https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 19 ஜூலை, 2025

மணிவிழா - 67 * உற்று நோக்கும் காலம் *

 



ஶ்ரீ:



மணிவிழா - 67


19.07.2025


* உற்று நோக்கும் காலம்  *







வாழ்கையில் அது போல ஒரு புயல் வரும் என நான் ஊகிக்கவில்லை. அது நிகழும் போது திகைப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது . மண்ணில் இருந்து வேரோடு பிடிங்கி எறிவது போல அந்த புயல் வீசிக் கொண்டுருந்தாலும் அதன் நோக்கம் வேறொன்று போலும். ஆவது ஆகுக. புயலால் அனைத்து புறத்திலிருந்தும் வீசப்படும் காற்று செடி உயிருக்கு துடிப்பது போல ஓலமிடுவது போல அனைத்து உறுப்புக்காளாலும் மண் படிந்து இறைஞ்சுவது போல செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாகி அதன் விசைக்கு ஒப்புக் கொடுத்தேன். சரணாகதி போல காப்பது பிறிதொன்றில்லை. நான் இங்கு காப்பது பற்றிய வேறொரு புரிதலில் இருந்தேன். அது இரண்டிற்கும் சாத்தியமான நிலை. காப்பாற்றப்படுவது அல்லது கைவிடப்படுவது என இரண்டும் அங்கு நிகழ்கிறது. நான் இரண்டையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். காப்பாற்றப்படுவது ஒருவகை விடுதலை என்றால் கைவிடுப்படுவது வேறொரு வகை விடுதலை. இரண்டும் கட்டுக்களில் இருந்து விடுபடுதல். இரண்டும் அக புற என்கிற எந்த வறையறைக்கு உட்படாதது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று முயங்குவது. காப்பற்றப்படுதலில் இருந்து அகவய உலகை புரிந்து கொள்ளவதைப் போலவே கைவிடப்படலிலும் புறவய உலகை புரிந்து கொள்ள முயலலாம்


சட்டென ஒரு புள்ளியில் புயல் விலகிய போது உடலும் உள்ளமும் சோர்ந்திருந்தது. மறு பிறவி என அதுவரை இருந்த அத்தனை பிடிமானமும் விலகி புதிய உலகம் ஒன்று துலங்கி இருந்தது. அங்கு எனக்கான இடம் பற்றி எந்த முன் முடிவும் இல்லாமல் அந்த உலகின் பார்வையாளன் போல உருவகித்துக் கொண்டு அது என்னை சுற்றி உருவாக்கி இருந்த அதனுள் நுழைந்தேன். அப்போது எனக்குள் இருந்தது வெறுப்பும் காழ்ப்பும். புயல் அகவயமாக உலுக்கி எடுக்க உடன்பிறந்தார் அகவயத்தில் உருவாக்கி என் ஆழுள்ளத்தில் பொங்கி பெருகிய எழுந்த கேள்வி ஒன்று அதுஇவர்கள்?ஏன்? இப்படி?….” என்பதாக இருந்தது. யாரை இத்தனை நாள் அவர்களின் சங்கடங்களில் இருந்து காப்பாற்றி இருந்தேனோ அந்த உறவுகள் என்றும் எனக்கு கடமைபட்டவர்கள். தங்களின் நலன் கருதியாவது நிர்பந்தத்தின் அச்சத்தின் காரணமாக தங்கள் தேவையின் காரணமாக என்னுடன் இணக்கமாக பயணிக்க வேண்டியவர்கள் அவர்கள் அனைவரும் இணைந்து எனக்கெதிராக கிடைத்த சந்தர்பத்தில் என்னை காயப்படுத்த தயங்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் இருள் செயல்வடிவம் பெற்றது.அதன் பின்னால் உள்ள எளிய மானுட சிந்தனை தான் எனக்கு தெரிந்தது. மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள் தங்களால் தவிர்த்திருக்க வேண்டிய சந்தர்பங்களில் அவர்கள் அறியாத இருள் உலக தெய்வங்கள் ஏறி வருகின்றன அவர்கள் முன்வைத்த அத்தனையும் அபத்தம் என நன்கு அறிவார்கள் ஆழத்து இருளில் இருந்து எழும் தெய்வம் அழுக்கும் வன்மமும் உருவென கொண்டது ஒரு நாளும் சுத்தமானவற்றை அவற்றால் தர இயலாது


