https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 14 மே, 2022

அடையாளமாதல் * அலைக்கழிக்கும் நினைவுகள் *

 


ஶ்ரீ:



பதிவு : 621  / 811 / தேதி 14 மே  2022



* அலைக்கழிக்கும் நினைவுகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 18.






மக்களின் மனநிலை எப்போதும் கொந்தளிப்பது ஒரு முறை வெளிப்பட்டுவிட்டால் அமைதியடைந்து விடுகிறது. பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தற்கு காத்திருப்பது ஆகவே காற்று வீசும் திசைக்கு ஏற்ப எப்போதும் மாறிக் கொண்டிருப்பது . எல்லா புறநகர்த் தொகுதிகளைப்போல இங்கும் மக்களை முடிவெடுக்க வைக்கும் சிலர் உண்டு அவர்கள் பேசிபேசி தாங்கள் நினைத்த இடத்திற்கு மற்றவர்களை நகர்த்தி போகிறார்கள் . அவற்றில் டீக்கடை முதன்மை, மோட்டார் சைக்கில் ரிப்பேர் கடை ,தையற்கடை என இப்படி ஒவ்வொரு வீட்டில் ஒண்டிக்கொண்டு சில்லறை வியாபாரத்தை வைத்திருப்பவர்கள் அந்த தொகுதியின் வெற்றித் தோல்வியை முடிவு செய்பவர்கள் என்பது ஆச்சர்யமானது . இத்தனைக்கும் அவர்களில் பலருக்கு அந்த தொகுதியில் வாக்குரிமை இல்லதிருப்பதை பார்த்திருக்கிறேன். உதிரி உதிரியாக அவர்கள் தங்கள் செல்வாக்கை அந்த பகுதி மக்கள் மீது தொடர்ந்து செலுத்துகிறார்கள் . அது அவர்களின் தனிப்பட்ட விருப்பாக, வெறுப்பாக இருக்கும் . சில சமயங்களில் உச்ச நிலைக்கு சென்று அடுத்த வேட்பாளர் என சிலரை அழைத்துக் கொண்டு காங்கிரஸின் தலைவர் அனைவரின் வீடுகளுக்கும் அவர்கள் ஏறியிறங்கும் வேடிக்கையை பார்த்திருக்கிறேன், புதுவையில் உள்ள அனைத்து தனித் தொகுதிகளின் அரசியல் இயங்கு விசை அப்படிப்பட்டதே. அங்கு இவர்களை போல வாக்காளர்களில் யாருக்கும் தங்களுடைய இடம் பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை


