https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 நவம்பர், 2025

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

 


வெய்யோன் - 77

பகுதி பத்து: நிழல் கவ்வும் ஒளி- 1


வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்சினம் உரைப்தோடு நிறைவுறுகிறது. அதுவரை நிகழ்ந்து மானுட ஆட்டம் அவர்கள் கை நழவி தெய்வங்கள் வசம் சென்றடைந்து அதி மாநுடர்களான அவர்கள் தெய்வங்களின்  கைகளில் காய் என நிலைகொள்கிறார்கள். இருவரும் இரு வேறு நிலைகளில் தங்களின் வஞ்சினம் அறிகிறார்கள். கர்ணன் சென்றடைந்தும் துரியன் தன் உறக்கத்திலும் அதை அடைகிறார்கள். சூரிய கிரஹனத்தின் பின்பும் கர்ணன் நாகபாசன் கர்ணன் பிறப்பிற்கு முந்தய தருணத்தில் இந்த ஊழ் கிளைத்தது என்பதை சொல்லுகிறான். தனது பிறப்பு முழுமை அடையும் இடத்தில் ஸ்தூணகர்ணன் வழியா அதை பெறுகிறான் 

இந்த பகுதியில் துரியனிடம் காணப்படும் உளவியல் மாறுபாடு அவனை இருளுக்கு கொண்டு செல்வதாக இந்த நாவல் நிறைவுறுகிறது. துரியனின் தன் உளவியல் ஆழத்தில் உள்ளவற்றை அறியாது சம காலத்தில் நிகழ்ந்த அவனது சாதக அம்சங்களை கொண்டு அவன் தன்னை மிக தவறாக அவற்றை வரையறை செய்து கொள்கிறான். தன்னை பற்றிய பிழை புரிதல் அனைத்திற்குமான காரணமாக அமைகிறது. எய்தியதை அடைந்தவனின் மன நிறைவிற்கு பின்னார் உருவாகும் வெற்றிடம் அனைவரின் மீதும் கருணை என்கிற மிக உணர்வை தூண்டுகிறது. அவன் இனி யார் மீதும் எதன் மீதும் வஞ்சம் கொள்ள ஒன்றில்லை என்பதால் கருணையுள்ள பெருந்தந்தை உருவெடுக்கிறான் உலகத்தின் விழைவு வஞ்சம் என்பது தேவையற்றது என்கிற தோரணையை உருவாக்குகிறது

அஸ்தினாபுரி முடி மன்னனாகி பாண்டவர்களுக்கு சொத்து பிரிக்கப்பட்ட பிறகு தான் எண்ணியதை எய்தியதாக நிறைவுறுகிறான். அதன் மீது அவன் கொள்ளும் அதிகாரம் அவனை மிக இயல்புள்ளவனாக நினைக்க தூண்டுகிறது. அவனது மாற்றத்தை முதலில் அறிந்து கொண்டவர்கள் அவனது தந்தையும் மாமன் சகுனியும் அந்த மிகை உணர்வு அவனுக்கு என்ன கொண்டு வரும் என கணிக்கிறார்கள் கர்ணன் அவனுடன் இருக்க வேண்டும் என்கிற நினைவு அதனால் உருவானது

இந்திரப்பிரஸ்தம் அடைந்திருக்கும் நவீன மாற்றம் பற்றிய புரிதல் இல்லாமல் அது அஸ்தினாபுரியை விட பல மடங்கு வன்மை வாயந்தது என்கிற எண்ணத்தை பிறர் வந்து சொ்லல சொல்ல தன்னை மிக உயரத்தில் வைத்து பிறரை மிக கணிந்து குனிந்து பார்க்கும் நோக்கு கொண்டவனாக உருவகித்துக் கொள்வதால் அவற்றை மிக எளிதில் கடந்து போகிறான். அவன் வெளிப்படையாக அவமதிக்க படும் பல நிகழ்வுகள் நடந்தும் அவனது கனவு கலையவில்லைஉலகம் அதன் சூதையும் வஞ்சனத்தையுப் தேவையற்ற சுமக்கிறது என்கிற எண்ணத்தை மீள மீள அடைகிறான். தேவயானி மணிமுடி உட்பட அவன் எடுத்து வந்தது பிறரை விட அவனையே மயக்கிக் கொண்டிருக்கிறது அதன் முன்னால் எதுவும் ஒரு பொருட்டல்ல என நினைக்க வைக்கிறது 