அம்மவை மையம்படுத்தி அவர்கள் என் மீது குற்றமாக சுமத்த நினைத்த ப‌‌‌ல விஷமங்கள் பின்னால் உள்ள படிமத்தை அறிவேன் அதற்கு ஒருநாளும் பதில் வைக்க முடியாது என்றாலும் ஒரு புள்ளியில் என்னை கடுமையாக பாதித்தது. அது ஆத்மாவை அழிப்பது அவர்கள் செய்ய முயன்றது ஆன்மக் கொலை ஆனால் உறவுகளிடம் இருந்து உலகம் இதைத்தான் எதிர்பார்க்க வேண்டும் என தெரிந்திருந்தேன். தற்காலிக புயல் ஓய்வில் இருந்து வெளிவந்த போது எனக்கு முன்பாக இருந்த வழிகள் இரண்டு. வெறுப்பு வழியாக பழிவாங்கும் சந்தர்ப்பத்தை காத்திருப்பது அல்லது அன்பு அது என்னியல்பால் வழிநடத்தப்படுவது . என்னால் வெறுப்பை வாழ்நாள் முழுவதும் எடுத்து சுமந்து கொண்டு பயணிக்க இயலாது முதன்மை காரணம் அது எனது ஆத்மாவை அழிக்க வல்லது. அதை தூக்கி சுமந்த என பெரியதந்தை மற்றும் அம்மா சென்று சேர்ந்த இருளை மிக அருகே இருந்து பார்த்தவன். இரண்டு அவ்வளவு கசப்பை தூக்கி சுமக்கும் அளவிற்கு அவர்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல அதற்கான தகுதியற்றவர்கள். மன்னித்து அதை கடந்து செல்வது எனது வழிமுறை இப்போதும் அதையே செய்ய முடிவெடுத்தேன்.


அம்மாவின் மரணத்திற்கு பிறகு உடன்பிறந்தார் அனைவரும் மெல்ல வீட்டிற்கு வர போக இருந்தனர் யாரும் என்னிடம் வந்து அவர்களின் கடந்த கால நடத்தைக்கு மன்னிப்பு கேட்க்கவில்லை நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை சிலர் குற்ற உணர்வுடன் இருப்பதாக பட்டது சிலர் வேறு ஒருவரின் தூண்டுதலுக்கு பலியானதாக சொன்னார்கள் வேறு சிலர் ஒன்றும் நிகழாதது போல் நடந்து கொண்டனர். பாவம் மிக எளிய உயிர்கள்.


வாழ்க்கை முற்றாக மாற்றிய அந்த சந்தர்ப்பத்தை மீண்டும் ஒருமுறை நினைவுறுகிறேன். ரிஷிகேஷில் கங்கைநதி  புரண்டு ஓடும் கரைக்கு மிக அருகில் அதன் துமிகள் தெறித்து உடலை உடையை  ஈராமக்கும் நெருக்கத்தில் அந்த மேடையின் மீது  அதர்ந்திருந்தேன்மன அழுத்தம் தாளாமல் உள்ளம் விம்மி இருக்க நான் அழுது கொண்டிருந்தேன் என்பதை கண்களின் வழியும் நீரில் உணர்ந்தேன். கட்டுப்படுத்தும் எண்ணமில்லாமல் அருகில் இருந்தவர் தெரியாமல் கங்கை நீரின் நீராவியில் உடல் நனைந்திருக்க கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நான் எப்போது கடைசியாக அழுதேன் பத்து வருடத்திற்கு முன்பு . அப்பா இறந்த போதும் அழுததாக நினைவில்லை. அவரது மரணம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பது காரணமாக இருக்கலாம். மருத்துவ உதவியால் அவரது ஆயுளை நீட்டித்துக கொண்டிருந்தேன் கடைசியாக சென்னையில் மலர் மருத்துவ மணை எதிரில் தனது காருக்காக காத்திருந்த அவரிடம் சென்றேன் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் அவரை பார்த்துக் கொண்ட புகழ்பெற்ற மருத்துவர் TJ செரியன் சொன்னார். “போதும் அரி அவரை நிம்மதியாக மரணிக்க விடுஎன்று. அதன் பிறகு நான் சென்னை செல்வதை நிறுத்திக் கொண்டேன்.ஆனால் மீராபாய் அக்கா இறந்த போதுதான் கதறினேன் அந்த மரணம் குறித்து மட்டுமல்ல எனது எதிர்காலம் இருண்டிருந்தது அதை குறித்தும் அந்த கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இனி ஒவ்வொரு மரணத்திலும் நான் இதைத்தான் செய்ய போகிறேன் போலும் என்பதாக மனம் கனத்துக் கிடந்தது


அடையாளமாதல் * அனுபவங்களின் சொல் *

 


 

ஶ்ரீ:



பதிவு : 681  / 870 / தேதி 19 ஜூன்  2025



* அனுபவங்களின் சொல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 79.