ஊசுடுவை சேர்ந்த பங்கூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தின் குழுவில் நான் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டேன். தலைவர் சண்முகம் அன்று அதிகாலை தொலைபேசியில் அழைத்து அதை என்னிடம் சொன்னபோது மிகுந்த ஈடுபாடோடு அவர்களுடன் சென்று கலந்து கொண்டேன். அங்கு பார்க்க இருப்பதைப் பற்றிய எண்ணமில்லாமல் முன் தயாரிப்பில்லாமல் கிளம்பியது பைத்தியக்காரத்தனம் . அங்கு பார்த்த அந்த கொடூர நிலக்காட்சிகளும் பாதிப்புகளின் வலியும் நீண்ட நாட்களுக்கு என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தது . ஒவ்வொரு முறையும் அதை தள்ளிக்கொண்டு வெளிவருவது எளிதாக இல்லை. அன்றெல்லாம் ஊசுடு பெருமாள் மட்டுமே என்னுடன் இருந்தான். அவனும் நானுமாக இரண்டே பேர். தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் கலவர செய்திகளை அன்றாடம் பார்க்கும் போது மனம் அதை வெறும் தகவல்காளாக்கி அடுக்கிக் கொள்வதால் மிக எளிதில் அதை கடந்து செல்ல வைக்கிறது  . ஆனால் நேர் காட்சி மனதில் ஆழமான வடுவாக நிரந்தரமாக தங்கிவிடுவதால் அதன் சீண்டல்கள் வேறுவிதமானவை ஓயாத அலைக்கழிப்பைத் தருபவை . எண்ணத்தை நிறுத்தி மனத்தை உறையவைப்பது . மனிதர்கள் மீது பெரும் அவநம்பிக்கையையும் தீராத அச்சத்தை ஏற்படுத்துகிறது . கலவரத்தில் ஈடுபடுபவர்களிடம் அந்த ஆபாசம் ஒரு களிம்புபோல மனம் புத்தி ஆன்மா மீது படிந்திருக்க வேண்டும் . எண்ணங்கள் துருப்பிடித்து அந்த களிம்பை அதில் ஏற்றிவிடுகிறது. காலை 9:00 மணிக்கு நாங்கள் அங்கு சென்றபோது அது மிக இயல்பான ஒன்று போல அங்கு நிகழ்ந்து முடிந்திருந்தது . அது ஒரு வெறியாட்டம். இருள் தெய்வம் அனைவரின் மீதி எறி கழிந்து சென்றிருக்கிறது. அதில் கொடூர திருப்தியை அடையும் மனிதன் ஒரு மிருகம் மட்டுமே  . அவர்கள் வேறெங்கிருந்தோ கிளம்பி வந்து இதை நிகழ்த்தவில்லை. பக்கத்துவீட்டுகாரர் எதிர்வீட்டுகரருக்கு இதை செய்திருக்கிறார் என்பது இன்னும் அதிரவைப்பது . அவர்கள் அன்றாடம் சந்தித்துக் கொள்பவர்கள் . இதன் பிறகும் சந்தித்துக்கொள்ள இருப்பவர்கள். எப்படி அவர்களால் பிறருக்கு இதை செய்துவிட்டு எளிதில் தாண்டிச்செல்ல முடிகிறது என தெரியவில்லை. அது ஒரு தனிநபர் கணநேர பைத்தியகாரத்தனமாகவோ அந்த நிமிட வெறித்தனத்தால் நிகழ்ந்ததில்லை . முந்தின இரவு நீண்ட திட்டமிடலுக்கு பிறகு அதிகாலை அந்த தாக்குதலை ஒரு போர் வெற்றி போல நடத்தி முடித்திருந்தனர்


பங்கூர் கலரவரத்தைப் பார்வையிட சென்றபோது , ஆறுதலளிக்க என்பது போல் ஒன்றிற்கு நான் பழகியிருக்கவில்லை .கொந்தளித்த கடல் உள்வாங்கி விட்டுச் சென்ற மிச்சல்கள் போல எங்கும் சேறும் கற்களும் நாற்றமும் குவிந்து கிடந்தன . தீயை அனைத்து வழிந்தோடிய தண்ணீர் கருமையாகி தேங்கிக்கிடந்தது. பல வீடுகள் எரிந்து போனதால் சாலைகளின் எல்லை அழிந்து முழு இடமே வெட்டவெளி போல இருந்தது . கரிந்து போன பலவகை பொருள்கள் வீட்டிற்கு முன்னே குவித்து வைக்கப்படிருந்தன. அங்கு சென்ற முதல் தருணமே முகத்தில் ஓங்கி அறைந்தது போல ஒரு தாக்குதலால் திகிலடைந்து பதறும் நெஞ்சுடன் ஆறுதல் சொல்லச் சென்ற குழுவுடன் கலக்காமல் நான் பெருமாளுடன் தனியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன் . சகல புலன்களுக்கும் அங்கு விஷயமிருந்தது எரிந்து தீய்ந்த நாற்றத்துடன் கரிகட்டையாய் நின்ற வீடுகள் , அமைதியாய் அழுது கொண்டிருந்தவர்கள் எங்களை பார்த்ததும் கதறி சூழ்ந்து கொண்டனர். பார்க்கும் காட்சிகளை பற்றி யாரிடமும் ஒரு சொல்லும் பேச இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை புகைப்படம் போல அனைத்தும் ஒரு சட்டகத்திற்குள் வந்து தனித்தனியாக நினைவில் படிந்து கொண்டிருந்தது பின் அந்த காட்சிகளை நினைவுகளில் இருந்து விலக்க பலநாள் முயன்றிருக்கிறேன். விலக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும் அது பெருகி எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது


சில மாதங்கள் கழித்து ஒரு சிறு கூடுகைக்கு அரியூருக்கு சென்ற போது அருகில் இருந்தவர்களிடம் பங்கூர் பற்றி விசாரித்தேன் .அவர்கள் அந்த கலவரத்தை ஏதோ போன ஜென்மத்து கதை போல நினைவில் இருந்து மெல்ல திரட்டிக் கூறினார்கள். பங்கூர் சென்று பார்பதனூடாக எனது வாதையில் இருந்து வெளிவர நினைத்தேன். அங்கு சென்று பார்த்த போது என் முன் நின்ற ஊர் கலவரத்தின் போது நான் பார்த்த எதனுடனும் பெருந்தி போகாமல் புதிதாக இருந்தது. எறிபற்றிய காடு மீள்வது போல அந்த கிராமங்கள் இரண்டு மாதத்தில் மீண்டெழுந்து இயல்பு திரும்பியபோது பார்க்க திகைப்பாய் இருந்தது


அந்த குழுவுடன் சென்றதால் அதன் மேலதிக செயல்பாடுகள் வந்து சேர்ந்தன. முன்னாள் அமைச்சர் காந்திராஜ் பிரபல வழக்கறிஞர் என்பதால் கலவரம் குறித்து காவல் நிலையத்தில் முறையாட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க என நீண்ட செயல்பாடுகளை நான் ஒருங்கிணத்தேன். அதையொட்டி அந்த பகுதி மக்களை தொடர்ந்து சந்தித்திக் கொண்டிருந்தேன். இளைஞர் காங்கிரஸ் பொச்செயலாளர் என்பதால் பத்திரிக்கை அறிக்கை மற்றும் சந்திப்புகள் நடத்தியது என அரசியலின் அடுத்த கட்டம் தொடங்கியது. அது என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது . செய்து முடித்ததை தலைவரிடம் சொன்னால் போதும் என்கிற வழக்கம் தொடங்கியது. அதிகாரப் பூர்வமான கூட்டங்களை ஒருங்குவது தேவை ஏற்பட்டால் போராட்டங்களை முன்னெடுப்பது என முழுநேரப் பணிசூழ்ந்து கொண்டது . காந்திராஜை அனைத்து கூட்டங்களிலும் சிறப்பு அழைப்பாளராக அழைத்துச் சென்றேன். அவர் உற்சாகமாக அனைத்திலும் கலந்து கொண்டார். அதுவே பின்னர் பல தொகுதிகளில் நடந்த சிறு கூடுகைக்கு அழைத்து செல்ல ஆரம்பித்தேன். அது எனது அரசியலுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது . பின் அனைத்தும் அங்கிருந்து துவங்கியது

ஞாயிறு, 8 மே, 2022

அடையாளமாதல் * பதவி சுமப்பவர்கள் *

 


ஶ்ரீ:



பதிவு : 620  / 810 / தேதி 08 மே  2022



* பதவி சுமப்பவர்கள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 17.






அவர்கள் பலவேறு கருத்தால் மாறுபட்டிருந்தாலும் குறுங்குழு ஒன்று அவர்களை ஒட்டுமொத்தமாக இணைந்திருந்தது . அன்றாட நிகழ் அரசியலில் மிக எளிதில் தலைவர்களுடனான தொடர்புறுத்தலுக்கு ஏற்றவர்கள் யார்? என்பது குறித்த அத்தனை தகவல்களும் அனைவருக்கும் பொதுவில் இருக்கும் அந்தக் குறுங்குழு வழியாக அவர்களுக்குள் பரவியிருக்க வேண்டும். அதன்மூலம் என்னைப் பற்றிய தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் . அதை மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டேன் . அது எனக்கே என் இடம் எது என்கிற புரிதலை பின்னர் கொடுத்தது. அங்கிருந்து முன்னகரும் செயல்பாடுகளை அதன் பிறகே நான் உருவாக்கிக் கொண்டேன் . சிறுக சிறுக சிலர் வந்து என்னை வீட்டில் காலை வேளைகளில் சந்திப்பது ஒரு தற்செயல் என்றே ஆரம்பத்தில் புரிந்திருந்தேன். அவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பகுதி . அறிமுகமானவர்கள் மேலும் புதியவர்களை கொண்டுவந்தனர் . அனைவரையும் ஊசுடு பெருமாள் மிக மெல்லிய சரடு போல பிணைத்திருந்தான் . அது அவனது விருப்பமான அரசியல். அவர்களுக்குள் முன் பின் சந்தித்தவர்களுக்கு இடையே மேல் கீழ் அதிகார அடுக்கு உருவாகியிருக்க வேண்டும்


