https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 நவம்பர், 2022

மணிவிழா. 14

 



ஶ்ரீ:



மணிவிழா - 14


03.11.2022



வாழ்கையில் வெற்றி தோல்வி பற்றிய புரிதல் காலத்தால் மாற்றக் கூடியது. அந்த மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் நாற்கள விளையாட்டு. அதில் வெற்றி தோல்வியாவதும் தோல்வி் வெற்றியாவதும் அதை கையாள்பவரின் தற்கால எண்ணம் மட்டுமே. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு அமைக்கும் வாய்ப்பு வந்தது ஒரு நல்லூழ். எனது தேடலின் விடையை , பொருளை தேடி அலைவதற்கு பதில் அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளும் பெரிய வாய்ப்பாக அதை பார்த்தேன். காரணம, அதில் முதல் மாணவன் நான். எனது கூச்சத்தையும் தநக்கத்தையும் கடந்து அந்த நிகழ்வுகளில் அமர்ந்து கற்கும் வாய்ப்பிற்கு காத்திருந்தேன். அனைத்து விதத்திலும் என் தேடலுக்கான கருவிகளை கண்டடைய உருவாக்க எனக்கு அது உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனம் அமைதி அடையாது தேடலுக்கான கேள்வி உருவாகி வருவதற்கு முன்பு அதற்கான விடையை நோக்கிய பாதை தேர்வது சாத்தியமில்லாதது.

நான் எனது அடிப்படை கேள்விகளை உருவாக்கிக் கொள்ள அதற்கான விடையில் இருந்து துவங்க நினைத்தேன். அதை எனக்கு சொல்லக்கூடிய பெரும் ஆளுமைகளை அணுகும் சந்தர்ப்பத்தை அது கொடுத்துவிடும்.நான் களத்தை உருவாக்கி அந்த ஆளுமைகளின் அருகமர திட்டமிட்டேன். அதன் முதல் பகுதி செறிவாக அமைந்தது. வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களை மிக எளிதில் அணுகி அமர்ந்து தயக்கமற்ற கேள்விகை வைக்கும் வாய்ப்பை அது கொடுத்தது. ஒரு புள்ளியில் அமைப்பின் பலத்தை அதீத உயரத்திற்கு கொண்டு செல்ல அவரது ஆளுமை உதவியது














அவருக்கும் என்னை புரிந்திருக்க வேண்டும். அவருடன் நேரடியாக உரையாட முரண்படம் வாய்ப்பை அளித்துக் கொண்டே இருந்தார். எந்த இயக்கத்திலும் பொறுப்பு வகிக்க மறுத்தவர் ஆனால் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் துணைத் தலைவராக வந்து அமர்ந்தார். எனது ஆச்சாரியன் திருக்கோவிலூர் ஜீயர் தலைவராக நான் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளரானேன். புதுவையின் அனைத்து முக்கிய ஆளுமைகளை அதில் கொண்டு வந்தேன். பல உட்பிறிவுகளை உருவாக்கி அதற்கு உரிய தலைமைகளை நியமித்து அது தன்னியல்பில் செயல்பட சற்று ஒதுங்கி நின்றேன். எனது கனவு திட்டம்திறந்த அரங்கம்அது மதம் மொழி நம்பிக்கை என எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. அனைத்து தரப்பு ஆளுமைகளும்  அதில் பங்கு பெற்று தங்கள் நிலைப்பாட்டை முன் வைக்க முடியும். அதை விவாதம் என்கிற அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் அதை தொடர்ந்து வழிநடத்தும் மற்றும் மட்டுறுத்தும் குழு நியமிக்கும் முயற்சியில் இருந்த போது முதல் சிக்கலை எதிர் கொள்ள நேர்ந்தது. நான் புதுவையை சேர்ந்த வைணவ அறிஞரும் சமஸ்கிரத விற்பன்னருமான DA. ஜோசப்பை நிர்வாக குழுவில் சேரக்க முயன்ற போது எழுந்த எதிர்ப்பை கண்ட பிறகு நான் எதனுடன் மோதிக் கொண்டிருகிறேன் என அறிந்து கொண்டேன்