1997 களில். புதுவை மாநில அனைத்து கட்சி இளைஞர் பேரவை அமைப்புகள் இளைஞர் காங்கிரஸ் தலைமையை ஏற்க அதன் அமைப்பு பலம் பின்னணி காரணமாக இருந்து. கடந்த மூன்று ஆண்டுகளாக கள செயல்பாட்டில் ஈடுபட ஆரம்பித்தது பொதுமக்கள் பிரச்சனைகள் அதற்கு அரசு சார்ந்த எதிர்வினை போன்றவற்றை தொடர்ச்சியாக எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தது புதிய அணுகுமறையாக அவர்களால் பார்க்கப்பட்டிருக்கலாம். இளைஞர் காங்கிரஸ் அமைப்பை புதுவையில் மிக பலமான ஒன்றாக உருவாக்கிய சூழல் தானாக திரண்ட ஒன்று. நான் கனிந்து வந்த அந்த நேரத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அதுவரையில் என் கனவில் திட்டமாக மட்டுமே இருந்தது. அந்த திட்டங்களின் துவக்கம் 1990 களின் ஆரம்பத்தில் அரசியலில் ஒரு முதிரா சிறுவனாக அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலனுடன் புதுவை மாநிலம் முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து அரசியலில் எதிர் கொண்ட சிக்கலை மையப்படுத்தி உருவானவை . அன்று சந்தித்த சிக்கல்கள் தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் பதவி நிலமுடை சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எதிர் கொண்டவை . அவர்களை கடந்து இளைஞர் காங்கிரஸ் இளம் தலைவர்களை கண்டடைவதும் அவர்களை செயல்பட வைப்பதும் இயலாது என புரிந்து கொண்டேன். புத்துயிர் கொள்ள வைக்க ஒவ்வொரு முறையும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு நிர்வாகிகளை நியமிக்கும் போது ரசிகர் மன்றம் போல வேண்டியவர்களுக்கு பதவி வாரி வழங்கும். அவர்கள் பலர் களத்தில் செயல்படாதவர்கள். சிலர் உள்ளூர் அரசியலுக்கு தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள். மற்றவர்கள் சண்டியர்களை போல தனி ஆளுமை யாருக்கும் கட்டுப்படாதவர்கள்


இவர்களை கொண்ட அமைப்பு ஒரு போதும் ஜனநாயகப் பாதைக்கு வரவே முடியாது என்கிற ஏக்கம் எப்போதும் மேலோங்கி இருக்கும்மாநில காங்கிரஸ் அமைப்பும் இளைஞர் காங்கிரஸும் எதிரிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். கண்ணன் உருவாக்கிய கசப்பு அவரது அமைப்பை வீர்யமிக்கதாக்கி அவருக்கு அரசியல் ரீதியான பலனை கொடுத்தது. ஆனால் அவரால் ஒரு முனையில் குவிக்கப்பட்ட வெற்றி பிறர் தங்களுக்கும்மானதாக நினைக்க வைத்த ஒன்று. ஆனால் அரசியலில் ஒருபோதும் கடக்க முடியாத எதிர்பார்ப்புகளை தொண்டர்களிடையே உருவாக்கி பின் நிறைவேறாமையின் எல்லையில் அமைப்பை மெல்ல சிதைத்து விடுகிறது. அங்கிருந்து கண்ணன் அமைச்சரானார் அது அவரளவு வெற்றி. அவரை தாண்டி பிறிதொருவரின் பெயரை இன்று வரை சொல்ல முடியாது. நம்பிக்கை இழந்து அவரை சுற்றியிருந்த முதல் நிலை அரசியல் செயல்பாட்டு அமைப்பு சிதறி அவரின் வீழ்ச்சியை துவங்கி வைத்தது . பாலனும் அதே போன்று அர்த்தமில்லாமல் ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் அமைப்புகளை ஒருபோதும் இணைக்க இயலாத பெரிய இடைவெளியை உருவாக்கியது.