ஒருவர் பற்றிய நமது புரிதலில் இருந்து அவரது திறமைகளும் அதற்கான இடத்தையும் நாம் தெரிவு செய்து அளிக்கிறோம் என நினைத்தால், அது அப்படி நிகழ்வதில்லை . தொடர் செயல்பாடுகள் நமது ஆழ்மனத்தில் எங்கோ அவர்கள் அறிந்தோ அறியாமலோ விதைத்துச்சென்றவை . ஆம் அது உண்மைஊசுடுவில் கொடியேற்ற நிகழ்வு அன்றைய இரவு முடிவுறும் போது  எனது செயல்பாடுகள் வழியாக தலைவருக்கு நான் என்ன உணர்த்தினேன் என்பது பற்றிய தெளிவு எனக்கிருந்தது . அன்று காலை அங்கு வருவது வரை எது பற்றியும் எந்த திட்டமிலும் இல்லாமல் கூட்டத்தில் ஒருவனாக கலந்து கொள்ள அங்கு வந்தேன். ஆனால் அந்த நிகழ்வு முடிவுறும் போது அவர் என்னை எங்கு கொண்டு வைக்க வேண்டும் என நான் விழைந்து விதைத்தேனோ அங்கேதான் சண்முகம் என்னைக் கொண்டு வைத்தார் . ஆனால் அது அவரின் மௌனமான அங்கீகாரத்தின் வழியாக நிகழ்ந்தது . அரசியலின் அடிப்படை இயங்கு விதிகளில் ஒன்று . மௌன அங்கீகாரம் போல பிறர் விலக்க அஞ்சும் இடம் பிறிதில்லலை


அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்தில் சிக்கல் உருவாகுபவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் மாரிமுத்துவிற்கு அணுக்கமானவர்கள் . அணுக்கமானவர்களில் இருந்து எதிரி உருவாகிறார். இன்று அவர்களை மாரிமுத்துவிற்கு இணக்கமாக கொண்டு வர நாங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்ஊசுடு பெருமாளின் பொருட்டு இவர்களை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஒருகாலத்தில் இருந்தது. இன்று அந்த கோடு அழிந்து போன நிலையில், இதற்கா? அன்று அவ்வளவு பெரிய சண்டை? என நினைத்துக் கொண்டேன். இன்று அவர்கள் அனைவரும் மாரிமுத்துவிற்கு எதிராக திரண்டிருந்தனர் . விந்தையின் உச்சம் பெருமாள் அவர்களிடையே மிகத் தீவிரமாக மாரிமுத்துவிற்குடனான ஒரு உடன்பாட்டிற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை ஒருவித திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன் . அவன் என்னை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் அவனுள் நிகழும் என நான் நினைத்த ஒன்று இறுதிவரை நடக்கவில்லை .உண்மையிலேயே சமரசம் செய்து வைக்கத்தான் முயல்கிறானா? மாரிமுத்துவிற்கு அணுக்கனாகி விட்டானா? . அது அவனது நீண்டநாள் கனவாக இருந்திருக்க வேண்டும். ஒரு பூச்சி போல அவர்களை சுற்றி சுற்றி வலையை பிண்ணிக் கொண்டே இருந்தான்.இங்கு எதிர்ப்புகள் நிலையானதல்ல. சமாதனத்திற்கும், மாரிமுத்து தங்களை திரும்பவும் ஏற்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பு உருவாகும் போது வெகுண்டு சீறி தங்களை எளிதில் சமாதானப்படுத்த முடியாது என்பது போல இல்லாத பாவனையை உருவாக்குகிறார்கள். அதை நம்பி அந்த முயற்சியை கைவிட்டால் தங்களை எளிதில் விலை பேச முடியதவர்களாக கற்பித்துக் கொள்கிறார்கள். கவனிக்கப்படாமலாகும் போது வருத்தமடைந்து பிறிதொரு சந்தர்பத்திற்கு காத்திருக்கிறார்கள் . அரசியல் எப்போதும் அப்படித்தான் நிகழ்கிறது


