https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 24 நவம்பர், 2025

அடையாளமாதல். இடரிசை

 





ஶ்ரீ:



அடையாளமாதல்


பதிவு : 696  / 885/ தேதி 24 நவம்பர்  2025



* இடரிசை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 93.




என்ன காரணத்தினாலோ இந்த சிக்கல் அவரது வரம்பை தாண்டி தில்லி சென்று கொண்டிருந்தது. முதல்வர் கட்சி தலைவர் இருவரும் சந்தித்துக் கொண்டதாக தெரியவில்லை. வல்சராஜின் நகர்வுகளுக்கு அவரது ஆசி இருந்திருக்கலாம் இன்னொரு வகையில் அவர் நராயணசாமிக்கு அடங்கியவர் இல்லை என்பதை பல சந்தர்ப்பத்தில் பார்த்திருக்கிறேன்

இந்த சிக்கலில் குத்தி நிற்கும் முள்ளாகவும் அதே சமயம் அதன் தீர்வாகவும் நான் நினைத்த இருந்தது வைத்திலிங்கம். அவர் தன்னை முன்னிருத்தி இந்த ஆட்டத்தை துவங்கவில்லை அவர் அனைவருக்கும் பொதுவான முகம் என்பது தாண்டி இது அவருக்கு அரசியல் ரீதியான லாபத்தை விட நஷ்டமே அதிகம். தில்லியில் தனித்த செல்வாக்குடன் நிற்கும் வல்சராஜ் சண்முகத்தை வீழ்த்துவதில் முனைந்து வென்றது அவருக்கு அது நாள் வரை இருந்த அரசியலில் தனது இடம் பற்றிய மனத் தடைகளும் தயக்கங்களும் விலகி புதுவை அரசியலில் நேரடியாக பங்கு கொண்டு அதன் பலனை அனுபவிக்க ஆரம்பித்திருந்தார். அது கொடுத்த உற்சாகம் மற்றும் எதிர்ப்பின்மை அவரது நீண்ட நாள் கனவை இப்போது கைக்கு கொண்டு வந்திருக்கிறது. தனது தில்லி ஆதரவை வைத்து முதல்வரின் தனி கவனத்திற்குள்ளான உள்துறையை கேட்டுப் பெற்றார். உள்துறை எப்போதும் மிக நுண்ணிய அரசியல் சமன்பாடுகளை நிர்வகிக்கும் பல நூறு தட்டுகளை கொண்ட தராசுக் கோல் அது அதை சரியாக கையாள உள்ளூர் அரசியல் பற்றிய மதிப்பீடுகளும் அவதானிப்பும் முதன்மையானவை. அவற்றில் முன்பின் மாற்றங்கள் இருக்கலாகாது. ஊழலுக்கு வழி வகுக்கும் அந்த இடைவெளி உருவாகாமல் இருப்பது மட்டுமே அதை சிறப்பாக நிர்வகிக்க இயலும். ஒரு முறை அந்த கட்டு அவிழ்ந்து போனால் அது தொழுவத்தை விட்டு ஓடும் மாட்டை பிடிப்பது போல முழு திறமையும் துரத்துவதில் கழிந்து விடும்


ஆரம்பத்தில் வல்சராஜிற்கான உள்ளூர் அரசியலில் ஒரே ஆதரவு அமைப்பு இளைஞர் காங்கிரஸ் மட்டுமே. ஆனால் அவரது செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை விட்டு விலகி அவரின் ஆதரவானவர்கள் அல்ல என்கிற நிலையை எடுத்திருந்தனர் . சண்முகம் வெளியேற்றத்திற்கு பிறகு நான் வல்சராஜை சந்திப்பதை நிறுத்திக் கொண்டேன். ரங்கசாமியின் அமைச்சரவையில் தனது இலாக்காவில் வல்சராஜ் எதிர் கொண்ட தடை எந்த சமரசத்திற்கும் வராதவரான ரங்கசாமி மையப்படுத்தி இருந்ததுவல்சராஜ் தன்னைப் பற்றிய இளிவரள் மதிப்பீடு கொண்டவர் என்பதை அவர் அறிந்திருந்தார். அரசாங்க கோப்பு விஷயத்தில் அனைவருக்கும் மேலாக தன்னை வைத்த போது ரங்கசாமி நிராகரித்து கடந்த சென்ற முறை வல்சராஜை சீற்றங் கொள்ள வைத்தது