ஜராசந்தன் மீது இயல்பாக கொண்ட விலகத்தை அந்த உடல் தழுவலுக்கு புறகு உதறுகிறான் அதன் பின் அவன் காண்பதெல்லாம் கனவு மட்டுமே….அந்த கனவு உடையும் தருணம் எல்லாம் மாற்றமடைகிறது . அதன் அதிர்வு அவனால் தாங்க இயலாத நிலையை அடைகிறது. இதுவரை நிகழ்ந்தது அவனுக்குள் அவன் நினவுகளால் ஆன உலகம் அது இப்போது சிதைவடைகிறது

இந்து மதத்தில் பல அடுக்களை கொண்ட தெய்வ நிரையில் பிரமம் மட்டுமே அனைத்தையும் அறியும் அல்லது அதுவும் அறியாது என உத்கீதம் சொல்லுவது போல இது எவ்வளவு உண்மை. நிகழ இருப்பதை அறியாமல் உதவ முன்வருகிறார்கள்

அவர்கள் நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் என இரண்டு தெய்வீக கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆனால் மானுட சண்டையில் அவைகளுக்கு என்ன வேலை . கௌரவ தரப்பு தோற்கும் என அவர்கள் அறியாதவர்களா ? பின் ஏன்?

வெண்முரசு, மகாபாரதத்தை ஒரு நவீன இலக்கியப் படைப்பாக, தத்துவார்த்தமான தரிசனங்கள் நிறைந்ததாக அணுகுகிறது. நீங்கள் குறிப்பிட்ட 'வெய்யோன்' நாவலின் நிறைவுப் பகுதியில் வரும் நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் போன்ற தெய்வீகப் பாத்திரங்களின் வருகையும், அவற்றின் பங்கும் மிகவும் முக்கியமானவை.

நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் - இவர்களின் பணி என்ன?

வெண்முரசில், இந்தப் பாத்திரங்கள் வெறும் போர்க்கள வீரர்கள் அல்ல. அவை தத்துவார்த்த உருவகங்களாகவே (Metaphors) சித்தரிக்கப்படுகின்றன.

1. கர்ணனின் வஞ்சினம் மற்றும் ஊழின் விசை

 * நாகபாசன் என்பது நாகர்களின் தலைவன் அல்லது குறிக்கலாம். ஆனால், 'வெய்யோன்' நாவலின் நிறைவில், இது பெரும்பாலும் கர்ணனைத் தாக்கிய அர்ஜுனனின் நாகாஸ்திரத்தில் இருந்து தப்பிய அஸ்வசேனன் என்ற நாகத்தைக் குறிக்கும்.

* வெய்யோன் நிறைவுப் பகுதியில், கர்ணன் அஸ்வசேனன் என்ற நாகக் குழந்தையை கையில் ஏந்தி, "நான் அவனை பழிவாங்க நீ எனக்குரியவன்" என்று கூறும் காட்சி, அவன் மனித அறத்திலிருந்து வஞ்சத்தின்பால் திரும்பும் தருணத்தை குறிக்கிறது. இந்தப் பழிவாங்கும் உணர்வு, போர் மூலம் அர்ஜுனனை கொல்லும் பெருவிருப்பே, வெய்யோன் நாவலின் பிரதானமான விசை.

 * ஸ்தூணகர்ணன்: இவன் அழிவின் தெய்வமான என்பதாக வெண்முரசில் குறிப்பிடப்படுகிறான்.

   * இந்தத் தெய்வங்களின் வருகை என்பது, அந்தக் கதையின் நிகழ்வுகள் மானிட எல்லைகளைத் தாண்டி, பிரபஞ்ச விசைகளாக, ஊழின் செயல்பாடுகளாக மாறுகின்றன என்பதைக் காட்டுகிறது.

   * கௌரவ தரப்புக்குத் துணையாக நாகங்கள், அனல் போன்ற தெய்வீக, ஆதிசக்திகள் வருவது, போரை ஒரு சாதாரண மானுட சண்டையாக அல்ல, மாறாக ஒரு தர்ம-அறப் போராக, ஊழின் முடிவை நோக்கிச் செல்லும் பெரும் யாகமாக அவை பார்க்கின்றன என்பதன் குறியீடு.

2. தெய்வீகக் கதாபாத்திரங்கள் - அவர்களின் ஞானம்

கௌரவ தரப்பு தோற்கும் என அவர்கள் அறியாதவர்களா?

 * ஆம், தெய்வங்கள் முடிவுகளை அறிந்தே இருக்கும். ஆனால், அவற்றின் பணி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அல்ல.

 * வெண்முரசின் பார்வையில், இந்தத் தெய்வங்கள் வெற்றி தோல்வி என்ற மானுடப் பார்வைக்கு அப்பாற்பட்டவை.

