https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 13 நவம்பர், 2020

அடையாளமாதல் * புதிய விளையாட்டு *

 


ஶ்ரீ:



பதிவு : 546  / 739/ தேதி 13 நவம்பர்  2020


* புதிய விளையாட்டு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 24.






பிரெஞ்ச் அரசாங்கம் தனது பிரதான எதிரியாக கம்யூனிஸ்டுகளை நினைத்தது ,புறநகர்களில் வளர்ந்து வரும் காங்கிரஸ் ஆதரவு குழுக்களால் அவர்களுக்கு உடனடி சிக்கலில்லை . பல நகரப் பகுதிகளில் மெல்ல வளர்ந்து வரும் கம்யூனிஸ்டுகள் எந்த சிக்கலுக்கும் பிரெஞ்ச் அரசுக்கு எதிராக உடனடியாக திரண்டெழுந்து அன்றாட சட்ட ஒழுங்கிற்கு எதிராக அறைகூவ முடிந்தது . காங்கிரஸ் கட்சி புறநகரத்தில் வலுவாக காலூன்றியிருந்ததால் பிரெஞ்ச் மற்றும் பிரிட்டீஷ் என இரு அரசுகளை அவர்கள் எதிர்க்க வேண்டியிருந்தது . இரு பிரெஞ்ச் எதிர் அமைப்பிற்கிடையே புரிதல் நிகழாமல் இருக்கவும் அவர்களை நகர்புறத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்கிற நிலைப்பாட்டை பிரெஞ்ச் அரசாங்கம் எடுத்தருந்தது . அதை நடைமுறைப் படுத்த எளிய அரசியல் சூழ்ச்சிகளை உபயோகித்தது . உள்ளூர் பெரு வியாபாரிகள் இந்திய யூனியன் பகுதிகளுக்கு பொருட்களை கடத்துவதை முக்கிய தொழிலாக செய்து வந்தனர் . புதுவையின் நிலப்பரப்பு அதற்கு சாதகமாக இருந்தது . காரைக்கால் , மாஹே, ஏனம் , சந்திரநாகூர் போன்று பிரிந்து கிடந்த நிலப்பகுதிகளுக்கு புதுவையில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்ல பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்ச் அரசுகளின் அனுமதி சீட்டு இருந்தது . புதுவையின் பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுவதாக சொல்லப்படும் பொருட்கள் தமிழக பகுதிகளிலேயே இறக்கி விற்கப்பட்டுவிடும் . அதில் பெரும் பொருள் புதுவை வியாபாரிகளால் ஈட்டப்படுவதை  பிரெஞ்ச் அரசாங்கம் அறிந்திருந்தும் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்திருந்தது . கடத்தல் வியாபாரிகளை ஒருங்கிணைக்க குபேர் போன்ற சிலர் அரசியலில் இருந்தனர். குபேர் இயக்கம் சீமான்களின் கட்சியாக மக்களால் பார்கப்பட்டதால் அவர்களுக்கு அரசியலை முன்வைத்து பொது ஜன அமைப்பை உருவாக்குவதில் பிரச்சனை இருந்திருக்க வேண்டும் . பிற மக்களையும் கம்யூனிஸ்டுகளை மிரட்ட மற்றும் அடியாட்களை வைத்துக் கொள்ள பெரும் பொருளியல் தேவை இருந்தது . வியாபாரிகள் அதற்கு உதவினர்.அரசு மற்றும் வியாபாரத்தரப்பிற்கு இடையே இவர்கள் எப்போதும் தேவைபட்டனர். தங்களது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள பிரெஞ்ச் அரசுக்கு சாதகமாக விடுதலை இயக்கங்களை வன்முறையால் நசுக்கத் துவங்கினர் . கம்யூனிஸ்ட்களை ஒடுக்குவது அவர்களின் அரசியல் என்றானது


