https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 13 நவம்பர், 2020

அடையாளமாதல் * புதிய விளையாட்டு *

 


ஶ்ரீ:



பதிவு : 546  / 739/ தேதி 13 நவம்பர்  2020


* புதிய விளையாட்டு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 24.






பிரெஞ்ச் அரசாங்கம் தனது பிரதான எதிரியாக கம்யூனிஸ்டுகளை நினைத்தது ,புறநகர்களில் வளர்ந்து வரும் காங்கிரஸ் ஆதரவு குழுக்களால் அவர்களுக்கு உடனடி சிக்கலில்லை . பல நகரப் பகுதிகளில் மெல்ல வளர்ந்து வரும் கம்யூனிஸ்டுகள் எந்த சிக்கலுக்கும் பிரெஞ்ச் அரசுக்கு எதிராக உடனடியாக திரண்டெழுந்து அன்றாட சட்ட ஒழுங்கிற்கு எதிராக அறைகூவ முடிந்தது . காங்கிரஸ் கட்சி புறநகரத்தில் வலுவாக காலூன்றியிருந்ததால் பிரெஞ்ச் மற்றும் பிரிட்டீஷ் என இரு அரசுகளை அவர்கள் எதிர்க்க வேண்டியிருந்தது . இரு பிரெஞ்ச் எதிர் அமைப்பிற்கிடையே புரிதல் நிகழாமல் இருக்கவும் அவர்களை நகர்புறத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்கிற நிலைப்பாட்டை பிரெஞ்ச் அரசாங்கம் எடுத்தருந்தது . அதை நடைமுறைப் படுத்த எளிய அரசியல் சூழ்ச்சிகளை உபயோகித்தது . உள்ளூர் பெரு வியாபாரிகள் இந்திய யூனியன் பகுதிகளுக்கு பொருட்களை கடத்துவதை முக்கிய தொழிலாக செய்து வந்தனர் . புதுவையின் நிலப்பரப்பு அதற்கு சாதகமாக இருந்தது . காரைக்கால் , மாஹே, ஏனம் , சந்திரநாகூர் போன்று பிரிந்து கிடந்த நிலப்பகுதிகளுக்கு புதுவையில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்ல பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்ச் அரசுகளின் அனுமதி சீட்டு இருந்தது . புதுவையின் பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுவதாக சொல்லப்படும் பொருட்கள் தமிழக பகுதிகளிலேயே இறக்கி விற்கப்பட்டுவிடும் . அதில் பெரும் பொருள் புதுவை வியாபாரிகளால் ஈட்டப்படுவதை  பிரெஞ்ச் அரசாங்கம் அறிந்திருந்தும் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்திருந்தது . கடத்தல் வியாபாரிகளை ஒருங்கிணைக்க குபேர் போன்ற சிலர் அரசியலில் இருந்தனர். குபேர் இயக்கம் சீமான்களின் கட்சியாக மக்களால் பார்கப்பட்டதால் அவர்களுக்கு அரசியலை முன்வைத்து பொது ஜன அமைப்பை உருவாக்குவதில் பிரச்சனை இருந்திருக்க வேண்டும் . பிற மக்களையும் கம்யூனிஸ்டுகளை மிரட்ட மற்றும் அடியாட்களை வைத்துக் கொள்ள பெரும் பொருளியல் தேவை இருந்தது . வியாபாரிகள் அதற்கு உதவினர்.அரசு மற்றும் வியாபாரத்தரப்பிற்கு இடையே இவர்கள் எப்போதும் தேவைபட்டனர். தங்களது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள பிரெஞ்ச் அரசுக்கு சாதகமாக விடுதலை இயக்கங்களை வன்முறையால் நசுக்கத் துவங்கினர் . கம்யூனிஸ்ட்களை ஒடுக்குவது அவர்களின் அரசியல் என்றானது