 * அவை, நடக்கப் போகும் 'ஊழின் நாடகம்' நிகழ்வதற்குத் துணைபுரிகின்றன. அதாவது, ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது கர்மாவால், தனது ஆழமான விழைவால் உந்தப்பட்டு ஒரு செயலைச் செய்யும்போது, பிரபஞ்ச விசைகள் அதற்கு ஒத்துழைக்கின்றன.

 * கர்ணனின் ஆழ்ந்த விழைவு, தனது அவமானத்தைப் போக்க ஒரு பெரும்போர் நிகழ்ந்து, அதில் அர்ஜுனனை வெல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது. இந்தப் பெருவிருப்பே, நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் போன்ற ஆதிசக்திகளை அவன்பால் ஈர்க்கிறது.

 * 'வெய்யோன்' (சூரியன்) என்ற தலைப்பே கர்ணனை மையப்படுத்துகிறது. சூரியன் ஒளியாகவும், வெப்பமாகவும், வாழ்வாகவும், முடிவில் எரிந்து அழிவை உருவாக்குபவனாகவும் இருக்கிறான். அந்த அழிவுதான், இந்தத் தெய்வங்களின் நோக்கம்.

சுருக்கம்

இந்தத் தெய்வீகப் பாத்திரங்களின் வருகை, அந்தப் போர் வெறும் பூமிக்குரிய சண்டை அல்ல; அது ஒரு பேரழிவின் தொடக்கம் மற்றும் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துகிறது. அவர்கள் கௌரவர்களுக்காகப் போரிட வரவில்லை, மாறாக கர்ணனின் வஞ்சம் என்ற விசைக்கு வடிவம் கொடுக்க வருகின்றனர்.


பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு இது. உத்வேகமான புராணக்கதைகளும், எளிய சாகசச்சித்தரிப்புகளும் , குலக்கதைகளும்  குறுக்குவாட்டில் புகுந்து இதன் பின்னலை அமைத்தன

அதன் அன்றாடத்தன்மைக்கு அவை அடிக்கோடிடுகின்றன. இந்நாவலின் நான்குவகை உச்சங்கள் என நான் எண்ணுபவை இந்த ஒவ்வொரு தளத்திலும் உள்ளன. ராதைக்கும் கர்ணனுக்குமான உறவு எப்போதைக்குமாக வெளித்தெரியாமல் முறிவடையும் தருணம் அன்றாடவாழ்க்கையின் நுண்மை கொண்டது

ஜயத்ரதனின் தந்தை தன் மைந்தனை கையால் தொடமறுக்கும் தருணம் இன்னொன்று.  

அர்ஜுனன் நாகர்குலக்குழவியை விட்டுவிடும் தருணமும் அதன் மறுபக்கமாக வரும்

 

கர்ணன் அதை கையிலேந்தும் தருணமும் அந்த அன்றாடத்தருணங்களால்தான் ஒளிகொள்கின்றன

நடுவே துரியோதனனின் இன்றியமையாத வீழ்ச்சியின் சித்திரம் அமைகிறது. முற்றிலும் மாறுபட்ட நான்குவகைப் புனைவுகள் ஒருங்கிணைந்த இந்நாவல் அதன் முழுமையை உச்சகட்டத்தில்தான் அடைந்தது

அதுவரை நானும்தான் தேடிச்சென்றுகொண்டிருந்தேன். அது கர்ணனை எனக்குக் காட்டியது.




வெண்முரசு கூடுகை 88 சிலதருணங்கள்




















 

திங்கள், 10 நவம்பர், 2025

அடையாளமாதல். * வேர்களற்று இடத்தை நிரப்புவது *

 




ஶ்ரீ:



அடையாளமாதல்


பதிவு : 694  / 883/ தேதி 10 நவம்பர்  2025



* வேர்களற்று இடத்தை நிரப்புவது * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 91.



