https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 அக்டோபர், 2022

மணிவிழா. 8


ஶ்ரீ:



மணிவிழா - 8

27.10.2022



நிகழ்ந்ததில் இருந்து  என் மனத்தில் தோன்றுவதை வெளிப்பட பேச முடியாமை எப்போதும் என் மன குமைதலில் கொண்டு விடும் அதில் இருந்து மீண்டெழுவது சவாலைப் போல நிலை கொண்டுவிடும்நான் எனக்குள் செய்து கொள்ளும் நிலைப்பாடுகளால் செயல்பாட்டை உருவாக்கிக் கொள்வது வழியாகவே மீண்டிருக்கிறேன்அதை போன்ற ஒன்றை இன்றுள்ள பிறரால் புரிந்து கொள்ள முடியாதது. அவர்கள் எப்போதும்அரசியல் சரி நிலைகளைஒட்டி தங்களை வைத்துக் கொள்கிறார்கள். முன்பு சொன்னவைகளுக்கும் செய்தவைகளுக்கும் எதிர் புறமாக நின்று ஒன்றை செய்யவும் பின் அதை நியாயப்படுத்தவும் அவர்கள் கூச்சப்படுவதில்லை. யார் என்னை கவனிக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாது முடிந்தவரை என்னை சுற்றி நிகழ்பவை குறித்து எனது சொந்த கருத்துக்களை அதிலிருந்து நிலைப்பாடுகளையும் உருவாக்கிக் கொள்கிறேன்.


நிலைப்பாடுகளையும் செயலையும் இணைத்து வாழ்கையை கண்டவர்களை மிக அறிதாக சந்தித்திருக்கிறேன். என்னை மதிப்பிடும் பிறர் பார்வைக்கு அவை என்னை குறித்த முரண் போல படுவது புரிந்து கொள்ளக் கூடியதுகாரணம் செயல்பாடுகள் திட்டவட்டமாக வெளிப்படுபவை அதில் உள்ள தனது நிலைப்பாட்டை ஒருவர் மீள மீள சொல்ல வேண்டி இருக்கிறது . பிறருக்காக மட்டுமின்றி நமக்குள்ளும் அவற்றை அப்படியே சொல்லி சொல்லி நிறுவிக்கொள்ளவும் வேண்டி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் சண்முகம் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் செயல்பாடுகள் அவர்களின் தனித்த நிலைப்பாடுகளில் இருந்து உருவாவதை பார்த்திருக்கிறேன். இதிலுள்ள நகைமுரண் சண்முகம் அரசியலை மட்டுமாக கொண்டவர். ஜெயமோகன் அரசியல் விமர்சகர் ஆனால் நடைமுறை அரசியலை பேசியதில்லை. இந்த இருவரை குருவாக கொண்டு இரண்டையும் பொருத்தி மையப்படுத்தி எனது நிலைப்பாட்டை செறிவாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். கடந்த கால அனுபவத்தில் இருந்தும் இலக்கிய வாசிப்பில் இருந்தும் கற்பவைகள் கொண்ட கருத்தை ஊடுருவி ஏற்படுத்தும் மாற்றமே இதற்கு அடிப்படை


நிலைப்பாடுகள் அனுபவம் சார்ந்தும் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது . மனம் செயல்படும் விந்தையாக அது இருக்கலாம் மாறாதது என ஒன்றில்லை ஆனால் 

நிலைப்பாட்டு உறுதி  என்பது அடியாழத்தில் உள்ள கட்டுமானத்திற்கு மேல் பிற நிலைப்பாடுகள் கட்டமைக்கப் படுகின்றன. அனுபவம் மற்றும் கற்றலில் இருந்து உருவாகும் புரிதல் வழிய அதன் மேல் மேல் என படிந்து படிமங்களாக புதிய புரிதல்களாகின்றன. சில சமயங்களில் எதிர்பாரத அனுபவம் வழியாக ஆழ்மன கட்டமைப்பையும் மாற்ற வல்லது என்றே ஊகிக்கிறேன் . அந்த இயல்பை ஒட்டி மொத்த நிலைப்பாட்டை உருவகப்படுத்திக் கொள்கிறோம் குறைந்த பட்சம் அது ஏற்காத சூழலுக்குள் செல்வதை தவிர்த்தி விடுகிறேன்


