரசியலின் அடிப்படை கூறு , ஆனால் நம்பிக்கை கொண்ட பெருங் கூட்டத்தை அதன் மேலேதான் கட்டி எழுப்பியாக வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஓயாமல் ஒற்று சொல்வதை ஊக்கப்படுத்தியதியதுடன் அத்தகைய செய்திகளுக்கு செவி கொடுக்கிறார் என்பதால் அவை பெருக்கெடுத்தன. அவற்றின் உண்மைநிலையை சரிபார்க்கும் குறுக்கு வழிமுறை இல்லாமயையால் அவர்பெற்ற செய்திகள் அவரை நிலையழிச்செய்தது. தலமை பலவீனப்பட்டதால் அது அடுத்த தலைவர்கள் என யாரையும் உருவாகாமலாக்கியது . சண்முகம் என்கிற ஆளுமையை எதிர்க்க அமைப்பின் செலூக்கம் அதன் எதிர்காலம் அனைவருக்குமான வாய்ப்பை பற்றிய புரிதல் மட்டுமே வழி. தலைவர்கள் தங்களைத் தனி மனிதர்கள முன்வைத்ததால் அது அன்று இயலவில்லை. அரசியல் என்பதே சண்முகத்தை எதிர்த்து வளர்வதென புரிந்து கொள்ளப்பட்டு பிற வழிகள் அடைக்கப்பட்டிருந்தன .சரியான நோக்கம் மற்றும் அனுகுமுறை இல்லாமல் புதிய அமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது. கண்ணனும் , பாலனும் தன்னை இளம் தலைவராக முன்னிறுத்தியது போல நான் செய்யமுடியாது, அவர்கள் அமைப்பின் தலைவர்களாக இருந்ததால் அது சாத்தியப்பட்டது என்றால் தலைவராக வந்தவர்கள் அனைவரும் வென்றிருக்க வேண்டும்.கண்ணனுக்கு முன்பிருந்த பல தலைவர்கள் முகமிலிகளாக இருந்தனர். கண்ணனின் அனுகுமுறை அவரை முன்னிறுத்தியது என்றாலும் அதற்கான சூழ்நிலை ஒவ்வொன்றாக அன்று எழுந்தபடி இருந்தன. சண்முகம் எதிர்ப்பு என்பது அன்றைய யதார்த்தம் அதை அப்படியே பின்பற்ற பாலன் நினைத்தது பிழைபுரிதல். அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நிற்கமுடியாதவராகி முன்பின்னுக்கு முரண்பட்டு முடிவுகளை குறுகிய காலத்தில் மாற்றியபடி இருந்தது சருக்கலை ஏற்படுத்தியது .
2011 களில் நிகழ்ந்தது போல புது தலைமையின் தேவை சமூகத்தின் ஆழ்மனதில் இருந்து திரண்டெழுந்திருந்தது போல 1985 களில் நிகழ்ந்தத்தைக் காணமுடிகிறது . இது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மீள மீள நகழ்ந்து கொண்டே இருக்கிறது . இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அலையலையென அவர்களைப் பின்தொடர்கன்றனர் ஒரு கட்டத்தில் அவர்கள் கைவிடப்பட்டதாக நினைக்கும் போது தலைவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள். 1994 முதல் 1996 வரை புது அமைப்பு நிகழ்வதற்கான சாத்தியகூறுகள் இல்லை என்பது எனது விலகலுக்கு முக்கிய காரணம் . தொடர் எதிர்ப்பு அரசியலால் சோர்ந்திருந்தோம் , பழைய நண்பர்கள் சந்திப்பின் போது அது துக்க விசாரிப்பு போல கடந்து சென்றுவிடும் . 1994 களில் இளைஞர் காங்கிரஸில் இருந்து வெளியேறி பிறகு அரசியலில் ஈடுபடுவதில்லை என உறுதியாக இருந்ததற்கான காரணம் இனி மாநிலம் தழுவிய அரசியல் என்கிற கோணத்தை சென்று அடைய முடியாது என்பது . ஆனால் பல்வேறு சூழலால் மிகுந்த மனக்கொந்தளிப்பல் இருந்து வெளிவரும் பொருட்டு எனக்கு ஆறுதல் அளிக்கும் என நான விழைந்து ஈடுபடும் ஒரு துறை தேவையாய இருந்ததால் தொகுதி அரசியல் போதுமானது என முடிவு செய்தே காந்திராஜை சென்று சந்தித்தேன்.