கண்ணன் பெரும் ஆளுமையாக உருவெடுத்த போது அனைத்து தலைவர்களும் அவருக்கு அஞ்சினர். ஆனால் பாலனின் ஆளுமை மிக பலவீனமானதாக எளிதில் வீழ்பவராக, அவரது செயல்பாடுகள் நிஜமான அரசியல் களத்தை சென்று தொடவே போவதில்லை என அவருக்கு மட்டுமின்றி அவருக்கு எதிரான அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்திருந்தது.அதன் பலன் அவரால் முதல் நிலைக்கு செல்லவே இயலாமல் போனது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் இவை அனைத்தும் மாறிவிடும் என அவர் நினைத்தார் ,நம்பினார் எங்களையும் நம்பவைத்தார் . எங்களுக்கும் ஒரு புள்ளி வரை அது எளிதில் நிகழும் கணக்காக தெரிந்தது. 1991ல் நிகழந்த சட்டமன்றத் தேர்தலில் முதலியார் பேட்டை தொகுதியில் அவர் தோற்ற முறை அனைத்தையும் சிதறடித்தது


பாலனுக்கு எதிராக செயல்படுவதில் உள்ள சிக்கலில்லாமையால் அதை பயன்படுத்தி இளைஞர் காங்கிரஸ் வளர்ச்சியை தங்களுக்கு எதிரானதாக நிலமுடை சமுதாயத்தால் தலைவர் சண்முகத்தின் முன் வைக்கப்பட்ட போது அதை ஏற்றார். ஆனால் கடந்து வந்த பாதையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு எதிர் கொண்ட வளர்ச்சியின்மைக்கு அதன் அமைப்பு ஜனநாயக முறையில் இருந்து நழுவியது காரணம். சண்முகம் இன்றளவும் கட்சியை பலமுள்ளதாக்கி அதன் தலைமையில் அமர்ந்திருப்பது கட்சியை அனைவருக்கும் பொதுவாக்கியது. நடைமுறை சிக்கல் உருவாகும் போது அவற்றை உரையாடல் வழியாக எதிர் கொண்டது போன்றவையில் இருந்து எனக்கான உருவகங்களை பெற்றுக் கொண்டேன். அது எத்தகைய சிக்கல்களை தீர்க்க வல்லதாக இருக்கும் என்பதை குறித்து ஒரு கனவு போல நண்பர்களிடம் விவாதித்திருக்கிறேன் . அதை நிறைவேற்றும் வாய்ப்பும் நாளும் எனக்கு அமையும் என தலைவர் சண்முகத்தை சந்தித்த பிறகும் கூட நினைத்திருக்கவில்லை


1996 களில் மத்திய மாநில் தேர்தல் தோல்விக்கு பிறகு அமைப்பு முற்றாக சோர்வடைந்து விட்டது. காங்கிரஸில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் நிச்சயமற்ற சூழல் நிலவியது. கட்சி தலைவர் நரசிம்மராவிற்கு மாற்றாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சீத்தாராம் கேசரியை தலைவராக கொண்டு வந்தனர். அதே நேரம் தேர்தல் ஆணையர் TN.சேஷன் அது வரை காகித அளவில் இருந்த தேர்தல் விதிமுறைகளை முற்றிலும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருந்தார். அது அவருக்கு அகில இந்திய அளவில் புகழை பெற்றுத் தந்தது. அது கொடுத்த உற்சாகத்தில் அவர் அடுத்ததாக கட்சி தேர்தல் விஷயங்களில் கவனம் செலுத்த துவங்கினார். உட்கட்சி தேர்தலிலும் அவர் நேரடியாக தலையிட அனைத்து கட்சிகளும் தேர்தல் நடத்த முடிவு செய்திருந்தன.