அரசயலில் நீண்ட அனுபவமும் ஆற்றலும் கொண்டவர் வல்சராஜ். புதுவை கோரும் வல்லமை மிக்க தலைவராக உருவாகி வரும் வாய்ப்பு பலமுறை நிகழ்ந்தாலும் தனது தனிப்பட்ட கணக்கிற்கு அது உதவாது என்பதுடன் எதிரானது என அதிலிருந்து தன்னை திட்டமிட்டு விலக்கிக் கொண்ட போது நான் அவரிடம் இருந்து விலக துவங்கினேன். சண்முகம் முதல் முறை முதல்வராக பதவி ஏற்ற போது அவரது அமைச்சரவையில் வல்சராஜிற்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பதவி ஏற்பு விழாவில் மாநிலம் முழுவதில் இருந்தும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நான் அதை மிக நுட்பமாக ஒருங்கியிருந்தேன். அந்த பதவியேற்பு நிகழ்வில் கண்ணன் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றார். வழமை போல அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். ஆனால் முறையான அமைப்பு ரீதியாக வல்சராஜை முதன்மை படுத்தும் திட்டம் மிக கச்சிதமாக ஒருங்கப்பட்மிருந்தது திரளுக்கும் அமைப்பிற்குமான வித்தியாசம் பல முணைகளில் வெளிப்படும்படி அதை ஒருங்கி இருந்தேன். இது கண்ணனை தாண்டி வல்சராஜிற்கு இரண்டாம் நிலையை மறைமுகமாக வெளிக்காட்டும் முயற்சி. அது கண்ணன் அமைப்பினருக்கான நேரடி அறைகூவல். அதை அடுத்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் புதுவையின் அனைத்து அரசு துறைகளிலும் பொது சிக்கலை எப்படி அணுக வேண்டும் என்கிற வழிகாட்டுதலை அளித்திருந்தேன். அது ஏறக்குறைய கண்ணனின் செயல்பாட்டுக் களம். அவரின் அந்த களம் தனது செயல்பாட்டை இழந்திருந்தது. அந்த களத்தை கைப்பற்றும் முயற்சியில் எதிர் கொள்ள வேண்டிய சிக்கலை அறிந்திருந்தேன். அவற்றை இரண்டு விதங்களில் எதிர் கொள்ள வேண்டி வரும் என ஊகித்திருந்தேன். சிதையுண்ட கண்ணனின் அமைப்பில் புதியவர்களை உள்நுழைய வைப்பது அவர்களுக்கு எதிரானதாக புரிந்து கொள்ளப் பட்டாலும் அவர்கள் எங்களுக்கு எதிராக நிற்க இயலாது காரணம் அமைப்பு ரீதியில் செயல்படுவதில் இருந்து விலகி அவை அனைத்தும் சில தனி நபர்களின் கைகளுக்கு சென்று சேர்ந்திருந்தது. அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளால் அவர்களின் அமைப்பினரே கடும் அதிருப்தியில் இருந்தனர் அவர்களுக்கு மாற்றாக ஒரு அமைப்பு உருவானால் அதை மகிழ்வுடன் ஆதரிப்பார்கள். இரண்டாவது நான் அதை நெகிழ்வுத் தன்மையுள்ள அமைப்பாக உருவாக்கி இருந்தேன்


கண்ணனின் அமைப்பினரில் எனக்கு பல நண்பர்கள் உண்டு. அவர்கள் எனது செயல்பாட்டு முறையை அறிந்தவர்கள் என்பதால் முழு அளவிலான எதிர்பை எதிர் கொள்ள வேண்டி இருக்காது என ஊகித்திருந்தேன். இவை எல்லாம் மிக கச்சிதமாக செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருந்தது. அவற்றை செயல்படுத்துவதில் இடறை எதிர் கொண்டது எங்கள் தரப்பில் இருந்து என்பது நான் எநிர் நோக்காதது.