சிக்கலை உருவாக்குபவர்கள் எதிர்நோக்குவது இழந்து போன தங்களின் இடத்தை . அதை அவர்களுக்கு வழங்காமல் அவர்களை கடந்து செல்ல முடியாது . அதை கடந்த கால அனுபவத்தில் இருந்து கற்றிருக்கிறேன் . சிக்கலன் துவக்கம் என சந்தேகிக்கும் இடத்தில் எல்லாம் அவர்களை அடையாளம் கண்டு பெருமாள் என்னிடம் அழைத்து வந்தான். நான் அவர்களின் பிரச்சனை என்னவாக இருந்தாலும் அதுகுறித்து நாளை தலைவரை அவரது வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன். பிறகு வேலைகள் சூடுபிடித்தன. அதில் வேடிக்கை அவர்களில் பல பேருக்கு நாளை வேறு வேலைகள் உண்டு . அல்லது அவர்கள் தலைவரை வந்து சந்திக்கப் போவதில்லை. அல்லது இந்த தொடர்பை அவர்களுக்கு வேண்டிய காலத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்  வழக்கமான தங்களின் அரசியலின் பொருட்டு புதுவைக்கு வரும் சிலர் மட்டுமே எல்லாவற்றின் பின்புலமாக இருப்பவர்கள் . அவர்களை கையாள்வது எளிதல்ல. அவர்கள் தங்கள் நிலத்தில் விதைத்தவற்றின் அறுவடைக்கு இங்கு வருபவர்கள். வழக்கமாக தலைவர்களை சந்திக்க புதுவைக்கு வரும் அவர்களுக்கு யாரை எங்கு சந்திக்க வேண்டும் எப்படி அல்லது என்ன பேச வேண்டும் என்பது பற்றிய முன்னனுபவம் இருக்கும் . புதிய தொடர்புகள் உருவானால் முந்தயதை விட புதியது எவ்வளவு வலிமையானது என புரிந்து கொள்ளவாவது அவசியம் வருவார்கள்.


காலை 9:00 மணிக்கு சேதராப்பட்டில் துவங்கிய கொடியேற்ற விழா கரசூர் வரை பொலிவிழந்திருந்தாலும் தொண்டமானத்தம் பிறகு உயிர் கொண்டது . அந்தந்த ஊர் கோயில் மரியாதை இணைந்து கொள்ள திருவிழா களைகட்டியது . மேளம் முரசு பறை என ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான வாத்தியங்கள் இணைந்ததும் ஊர் பொதுமக்கள் வேடிக்கப் பார்கக் கூடினர். துவக்கத்தில் சண்முகம் மட்டும் மக்களிடையே பேசுவது என்பது மாறி சிறு தலைவர்கள் முதல் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் வரை பேச துவங்க ஓரொரு ஊரிலும் நிகழ்வு சிலமணிநேரம் எடுத்துக் கொண்டது . கொடியேற்ற நிகழ்வு முடிந்ததும் அவருடன் அந்தந்த ஊர் பெரியவர்கள் இணைந்து கொள்ள மெல்ல ஊர்வலம் போல அது உருவானதை யாரும் எதிர்பார்க்கவில்லை . இத்தனைக்கும் சமீபத்தில் நடந்த தேர்தல்லில் அதிக வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது . கூட்டம் கூடி கூடி வரும் போது எல்லோருடை முகத்திலும் ஏன் தோற்றோம்? என்கிற குழப்பம் தெரியத் துவங்கியது

திங்கள், 2 மே, 2022

அடையாளமாதல் * அடுக்குகளின் நிழல் *

 



ஶ்ரீ:



பதிவு : 619  / 809 / தேதி 02 மே  2022



* அடுக்குகளின் நிழல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 16.