இங்கு DA. ஜோசப்பை பற்றி ஒன்று சொல்ல வேண்டும். அவர என் தந்தை அறிமுகம் செய்து வைத்தவர். அவர்மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். விசிஷ்டாத்வைதம் மீது தர்க்க பூர்வமான நம்பிக்கை உருவாக்கியவர். எனது தந்தை இருதய நோயின் கடுமையால் தனது இறுதி காலத்தை மருத்துவமணைகளில் கழிக்க நேரிட்ட போது பூஜை அறைக்கு வராமலானார். அந்த சூழலில் அவரது நம்மிக்கை சார்ந்து அவருடன் உரையாட இயலாமலானது. அவர் தனது இறுதி காலத்தில் விசிஷ்டாத்வைத சித்தாந்தின் மீது என்ன மாதிரியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதைப்பற்றிய கேள்விகளை எழுப்பும் சந்தர்பமும் வாய்க்கவில்லை. அந்த காலகட்டங்களில் தத்துவ கோட்பாடுகளின் சந்தேகங்களுக்கு மிக விரிவான பதிலையும் அசையாத நம்பிக்கையையும் DA. ஜோசப் ஏற்படுத்தினார். அவர் மரபான குருவிடம் கற்றிருந்தாலும் தன்னை வைஷ்ணவனாக முன்னிறித்திக் கொண்டாலும் மரபான தோற்றம் மற்றும் பெயர் மாற்றத்தை ஏற்கவில்லை. அதற்கான தர்க்கம் அவரிடம் இருந்தது. அதை அவரது தன்னறமாக நான் உணர்ந்ததால் அவரிடம் கற்க அது எனக்கு தடையாக இல்லை.

புதன், 2 நவம்பர், 2022

மணிவிழா 13

 



ஶ்ரீ:



மணிவிழா - 13


02.11.2022





ஆன்மீகமும் அதன் அடுத்த படி நிலையான சம்பிரதாயமும்  தாய் தந்தை கைபிடித்து சொல்லி சொல்லி அழைத்து செல்வது . அது இனி எந்த குடும்பத்திலும் நிகழப் போவதில்லை. உலகியல் மற்றும் பொருளியல் நோக்கில் நோக்கி செய்து கொண்ட சமரசத்தால் அடைந்த விடுதலையால் இன்றைய வாழ்வியல் வெற்றிக்கு அவர்கள் தரும் விலைமரபு மற்றும் பண்பாட்டுடனான ஒரு தொடர்பை விடாது அதை செய்து இரண்டில் சமநிலையில் வைத்துக் கொள்ள போராடும் பல குடும்பத்தை பார்க்க முடிந்தாலும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கருவிகளான மதம் சார்ந்த புரிதல் குறைபாடு. இன்றை தென்னிந்திய குடும்பங்களில் இல்லை. மதம் ஒரு சடங்கு போல உருவகிக்கப்பட்டது அதை பிழை அதை கடந்து நவீன வாழ்கையில் எதிர் கொள்ளும் விடை அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கு ஏற்ற தத்துவ புரிதல் இல்லாமல் போனது துரதிஷ்டம். இந்தியாவில் தத்துவம் பேசாதவர் என ஒருவரும் இருக்க முடியாது. ஆனால் அதை வாழ்கையில் போட்டுப்பார்த்து அமைதி அடையும் பக்குவம் கொண்டவர்கள் எங்கோ அரிதினும் அரிதாக காணக் கிடைக்கலாம். வளம் மிக்க வாழ்க்கையிலும் அடந்த வெற்றிட வெறுமையால் உருவாகும் இடைவெளிகளை களைந்து கொள்ள  கார்ப்ரேட் சாமியார்களிடம் தஞ்சமடைகிறார்கள். அவர்கள் எந்த குருகுல மரபையும் சாராதவர்கள் என்பதாலும் தனிநபரை நம்பி இருப்பதாலும் எக்கணமும் அதன் தொடர்பு அறுந்து போகும் ஆபத்தும் கொண்டது.




















குடும்பத்து பெரியவர்கள் துவக்கத்தில் தங்கள் சொல்லுக்கு மரியாதையில்லை என ஆரம்பித்து தாங்கள் தனித்து விடப்பட்டதை உணரும் போது எல்லாம் முடிந்து போயிருக்கும். இன்று அவர்கள் எல்லா இடத்தை இழந்துள்ள நிலைக்கு காரணம் பொருளியல் வெற்றிக்காக அவர்கள் செய்து கொண்ட சமரசங்கள் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் பிறர் மீது காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களாக மாறிக் கொண்டிருப்பார்கள்.