பிரெஞ்ச் இந்திய விடுதலை போராட்ட காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பான்மையோர் நிலவுடமை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் , கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெருவது தங்களுக்கு எதிர்கால சிக்கல் என நினைத்தனர். அது ஒரு வகையில் உண்மையும் கூட . கம்யூனிஸ்டுகள் விடுதலை போராட்டம் மற்றும் வர்ககப் போரையும் முன்னெடுத்தருந்தனர் . குபேர் போன்றவர்களுக்கு பிரெஞ்ச் அரசு அளிக்கும் வெளிப்படையான ஆதரவு அவர்களை வன்முறைக்கு இட்டுச் சென்றது . காந்திய வழிமுறைக்குள் வந்ததால் காங்கிரஸ் அமைப்பு விடுதலை போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்க்க தயங்கினர் . கம்யூனிஸ்டுகளையும் தங்களின் எதிரிகளாக கருதியதால் ஒட்டு மொத்த போராட்ட அமைப்பு உருவாகி வரவில்லை . இது போன்ற நடைமுறை சிக்கலால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகும் புதுவை இந்திய அரசுடன் இணைய நீண்ட காலம் எடுத்துக் கொண்டது . ஹைதராபாத்தை இந்தியாவுடன் ராணுவ வளிமை கொண்டு இணைக்க முடிந்ததைப் போல இங்கு செய்ய முடியாது காரணம் புதுவை வேரொரு அன்னிய தேசத்து அரசால் ஆளப்பட்டது . அது சர்வதேச அளவில் ஒரு நாட்டிற்கு எதிரான போர் அறைகூவலாக பார்க்கபடுவதை அப்போதைய பாரதப் பிரதமர் நேரு விரும்பவில்லை


புதுவை பகுதிகள் பிரிந்து கிடந்ததாலும் விடுதலை இயக்கங்கள் இணைந்து போராடும் வாய்பில்லதாலும் விடுதலைப் போராட்டம் தேக்கநிலையை அடைந்திருந்தது. கம்யூனிஸ்டுகள் வேறுவிதமான சிக்கலை எதிர்கொண்டனர். பொது மக்கள் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கும் அதன் ஆதரவாளர்களான குபேர் போன்றவர்களை அஞ்சினர் எனவே அவர்களின் ஆதாரவு என்பது கம்யூனிஸ்டுகளுக்கு வெளிப்படையாக கிடைக்கவில்லை . எனவே போராட்டக்காரர்கள் குருங்குழுவாக செயல்படவேண்டி இருந்தது . அதில் வன்முறை அதன் வழிமுறையாக இருப்பதைத் தவிர வேறு வாய்ப்பில்லை . பல கட்டமாக குபேர் அடியாட்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் பகிரங்கமாக பொது வெளியில் மோதிக் கொண்டனர் . ஒரு கட்டத்தில் வன்முறை எல்லைமீறவே பிரெஞ்ச் அரசாங்கம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தடை செய்தது .பிரெஞ்ச் இந்திய விடுதலை போன்ற அனைத்து போராட்டக் குழுக்களின் பொது நோக்கமும் அதன் பாதையும் மிக சிக்கலானதாக பார்க்கிறேன் . ஒரு போராட்டம் தனது இலக்கு நோக்கிய மிக நீண்ட பயணத்தில் இடையிடையே அடையும் புரிதல், தடை , விரக்தி மற்றும் நெருக்கடிகளினால், தனது கொள்கை அல்லது அனுகுமுறையில் மாற்றம் செய்து கொள்வது தொடர்ந்து நிகழ்கிறது . அதைப்போன்று பாதையில் மாற்றம் செய்யும் போது பொரும்பாலும் துவக்க காலத்தில் இருந்த கொள்கைக்கு முற்றும் மாறான நிலைப்பாட்டை எடுக்கும் விபரீதம் நிகழ்ந்து விடுகிறது . காந்தி தனது விடுதலை போராட்ட அமைப்பில் தொடர்ந்து மாற்றங்களை செய்து கொண்டதை அறிந்து கொள்ள முடிகிறது . ஆனால் அவை மைய்ய நோக்கத்தில் இருந்து விலகி செல்லாமல் பார்த்துக் கொண்டார் . தனது தற்காலிக நிலைப்பாடுகளை அடுத்த கட்ட நகர்வுக்கு வழி வகுப்பது. என்பது புரிந்து கொள்ளக் கூடியது . ஆனால் நடைமுறை சிக்கல் மிகுந்தது . சுப்பையாவின் விடுதலை இயக்கம் அப்படிப்பட்ட நெருக்கடிக்கு வந்து சேர்ந்தது . காந்திய பாதை விடுதலைக்கு போராட்டத்திற்கு உகந்ததாக சுப்பையா கருதவில்லை. அது அறவழியில் வெற்றி அடைவதை பற்றிய நம்பிக்கை இல்லாத காலம் . ரஷ்யாவில் நிகழ்ந்து முடிந்த புரட்சி அவரை கவர்ந்ததில் வியப்பில்லை . லெனினும் , ஸ்டாலினும் அவருக்கு ஆதர்சமாக இருந்தனர் . தனது பிரஞ்ச் இந்திய விடுதலை இயக்கம் குருங்குழுவாக செயல்படுவதில் உள்ள நெருக்கடியை உணர்ந்திருக்க வேண்டும் . அமைப்பு ரீதியில் காங்கிரஸுடன் பயனிக்க இயலாது என்கிற அனிப்படையில் ரஷ்ய அமைப்புடன் தொடர்பு கொண்டு தனது அமைப்பிற்கு அதன் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தார் . பிரெஞ்ச் இந்திய அரசால் அவரது இயக்கம் தடை செய்யப்பட்டது அதன் பின்னர் நடந்தது .