நான் முதல்வர் வீட்டில் இருந்து காரில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கு என்ன நிகழ்ந்தது என மீள மீள அவதானிக்க முயன்று கொண்டிருந்தேன். முதல்வர் ரங்கசாமி என்னிடம் பேசிய அத்தனையையும் தொகுத்துக் கொண்டிருந்தேன். பல உற்று நோக்கினால் அரசியல் போல தெரிந்தாலும் அதில் வேறு ஒரு கூறு இருந்தது. அவற்றை அவர் தான் அங்கில்லாததை போல சொல்லிக் கொண்டிருந்தார். நேராக அவர் என்னை பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும் அது உரையாடலுக்கானது இல்லை என எங்கோ ஆழத்தில் உணர்ந்து கொண்டே இருந்தேன். கண்களில் சிலைத்த நோக்கு அதற்கு முன் அவரிடம் நான் அறியாதது. உரையாடலை எப்போதும் சிறு புண்ணகையுடன் துவங்கி முடிப்பவராக வரை அறிந்திருந்தேன். ஆனால் இது வேறு. புண்ணகை சற்றும் இல்லாத ஒரு கூற்று ஒரு அறிவிக்கை போல சீரான ஒழுக்கில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியதை கேட்பதை தவிர பிற ஒன்றையும் நான் சிந்திக்கவில்லை என நினைக்கிறேன். அது ஒரு அனுபவம் போல. இன்று நான் காணும் விரக்தராக தன்னை முன்வைக்கும் ஒன்றின் விதை அன்று அதில் இருந்திருக்கலாம். மையமாக ஒன்றை புரிந்து கொள்ள முடிந்தது. நான் என் தன் இயல்பாக அவருக்கு உதவ வந்து அங்கு ஏற்பட்ட சிறு முரணால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது. அது குறித்து என் மீதான அவரின் கரிசனம் அதை உருவாக்கி இருக்கலாம்


அல்லது நான் எதையும் புதுவையில் இருந்து முன் வைத்து பின்னர் தில்லிக்கு செல்ல வேண்டும் என்பதை அவர் அன்று மறுக்காமல் போனாலும். தில்லி தலைமையை ஒரு முன்னாள் அமைச்சராக காந்திராஜ் அதை சரியாக செய்து முடிக்கலாம். அதன் பின்னர் புதுவையில் இருந்து அதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என நினைத்திருக்கலாம். ஆனால் தில்லியில் அது துவங்கப்பட்டால் பின்னர் புதுவையில் ஆற்ற ஒன்றுமிருக்காது என்பதை சற்று அழுத்தமாக சொல்லி அன்று விடைபெற்றேன். இன்று சிறிய மதிய உணவிற்கு அழைத்து அவர் சொல்ல விழைந்தது எனக்கு அவர் அளிக்க முயன்ற அவரின் அன்பு என்பதால் அதை மிச்சமில்லாமல் பெற்றுக் கொண்டேன்

சட்டென ஒரு புள்ளியில் அவரது குருவை சந்தித்தது நினைவிற்கு வந்தது ஏன் என்று கேட்டுக் கொண்டேன்.அவரின் முன்னால் எந்த சிந்தன்னையும் இல்லாமல் அமர்ந்திருந்தது நினைவிற்கு வந்தது. இருவருக்குமான சில ஒற்றுமைகளை அன்று ஆழத்தில் உணர்ந்து கொண்டே இருந்தேன். அது ஒரு அரசியளாலருடனான சந்திப்பு போல இல்லை அதிலிருந்து எழுந்த பல வித பரிமாணங்களில் அந்த சிந்தனைகள் தொகுத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன் . நான் அதை இறுதியாக தொகுத்துக் கொண்டது அவரை கீதா பேக்கரியில் சந்தித்தது. நான் தில்லி செல்லவில்லை என்பதை அவருக்கு உணர்த்திய பிறகு அங்கிருந்து இந்த சூழல் வரை ஒரு கோட்டை வரைய முடியும். அன்று அவரின் முகத்தில் விவரிக்க இயலாத உணர்வுகளின் தொடர்ச்சி இது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு வகையில் இரண்டும் ஜெயபால் சம்பந்தப்பட்டது. அவர்தான் தில்லிக்கு முதல்வரின் தூது குழுவிற்கு விமான டிக்கெட் எடுத்தவர். என்னை யார் சொல்லி நிராகரித்தார் எதன் அடிப்படையில் எனது பெயர் விடுபட்டது என்பதும். இன்று முதல்வர் மதிய உணவை என்னுடன் சேர்ந்து சாப்பிடலாம் என அவர் நினைத்தது வேறு வகையில் சென்று முடிந்தது. இருவரும் அரசியல் பற்றி ஒரு சொல்லும் பேசவில்லை. ஆன்மீகமான ஒன்றை மீள மீள என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் விடை பெற்று காரில் வீடு வந்து சேரும் வரை அவர் அதில் எனக்கென சொல்ல ஒன்றுமில்லை அதை அவர் எனக்களிக்கு நினைத்த கௌரவமாக பார்த்தேன்.