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரி கட்சியில் தன் நிலையை உறுதிபடுத்திக் கொள்ள கட்சிக்குள் முறையான அமைப்பு உருவாக்க திட்டமிட்டார். சோனியா காந்தியின் அரசியல் நுழைவு மிக சீக்கிரம் என்கிற சமிக்ஞை தென்பட்ட சூழலில் முறையாக தேர்ந்தெடுக்கப்படுவது தனக்கு சாதகமானது என அவர் நினைத்திருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் அகில இந்திய காங்கிரஸ்  அமைப்பு அனைத்து மாநில தலைவரை நியமிப்பது பதிலாக உட்கட்சி தேர்தல் வழியாக தேர்ந்தெடுப்பட வேண்டும் என அறிவித்தது. வழக்கம் போல அது வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் தீவிரமாக கொண்டு செல்லப்பட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இம்முறை கட்சி தேர்தல் சமரசமின்றி நடைபெரும் என தில்லியில் நடந்த கூட்டங்களின் வழியாக அறிந்திருந்தேன்


தலைவர் சண்முகம் தேர்தல் பற்றி அறிவித்த போது அது வழக்கமான கண்துடைப்பு விளையாட்டாக மாநில கட்சி நிர்வாகிகளால் பார்க்கப்பட்டது. ஆரம்ப கட்ட உறுப்பினர் சேர்க்கை எ‌ந்த தொகுதியிலும் நடைபெறவில்லைஉறுப்பினர் சேர்க்கும் முறைமைகள் மிக விரிவானவை சோர்வை தருபவை.  25 உறுப்பினரை சேர்க்கும் நபர் தீவிர உறுப்பினராகி ஓட்டுரிமையுடன் தொகுதி நிர்வாகியாக நியமிக்கப்படுவார். அன்றுவரை 25 உறுப்பினர் சேர்கை என்பது வெறும் கண்துடைப்பாக நடைபெறும். வாக்காளர் பட்டியலை பார்த்து உறுப்பினர் பெயர் பதிவு செய்யப்படும். உறுப்பினர் யாருக்கும் தாங்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில வருடங்கங்களுக்கு முன் உறுப்பினர் எண்ணக்கை புதுவை மொத்த ஜனத்தொகையும் தாண்டிய விந்தை நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கும் பணி ஏறக்குறைய செயல்படாததை  அறிந்து சண்முகம் நீர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தில்லியில் புதுவைக்கு மேலிட தேர்தல் பொருப்பாளர் வர இருப்பதையும் தேர்தல் நடைபெற இருக்கும் தேதி உறுப்பினர் சேர்க்கை கால கெடு போன்றவற்றை அறிவித்ததுடன். தொகுதி தேர்தல் நடத்துனரை நியமித்த போதுதான் அதன் தீவிரத்தை நிர்வாகிகள் உணர்ந்தனர். அதற்குள் காலம் கடந்திருந்தது

வெள்ளி, 18 ஜூலை, 2025

புதுவை வெண்முரசு கூடுகை 84 அழைப்பிதழ்

 


மணிவிழா - 66 * ஒன்றில்லிருந்து பிறிதொன்று *

 



ஶ்ரீ:



18.07.2025


* ஒன்றில்லிருந்து பிறிதொன்று *






இன்று ஏகாந்த தனிமையில் கடந்து சென்ற வாழ்கையில் நிகழ்ந்தவற்றை நினைவுறுகிறேன். இந்த வாழ்க்கை  வாழ்த்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருந்வைகளுக்கு பின்னால் நான்றியாத தொல் தெய்வம் புரிந்து கொள்ளவே இயலாத கணக்கு துல்லியத்துடன் அவற்றை எடுத்து செல்கிறது. அதை எல்லோர் வாழ்விலும் பொதுவில் வைப்பது என சொல்ல முடியாது காரணம் எளிதில் வெற்றி பெற இயலாத துறைகள் வியாபாரம், அரசியல்,ஆன்மீகம், இலக்கிய செயல்பாடுகள் போன்றவற்றில் அனைத்திலும் ஈடுபடும் வாய்ப்பும் அதனூடாக உருவான தனி அடையாளமும் செயலில் பெரிய வெற்றியை அடைந்து ஒரு புள்ளியில் இன்று இலக்கியம் தவிற பிற அனைத்திலிருந்து முற்றாக விலகி நான் நான் என மட்டுமேயாகி தனித்து நிறைவுடன் நின்று கொண்டிருக்கிறேன் . இளம் வயது முதல் எனக்கான தேவையை செய்து கொடுக்கும் உலகை எனது படைப்பூக்க செயல்பாடுகளால் உருவாக்கிக் கொண்டேன் எதன் பொருட்டும் யார் முன்பும் சென்று வேண்டி நின்றதில்லை தேவைக்கு ஏற்ற என் சுய தொழில் வழியாக நிறைவான பொருளாதாரத்தையும் அரசியல் வழியாக என் தனி அடையாளத்தை அதிகாரத்தை உருவாக்கிக் கொண்டேன். அவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டதில் ஒன்றில் விலகி பிறிதொன்றில் துவங்கி நிறைந்து நிகழ்ந்தவை.