இரண்டாம் உலக யுத்த ஆரம்ப காலத்தில் புதுவையில் சுப்பையாவின் கம்யூனிஸ கட்சி தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது . ரஷியாவின் உலகளாவிய முக்கியத்துவம் காரணமாக பிரெஞ்ச் நாடு ரஷியாவுடன் அனுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது . அதன் அடிப்படையில் 1940 களில் பிரெஞ்ச் இந்திய அரசு கம்யூனிஸ் கட்சிக்கு எதிராக தனது தடையை விலக்கிக்கொண்டது . அதன் பின்னர் சுப்பையாவின் இயக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தது . அதன் பின்னணியில் உள்ளூர் அரசியல் மற்றும் தனிப்பட்ட கணக்குகள் இருந்திருக்க வேண்டும் . குபேர் போன்றவர்கள் ஆதரவினால் உள்ளூர் அரசியலை நிர்வகித்த பிரெஞ்சு அரசாங்கம் அதிரடியாக சுப்பையாவை நோக்கிய மனச்சாய்வாக மாற்றிக்கொண்டது . அதற்கு கம்யூனிஸ இயக்கத்தின் வெகுஜன தொடர்பும் ஆதரவும் தேவைபட்டிருக்க வேண்டும் மேலும் குபேர் போன்றவர்களை கட்டுக்குள் வைக்கவேண்டிய நிர்பந்தம் எழுந்திருக்கலாம் .புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டி பிரிட்டீஷ் அரசு நெருக்கடி கொடுக்கத்  துவங்கி இருந்தது பிறிதொரு காரணம் . பிரெஞ்ச் இந்திய நிர்வகத்தின் போக்கு ஆரம்பத்தில் குபேருக்கு அதிர்வை அளித்தாலும் பிரெஞ்ச் அரசு செய்திருந்த ஏற்பாட்டில் சுமூகமாக நடந்துகொள்ள முடிவெடுத்தார் . சுப்பையாவின் இயக்கத்திற்கும் இதில் தனிப்பட்ட அரசியல் கணக்கு இருந்திருக்க வேண்டும் . பிரெஞ்சு அதிகாரத்தை எதிர்த்த அவர்களுக்கு குபேர் போன்றவர்களும் வர்க்க எதிரிகளாக கருதப்பட்டனர் . புதிய சூழல் சுப்பையாவிற்கு சாதகமாக இருந்தது . பிரெஞ்சு மற்றும் குபேர் கூட்டணியில் சுப்பையாவால் பிளவை உருவாக்க முடிந்தது . குபேரும் தனக்கான நேரத்திற்கு காத்திருந்தார்

