https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 31 டிசம்பர், 2018

விஷ்ணுபுரம் விருதுவிழா 2018

ஸ்ரீ:




பதிவு :  592 / தேதி 31 டிசம்பர் 2018


விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 







அன்புள்ள ஜெ,

வணக்கம் , விஷ்ணுபுர விருது விழா, அதன் துல்லிய ஒழுங்கு, நிகழ்ச்சி ஒருகிணைப்பில் ஆர்வமுள்ள என்னை போன்றவர்களுக்கு பெறும் நிறைவை தருவதாக இருந்தது . ஏற்பாட்டாளர்களுக்கு இது பெரும் வெற்றி . அவர்களுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .

நான் முதல் முறையாக விஷ்ணுபுர விருது விழாவில் கலந்து கொள்கிறேன் என்றாலும் , பல வருடங்களாக நடந்து வந்தவைகளின் தொகுப்பை உங்கள் தளத்தில் பார்த்தவை மற்றும் வாசித்தவை என்பதால், நிகழ்ச்சி வழக்கமான ஒன்றாக தோன்றினாலும் , குழு ஒத்திசைவின் உச்சம் , பிரமிப்பை அளிப்பதாக இருந்தது . மிக அமைதியாக அவற்றை பார்த்துக்கொண்டிருப்பதே எனக்கு போதுமானதாக இருந்தது. அதற்காகவே வந்தேன். அந்த அனுபவம் இனிதானதாக இருந்தது.

கடந்த பல வருடங்களாக ,ஒரு கூட்டுப் புழுவைப் போல அனைத்திலிருந்தும் உள்ளிழுத்துக் கொண்டுவிட்ட எனக்கு , சில வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட உங்களின் தொடர்பு என்னை மீட்டுக் கொள்ளும் விசையாக எப்போதும் இருந்திருக்கிறது . இப்போது அது கொண்டாட்ட மனநிலைக்கு வரவே ,கோயம்புத்தூர் வந்திருந்தேன்

நிஜமான கொண்டாட்டமான நிகழ்வு. மேடை , உரையாடல் , பேச்சு இவற்றிற்கு அப்பால் அங்கு சுழன்று அடித்து கொந்தளித்துக் கொண்டிருந்த ஒன்றை உணர்வது தனி அனுபவமாக இருந்தது.

நான் உங்களுக்கு எழுதிய பல கடிதத்தில் , உங்களை கண்டடைந்து மிக தற்செயலானது என பலமுறை குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவியிருக்கும் . எனது கருதுகோள் குறித்த தெளிவிற்கும் அதை நோக்கிய தேடலின் பொருட்டும்பல முனைகளில் அலைக்கழிக்கப்பட்டு உங்களை வந்தடைந்தேன்

புடவியின் பெரு விதியாக இயங்கும் நிர்குண பிரம்மத்தின், விதி விலக்காக சகுண பிரம்மத்தை நான் புரிந்து கொள்ள முயலுகிறேன். நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் ராமாநுஜர் குறித்து சொன்னஅழகியல்இதுவாகவும் இருக்கலாம் . அர்ச்சா விக்ரஹத்தை அண்டத்தின் குவி மையம் என்கிற புரிதலையும் அடைகிறேன் . அத்துடனான தொடர்பை அதன் லாலன , பாலனங்களினால் கூட அடையப்படலாம் என்கிற உங்களின் பதில்களில் பெற்றேன். நீங்கள் சொன்ன உங்களின் அத்வைத நிஷ்ட்டையிலிருந்து எனக்கானதைப் பெற்றுக்கொள்ள இயலும் என்கிற எண்ணமே ,என்னை உங்களை நோக்கிய நகர்வை நிகழ்த்தியது என்பது எனக்கு ஆச்சர்யமானது .

எதை எதிர் நோக்கி உங்களுடன்  எனது உரையாடலைத் துவங்கினேனோ . எதில் உங்களுடன் இந்த நீண்ட பயணத்தில் இருக்கிறேனோ, அதிலேயே இதுவரை தொடர்ந்து பயணிப்பது மகிழ்வான ஒன்றாக இருக்கிறது . எங்கோ மனதின் ஆழ்மூலையில் ஏமாற்றமுறுவேன் என ஒன்று  ஓயாது சொல்லிக் கொண்டிருந்தது , பின் என்ன காரணத்தினாலோ அது அமைதியடைதிருக்கிறது .உங்கள் எழுத்துக்களிலிருந்து  நான் அடையும் மெய்மையின் விளைவாக  அதுவே நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன்.  