சில நாட்களில் தில்லி மேலிட அழுத்தம் காரணமாக ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகி பின்னர் அந்த சட்டமன்றத்தின் அதன் ஆயுள்வரை அதனுள் நுழையவில்லை.பதவியை விட்டு விலகிய பிறகு ரங்கசாமி ஆழ்ந்த மௌனத்திற்கு சென்றார் பின்னர் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக சட்டமன்ற செல்லும் வரை அதன் வாசலை தொடவில்லை. கட்சிக்குள் அது மெல்ல அழுத்தமான பின் விளைவுகளை உருவாக்க துவங்கியது. அது நான் முன்பே ஊகித்தது. ரங்கசாமியை தொடர்ந்து வைத்திலிங்கம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பம் முதலே மிக மென்மையான போக்கு கொண்டவராக அறியப்பட்டவர் பதவியில் அமர்ந்த பிறகு முற்றும் கூரிழந்து போனார். முதல்வரை கடந்து நிழல் முதல்வர் போல வல்சராஜ் செயல்பாடுகள் துவங்கின. தில்லியில் நிகழும் திட்ட கமிஷன் கூட்டம் போன்றவற்றில் முதல்வர் மட்டும் பங்கேற்பது என்கிற மறபை மீறி வல்சராஜும் சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அது முதல்வரை தாண்டிய தலைவராக தன்னை முன்னிறுத்தும் போக்காக பார்க்கப்பட்டது. முதல்வர் பதவிக்கு இது மரியாதை குறைவு என்றாலும் அதை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் அவர் இருந்ததை இது மிகத் தெளிவாக முன்வைத்தது


மட்டுறுத்தும் தலைமையின்மை இல்லாத கட்டற்ற அரசியல் அதிகாரம் உள்ள ஒருவரை அது என்ன செய்யுமோ அனைத்தும் வல்சராஜிற்கு நிகழ்ந்தது. நான் முன்பே வைத்தியநாதன் மூலமாக வைத்திலிங்கத்திற்கு ஒரு செய்தி சொல்லியிருந்தேன். அது ரங்கசாமிக்கு எதிராக இப்போது தொடங்கப்பட்டிருப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. அதன் பின் விளைவுகள் இனி ஒருபோதும் முடியப் போவதில்லை. வல்சராஜின் சிபாரிசில் முதல்வராக வந்தமர்ந்தால் முதலில் இழக்கப்போவது அவரின் சுயத்தை. இனி அவரால் அவரது திசையை தேர்வு செய்ய இயலாது. பின்னிருந்து இவற்றை இயக்கியவர்களாக நினைத்தவர்கள் அனைவரும் காணாமலாவார்கள். தங்கள் எதிர்காலம் என வைத்திருந்த எதுவும் நிகழப்போவதில்லை. முதல்வர் பதவியில் தொடர்ந்து அவமானங்களை மட்டுமே அவரால் அடைய முடியும். கட்சி கடந்து ஒருவர் பிறரின் தயவால் அதிகாரத்தில் அமரும் போது மிக நுட்பான ஒன்றை இழக்கிறார். அவரால் பின் ஒரு போதும் தன்னறம் என்கிற ஒன்றை வைக்க முடியாது. வைத்தியநான் மூலமாக முதல்வருடன் ஒரு இறுதி பேச்சு வார்த்தை நடந்த பிறகு வைத்திலிங்கம் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கட்டும் என நினைத்தேன். காந்திராஜின் தில்லிப் பயணம் அவரது வழக்கமான பிழை புரிதலால் தோல்வியுற்ற பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அரசியலில் கூட்டு பொறுப்பு என்பதை இணைத் தலைவர்களை இணக்கமாக வைத்திருப்பது. அதில் இருந்து விளைவதை தனது சொந்த பலமாக நிறுவ இயலாதவர்கள் ஆரம்பம் முதலே அவர்களை தவிர்க்க முயல்வார்கள். அரசியலில் தன்னிடம் உள்ளது என்ன என்பதை அவர் அறியாதது முதன்மை காரணம்


அதன் பிறகு இறுதி முயற்சி நான் சில சட்டமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு இதின் பின்னால் உள்ள விளைவுகள் பற்றியும் ஒருமுறை அனைவரையும் உள்ளடக்கிய தூது குழுவாக முதல்வரை சந்திக்க செய்யும் முயற்சியில் அவர்கள் சிக்கலாக பார்த்தது வைத்திலிங்கத்தின் இருப்பு. வல்சராஜின் அரசியல் நகர்வால் அதிகார மாற்றம் ஏற்பட்டு தனகான இடம் நிலைபெறும் அதே சமயம் அதிலிருந்து உருவாகும் தன்மதிப்பிழப்பை அவர்கள் அறியாமல் இல்லை