நவீன மருத்துவம் அளிக்கும் மேலதிக ஆயுள் நீட்டிப்பு காலத்தில் என்ன செய்வதென்று அறியாதவர்களாய் வாழ்கையை மேலும் வாழ்ந்து சிக்காலாக்கிக் கொண்டே செல்கிறார்கள். இந்த தலைமுறையினருக்கு தாய் தந்தையே ஒரு பொருட்டல்ல என்கிற இடத்திற்கு அவர்களின் பெற்றோர்களே பாதையமைத்துக் கொடுத்துவிட்டார்கள். பெற்றோரை கடந்தவர்களுக்கு பிறகு கடப்பதற்கு ஒன்றும் மிச்சமிருப்பதில்லை. ஒரு ஆரம்ப மன சமாதானம் பின் அங்கிருந்து பிறகு மீறல்களாக தோன்றுபவைகளை கடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழவால் துவக்கத்தில் மரபு சார்ந்து வகுப்புகள் நடத்த முடிந்தது ஆனால் அது மதம் சார்ந்து அதே ஆச்சார விசாரங்களை 

மையமாக கொண்டது. பிற சம்பிரதாயத்தை கடுமையாக மறுப்பது என ஐந்நூறு வருஷத்திற்கு முந்தைய புத்தகங்களை அடிப்படையாக கொண்டாத இருந்தது. இன்றைய உளச் சிக்கலுக்கு அது பதில் அளிப்பதில்லை என்பதுடன் நிகழ் காலத்தில் இல்லாத சச்சரவுகளை கேள்வி கேட்பதுடன். இருக்கும் சிக்கலை அறிந்து கொள்ளாது அதற்கு எந்த தீர்வையும் தராத சூழலில் அந்த வகுப்புகளில் மீது மெல்ல ஆர்வமிழந்து கொண்டிருந்தேன். பல சமயங்களில் வெறுப்படையும் மன நிலைக்கு சென்ற பிறகு எனது விலகல் அங்கிருந்து துவங்கியது. நான் வகுப்பை நிராகரிக்க ஆரம்பித்தேன். அந்தந்த அமைப்பும் தனி அதிகாரம் கொண்டதாக உருவாக்கி இருந்ததால் எனது விலகல் யாராலும் கவனிக்கப்படவில்லை என்பதுடன் அதை ஆதரிப்பவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க வகை செய்துவிட்டு ஒரு புள்ளியில் முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டேன்.


செவ்வாய், 1 நவம்பர், 2022

மணிவிழா 12

 



ஶ்ரீ:


















மணிவிழா - 12


01.11.2022




கடந்த இருபது ஆண்டுகளாக நடுத்தர வர்க்கம் பொருளியல் தன்னிறைவு அடைந்ததில் உருவாகி வந்த மாற்றம் இளம் தலைமுறைகள் தலையெடுப்பிற்கு குடும்ப அறம் அனைத்தையும் கீழ்மேலாக்கியதுடன் சிலவற்றை இல்லாமலாக்கினர்பல சமயங்களில் உரத்த குரலில் மறுத்துப் பேசும் வல்லமையை அதிலிருந்து பெற்றனர். யாரையும் பொருட்படுத்த தேவையற்ற சுதந்திரத்தை அது அவர்களுக்கு கொடுத்திருந்தது. அதனால் எல்லோரையும் குனிந்து பார்க்க துவங்கினார்கள். அவர்களுக்கு அது ஒரு விடுதலை. அதன் முதல் பலி பெற்றோரும் மற்றும் வீட்டு மூத்தவர்கள். அவர்கள் குரலிழந்து மட்டுமின்றி முகமிழந்தும் போனார்கள். அவர்களின் வழிகாட்டால்கள் காலத்திற்கு ஒவ்வாதவைகளாக கருதி முற்றாக நிராகரிக்கப்பட்டது. இதில் வினோதம் அவர்கள் அந்த கால வீட்டின் மூத்த தலைமை்யை நெட்டித் தள்ளி தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இன்றுஅறம்குறித்து அவர்களால் பலவீனமாக சொல்லப்படும் போதெல்லாம் இளிவரல் குரலில் பிள்ளைகள் அதை கடந்துவிடுகிறார்கள் . பெற்றோரின் கடந்த கால சாட்சிகள் அவர்களின் குழந்தைகள். இன்று தங்களது பெற்றோர் கணக்கில் புதிய வரவை வைக்க அவர்கள் சொன்ன அதே காரணங்களை அடுக்கி திகைக்க வைக்கின்றனர்