ஆன்மீகம் பற்றி எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட முன்முடிவுகளை நான்  இறுக்கமில்லாததாக வைத்துக் கொண்டேன் . அதனாலேயே அது நெகிழ்வனானதாக இருந்திருக்க வேண்டும். எனக்குள் இது முரண் எனக்கிற கவலையே ஓங்கியிருந்தது. ஆனால்  புதியவற்றை பெற்றுக் கொள்வதிலும் முன்பே அறிந்திருந்தவைகளை கட்டுடைத்து புதியவற்றை கொண்டு அவற்றை மறு உருவாக்கம் செய்து கொள்வதும்  எனக்குள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . அந்த நெகிழ்வுத்தன்மை காரணமென இப்போது உணர்கிறேன் .

எனது பயணத்தின் பாதையில் இடையில் வரும் சில மையில் கற்களில்  அமர்ந்து , பயணித்த பாதையில் அதுவரை நிகழ்ந்ததை தொகுத்தும் சரி பார்த்துக் கொள்வது என்னுள் எப்போதும் நிகழ்வது . அது நிகழும் போதெல்லாம்  உங்களுக்கு கடிதம் எழுதி என்னை பகுத்துக் கொள்வதுடன் , அடுத்த பயண இலக்கை தேர்ந்தெடுக்க காத்திருக்கிறேன் .விஷ்ணுபுர விருது விழா விருந்தினர்  நரேன் பற்றி குறிப்பில் மீபொருண்மை பற்றிய செய்தி சிறு மின்சார தீண்டலாக உணர்ந்தேன். திரு. ராஜ்கௌதமன் பற்றிய கட்டுரை ஆழம்மிகுந்த பண்பாட்டு வெளியை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது . மிக கறாரான விமர்சனம் .

விஷ்ணுபுரம் வாசிப்பில் தொடங்கி , இப்போது விஷ்ணுபுரம் விருது விழா வரை கடந்த நான்கு வருடமாக பயணித்து வந்துள்ள எனது பாதையை இப்படித்தான் தொகுத்துக் கொள்கிறேன் . நான் நானாக இருப்பதாகவே இப்போதும் உணர்கிறேன் . ஆனால் அதன் மத்தியில் அடைந்த மாற்றங்கள்,புரிதல்கள், கணக்கில் அடங்காதவை . ஆகவே புரிதலும் அதிலிருந்ழு கற்றதும் எனது இடைவெளிகளை நிரப்பியுள்ளது என்றே நினைக்கிறேன்.

அடுத்த இலக்கிற்கான உரையாடலை எனக்குள்  நிகழ்த்துகையில் எனது போதாமை ஒரு முக்கிய காரணமாக எப்போதும் என்முன்னே எழுகிறது .
அதன் பொருட்டே நான் உங்களின் எழுத்துக்களை வாசித்தும் உங்களுடன் உங்களின் எழுத்துக்களின் வழியாக உரையாடிக்கொண்டும் இருக்கிறேன்

நான் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றில் முதன்மையானதுஇன்றில் வாழ்வதுஎன்கிற பெரும் கருதுகோள் அது என்னை புதிய சிந்தனைக்கு எடுத்துச்செல்கிறது. என்னை மீட்டுக் கொண்ட புள்ளி அது என நினைக்கிறேன் .

நன்றி 

ஆழ்ந்த நட்புடன் 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

அடையாளமாதல் - 426 *ஒருங்கிணைவு *

ஶ்ரீ:



பதிவு : 426 / 591 / தேதி 30 டிசம்பர் 2018

*ஒருங்கிணைவு 


எழுச்சியின் விலை ” - 27
முரண்களின் தொகை -01 .




