ஶ்ரீ:
பதிவு : 695 / 884/ தேதி 19 நவம்பர் 2025
* தீக்குச்சிகள் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 92.
முதல்வர் என்னிடம் சொல்ல வந்ததை இரண்டாக வகுத்துக் கொண்டேன். ஒன்று தில்லியில் இருந்து இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு வர இருக்கும் செய்தி பற்றி அறிந்திருக்கிறார் . தில்லி தூது கட்சி பார்வையாக வைக்க வேண்டி இருக்க காந்திராஜின் புரிதல் பிழையால் முதல்வர் தரப்பாக தன்னை அவர்கள் தில்லியில் முன்னிறுத்துவதை அவர் அறிந்திருக்கவில்லை. தில்லி எப்போதும் தந்திர பூமி. அது சதிகளால் மட்டுமே தன்னை மீள மீள நிறுவிக் கொள்கிறது. காங்கிரஸ் தலைமையகத்தின் இரண்டாம் நிலை தலைவர்கள் மாநில அளவில் விலாசம் இல்லாதவர்கள். தில்லியில் ஏதாவது ஒரு முதல் நிலை தலைவர்களின் ஆடர்லி போல வேலை செய்பவர்கள். மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களுக்கு இடப்படும் வேலைகளை திறமையாக கையாண்டு எஜமானரின் அன்பிற்கு பாத்திரமாக வேண்டும் என்பதற்கு அப்பால் வேறு பிரக்ஞை இல்லாதவர்கள். சூழல் சார்ந்து உருவாக்கும் தேர்ந்த சதி என்பதால் அதை சார்ந்து கேட்டகப்படும் கேள்விகளின் தன்மையை காந்திராஜ் கணிக்க தவறினார். அந்த இடம் துவங்கி அந்த தூது தோல்வியில் முடிந்திருப்பது பற்றிய தனக்கு கவலை இல்லை என்றார் முதல்வர் . தான் தனது குரு சொல்படி செய்தேன் இனி செயல்படவும் இருக்கிறேன் என்பது அவரது சொல்லாக இருந்தது. அதை என்ன காரணத்திற்காக என்னை அழைத்து சொல்ல வேண்டும்?. தில்லி தூது முதலில் என்பது பிழை நகர்வு என அவர் உருவகித்திருந்தால் மட்டுமே என்னை அழைத்திருக்க வாய்ப்பு. நான் முன் வைத்த நகர்வு முதலில் துவங்கி இருக்க வேண்டும் என அவர் இப்போது நினைத்திருந்தால் அதை எனக்கான அங்கீகாரமாக பார்த்தேன்.
அதே சமயம் நான் திட்டமிட்டிருந்த நகர்வு புதுவையிலேயே தோற்றிருந்தது. எங்கு தோற்றது? ஏன்? என்பது குறித்த சிந்தனை நீண்ட நாட்கள் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அவற்றை மீள மீள மனதில் ஒட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அனைத்து சிக்கலுக்கும் உட்கட்சியில் முறைபடுத்தப்பட்டு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் ஜனநாயக போராட்டங்களும் உரிய பலனில் சிறு பகுதியாவது அது எப்போதும் வழங்கும் என்கிற நம்பிக்கையே எனது அரசியலில் மையக் கரு. அதை முன்னிறுத்தி முப்பது வருடம் பயணித்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். பிறர் எளிதில் அடைய இயலாத செயல்பாடுகள் வழியாக அது எனது அரசியலுக்கு வெற்றி தோல்விகளை எனக்களித்தது. அந்த வியூக முறையே எனக்களித்து வந்தன என்பதால் அதன் மீது அபார நம்பிக்கை மட்டுமே என்னை பிற அரசியலாளர்களிடம் இருந்து விலக்கி வைத்தது செயலூக்கத்தை கொடுத்தது . அது இப்போது சிதைவுற்று. விட்டது என்றால் என்னால் ஒரு போதும் என்னை தொகுத்துக் கொள்ள முடியாது என்பதை மிக சரியாக புரிந்திருந்தேன். அதுவே எனது அரசியலின் சாரம்சம். பிறர் அந்த விழுமியத்திற்கு என்ன மதிப்பு வழங்குகிறார்கள் என்பது எனக்கொரு பொருட்டல்ல. அவர்களையும் அது உள்ளடக்கி இருந்தது என்பது எனது அரசியல். ஒரு கட்டத்தில் என்னை கடந்த பிறிதொரு தலைமுறை அரசியலில் உருவாகி வருவதன் சமிக்ஞை கிடைத்த போது அது எனது விழுமியங்களை ஏற்காது என்பதை புரிந்து கொண்டேன். பாண்டியனை தலைவராக நாராயணசாமி கொண்டு வரும் போது எனது தீவிர ஆதரவாளர்களில் சிலர் பாண்டியன் பக்கம் சென்றனர். சட்டமன்ற தேர்தல் நேரம் அவர்களில் சிலருக்கு தேர்தலில் சீட் வழங்கப்படும் என தவறான வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. நடைமுறையில் சாத்தியமில்லாதது என அவர்கள் அறிய வாய்ப்பில்லை. இறுதியில் அவர்கள் அனைவரும் கைவிடப்பட்டனர். பின் அந்த குழு சிதறி சிறுத்துப் போனது. சிலர் தொகுதி அளவில் சில பதவிகளை பெற்றனர் பலர் மாற்று கட்சிக்கு சென்றனர். அனைவரின் கனவு கலைந்தது என்னுடன் அவர்களை இணைக்கும் அத்தனை புள்ளிகளையும் நான் இழந்ததாக உணர்ந்த கணம் எனது அரசியல் வெளியேற்றம் நிகழ்ந்தது. அது எனது அரசியலின் மிக உச்ச தருதணத்தில் இருந்த போது நிகழ்ந்தது அந்த உணர்வை அடைந்ததும் மிக அந்த மையத்தில் இருந்து இயல்பாக விலகி வெளியேறினேன். அது குறித்து இன்றளவும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதை மிக சரியான தருணத்தில் செய்தேன் என்கிற மன நிறைவை இன்றளவும் அடைகிறேன்.