ஆட்சியில் அமர்ந்த சில நாட்களுக்குள்ளாக முதல்வர் சண்முகம் மற்றும் வல்சராஜின் சுகாதரத்துறையுடனான முரண் துவங்கி எதிர்ப்பாக உருமாற்றம் அடைந்திருந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனை மிக பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உருவாகி திட்டம் வைவிடப்பட்டடது. வல்சராஜ் அமைச்சராக பதவியேற்ற உடன் அந்த திட்டம் மீண்டும் எழுந்தது. அதில் அரசு கொள்கை கருத்து முரண்பட இருவரும் மோத துவங்கினர்.வல்சராஜ் தனது கேரள லாபியின் உதவியை பெற்று தில்லியில் ஒப்புதல் பெற்றது சண்முகத்தின் நிர்வாக வளையத்தில் இருந்து முற்றும் வெளியேறி இணை அரசியலில் செய்படத் தொடங்கினார் இது இருவருக்குமான உறவை ஒருபோதும் சரி செய்ய இயலாத எதிர் முணைக்கு சென்றமர்ந்தது


தில்லியில் கேரளா லாபி பல நுண்ணிய ஊடுபாவுகளை கொண்டது அது அகில இந்திய கட்சி நிர்வாகிகள் அலுவலகம் அனைத்தையும் இணைத்து பலமுள்ளதாக அமைப்பாக கட்சிக்கு வெளியே தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. அதன் உள்ளீட்டு பலம் அகில இந்திய கட்சியின் நிர்வாகத்திற்கு இணையாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டது அதனால் அகில இந்திய தலைமைக்கு உருவாகும் நெருக்கடிகளில் அதற்கே உதவும் வல்லமையை பெற்றிருந்தது . கட்சிக்கு வெளியே கட்சி செல்லும் திசையை கணிக்கும் அல்லது திசைமாற்றும் இடத்திற்கு சென்று சேர்ந்தது. வல்சராஜ் வசிக்கும் மாஹே கேராளவை ஒட்டியவை என்பதால் அவர் கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பிருந்தே அனைவராலும்லீடர்என அழைக்கப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் அணியை சேர்ந்தவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாநில அரசியலில் சிக்கல் எழும்போது தலைவர் சண்முகம் வல்சராஜின் கருணாகரனின் தொடர்பை உபயோகப்படுத்திக் கொண்டார் அது வல்சராஜின் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகித்ததுடன் தன்னை பிற தலைவர்களிடம் இருந்து பிறித்து காட்ட உதவியது. மாநில தலைவர் பதவிக்கு பல வித நுண்ணிய சரடுகளால் பல தலைவர்களை இணைப்பது. சண்முகம் நேரடியாக அந்த தலைவர்களை சந்திப்பது அவரது தலைமைக்கும் அரசியலுக்கும் சிக்கலை கொண்டுவரும் என்பதால் பிற மாநில தலைவர்களுடனான நல்ல தொடர்பில் இருப்பவர்களை தனது தூதுவர்களாக பயன் படுத்துவது அவரது வழக்கம். மூப்பனார் மற்றும் வாழப்பாடி ராமாமூர்த்தியுடனான எனது தனிப்பட்ட தொடர்பை சண்முகம் பலமுறை அவ்வாறு உபயோகப்படுத்தியிருந்தார். இது அவரின் உள்ளூர் அரசியல் பலத்தை பிறரால் சரியாக கணிக்க முடியாததாக ஆக்கியது


கேரளா தலைவர்கள் தில்லி அரசியலில் பெரும் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தனர் அவர்களின் ஆதரவு பெற்ற பிற மாநில தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை நேரடியாக மற்றும் மறைமுகமாக தங்கள் அகில இந்திய தலைமைக்கு சொல்லி தங்கள் அரசியலில் வெற்றி பெற்றிருந்தார்கள். காங்கிரஸின் அடிப்படை இப்படிப்பட்ட பல தளங்களுடன ஊடாடும் நிலைபாட்டை அடிப்படையாக கொண்டது. இது போன்ற எந்த அரசியல் பலமுமில்லாமல் உள்ளூர் அரசியல் ஆதரவுடன் பதவிக்கு வந்தமர்ந்த ரங்கசாமி திரைமறைவு விளையாட்டில் ஆர்வமில்லாதவர் எனவே தில்லியில் புதுவையின் மேலிட பொறுப்பாளர்களை தாண்டி தனக்கான அதரவு தளத்தை அவர் உருவாக்கவில்லை. மோதல் முற்றிய போது இது வல்சராஜிற்கு சாதகமானது. எதிர்பில்லாமல் தனது காய்களை நகர்த்த ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சி அரசியலில் தில்லியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிபடையாக தெரியாமல் இருந்தாலும் அதன் விசை அதிகம். காங்கிரஸ் இன்று சந்திக்கும் வீழ்ச்சிக்கு பின்னால் இவை முக்கிய காரணங்கள்.