கூடுகை துவங்குவதற்கு முன்பாக இருந்த மனநிலையில் இருந்து  மெல்ல விலகி , அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து எதையெதை எனக்கென விரித்தெடுத்துக்கொள்ள முடியுமோ அதிலேயே எண்ணத்தை குவித்துப்பது என்கிற சிந்தனை மேலோங்கி எழுந்தது . தலைவரையும், நாராயணசாமியையும் கடந்து , எதிர்காலம் குறித்த திட்டமிடலை நோக்கி மெல்ல நான் நகர்ந்து கொண்டிருந்தேன். அங்கு அமர்ந்திருக்கும் இளைஞர்களில் 80 சதவீதம் நபர்கள் கட்சிக்கும்  அரசியலுக்கும்  முற்றும் புதியவர்கள். அக்காரணம் ஒன்றே என்னை இந்த கூடுகை பற்றிய எண்ணத்தைக் கொடுத்தது . அவர்களை ஒருங்கிணைக்கும் விழைவே இந்தக் கூடுகையின் நோக்கமாக இருந்தது . அதை தவிர்த்து மற்றைய விஷயங்களில் இருந்து மனதை விலகி அதை நோக்கி மட்டும் எனது சித்தத்தை  குவிக்கத்துவங்கினேன்

மாநிலம் முழுவதுமுள்ள இளைஞர்களை ஒன்றிணைக்க, அவர்களுடன் குடிமை சமூகத்தை தொடர்புறுத்தம்கூட்டுறவு இயக்கங்களைவடிவமைப்பது குறித்த அழுத்தமான எண்ணத்திலிருந்தேன். என் அரசியலின் கருதுகோள் அது , என மெல்ல உருக்கொண்டு எழுந்தது .எனது அரசியல் அதன் வழியாக அவற்றை மையப்படுத்துவதாகவும் , அதிலிருந்து எழும் ஒத்திசைவு இளைஞர் காங்கிரசின் அடித்தளமாக மாற்றம் பெற  திட்டமிடப்பட்டிருந்தது. பொருளியலையும் அரசியல் கருத்தியலையும் கடந்து , அவர்களை ஒன்றிணைக்கும் பிறிதொரு கருதுகோள் அது என உறுதியாக இப்போதும் நம்புகிறேன்.

கூட்டுறவு இயக்கங்களை வளர்த்தெடுப்பதின் வழியாக அனைத்திற்கும் மாற்றென , மாநில அரசியலில் வலுவாக எழுந்து நிற்க இயலும்,கூட்டுறவு சங்கம் அரசியலின் எனது கருதுகோளென எழுந்ததற்கு , வல்சராஜ் முக்கிய காரணம் . அரசியல் இலக்கென ஏதுமின்றி நினைவுகளை வேரெதலும் குவிக்காது , அதன் ஒழுக்கில் சென்று கொண்டிருந்தேன் . ஒரு கூட்டுப்புழுவைப் போல எனக்குள் ஒடுங்கி இருப்பது எனது வழமையாக இருந்தது . கனம் மிக்க மனத்துடன் எதனுடனும் ஒட்டாமலேயே அப்போது நான் இருந்து கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்கிறேன். பலமுறை எனது ஊக்கமின்மையை , அரசியல் திட்டமிடாமை பற்றி வல்சராஜ் என்னிடம் பேசிய போதும் அவற்றை எனது மௌனத்தால் கடந்து சென்று கொண்டிருந்தேன்  .

நான் முற்றும் எதிர்பார்க்காத சூழலில் மாநில இளைஞர் காங்கிரஸின் மூத்த பொது செயளாலராக நியமிக்கப்பட்ட போது , உற்சாக நிலைக்கு மீண்டு, அமைப்பை முறைப்படுத்த முயன்ற போது , அதனால் எழுந்த அரசியலின் விளையாட்டில் காயமுற்று, மீளவும் அதிலே ஈடுபட எண்ணமின்றி முழுவதுமாக அதிலிருந்து விலகினேன். அப்போது எனது பிறவி பேச்சு குறைபாட்டை வைத்து எள்ளல் செய்யப்பட்ட சமயத்தில் நான் இன்னும் ஆழமாக எனக்குள்ளே சென்றிருக்க வேண்டும் . ஆனால் அப்படி நிகழாததற்கு ஊழ் வேறு கராணங்களை எனக்கென வைத்திருந்தது

உட்கட்சி  ஒருங்கிணைப்பை தலைவர் என்னிடம் கொடுத்திருந்தார். அப்போது என்னைப் பற்றிய எள்ளலால் கயமடைந்திருந்தேன் . அந்த எள்ளலிருந்து கடந்து வெளிவர மாநிலம் முழுவதுமாக சிறு கூடுகை நிகழ்த்தி எனது பிறவிகுறையை மெல்ல வெல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன் . அதை நிகழத்திய போது , ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சூழல்கள் எனக்கு புதிய புரிதலை திறந்து கொடுத்தன.