சடங்கும் சம்பிரதாயங்களும் ஒரு தலைமுறை முழுக்க கேலி செய்யப்பட்டு கைவிட்ட பிறகு மனதை நிலைநிறுத்தும் இந்து ஞான மரபின் அத்தனை தத்துவ கோட்பாடுகளை இழந்து போனார்கள் . நமது மொழி கலாச்சாரம் பண்பாடு போன்றவை மதத்தில் தான் அமர்ந்திருக்கிறது. மதம் நிராகரிக்கப்படுகிற போது அனைத்தும் இல்லாமலாகிறது. பெற்றோர் மற்றும் தனது வளர்ந்த பிள்ளைகளிடம் ஒரு வயதை தாண்டிய பிறகு அன்றாடங்களை கடந்து உரையாட பொதுவான நம்பிக்கை சார்ந்து பேசு பொருள் ஒன்றுமில்லாதாகியது. ஒரு பிள்ளை ஏன் அப்பா சொல்வதை ஏன் கேட்க வேண்டும் என்கிற கேள்வை விளக்க எங்கிருந்து தொடங்குவது என்கிற திகைப்பை அடைகிறார்கள். மெல்ல காட்டு நெறி நோக்கி நகர்வதை தவிற வேறு வழியில்லை


வீட்டு பெரியவர்கள் தங்களுக்கு சொல்லப்பட்ட பௌராணிக மரபை சார்ந்து குடும்பத்தை முன்னெடுத்து அதில் உள்ள ஆன்மீகத்தை தங்கள் வழிபாட்டு முறையாக கொண்டு முதலில் தங்கள் வாழ்வில் அதை நடத்தி காட்டி பிள்ளைகளை பின்பற்ற வைத்தனர். இன்று அந்த தலைமுறை ஏறக்குறைய மிச்சமுள்ளவர்களே அந்த சம்பிரதாயத்தின் கடைசி வாரிசுகள். அவர்கள் அருகிவிட்டனர்இன்று அந்த மரபும் சில பத்தாண்டுகளுக்கு முன்பு துவங்கிய வீழ்ச்சி வேகமெடுத்து அடுத்தடுத்த பத்தாண்டுகளில் மேலும் மேலும் அது தொடர்ந்து அழிவை மட்டுமே அடையவிருக்கிறது


சங்கரர் மற்றும் ராமாநுஜர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் அவரது பின்வந்தவர்கள் அதை மரபை நிறுவன படுத்துதலாக மாற்றியபோது அதன் நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மேல் கீழ் அடுக்குகள்  பேணப்பட்டு தேங்கிப் போனது. இன்றைய எதார்தத்தை உணர்ந்து கொள்ள முடியாதபடி நிலைமையை சிக்கலாக்கியவர்கள் அரசு பணி ஓய்வு பெற்று வேறு போக்கிடமில்லாமல் ஆன்மீகம் என உள்புகுந்து அந்த இடத்தை நிரப்ப ஆரம்பித்த போது. அவர்கள் சாஸ்திர அறிமுகமோ நம்மிக்கையோ அற்றவர்கள். எளிய அன்றாட வழிபாடுகூட இல்லாதவர்கள் . உள்நுழைந்த இடத்தில் தங்களின் அதிகாரத்திற்காக தங்கள் வயதை ஜாதியை முன்னிறுத்தி பயன்படுத்தி மேல் கீழ் அடுக்கு முறைகள் கொண்டு வர முயல்கிறார்கள் அவை என்றோ சமூகத்தின் நிராகரிப்பை அடைந்துவிட்டதுடன் பௌராணிக முறை பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்குகிவிட்டது


அது ஆன்மீகத்தின் நவீன வடிவம் குறித்த எந்த சீர் திருத்தமும் கொண்டு வரும் வாய்பில்லாமையும் கொண்டுவர கூடியவர்களாக தென்பட்ட சிலரும் பழமைவாதம் நோக்கி இழுத்துச் சென்று நவீன உலகத்து இளைஞர்கள் அதனுள் வரும் வாய்ப்பை முற்றிலுமாக தகர்த்துவிட்டனர் . அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆன்மீக செயல்பாட்டிற்குள் வந்து நுழைந்த பிறகு வீழ்ச்சி இன்னும் வேகமெடுத்தது. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் மட்டுமல்ல ஆன்மீகமும் கூட



புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...