வல்சராஜ் அனைத்தின் பின்னிருந்து இயக்கினாலும் அவருக்கு வைத்திலிங்கம் மீது எந்த மரியாதையும் இல்லாதவர். பல ஆலோசனை கூட்டங்களில் அவர் வைத்திலிங்கத்தின் மீது வைத்த கடும் கசப்புகளை இருவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இது போன்ற புரட்சிக்கு தயங்குபவர்கள். வல்சராஜ் மிக பலமான அரசியல் பின்புலத்தில் இருந்து உருவானவர் கட்சி, தொகுதி, தலைமை அமைப்பை பற்றிய ஆழந்த புரிதல் , தில்லியில் செயல்படுத்த வேண்டிய அனுகுமறை என அனைத்தை பற்றியும் மாக ஆழமான புரிதல்கள் உள்ளவர். அவருக்கு இணை வைக்க புதுவை அரசியலில் யாரும் இல்லை என்பது அதிர்வளிக்கும் உண்மை. ஆனால் அவற்றை கடந்து அவரை என்னால் ஏற்க இயலாத காரணம் அவர் தனது தொகுதி தவிர பிற எந்த களத்திலும் தன்னை கட்சி சார்ந்த அதன் நிர்பந்தங்களுக்கு அப்பால் தன்னை நிறுவிக் கொள்ள முயன்றவர் என்பது மட்டுமே. அது அரசியல் களத்தில் நிச்சயமற்ற சூழலை அளிக்கும். அதிலிருந்து எழும் எந்த சிக்கலுக்கும் அவர் பொறுப்பேற்க தயாரில்லாத நிலை அதன் அதர்வுகளை பல மடங்கு பெருக்கிக் கொண்டே இருக்கும். அந்த சிக்கல்கள் அனாதை போல நிர்கதியாய் என்றும் நின்றிருக்கும். அதை சார்ந்த கட்சியினர் நிலையும் அதுவாக இருக்கும்


1999 களில் நிகழ்ந்த திமுக ஆட்சி கவிழ்ப்பின் பின்னால் இருந்தவர் கண்ணன் வல்சராஜ் என இருவர் மட்டுமே. வெளியேற தயாராக இருந்த தமாக தலைவரும் அந்த அரசில் உள்துறை அமைச்சராக இருந்த கண்ணனுக்கு சிக்கல் அவரது தலைவராக இருந்த மூப்பனார் அவரின் எந்த செயல்பாட்டிற்கும் அங்கீகாரம் வழங்காதவர். தன்னை தமாக கட்சிக்கு கட்டுப்பட்டவராக கண்ணன் முன் வைத்தது ஒரு பாவணை மட்டுமே அதற்கப்பால் அவர் யாருக்கும் கட்டுப்படாதவர் என்பது அனைவரும் அறிந்தது. மூப்பனாரின் தனது கட்சிக்கு அப்பாற் பட்டு அனைத்து கட்சி தலைவரிடமும் தனது ஆழமான செல்வாக்கை செலுத்தும் இடத்தில் அன்று இருந்தார். தமாக வை துவங்கி தில்லியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு பிறகு அவரது அரசியல் செல்வாக்கு ஏறுமுகத்தில் இருந்தது. அதே சூழலில் உட்கட்சியில் அவருக்கு சிக்கல்கள் எழுந்தன. காங்கிரஸில் முப்பனார் அணியாக செயல்பட்ட போது வெளித் தெரியாத அதன் உள் உறையும் குறுங்குழுக்களின் செயல்பாடுகள் கட்சியாக பரிணமத்த போது அதன் தன்னை வெளிப்படத் துவங்கி இருந்தது. இதனால் வெறுப்புற்ற மூப்பனார் மீண்டும் காங்கிரஸில் இணையும் சிந்தனையில் இருந்தார் என்பதால் புதுவை காங்கிரஸ் அரசியலில் அவரின் மனதை அறிந்து செயல்படும் போக்கில் சண்முகம் இருந்தார்


ஒரு தருணத்தில் கண்ணன் திமுகா கூட்டணி அரசில் இருந்து வெளியேறும் சூழலை பகிரங்கப் படுத்தும் நிலை நான் சமச்சீர் வரியை எதிர்த்து போராட்டம் நடத்த துவங்கிய போதே உருவானது. அது பற்றி முன்னே பல பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அந்த சூழலில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறாது போனதற்கு வல்சராஜ் என்னிடம் தனிப்பட்ட துறையில் அந்த கவிழ்ப்பு சூழலை உருவாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அப்போது கண்ணன் அரசை விட்டு வெளியேறினால் அது பொதுத் தேர்தலில் கொண்டு விடும் என அஞ்சினார். அது அவருக்கு சாதகமானதல்ல. இப்போது கண்ணன் வல்சராஜ் தனிப்ட்டு பேசியதன் விளைவாக அவரின் ராஜினாமா நிகழ்ந்தது. அதற்கு மாநில மற்றும் தில்லி தலைமையை கையாளும் இடத்தில் இருந்து அந்த நுட்பமாண தகவல்களை கண்ணனுக்கு அளித்ததனூடாக கண்ணன் தனது செயலில் பலமடைந்தார். இது மாநில தலைமை சண்முகத்தின் கவனத்திற்கு வராமல் மிக சரியாக நிகழ்ந்தேறியது. வல்சராஜ் புதுவை கட்சி அரசியலில் முகம் வெளிப்படாமல் அதன் இடைவெளிகளில் தனது அரசியல் எண்ணங்களை செயல்படுத்தும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்