இருந்தும் அனைத்திலிருந்தும் விலகும் எண்ணத்தை உந்துதலை எங்கிருந்து எப்போது அடைந்தேன். விலகல் இரண்டு விதமாக நிகழ்ந்தன ஒன்று அங்கு நிலவிய சமரசத்தில் நம்பிக்கையில்லாமல் அந்த பயணத்தில் ஒத்திசைய இயலாமையால் விலகியது. பிறிதொன்று அலப்பரிய அனுபவங்களை கொடுத்து அதற்காகவே அதனுள் நுழைந்த காரணத்தை சொல்லி என் முயற்சியில்லாமல் அங்கு நிகழ்வின் நிறையால் விலக வைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் என கெஞ்சாத குறையாக நின்ற போதும் ஒரு ஆசிரியனைப் போல காலம் என்னை அதிலிருந்து விலக்கி வைத்தது. ஏன் என்ற போதுஅனுபவம் அனுபவம் அடைஎன்றது. எதன் பொருட்டு இவ்வளவு அனுபவங்கள். அவற்றால் ஆவதென்ன. அனுபவங்களால் ஆவது ஒன்றில்லை அந்த அனுபவத்தின் வழியாக கற்றல் நின்று நிலைப்பது. அந்த கற்றலின் வழியாக பிறிதொரு வாய்பை எதிலாவது வழங்க இருக்கிறதா. தெரியவில்லை. ஆனால் இன்று நின்றிருக்கும் இந்த நிறை வாழ்கையில் இருந்து குறைவுபடும் எதையும் புதிதாக செய்யப் போவதில்லை


ஒட்டு மொத்த விலகல் மனப்பான்மை ஹரித்துவார், ரிஷிகேசத்தில் பயணத்தின் போது உருவானது என்கிற புரிதலுக்கு மிக மிக மெல்ல வந்து சேர்ந்தேன். அப்பாவிற்கு ஹரித்துவாரிலும்,ரிஷிகேஷிலும் நீர்கடன் செய்யும் போது அந்த முதல் மன அசைவை அடைந்திருந்தேன். பொங்கி பெருகி பனிமலையில் இருந்து சுத்தமாக பளிங்கு போல இறங்கி ஓடி வரும் சில்லிட்ட கங்கை சலனமற்று இருப்பது போல தோற்றமளித்தாலும் அலை அலையென நெளிந்து வழிந்தோடி பின் சட்டென உருவாகும் சுழல்கள் வழியாக எதையோ மீள மீள ஒற்றை சொல் போல ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தது. கரைக்கு மிக அருகில் ஒடிக் கொண்டிருந்தாலும் கால் வைத்தவுடன் அழம் குறைந்த பகுதியாக இருந்தாலும் நீரின் விசை திடுக்கிட்டு அஞ்சவைக்கும். நடுக்கி எடுக்கும் குளிரில் குளிக்கும் போது அதன் வேகத்தை அறிந்து திகைத்தேன். சங்கிலி இட்ட பாதுகாப்பான இடத்தில் குளிப்பது மட்டுமே ஆபத்தற்றது. அங்கும் முழங்காலுக்கு மேல் ஆழத்தில் அந்த தண்ணீரில் நிற்பது ஆபத்தானது ஆனால் வசீகரமாக இருந்தது. மரணமும் வசீகரம் தான்