தில்லியில் தனக்குள்ள இடத்தால் அங்கு ரங்கசாமிக்கு எதிராக புதுவையில் அரசியல் மோதல் இருப்பது போல ஒன்று உருவாக்கி முன்வைக்க பட்டிருந்தாலும் அதன் பின்னணியில் அதிகார பகிர்வில் நிலவிய சமமின்மை முக்கிய இடத்தை வகித்தது . அந்த மோதல் முற்றிய போது அவரை மாற்றுவது எளிது காரணம் பல சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கசாமி மீதான தனிப்பட்டு எதிர்பிலும் அதிருப்தியிலும் இருந்தார்கள். அவர்களை ஒருங்குதிரட்ட வல்சராஜிற்கு மிக எளிதாக இருந்தது. மாநில அரசியலில் தன்னை வெளிப்படையாக முன்னிறுத்த முடியாது என்பதால் வைத்திலிங்கத்தை முன் வைத்திருக்கிறார்


தேர்தல் நேர மிக குறுகிய காலத்தில் கட்சி துவங்கி வென்று சட்டமன்றம் சென்றபோது முதல்முறை காங்கிரஸின் வேர் காணாமலானது. இரண்டாவது முறை ரங்கசாமி எதிர்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் வென்றிருந்தாலும் முதல்வராக நாராயணசாமி மிக அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸின் அந்த வெற்றிக்கு பின்னால் தேர்தல் நேரத்தில் சில தொகுதிகளின் வேட்பாளர் தேர்வில் ரங்கசாமியின் சமரசமன்மையும் விட்டுக் கொடுக்காத தன்தையாலும் மிக குறைந்த பெரும்பான்மை வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார்



வைத்திலிங்கமும் இந்த அரசியல் விளையாட்டில் தன்கான இடம் என்ன என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார் என ஊகித்திருந்தேன். காங்கிரஸ் அரசியல் கால்பந்தாட்டம் போல , துவக்குபவர் பந்தை களத்தில் செலுத்திய பின்னர் சிறந்த ஆட்டகரார் அதை பிறருக்கு கிடைக்காமல் தன் திறமையை காட்டுவது போல ரங்கசாமியின் மாற்றம் குறித்த கலகம் முதலில் புதுவையில் இருந்து துவங்கி பின்னர் தில்லி கொண்டு செல்லப்பட்ட பிறகு பிற அனைவரையும் ஒதுக்கி வல்சராஜ் என்ன நினைக்கிறாரோ அதை மட்டும் நிகழ்த்த துவங்கிவிடுவார். அதுவரை மட்டுமே புதுவை சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவை


அவருடன் இருபத்தி ஐந்து வருட அனுபவத்தில் வல்சராஜின் தில்லி ஆட்ட முறையை நான் அறிந்திருந்தேன் . அவர் நிகழ்த்தி சட்டமன்ற அதிகார அரசியல் சதுரங்க விளையாட்டில் எனக்கு ஆவது ஒன்றில்லை ஆனால் வல்சராஜின் அதிகாரத்தை பெற , தக்கவைக்க அவரின்தன்மயவிளையாட்டு புதுவை அரசியல் களத்தில் நீண்ட காலம் சரி செய்யவே இயலாத விளைவுகளை கொண்டு வரும். நிலமுடையவன் அறுவடைக்கும் குத்தகைகாரனுடைய அறுவடைக்குமான வித்தியாசம். அடுத்த விளைச்சல் பற்றிய அக்கரை இல்லாமல் குறுகிய லாபத்திற்கு நிலத்தை கொல்ல அவர்கள் தயங்குவதில்லை. சண்முகம் வெளியேற்றம் அவர் செய்து கொண்ட தற்கொலை என்றாலும் ஒருவகை ஊழ் . அது நிகழ சண்முகம் வல்சராஜ் இருவரின் தனிப்பட்ட மோதல் போக்கு அடிப்படை காரணம். முதல் முறையாக வல்சராஜ் தனது அரசியல் விழைவின் பொருட்டு நேரடியாக களத்தில் இறங்கி திமுக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு வென்றிருந்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...