சிறு கூடுகைகளை நிகழத்திய அந்தப் பகுதிகள் யாவும் நான் முன்னர் பயணித்தவைகளே. ஆனால் இளைஞர் கங்கிரஸில் இருந்த போது அதன் நிஜமான பக்கங்களை தொட என்னால்  இயலவில்லை. அங்கு செயலபட்டுக் கொண்டிருந்த மூத்த தலைவர்களை பற்றிய ஒற்றைப்படை எண்ணமும், எனக்கு கிடைத்த தவறான தரவுகளும் அதனால் எழுந்த முன் முடிவுகளும் அவர்களைப் பற்றிய பிறழவான எண்ணத்தை அன்றைய இளைஞர் அமைப்பின் தலைமை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது. அந்த களத்தில் நாங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்கிற புரிதலை அதன் பிறகே நான் அடைய நேர்ந்தது. காரணம் அது தன் நிஜ முகத்தை இப்போது காட்டிக் கொடுத்து .

நான் சென்று சேர்ந்திருந்த சூழல் நான் எண்ணியிருந்ததில் இருந்து முற்றாக வேறுமாதிரி இருந்தது . அங்குள்ள அனைவருமே கைவிடப்பட்டவர்களாக, காயம் பட்டவர்களாக , உழைப்பிற்கான மரியாதை கிடைக்கப் பெறாதவர்களாக என ஒவ்வொருவரிடமும் ஒரு கதை , ஒரு மனக்குறை , கட்சி குறித்தும் , அதன் தலைவர் சண்முகத்தைக் குறித்தும் ஆழமாக இருந்தது. முன்னர் தாங்கள் அசைக்க முடியாதவர்களாக , தலைமையிடம் நெருக்கம் கொண்டவர்களாக , பலம் மிக்ககவர்களாக எங்களிடம்  காண்பித்துக் கொண்டது வெறும் நடிப்பு மட்டுமே. என்பது உணர்ந்த போது எனக்கது வியப்பாக, வருத்தமளிப்பதாக இருந்தது

அரசியலில் யாரும் திருப்தியுற்றவர்கள் இல்லை . அதற்கு பொறுப்புகளும் பதவிகளும் விலக்கல்ல . காரணம் அதற்கு பொறுப்பில் இருப்பதும் இல்லமலிருப்பதும் எவ்வகையிலும் உதவாது, அனைத்திலிருந்து அவர்களை எவரிடமிருந்தும் வேறுபடுத்திக்காட்டவில்லை என்பதுதான் வேடிக்கை. தலைவர் எனக்கு மிக நெருக்கமானவராக அவர்களுக்கு தெரிந்திருக்கலாம் , அதுவே அவர்களை என்னிடம் நெருக்கம் கொள்ள வைத்தது. மெல்ல தங்களின் குறைகளையும் அதிருப்திகளையும் தயக்கத்துடன் என்னிடம் சொல்லத் துவங்கினர் . பொருளியல் பலமுள்ள தேர்தல் அரசியலை மையமாக கொண்டவர்களைத் தவிற்த்து கட்சி அரசியலை பிரதானமாக கொண்ட அனைவரும் தங்களின்அரசியல் பாதுகாப்பின்மைஉணர்வை முன்வைத்தார்கள். என்னை முதலில் இது திடுக்கிடலை கொடுத்தாலும் , நான் ஆற்ற வேண்டிய களம் மெல்ல தெளிந்து வரத்துவங்கியது.

நான் தேர்தல் அரசியலை தங்களின், வழிமுறையாக எடுக்காதவர்கள், அல்லது எடுக்க இயலாதவர்கள் , கட்சி அரசியலில்  தவிற்க இயலாதவர்களாக உருப்பெறுவது எப்படி என்கிற ஆழ்ந்த யோசனையில் இருந்தபோதுதான் , கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும் அதை ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனை எழுந்தது. தேர்தல் அரசியலாளர்களை கடந்து மேலெழுந்து வரும் திட்டம் மெல்ல உருவாகி வந்தது அப்போதுதான் . என நினைக்கிறேன்.

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்