அதுவரை நான் எனக்குள் கட்டமைத்துக் கொண்ட நிலைப்பாடுகள் இன்றைய நவீன உலகியல் நியங்களுக்கும் அரசியல் சரிநிலைகளுக்கும் பொருந்தாது என்றாலும் எனது முடிவு அதுவே . இதுவரை எந்த தன்னறம் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததோ அதுவே இனியும் எனக்கானதுக்கு .அனைத்து வித கொண்டாட்டம் பற்றிய மன விலக்கத்தில் இருந்த என்னை மனைவியும் விஜியும் மீள மீள பேசி  மணிவிழாவை ஏற்க வைத்தனர்


அதை எனது தொடக்க கால புள்ளியில் இருந்து இன்று வந்து சேர்த்திருக்கும் இடம் நோக்கிய ஒரு கோடு இழுத்தத்தை போல எனக்குள் நிகழ்ந்த அகப் பயணத்தை மீண்டும் சொல்லிக் கொள்ளவது போன்ற வாய்ப்பை அது தந்தது . அது ஏறக்குறைய தெளிவிற்கு முந்தைய கனவு போல . இப்போதுள்ள நிலையை முழு தெளிவு என சொல்ல மாட்டேன். ஆனால் சரியா திசையில் பயணிப்பதை உணர்ந்திருக்கிறேன். தந்தை கையளித்ததை நழுவ விட இயலாது என்பது ஒரு நிலைப்பாடு. சம்பிரதாயம் மற்றும் குடும்ப அறம் இரண்டிற்கும் அது பொருந்தும். அவர் கொடுத்த ஒற்றை பற்றி பிறிதொன்றை கைவிட இயலாது























புதன், 26 அக்டோபர், 2022

மணிவிழா -7


ஶ்ரீ:



மணிவிழா - 7

26.10.2022



ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டியை நான் உருவாக்குவது குறித்த  பெரிய கனவும் அதை ஒட்டி நிகழ்த விரும்பிய தத்துவ கல்வி மற்றும் செயல்பாடுகளும்   அதற்காக முன்னெடுத்த முயற்சிகளும் துவக்கத்தில் உருவான சில தடைகளால்   முற்றாக கைவிட்டு வெளியேறி இருந்தேன். சில காலம் கழித்து சிலர் என்னை அனுகி அதை மீண்டும் தொடங்க   வேண்டும் என கேட்ட போது மிக உற்சாகமாக அதற்கான ஒரு கமிட்டி கூட்டத்தை என் வீட்டில் ஒருங்கி இருந்தேன். பத்து பதினைந்து பேர் கலந்து கொள்வார்கள் என கணக்கிட்டிருந்தேன்   முப்பது பேர்களுக்கும் மேலாக வந்து கலந்து கொண்டனர். நான் சிலர் முக்கியமாக அதில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தவர்களில் ஆனந்த ரங்கரவிச்சந்திரன் மிக முக்கியமானவர் . கூட்டம் துவக்கி அவர் வந்து கலந்து கொண்டு முதலில் பேசியது  நாலைந்து பேர் கலந்து கொள்வார்கள்  என நினைத்தேன் என்றார்  .  புதுவையின் முக்கிய ஆளுமைகளை கொண்டு நன்கு வடிவைக்கப்பட அவர் செய்த உதவி மிக முக்கியமானதுசில வருடம் தீவிர பங்களிப்பை தந்தாலும்  மெல்ல ஒதுங்கி கொண்டார். அவருக்கான தனிப்பட்ட காரணத்திற்கு பின்னால் இங்குள்ள ஜாதிய மேட்டிமை . அதை அகலாது அணுகாது தீ காய்வார் போல என்னை வைத்துக் கொண்டேன் . நான் எனது திட்டத்திற்கு மத்தியில் அவற்றை கொண்டு வைக்க முடியாது . அதற்கு இப்போது நேரமில்லை