ஞாயிறு, 8 நவம்பர், 2020

அடையாளமாதல் * தற்சிறை *

  



ஶ்ரீ:



பதிவு : 545  / 738 / தேதி 08 நவம்பர்  2020


* தற்சிறை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 23.






புதுவை காங்கிரஸ் கட்சியின் கடந்த கால அரசியல் வரலாறு குறித்த புரிதலுக்காக கட்சியை சேர்ந்த மூத்த சுதந்திர போராட்டகார்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தரப்பின் கருத்தும் பிற போராட்ட அமைப்புகளின் கொள்கையும் அதில் நிகழ்ந்த பிறழ்வுகள் அதற்கு காரணமான தனிநபர் விரோதம் , கடத்தல் வியாபாரக்கார்களின் செல்வாக்கு, அவற்றால் விளைந்த நெருக்கடி போன்றவை விடுதலை போராட்டத்தையும் அதன் முன்னோடிகளையும் எப்படி சீர்குலைத்தது என்பது பற்றி மிக விரிவான தகவல்கள் , பிரெஞ்ச் அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சிகள்,மற்றும் இந்திய விடுதலை போராட்டத்திலருந்து புதுவை விடுதலைப்போர் எப்படி பெரிதும் மாறுபட்டிருந்தது போன்றவை,அவற்றின் பின்னனியில் புதுவை அரசியலில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக தலைவர் சண்முகம் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டது  மற்றும் அந்தக் காலகட்டத்திலும் அதன் பின்னரும் தன்னுடைய ஆளுமையை கட்டமைத்தது போன்ற அவர்கள் சொல்லிய தகவல்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்தேன். அவை அனைத்தும் ஒன்றில் ஒன்று இணையாத தனியன்களாக இருந்தன ,இழை பிரிக்க முயற்சிக்கும் போதெல்லாம் முடியாமலாகி சிக்கலாகும் வாய்ப்பே அதிகமும் இருந்தது . ஒரு புள்ளியில் அவை மூளையை சூடாக்கி சோர்வளிக்க வைத்தது . அதிலிருந்து விடுபடும் நோக்கிலும் அவற்றைப் பற்றிய மேலதிக தகவல்களுக்காக அவர்களையும் காரைக்கால் முன்னனி விடுதலை போராட்ட காரர்களையும்  தொடர்ந்து சந்தித்து உரையாடுவதை வழக்கமாக்கி இருந்தேன் . அது ஒரு சூது விளையாட்டைப்போல போல பெரும் மயக்கத்தை கொடுத்து அதிலிருந்து எளிதில் வெளிவர இயலாத ஆர்வத்தையும் உருவாக்கியிருந்தது . எனக்கு நான் சென்றடைந்த தகவல்களும் அவற்றைப்பற்றிய நுண்ணிய புரிதல்களும் அவற்றை தொடர்புறுத்தும் பிற செய்திகளும் தேவையாய் இருந்தது . அரசியல் பற்றிய கற்றலும் புரிதலுக்குமாக அவற்றை என்னுள் நீண்ட காலமாக தொகுக்க முயற்சித் கொண்டிருந்தேன் . அவற்றை இப்போது பதிவிடுகையில் ஆழ்மனம் திறந்து கொள்வதை போல உணர முடிகிறது