கங்கை தேவ பூமி என சொல்லப்படுகிற மலைகளின் அடுக்கை விட்டு ரிஷிகேஷத்தில் தான் மனித உலகில் காலடி எடுத்து வைக்கிறது. அங்கு நிலவும் காற்றும் அதனுடன் சம்பந்தபட்ட ஒன்றாக இருக்கிறது. கங்கை நீருக்கு இணையாக வீசும் தோறும் உடலில் வேதியல் மாற்றம் போல ஒன்றை நிகழ்த்தி விடுகிறது. அப்போது உடல் எதையும் தடுக்கும் பௌதிக விதிகளுக்கு அப்பால் நிலை இழந்து வலைபோலாகி மொத்த காற்றையும் நீரையும் உள்புகுந்து வெளியேற அனுமதிக்கிறது. மன மாசுகள் அகற்றப்படுகின்றன. அங்கு யாரின் எந்த ஒத்திசைவும் இல்லாமல் அது தன் போக்கிற்கு அதை செய்து  கொண்டே இருக்கிறது. அதன் பின் பெருந்திட்டம் இருப்பதை உணரும் தருணத்தை வேறொரு இடத்தில் நிகழ்த்துகிறது அது அங்கு அதை அளிப்பதில்லை போலும் . குளிர்ந்த காற்று உடற்சூட்டை தொடர்ந்து அகற்றிக் கொண்டே இருப்பது போல  உளச் சூட்டை அகற்றுகிறது. உள்ளம் சில்லிடுகிற போது உள்ளே தேங்கும் நீர் கண்கள் வழியாக பெருகி வெளியேறுகிறது


நீர்கடன் முடித்து கண்களை அகற்ற இயலாத வசீகரிக்கும் கங்கையை எந்த எண்ணமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் . தன்மய உணர்வு மேலோங்கி பெருக கால் இடறுவது போல உள்ளம் முதன் முறையாக வருத்தமற்ற நெகிழ்ந்து நெகிழ்ந்து பின் இறுகும் மன அழுத்தம் உடல் எங்கும் நிறைந்து எழுந்து பரவி என் தனித்தன்மையை நான் இழந்து பிரிந்து பிரிந்து சூழ்ந்துள்ள அனைத்துடனும் ஊடுருவி கலந்தது போன்ற உணர்வை எழுப்பிக் கொண்டிருந்தது. சிந்தனை முழுவதுமாக இழந்த சித்தம் சிந்தனை உருவாகும் ஊற்று முணையை ஊதி அனைத்துக் கொண்டே இருந்தது. நிகழ்வதை உணர்ந்து கொள்ள அந்த இடத்தின் அமைதியை உள்வாங்கும் மனத்துடன் பல பரதேசிகள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெரிய மரத்தின் கல் மேடையில் நீண்ட நேரம் கங்கையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்


சட்டென மன அழுத்தம் ஏறி ஏறி வந்து உருவாகும் மன அசைவு கண்ணீர் மல்கி உளம் பொங்கி மனம் விடுதலை விடுதலை என ஆர்ப்பரித்து எழுந்தது. எதனுடன் கட்டப்பட்டிருக்கிறேன் எதிலிருந்து எதை நோக்கிய விடுதலையை அது சொல்கிறது உலகியலில் இருந்தா? என்னில் இருந்தேவா?. அதை நான் எப்படி செய்ய இயலும். இலக்கில்லாமல் செல்லும் அந்த பயணத்திற்கான இலக்கு ஒன்று உண்டு போலும் அப்படியான இடத்தை எப்படி அல்லது ஏன் அடைந்தேன் என புரியவில்லை அந்த கணம் வியாபாரம் அரசியல் முதலான அனைத்தில் இருந்தும் மனம் விலகிவிட்டிருந்தது. நடைமுறையில் சாத்தியமற்ற அந்த முடிவை ஏன் சென்றடைந்தேன் என தெரியவில்லை. ஆனால் வெறியேறும் உள்ளம் உறுதியாக இருந்தது காலம் அதை செய்து கொடுக்கும் என நம்பினேன். அதுவரை அனைத்திலிருந்தும் விலகி நின்று எனக்குள்ளும் புறமுமாக நிகழ்வதை வருத்தமும் கண்ணீருமாக பார்த்துக் கொண்டிருந்தேன். காலம் தனது கைகளில் என் சூழலை எடுத்துக் கொண்டதை ஒரு புள்ளியில் தெளிவாக பார்கக முடிந்ததுஅது ஒரு புயல் போல அடித்து என்னை வேறோடு பிடிங்கி எடுப்பது வீசியது போல ஒரு எளிய செடி போல மண்ணில் ஆழ வேரூன்றி அத்துடன் ஒத்திசைந்து கொண்டிருந்தேன். சுமார் பத்து வருட காலம் வீசிய பெரும் புயல் நடுநடுவே விடுதலையளிக்கும் ஓய்வு இதமான காற்று மெல்லிய வெய்யிலின் ஒளி பின் அடுத்து அதே வேகத்தில் அந்த புயல் பல வேறு நிலைபாடுகளை கொண்டதாக வீசிக் பொண்டே இருந்தது


புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...