பிரெஞ்ச் இந்திய விடுதலை போராட்ட காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பான்மையோர் நிலவுடமை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் , கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெருவது தங்களுக்கு எதிர்கால சிக்கல் என நினைத்தனர். அது ஒரு வகையில் உண்மையும் கூட . கம்யூனிஸ்டுகள் விடுதலை போராட்டம் மற்றும் வர்ககப் போரையும் முன்னெடுத்தருந்தனர் . குபேர் போன்றவர்களுக்கு பிரெஞ்ச் அரசு அளிக்கும் வெளிப்படையான ஆதரவு அவர்களை வன்முறைக்கு இட்டுச் சென்றது . காந்திய வழிமுறைக்குள் வந்ததால் காங்கிரஸ் அமைப்பு விடுதலை போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்க்க தயங்கினர் . கம்யூனிஸ்டுகளையும் தங்களின் எதிரிகளாக கருதியதால் ஒட்டு மொத்த போராட்ட அமைப்பு உருவாகி வரவில்லை . இது போன்ற நடைமுறை சிக்கலால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகும் புதுவை இந்திய அரசுடன் இணைய நீண்ட காலம் எடுத்துக் கொண்டது . ஹைதராபாத்தை இந்தியாவுடன் ராணுவ வளிமை கொண்டு இணைக்க முடிந்ததைப் போல இங்கு செய்ய முடியாது காரணம் புதுவை வேரொரு அன்னிய தேசத்து அரசால் ஆளப்பட்டது . அது சர்வதேச அளவில் ஒரு நாட்டிற்கு எதிரான போர் அறைகூவலாக பார்க்கபடுவதை அப்போதைய பாரதப் பிரதமர் நேரு விரும்பவில்லை


புதுவை பகுதிகள் பிரிந்து கிடந்ததாலும் விடுதலை இயக்கங்கள் இணைந்து போராடும் வாய்பில்லதாலும் விடுதலைப் போராட்டம் தேக்கநிலையை அடைந்திருந்தது. கம்யூனிஸ்டுகள் வேறுவிதமான சிக்கலை எதிர்கொண்டனர். பொது மக்கள் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கும் அதன் ஆதரவாளர்களான குபேர் போன்றவர்களை அஞ்சினர் எனவே அவர்களின் ஆதாரவு என்பது கம்யூனிஸ்டுகளுக்கு வெளிப்படையாக கிடைக்கவில்லை . எனவே போராட்டக்காரர்கள் குருங்குழுவாக செயல்படவேண்டி இருந்தது . அதில் வன்முறை அதன் வழிமுறையாக இருப்பதைத் தவிர வேறு வாய்ப்பில்லை . பல கட்டமாக குபேர் அடியாட்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் பகிரங்கமாக பொது வெளியில் மோதிக் கொண்டனர் . ஒரு கட்டத்தில் வன்முறை எல்லைமீறவே பிரெஞ்ச் அரசாங்கம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தடை செய்தது .பிரெஞ்ச் இந்திய விடுதலை போன்ற அனைத்து போராட்டக் குழுக்களின் பொது நோக்கமும் அதன் பாதையும் மிக சிக்கலானதாக பார்க்கிறேன் . ஒரு போராட்டம் தனது இலக்கு நோக்கிய மிக நீண்ட பயணத்தில் இடையிடையே அடையும் புரிதல், தடை , விரக்தி மற்றும் நெருக்கடிகளினால், தனது கொள்கை அல்லது அனுகுமுறையில் மாற்றம் செய்து கொள்வது தொடர்ந்து நிகழ்கிறது . அதைப்போன்று பாதையில் மாற்றம் செய்யும் போது பொரும்பாலும் துவக்க காலத்தில் இருந்த கொள்கைக்கு முற்றும் மாறான நிலைப்பாட்டை எடுக்கும் விபரீதம் நிகழ்ந்து விடுகிறது . காந்தி தனது விடுதலை போராட்ட அமைப்பில் தொடர்ந்து மாற்றங்களை செய்து கொண்டதை அறிந்து கொள்ள முடிகிறது . ஆனால் அவை மைய்ய நோக்கத்தில் இருந்து விலகி செல்லாமல் பார்த்துக் கொண்டார் . தனது தற்காலிக நிலைப்பாடுகளை அடுத்த கட்ட நகர்வுக்கு வழி வகுப்பது. என்பது புரிந்து கொள்ளக் கூடியது . ஆனால் நடைமுறை சிக்கல் மிகுந்தது . சுப்பையாவின் விடுதலை இயக்கம் அப்படிப்பட்ட நெருக்கடிக்கு வந்து சேர்ந்தது . காந்திய பாதை விடுதலைக்கு போராட்டத்திற்கு உகந்ததாக சுப்பையா கருதவில்லை. அது அறவழியில் வெற்றி அடைவதை பற்றிய நம்பிக்கை இல்லாத காலம் . ரஷ்யாவில் நிகழ்ந்து முடிந்த புரட்சி அவரை கவர்ந்ததில் வியப்பில்லை . லெனினும் , ஸ்டாலினும் அவருக்கு ஆதர்சமாக இருந்தனர் . தனது பிரஞ்ச் இந்திய விடுதலை இயக்கம் குருங்குழுவாக செயல்படுவதில் உள்ள நெருக்கடியை உணர்ந்திருக்க வேண்டும் . அமைப்பு ரீதியில் காங்கிரஸுடன் பயனிக்க இயலாது என்கிற அனிப்படையில் ரஷ்ய அமைப்புடன் தொடர்பு கொண்டு தனது அமைப்பிற்கு அதன் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தார் . பிரெஞ்ச் இந்திய அரசால் அவரது இயக்கம் தடை செய்யப்பட்டது அதன் பின்னர் நடந்தது .