அரசியலை விட்டு வெகுதூரம் விலகிச் வந்துவிட்ட பிறகும் இது ஏன் எனக்கு அவசியானது என கேட்டுக் கொண்டதுண்டு . காரணம் அவை எளிய தன்னலமில்லாத மனிதர்களின் கதை . சுதந்திரம் என்கிற ஒற்றைச் சொல் அவர்களை உள்ளிழுத்து வாழ்நாளெல்லாம் கொந்தளிக்கச் செய்தது . அவர்களை புரிந்து கொள்ள முயல்கையில் என்னை அவை விசித்திரமான உளநிலைக்கு இட்டுச் சென்றன . சுதந்திர போராட்டம் பற்றிய அதீத கற்பனை சாகசமும் அதன் நிகழ் சோகமும் நெஞ்சையடைக்க வைப்பவை . ஓரிருவரே அதில் நினைத்ததை செய்து காட்டி வெற்றியை அடைந்தவர்கள். அதுவும் பிறர் பார்வைக்கு , சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியை போல ஒன்று அடைந்த அவர்களின் பேச்சிலும் ஒலிக்கும் கசப்ப்பும் விரக்தியும் சுதந்திர போராட்ட காலத்தைப்பற்றி பெரும் அச்சத்தை கொடுப்தாக இருந்தது. ஒரு சிறு மாநில சுதந்திர போராட்டம் அதன் தலைவர்களுக்கு கொடுத்த அலைக்கழிப்பை புரிந்து கொண்டால் காந்தி ஏன் மகாத்மா என அழைகப்பட்டார் என புரிந்து கொள்ள இயலும் என நினைக்கிறேன் , மேரலும காந்தியர்களை இன்றும் இயக்கும் அந்த உளவிசையை அறிந்து கொள்கிறேன்.

  