தனது இரண்டாவது மக்களின் திருமணத்திற்கு மறுநாள் சட்டென மண் மறைந்து அதிர்வை ஏற்படுத்தி இருந்தது . அது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக சிறப்பு மிக்க நாள் பங்குனி உத்திரம் அது கொடுத்த புரிதல்கள் அலாதியானது நீண்ட நாட்களுக்கு பின்னர் கோஸகன் பட்டாச்சாரியாரை அங்குதான் சந்தித்தேன் . பொதுவாக பேச்சின் நடுவே எனது மணி விழா குறித்த பேச்சு வந்ததும் நான் அது நிகழ இருப்பதை விஜி நிவாஸ் அதற்கான வேலைகளில் இருப்பதை சொன்னேன் . அந்த இடத்தில அதை சொல்லலாமா என்கிற எண்ணம் முதலில் எழுந்தாலும்  அது பற்றி பேசுவது குற்றமில்லை என தோன்றியது முதன்மை காரணம் அந்த நாள் பிறிதொன்று மணி விழா குறித்த எண்ணத்தை எனக்குள் முதலில் விதைத்தவர் அவர். அவருடைய பங்கங்களிப்பை உறுதி செய்து அங்கிருந்து மேலும் ஒரு படி முன்னகர உதவினார் . ஏறக்குறைய மணிவிழா அனைத்தும் அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக நகர துவங்கியது.


அதன் துவக்கப் புள்ளியை இப்போது நினைவுறுகிறேன் இனி வாழ்வில் புதிதாக ஒருவர் பற்றி எனது தனிப்பட்ட மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதை கைவிட்ட துவங்கி நெடு நாட்களாகிறதுயார் என்ன சொல்கிறார்களோ அது அவர்களின் நோக்கம் குறித்து ஆராயாது அவரின் கருத்தை அப்படியே ஏற்க துவங்கி இருந்தேன் ஆரம்பத்தில் மிக கடுமையான மன அழுத்தத்தை கொடுத்தாலும் பின்னர் ஒரு புள்ளியில் மனம் அமைதி கொள்வதை உணர முடிந்தது . அந்த முடிவின் அடைப்படை காரணம் புதிதாக அல்லது ஒருவர் பற்றிய துல்லிய மதிப்பீடுகள் வழியாக செல்லும் இடம் அதனால் உருவாகும் கசப்பை தவிர்க்க நினைத்தேன் . இங்கு யாரை பற்றியும் யாருக்கும் மதிப்பில்லை நேரில் சந்திக்கும் போது பேசும் சம்பிரதாய பேச்சினால் ஆவது ஒன்றில்லை அவர்களது நடிப்பை ஊடுருவி அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என புரிந்துகொள்ள முயல்வதுமயிர் கருக்கி கரி எடுக்கும் வேலை” . அந்த மனநிலை கொடுத்த விடுதலை அலாதியானது













செவ்வாய், 25 அக்டோபர், 2022

மணிவிழா - 6

 




ஶ்ரீ


மணிவிழா - 6

25.10.2022




காலம் அதிகமில்லை. இதுவரை கொடுத்ததே அதிகம். இனி ஒவ்வொரு நாளும் ஒரு இனிய இணைப்பு  வழக்கமான மனோ வியாபாரத்தில் ஈடுபடுவது தேவையற்றது. இனி வாழ்வில் எதன் பொருட்டும் கசப்பு கொள்வதில்லை என எனக்கு நான் சொல்லிக் கொண்டது. கசப்பை என்னால் நீண்டநாள் கொண்டிருக்க முடியது


எங்கிருக்கிறோம் என்று ஒவ்வொரு கணமும் வகுத்துக்கொள்ளத் துடிக்கும் உள்ளத்தின் தேவையென்ன? எங்கு சென்றாலும் மீளும் வழியொன்றை தனக்குள் குறித்திட அதுவிரும்புகிறது. எங்கிருந்தாலும் அங்கிருந்து கடந்து செல்ல விழைகிறது. அறியா இடம் ஒன்றில் அது கொள்ளும் பதற்றம் அங்கு அது உணரும் இருப்பின்மையாலா? இடமறியாத தன்மை இருப்பை அழிக்கிறதா? என்னென்ன எண்ணங்கள்! இவ்வெண்ணங்களை கோத்துச் சரடாக்கி அதைப்

பற்றியபடி இந்நீண்ட இருள் பாதையை கடந்து செல்லவேண்டும்.”