புதுவை மாநில தேர்தல் அரசியல் தமிழகத்தின் பிற பகுதிகளிலில் இருந்து சற்று வேறுபட்டது . மிக சிறிய எண்ணிக்கையில் இருக்கும் வாக்காளர்கள் அதன் காரணம். இப்படி இருக்கும் எல்லா இடங்களிலும் இதுவே அடிப்படை விதியாக இருக்கலாம் . அரசியல் பற்றிய விழிப்புணர்வு அதில் தங்களின் இடம் குறித்த புரிதல் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் ஒரு எகத்தாளம் தெரியும். நேரில் பார்க்கும் போது காரியத் தேவைக்கு இருக்கும் குறுகளை பணிவு என எண்ணிக் கொள்ளக் கூடாது என அறிந்திருக்கிறேன். அங்கிருந்து அரசியலின் மையத்திற்கு தங்களை அழைத்து செல்லும் ஒரு சந்தர்ப்பத்திற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பது அதன் உச்சம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவின் மேல் எழுந்து நின்ற நான்கு வருட அதிருப்தி அவர் தோல்வியுற்றதும் கூரிழந்தது. தண்டித்தவனின் இரக்கம் போல. தங்களது தேவை பற்றிய தெளிவோ அவை அத்தனையையும் ஒரு சட்டமன்ற உறுப்பனரால் செய்து கொடுக்க முடியுமா? என்கிற அறிதலோ இல்லாமல் தங்களால் வெற்றி பெற்றவர் என்று அவர் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்றிவைத்து  கொள்வதும், பொய்த்து போகும் போது ஊஞ்சல் போல எதிர்நிலை நோக்கி பாய்வது மட்டுமே அவர்களின் அரசியல்இனி புதிதாக் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தோற்கும் காலம் வரை அவர்கள் மாரிமுத்துவை நோக்கி வந்து கொண்டேயிருப்பார்கள்அது சாமான்யர்களின் அரசியல் இயங்குவிசை 


அன்று அவர்களது அரசியலில் நிகழ்ந்தது கூடுதலான ஒன்று அதுநான்என நினைக்கிறேன். ஆனால் எனக்கு எந்த முன் திட்டமிடலும் இல்லை. அது முழுக்க மிக இயல்பாக நடந்தது. அங்கு நிலவிய குழுப்பமான சூழல் எதை கேட்டதோ , அதை பிறர் அறிவுத்தல் இன்றி நானாக எடுத்துக் கொண்டேன். ஒரு இடத்தை நோக்கி நகர அந்த நிகழ்வு எனக்கொரு வாய்ப்பை உருவாக்கித் அளித்தது . அரசியலின் அடிப்படை . அதுவே நடந்தாலும் நான் அறியாமல் பின்னர் மெல்ல அவர்களின் கணக்குகளுக்குள் வந்து சேர்ந்திருந்தேன். அன்று மாநிலம் முழுவதிலும் இருந்த வந்திருந்த அனைத்து கட்சி மூத்தவர்களின் கண்களில் பட்டு அவர்களின் மனத்தால் ஏற்கவும், விலக்கவும் பட்டுவிட்டேன். இதன் மத்தியில் கூடப்பாக்கத் தகராறு எனது முதல் எதிர்மறைக் கணக்கை துவக்கி வைத்தது . அதைப்பற்றி விரிவாக முன்பே பதிவு செய்திருக்கிறேன். கூடப்பாக்க தகராறு . அது மாரிமுத்தை குறிவைத்து நடந்தது என எனக்குத் தெரியாது ஆனால் அதன் மையமாக என்னைக் கொண்டு நிறுத்திய போது அவர்கள் அவசரப்பட்டுவட்டார்கள் என நினைத்தேன் . ஆனால் அது அனைத்து வகையிலும் எனது கணக்கை நிராகரிக்க செய்த நுட்பமான சீண்டலாக பின்னர் மாறியது  . அதில் தலைவர் எடுத்த நிலைப்பாடு ஊசுடுவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத நான் அதன் முக்கியஸ்தராக உருவெடுக்க வைத்தது. அது பின்னாளில் தொகுதித் தலைவர்கள் மாற்றி அமைப்பது வரை என்னை கொண்டு சென்று . அதுவும் கூட நான் எண்ணிய கணக்கு அல்ல வழக்கம்போல சிலர் எடுத்து முடிவு என்னிடம் அதை கொண்டுவந்தார்கள். அவர்களை தலைவரிடம் அழைத்துச் சென்றது மட்டுமே நான் செய்தது அதில் என் முடிவு என ஒன்றுமில்லை . அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கும் போது அதற்கு எண்ணி எண்ணி செய்வது போல ஒரு தொடர்த்தன்மை வந்துவிடுகிறது. நீண்டு நடக்கும் உரையடல்கள் வழியாக அது தடையற்று நடந்து கொண்டிருந்தது . அங்கிருந்து தொடங்கி எனது இடத்தை அது மிக பலமுள்ளதாக மாற்றும் என்பதை அறிந்திருந்தேன்.


புதுவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மை மக்கள் காங்கிரஸை ஆதரித்ததால் இங்கு தொடர்ந்து ஆட்சியில் அமர முடிந்தது. அவர்கள் முரண்படும் போது வேறுகட்சிகள் மெல்லிய பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சிக்கு வருகின்றன. ரங்கசாமி மட்டுமே பெயரளவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை கொண்டுவந்திருக்கிறார் . காங்கிரஸ் கட்சியில் நல்ல தலைமை இல்லாததால் ஒருங்கிணைப்பு சிதறி இது நிகழ்ந்திருக்கிறது. இழந்து போன ஒருமையை திரும்ப கொண்டுவர வேறுவிதமான தலைமை உருவாகி வரவேண்டும். அதற்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சாத்தியமும் தென்படவில்லை . இன்று கட்சி அமைப்புகள் வேறு வடிவங்களை எடுத்துவிட்டது. பழைய கோட்பாடுகள் இனி கைகொடுக்காது .


தலித் சமூகத்தினர் புதுவையின் முக்கிய புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறு சிறுக் குழுக்களாக விரவியிருக்கிறார்கள் . ஏறக்குறைய அனைவரும் கட்சி அல்லது அரசியல் மனச்சாய்வு கொண்டவர்கள். தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி அன்றாட வாழ்கையின் பல்வேறு சிக்கலான கூறுகளை சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். அவர்களை இங்கிருந்து கொண்டு புரிந்து கொள்வது அறிவு செயல்பாடாகாது என நினைக்கிறேன். அனைவரும் உருவகிப்பது போன்ற வரையறை செய்யப்பட்ட வாழ்கைக்குள் அவர்கள் சென்று அமர்வதில்லை முற்றாக வேறொரு உலகியல் சூழலில் வாழ்கிறார்கள். ஒரு வேட்டைகாரர்களின் மனநிலை . உயிர் வாழ்வதைப்பற்றிய எண்ணம் போல ஒன்று என நினைத்துக் கொள்வேன் . பிறருக்கு அவர்கள் திறந்து கொடுக்கும் மிக சிறிய ஜன்னல் வழியாக அவர்களை முழுவதுமாக பார்கவோ புரிந்து கொள்ளவோ இயலாது . குடும்ப உள்ளுறவுகளில் இருந்து துவங்கி சமூகத்தில் அவர்கள் புகுந்து புழங்குவது வரை எல்லையற்ற சாத்தியகூறுகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் ஒரு அலகில் இங்கு அரசியலில் பல புதிய தலைமைகளை உருவாக்கியும் நிராகரித்தும் சென்று கொண்டிருக்கிறார்கள்

முரண்களுக்கு இடையே ஒவ்வொரு குழுவிற்கும் ஒன்றுடன் ஒன்று மெல்லிய தொடர்பு இருந்தாலும் வேறுபாடுகள் காரணமாக அவர்கள் இன்றுவரை இணைந்து தங்களின் ஒற்றை குரலை அவர்கள் ஒருபோதும் பதிவு செய்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் ஒருங்கிணைத்து கையாளும் வெளித்தலைமை தேவைபட்டபோது உருவாக்கியும் கடந்தும் சென்றுவிடுகிறார்கள் . அதனால் அவர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். வெளி பார்வைக்கு தோன்றும் வளர்ச்சி , வீழ்ச்சி என்பது இதை கணக்கில் எடுத்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது . நான் அவர்கள் உருவகித்த அல்லது உருவாக்கிய பல ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்பது விந்தையானது.


புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...