அவர்களில் ஒருவராக சண்முகத்தை புரிந்து கொள்கிறேன் . கறாரான அரசியல் வழிமுறையையும் அதில் நிதான போக்குமாக பயணித்தவர் . கணக்கிலடங்காத பலர் ஈசலை போல எங்கும் பறந்து காணாமலாயினர் . அவர்களில் மிச்சப்பட்டு அதனது இலக்கை அடைந்தவர்கள் ஒரிருவரில் சண்முகம் ஒருவர் . பெரும் ஆளுமையாக அவர் வாழும் காலத்தில் கருத்தப்பட்டவர் , அவரின் அருகமர்ந்து அரசியல் பழக்கம் வாய்ப்பு அமைந்தது என் நல்லூழ் . அவர் சொல்லி புரியும் அரசியலுக்கு முன்பாக அவரை மேலும் அனுகி புரிந்து கொள்ள முயன்றது அவரது ஆரம்பகால அரசியலைக் குறித்து . அவர் கடந்து வந்த காலத்தை தூரத்தில் நின்று அவரின் அரசியலால் நிகழ்வதைப் பார்தவர்கள் சொல்லிய பிம்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவற்றால் அடித்து செல்லப்படாமல் . நிதானமாக அவரை அருகிருந்து அனுமானிக்க முயன்றிருக்கிறேன் .அவரைப் பற்றிய நுண்தகவல்களுடன் அவர் விரித்து சொன்ன நிகழ்வுகளைக் கொண்டு அக்கால சூழலில் நுழைந்து பார்க்கும் வாய்பை அது கொடுத்தது . அந்த உரையாடல்கள் இரண்டு வகையில் எனக்கு ஆழமான புரிதலைக் கொடுத்திருந்தது. அப்போது ஏன் அவற்றை தேடி தேடி சென்றேன் என இப்போது உணர்ந்து கொள்கிறேன் . ஜெயமோகனின் பின் தொடரும் நிழல் நாவலை வரும் சம்பவங்களையும் கதை மாந்தர்களையும் எனக்கு நினைவுபடுத்தியது . அவற்றை இதில் பொருத்திப்பார்பது பிரமிப்பைத் தருவது அதே சமயம் அரசு மற்றும் அரசியலின் பொருட்டு  மானுட அறம் எப்படியெல்லாம் அன்று சிதைக்கப்பட்டிருக்கலாம் என உணரும் போது அவை ஆறாத காயமாகி விடுகிறது . அந்த கதைமாந்தர்கள் போன்றவர்களை நேரில் சந்திருந்திருக்கிறேன் . அவர்களுடன் நேரம் செல்வது தெரியாது உரையாடியிருக்கிறேன் என்பது என்னை சரித்திரத்தில் இருத்திக் கொள்ளும் உவகையை கொடுக்கிறது .புதுவை பிரெஞ்ச் அரசாங்கம் தனக்கெதிரான சுந்திர போராட்டத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள , ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அதற்கு மிக நுட்பான அரசியல் திட்டமும் , நகர்வும் இருந்திருக்க வேண்டும் . அவரவர் இயல்பினால் அன்று போராட்டக்காரர்கள் ஒன்றிணைய முடியாத தடையை அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள் . போராட்ட செயல்பாடு அவர்கள் தங்களை நகர்புறம் , புறநாகர் என இரண்டாக பிரித்து வளர்த்தெடுத்துக் கொள்ள வைத்திருந்தது  . காந்திய வழிமுறையில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் ஆதரவாளர்கள் புறநகரிலும் . புரட்சி ஒன்றே தீர்வு என நம்பும் அதை சார்ந்த வன்முறையில் நம்பிக்கையுள்ளவர்கள் நகர்புறங்களையும் தங்களது போராட்ட களமாக எடுத்துக் கொண்டனர் . இந்த இரண்டு குழுக்களும் ஒன்றை ஒன்று எதிர்த்து இயங்கும்படி பிரெஞ்ச் அரசாங்கத்தால் பார்த்துக் கொள்ளப்பட்டது . அவரவர் தங்கள் களத்தைவிட்டு வெளியே வந்து இணைந்து கொள்ளவோ , போராடவோ முடியாத சூழல் இயல்பிலேயே உருவாகி வந்திருக்க வேண்டும் . பிரெஞ்ச் அதிகாரம் அந்த பிளவை தனது அரசியலின் பொருட்டு அதை நிரந்தராமாக்கி இருந்தது. ஒரு சிறிய யுக்தியின் மூலமாக .

செவ்வாய், 3 நவம்பர், 2020

அடையாளமாதல் * எல்லைகளை அறிய *

 


ஶ்ரீ:



பதிவு : 544  / 737 / தேதி 03 நவம்பர்  2020


* எல்லைகளை அறிய * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 22.







பாலன் வீட்டில் கூடும் இரவு நேர சந்திப்புகளில் கலந்து கொள்பவர்கள் பேசிக் கொள்ளும் சம்பவங்களை ஒட்டு மொத்தமாக தொகுத்துக் கொண்டு பின்னர் அதை மாற்றி போட்டு அடுக்குவதும்,அவர்களது உணர்வுகளை என்னுள் மீள மீள நிகழ்த்தி பார்ப்பது ஒருவகை கிளர்தலை கொடுத்திருந்தது .அவர்களின் உணர்ச்சிகளை அதில் இருந்து கழித்துவிட்டு வெறும் தகவலாக அடுக்கி வைத்துக் கொள்வதும் , பின்னர் அடுக்கப்பட்டவைகளில்  இருந்து அவர்கள் எப்படி அதில் பிணக்கப்படுகிறார்கள் என்பதையும்,அதில் உள்ள தொடக்கம் இறுதி விளைவும் , முடிவுறாத பின்விளைவுகளையும், ஒரு நாவலைப் போல நினைவில் விரித்தெடுத்துக் கொள்ள முயன்றிருக்கிறேன். தொடக்க காலத்தில் அவற்றில் இருந்து சரியாக நிகழ்த்தப்பட்டவை, நிகழ்த்தப்படாதவை என எனது புரிதல் இரண்டாக பிரிந்திருந்தது . ஆனால் அவை பிழை என மிக விரைவில் தெரிந்து போனது . காரணம் அரசியலில் யாரும் எதையும் நிகழ்த்திவிடுவதில்லை ,நிகழ்வதில் இருந்து தங்களின் நிலைகளை கண்டடைகிறார்கள். அவற்றை தங்களின் உரையாடல் வழியாக பேசி பேசி புனைந்து அதில் தன்னுடைய பங்காக அதன் அர்த்தத்தை மாற்றி சொல்ல நினைப்பவர்களின் அத்தனை சாத்தியகூறுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து பிரித்துப் பிரித்துப் பார்ப்பது பிறிதொரு அனுபவமாக இருந்தது .ஆனால் அவை மேலும் மேலும் வினாக்களையே  உருவாக்கி வைத்தது . ஒரு போதும் விடைகளை அல்ல