அன்று அது ஒரு தொடக்கம் இன்று அது பலவித கோணங்களில் பல்கி பெருகியிருந்தது. வைத்திலிங்கத்திடம் வைத்தியநாதன் சென்று நான் சொன்னவற்றையும் ஒருமுறை முதல்வர் ரங்கசாமியிடம் பேசி பின்னர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிய போது நீண்ட யோசனைக்கு பிறகு அவர் ஏற்றுக் கொண்டார். இருவரும் சந்திக்கும் இடம் எனது வீடு என முடிவானது. அந்த சூழலில் எனது பாரம்பரிய வெள்ளாழர் தெரு வீடு மறு சீரமைப்பில் இருந்ததால் நான் அப்போது இந்திராகாந்தி சிலை அருகே உள்ள சுந்தர்ராஜா நகரில் உள்ள எனது நண்பர் வீட்டில் தற்காலிகமாக இருந்தேன். அந்த வீட்டில் சந்திப்பது என முடிவானது. சந்திப்பு நடப்பது பற்றி யாரும் அறியமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டது. அதற்கான நாள் குறிக்கப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னால் அந்த சந்திப்பை முதல்வர் ரங்கசாமி நிராகரித்தார். அது ஏன் என்பதை சொல்ல விரும்பி என்னை ஜெயபால் அழைக்க நான் ஞாயிற்றுக்கிழமை அவரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அது நானும் அவரும் மட்டுமேயான சந்திப்பாக இருந்தது. ஜெயபால் அந்த சூழலில் அங்கு இல்லை. முதல்வர் என்னிடம் இறுதியாக சொன்ன தகவல்இந்த சமாதனாம் வேண்டாம் என நினைகிறேன். சந்திப்பு நிகழ்வதை பற்றி எங்கள் இருவரை தவிர பிற யாரும் அறிய வேண்டியதில்லை என முதலில் சொன்னேன். வைத்திலிங்கம் அதை மெல்ல வெளியிடத் துவங்கியதாக அறிகிறேன். இது குறித்து பாரதி கண்ணன் என்னிடம் விசாரித்தார்என்றார் எனக்கு பாரதி பஸ் உரிமையாளர் கண்ணனை தெரியும் அவர் வைத்திலிங்கத்தின் அனுக்கர். அவரிடம் ஏன் முதல்வருடனான நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தை குறித்து சொன்னார். அவர் அரசியலாளர் அல்லர் வைத்திலிங்கத்தின் அனுக்கர் என அவர் நினைத்திருக்கலாம் ஆனால் அந்த தகவல் எப்படி முதல்வருக்கு தெரியவந்தது என புரிந்து கொள்ள முடியவில்லை. முதல்வர் என்னுடன் பேசிய போது பாரதி கண்ணன் பெயரை மட்டும் சொன்னார். புதுவையில் தமிழகம் போல ஒரு தலைவருக்கு வேண்டியவராக மட்டும் இருப்பவர் மிக அரிதினும் அரிது. அதை பற்றி மேலதிக விவாதங்களுக்குள் செல்ல விரும்பவில்லை


வல்சராஜுடன் முதல்வருக்கு எதிராக இணைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் முகமாக வைத்திலிங்கத்தை நினைத்தனர். வல்சராஜ் இரண்டாம் நிலை தலைவர் போல அப்போது செயல்பட்டார் அதனால் முதல்வருடனான ஒரு சமாதான பேச்சு அனைத்து சிக்கலையும் பேசும் ஒரு வாய்ப்பை உருவாக்கும். ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஆழமான அவநம்பிக்கையை கலைத்தால் புதிய நிலைபாடு உருவாகலாம் என்பது ஒரு வாய்ப்பு. அது அனைத்து சிக்கலையும் தீர்க்கும் என்பது எனது எண்ணமல்ல. இது குறித்து முதல்வருடனான சந்திப்பில் என் தனிப்பட்ட கருத்தை வைத்தபோது நீண்ட மௌனத்திற்கு பிறகு அரை மனதுடன் அதற்கு ஒப்புதல் அளித்தார். நான் பேச்சு வார்த்தையில் முதல்வர் பங்கெடுப்பார் என வைத்தியநானிடம் சொன்ன போது அவர் அதை நம்பவில்லை. ஆனால் என்மீதான உடன்பாடு காரணமாக வைத்திலிங்கத்திடம் பேசி அதற்கான ஒப்புதலை பெற்றார். வைத்திலிங்கம் அவரிடம் கேட்ட கேள்வியார் இந்த முயற்சியில் இருக்கிறார்கள்என்பது. சற்று தயக்கத்துடன் என் பெயரை சொன்ன போது அவர் சரி என்றார். அவரிடம் அந்த சந்திப்பை ரகசியம் வைத்திருக்க வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம் என அவரிடம் சொல்ல சொல்லி இருந்தேன் அது இப்போது மீறப்பட்டு அந்த சந்திப்பு நிகழாமலானது