இரண்டாம் உலக யுத்த ஆரம்ப காலத்தில் புதுவையில் சுப்பையாவின் கம்யூனிஸ கட்சி தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது . ரஷியாவின் உலகளாவிய முக்கியத்துவம் காரணமாக பிரெஞ்ச் நாடு ரஷியாவுடன் அனுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது . அதன் அடிப்படையில் 1940 களில் பிரெஞ்ச் இந்திய அரசு கம்யூனிஸ் கட்சிக்கு எதிராக தனது தடையை விலக்கிக்கொண்டது . அதன் பின்னர் சுப்பையாவின் இயக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தது . அதன் பின்னணியில் உள்ளூர் அரசியல் மற்றும் தனிப்பட்ட கணக்குகள் இருந்திருக்க வேண்டும் . குபேர் போன்றவர்கள் ஆதரவினால் உள்ளூர் அரசியலை நிர்வகித்த பிரெஞ்சு அரசாங்கம் அதிரடியாக சுப்பையாவை நோக்கிய மனச்சாய்வாக மாற்றிக்கொண்டது . அதற்கு கம்யூனிஸ இயக்கத்தின் வெகுஜன தொடர்பும் ஆதரவும் தேவைபட்டிருக்க வேண்டும் மேலும் குபேர் போன்றவர்களை கட்டுக்குள் வைக்கவேண்டிய நிர்பந்தம் எழுந்திருக்கலாம் .புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டி பிரிட்டீஷ் அரசு நெருக்கடி கொடுக்கத்  துவங்கி இருந்தது பிறிதொரு காரணம் . பிரெஞ்ச் இந்திய நிர்வகத்தின் போக்கு ஆரம்பத்தில் குபேருக்கு அதிர்வை அளித்தாலும் பிரெஞ்ச் அரசு செய்திருந்த ஏற்பாட்டில் சுமூகமாக நடந்துகொள்ள முடிவெடுத்தார் . சுப்பையாவின் இயக்கத்திற்கும் இதில் தனிப்பட்ட அரசியல் கணக்கு இருந்திருக்க வேண்டும் . பிரெஞ்சு அதிகாரத்தை எதிர்த்த அவர்களுக்கு குபேர் போன்றவர்களும் வர்க்க எதிரிகளாக கருதப்பட்டனர் . புதிய சூழல் சுப்பையாவிற்கு சாதகமாக இருந்தது . பிரெஞ்சு மற்றும் குபேர் கூட்டணியில் சுப்பையாவால் பிளவை உருவாக்க முடிந்தது . குபேரும் தனக்கான நேரத்திற்கு காத்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்