எந்த ஊரில் சிறு கூடுகை நடத்தினாலும் அந்த ஊரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட பெரியவர்களை தேடிச் சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். புதுவை அரசியல் வரலாற்றில் அவர்களுக்கான இடம் தவிர்க்க இயலாதது என்று  கருதினேன்.அவர்கள் அனைவரையும் , அனைத்தை பற்றிய செய்திகளையும் தெரிந்து வைத்துக் இருப்பது எனக்கு  மிக முக்கியமானதாக கருதினேன்.அவர்களுடன் அரசியல் பற்றிய உரையாடல்களுக்கு அவர்கள் அளித்த புதிய அரசியல் கோண விதைகளைப் போல இருந்ததன . அவற்றில் சில அப்போதே முளைத்தன , சில காலம் கழித்து முளைத்தவை இன்னும் முளைக்காதவைகள் என்று .முளைக்கவே முடியாத சில எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன . அரசியலை விட்டு வெளியேறிய பின்னரும் சில முளைத்துக் கொண்டே இருக்கின்றன . இப்போது அந்த அரசியல் தகவல்களை உலகியல்லில் போட்டுப் பார்த்து அவற்றை உளவியல் குறித்த நுட்பங்களாக பார்க்கத் தொடங்கினேன் . அவை முளைத்து காடாக விரிந்து கொண்டே இருக்கின்றன . காடு ஆழ்மனத்திற்கு அனுக்கமானது . தன்னை உள்நோக்கிய பார்வையை கொடுப்பது .அனைத்து அரசியல் நிகழ்விற்கும் புதிய அர்த்தம் கொடுப்பாதக இருக்கிறது .


சுதந்திர போராட்டகாரர்களுடானான உரையாடல்களில் அவர்கள் முதலில் அவர்கள் நடப்பு அரசியல் குறித்து பேச விரும்பாதவர்களாக அல்லது  தயங்குபவர்களாக, அதன் மீது கடும் காழ்ப்பும் வெறுப்பும் கொண்டிருந்தனர். அவற்றை பற்றி இப்போது அது பேசி ஆவது என்ன? என்பது போல எண்ணம் இருந்தாலும் பேசத் துவங்கிய பின்னர் அதில் அடித்து செல்பவர்களாக மெல்ல சரளமாக பலவற்றை தங்களது நினைவில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டே இருந்தனர் . அனைவரிடமும் பொதுவாக இருந்த காணப்பட்ட ஒன்று, ஒரு நிகழ்வை சொல்லி முடித்து பின்னர் தாங்கள் நினைத்தது,பின்னர் அது என்னவாக நடந்தது முடிந்தது என எப்போதும் சொன்னார்கள் . அனைத்திலும் அவர்களின் விரக்தி ஒன்று போல இருந்தது. அரசியலின் கொடும் முகம் அது . அவ்வப்போது தயக்கத்தை கொடுத்தாலும் நினைத்ததை நோக்கி பயணப்படும் வாய்ப்பை,உற்சாகத்தை அது ஏன் குலைக்கவில்லை எனக் யோசித்ததுண்டு .மறுமுறை தேடிச்சென்று சந்திக்கும் போது அவர்களின் மனநிலை பெரும் மாற்றமடைந்திருந்தது.கட்சியின் முக்கிய நிகழ்விற்கு அழைக்கும் போது தவறாமல் கலந்து கொள்வதை பார்த்திருக்கிறேன்.அவர்களை கட்சி நிகழ்வில் மீளவும் பார்க்க நேரும் போது தலைவர் சண்முகம் அடையும் திகைப்பு எனக்கு உற்சாகத்தை தருவதாகவும் மேலும்மேலும் அவர்களை போன்றவர்களை தேடிச் சென்று சந்திப்பதை தீவிரமாக்கியது.