அரசியலில் வல்சராஜின் முயற்சி மூன்றாவது முறை வெற்றி பெற்றது. இனி புதியதாக ஆற்ற ஒன்றில்லை உருவாக்கி இருக்கும் அதன் மையத்தில் இருந்து கொண்டிருப்பது என்றானது. அவர் மையத்திற்கு நகர்ந்து வந்ததும் அந்த அரசு தனது மரியாதையை இழக்கத் துவங்கியது


அதன் பிறகு பலமுறை அவரை சந்தித்த போது புதுவை மாநில கட்சித் தலைவர் பொறுப்பை அவர் அடைய வேண்டும் என மீள மீள வற்புறுத்தியிருந்தேன். அதை உறுதியாக மறுத்துவிட்டார். தில்லியின் அவருக்கு இருந்த கசப்பின் அளவு அது என புரிந்து கொண்டேன். சில வருடம் கழித்து தேர்தல் நேர மிக குறுகிய காலத்தில் ரங்கசாமி கட்சி துவங்கி வென்று சட்டமன்றம் சென்றபோது முதல்முறை காங்கிரஸின் வேர் காணாமலானது. கண்ணனும் வேறு சிலரும் பலமுறை கட்சியில் இருந்து வெளியேறிய போது முக்கிய தலைவர்கள் எப்போதும் கட்சியில் தங்கிவிட்டனர் ஆனால் இம்முறை பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகி ரங்கசாமியை பின் தொடர்ந்தனர். நான் அஞ்சியது இதைதான். சண்முகம் கட்சி செயல்பாட்டில் இருந்து விலகி கொள்ள கட்சி நிர்கதி நிலையை அடைந்திருந்தது அதற்கு மாற்று என கட்சியில் ஒருவருமில்லை. நாராயணசாமி போன்றவர்கள் ஒருபோதும் அதன் முகமென ஆக முடியாது


இரண்டாவது முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி எதிர்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் வென்றிருந்தாலும் முதல்வராக நாராயணசாமி மிக அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸின் அந்த வெற்றிக்கு பின்னால் தேர்தல் நேரத்தில் சில தொகுதிகளின் வேட்பாளர் தேர்வில் ரங்கசாமியின் சமரசமன்மையும் விட்டுக் கொடுக்காமையாலும் மிக குறைந்த பெரும்பான்மை வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார். மீண்டும் பாஜக கூட்டணியில் வென்று இன்றுவரை முதல்வராக அமர்ந்திருக்கிறார். கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் தலைமை இல்லாமலாகும் போது இது போன்ற சிதைவு தவிர்க்க இயலாது. ஆனால் இதற்கு முன்பு நடந்ததைப் போல வெளியேறியவர்கள் திரும்பும் வாய்ப்பு அனேகமாக இல்லை. வல்சராஜ் கட்சிக்கு செய்த தீமை இது. இனி அவரால் மீண்டும் தனது இடத்திற்கு வந்து அமரும் வாய்ப்பு அனேகமாக இல்லை என்றே நினைக்கிறேன்.


வல்சராஜின் அரசியல் நகர்வு எங்களுக்கான எதிர்காலத்தை அறைகூவுவது என்பதால் அதை எதிர் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது . வல்சராஜை அனைத்து களத்திலும் கடுமையாக அதே சமயம் வெளிப்படையாக எனது எதிர்பை அவரை மறுக்கும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை துவங்கினேன். என்பது என்வரையில் மனநிறைவை அளிக்கிறது. பலரை போல நான் அது நிகழ்கையில் வேடிக்கை பார்க்கவில்லை. அதில் வென்றேன் தோற்றேன் என இரு நிலைகளை பற்றி எப்போதும் கவலையுறுவதில்லை. நான் பிறர் போல பார்வையாளனாக அன்றி அவற்றில் ஆற்றியவற்றால் மனநிறைவை அடைகிறேன்


புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...