இன்றை வாழ்வியல் தளங்களை நவீன நாகரீகம் எடுத்து கொண்டு சில பத்தாண்டுகள் ஆகின்றன. அது உருவான காலத்தில் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் தங்கள் நிலைப்பாட்டின் விலைவை தங்கள் சந்ததிகளிடம் மெல்ல காண துவங்கி இருக்கிறார்கள். அது உருவாக்கும் பதட்டம் விளைவாக தங்களுக்கு தெரிந்த பாரம்பரிய மீட்பை மொழியில், பண்பாட்டில் ஆன்மீகத்தில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் வழியாக அவர்கள் எதிர் கொள்ளும் சவால் மற்றும் ஏளனம் மிக கடினமானவைகள்.


குடிபெயர்ந்த நாடுகளில் நகர்கள் தோரும் கோவில்கள் உற்சவங்கள் என தங்களுக்கு தெரிந்த மரபுகளை மீட்டுருவாக்க முயற்சிக்கிறார்கள். மூத்த குடும்ப மூத்தவர்களை தனிமையில் விட்டு அயல் நாட்டில் வேலைக்கு சென்றோர் தங்கள் பெற்றோர் அறியாத புதிய உலகங்களை உருவாக்கும் வாய்ப்பை அளித்தனர்.அது அதன் யதார்த்தங்களை புரிந்து கொள்ளவது அவசியம் என அவர்கள் அன்று உணராதிருந்திருக்கலாம். வளர்ச்சி அனைவரையும் உள்ளெடுத்துக் கொள்வது என்பது தவறான பரிதலானது. மொழியை கலாச்சாரத்தை பண்பாட்டை பிள்ளைகளுக்கு கையளிக்காமல் போனதால் இன்று எந்த ஊடகத்தில் நின்றும் அவர்களுடன் உரையாட இயலாமலானது. அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்திருப்பதை இது தெளிவுபடுத்துகிறது. நவீன மருத்துவம் அளித்த நீடிக்கப்பட்ட ஆயுளை கொண்டு ஆற்ற வேண்டிய இருக்க வேண்டிய இருப்பு குறித்து சிந்திக்க வேண்டும் 


மருத்துவம் உயர்த்தி அளித்த ஆயுள் வரம்பை பெற்றவர்கள் தங்களுக்கும் தங்களுக்கு பின் வருவோருக்கும் தங்கள் வாழும் காலத்தில் அதற்கான முன்மாதிரியை வாழ்ந்து உழைத்து உருவாக்க வேண்டி இருக்கிறது. மேலை நாடுகளில் முதியோர் தனித்து வாழ்வதற்கு பழகியிருக்கிறார்கள். அந்த வாழ்வியலை இனிமையாக்குவது குறித்த உரையாடல்கள் துவங்கியிருக்கின்றன. பொருளியல் வெற்றி குல மூத்தவர்களின் இடத்தை இல்லாமலாகி இருக்கிறது


மரபு சொல்லும்அறம்என்பதும் இத்துடன் காலாவதியாகி போனதா என்றால் இல்லை. இந்திய ஞான மரபின் அத்தனை வழிகாட்டலும் மதம் வழியாவே நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன மதத்தை மறுத்தால் மொழி, சிந்தனை கலாச்சாரம் பண்பாடு போன்றவை அனைத்தும் இல்லாமலாகும் அவை மதத்தில் தான் அமர்ந்திருக்கின்றன.அது புரிதலுக்கு வருவதற்கு ஒருகீதா முகூர்த்தம்தேவையாகிறது.












புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...