அவர்களிடமிருந்து பெறும் தகவல்களில் உள்ள அரசியல் குறித்த விடை தெரியாத கேள்விகள் அனைத்தையும் அதன் மையப்புள்ளியான தலைவர் சண்முக்கத்திடமே கேள்விகளாக எழுப்பிய போது, அவரிடம் மெல்ல படரும் பதற்றமும், அந்தக் கேள்விகளை எங்கிருந்து அடைகிறேன் என்று திகைப்பும் எழுவதை கவனித்து இருக்கிறேன்.அவை அனைத்திற்கும் பிறிதொரு நோக்கத்தை முன்வைத்தார் . தொடர் உரையாடல் எங்களை இன்னும் அனுக்கமாக்கியது. அவர் எங்கு பயணப்பட்டாலும் நான் அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவர் எனக்கு தந்து கொண்டே இருந்தார் . முக்கியமாக இரவு நேரக் கார் பயணத்தின் போது தனிமையில் நடைபெறும் உரையாடல்கள் மிக மிக அகவயமானதாக நெருக்கத்தை கொடுப்பதாக இருந்தது .அவை சட்டென கேள்விகளில் உள்ள புதிய முதல் புள்ளியை கண்டடைய வைத்து விடும் .அவை மட்டும்தான் உண்மையா? என்றால் , இல்லை அதுவும் உண்மை. அதையும் கடந்து நமக்கு புரியாத உன்மை பிறிதொன்று இருக்கிறது . அரசியலில் அவர் எல்லாவற்றிலும் முடிவெடுப்பதோ, தன் கருத்தை அழுத்தமாக முன்வைப்பதோ வழக்கமில்லை . கால சூழலை ஓட்டி உருவாகி வருபவைகளில் இருந்து  எதிர்காலத்தில் அவை என்ன நெருக்கடியை உருவாக்கும் ,அதில் தன்னை எதிர்ப்பவர்களின் எதிர்விணை என்னவாக இருக்கும் என்பதுடன் அதில் தனக்கானதை கண்டுகொள்வதும் அதை ஒட்டி புதிய கணக்குகளை உருவாக்கிக் கொள்வதையும் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன் . அது பிறிதெவரின் கணக்கை விட பெரியது. அவற்றில் சிலவற்றிற்கு அவர் விடையைப் போல ஒன்றைத் தந்தாலும் கேள்வியின் பிசிறு எப்போதும் உறுத்தலைப் போல இருந்தது கொண்டிருந்து . அதன்பின் எனக்கான விடையை நான் அவரிடம் முனைந்து தேடுவதில்லை. அதற்கான தேடுவிசை என்னிடம் இல்லை என்பதும் , அதன் கச்சாப் பொருளான தகவல்கள்களும் அதன் தொகுப்பும் முழுமையாக என்னிடம் இல்லை என்பது  முக்கிய காரணம் .

புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...