முதல்வர் ரங்கசாமியை முதலில் சந்தித்த போது அவரது பதவி நீக்க முயற்சிகளுக்கு அமைப்பு ரீதயான எதிர்பை முன்வைக்கும் வழிமுறைகளை பேசியிருந்தேன். அவர் அதை ஏற்று பின் அது குறித்த மேலதிக உரையாடலுக்கு எங்களை அழைத்திருந்தார். இப்போது அவருடான பேச்சை நீட்டி முழக்காத மிக கச்சிதமாக கோர்க்கப்பட்ட வார்தைகளும் அதை தொடர்ந்து எழும் சந்தேகங்கள் கேள்விகள் முரண்களுக்கு மிக சுருக்கமான சமாதானங்களை பல நூறு முறை சொல்லி மனதளவில் நடித்துப் பார்த்தாகி விட்டது. இவற்றில் அடங்காத புதிய கோணத்தில் அவர் என்ன கேட்க இயலும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். நினைத்தவற்றை மிக சரியான பாதையில் சென்று சொல்லெடுக்க தில்லியில் தலைவர் சண்முகம் விவரிப்பதில் இருந்து கற்றது.
அந்த சந்திப்பில் முதல்வர் ரங்கசாமி தில்லியில் தனக்கு எதிராக நடப்பது முதலில் நிறுத்தப்பட வேண்டும் என அவர் நினைப்பது எனக்கு புரிந்தது அதை வேண்டாம் என தடுக்க திட்டவட்டமான பதில் அப்போது என்னிடம் இல்லை. அரசியல் நகர்வுகள் பல நூறு விழைவு வெறுப்பு இழைகளால் ஆனது. அதன் முரணியக்கங்களை அவதானித்தே அடுத்த நகர்விற்கு திட்டமிட இயலும். நெருக்கடிக்கு மத்தியில் கருத்தியல் ரீதியான அனுகுமறைக்கு எதிர்பார்த்த பலன் இருப்பதில்லை. அதை தர்க்கத்தில் வைத்து விவாதம் செய்யும் சூழலும் அங்கு இல்லை. முதல்வருக்கு எதிரான சூழல் உருவான போது அதை தடுக்க முதல்வரை கட்சி ரீதியில் ஆதரிக்க வேண்டும் என்கிற ஆலோசனயையும் அதன் சார்ந்த அரசியல் முன்னெடுப்பையும் வைத்தவன் அனைவரும் பேச அஞ்சிய முதல்வரை சந்தித்து அந்த முயற்சிக்கு அவரின் ஒப்புதலும் பெற்றிருந்தேன். அந்த சூழலில் தில்லி பயணத்தில் காந்திராஜ் என்னை தவிர்க்க நினைத்த அரசியலை புரிந்து கொள்கிறேன். ஆனால் முதல்வரால் நியமிக்கப்பட்ட ஜெயபால் காந்திராஜின் திட்டத்திற்கு ஏன் ஒத்துழைத்தார் என்பது புரியவில்லை. அல்லது அவர் எனது முக்கியத்துவத்தை உணர தவிறினார்.
அது நிகழ்ந்து கொண்டிருந்த சூழலில் வல்சராஜ் அரசியல் நகர்வு ரங்கசாமிக்கு எதிரானதாக நகர்வுகள் வேகமெடுத்து இருந்தது.அதை எதிர்த்து கட்சி ரீதியில் ஆதரவளிக்க அமைச்சர் காந்திராஜையும் என்னையும் அழைத்ததாக தலைவர் சண்முகம் ஒரு முறை சொல்லி இருந்தார். அது பற்றி பேச முதல்வரை நாங்கள் இரண்டு முறை சந்தித்திருந்தோம். முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக வல்சராஜ் எதிர்ப்பை துவங்கிய போது அதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை வெளிப்படாது எதிர்ப்பு மட்டுமேயாக இருந்தது. கட்சி அமைப்பிற்கு இது ஆர்வமூட்டும் வேடிக்கை விளையாட்டு. அன்றாட பத்திரிக்கை பதட்ட அறிக்கை மற்றும் செய்திகளால் களம் பரப்பரபாக இருந்தது. ஆனால் இது நீண்டால் கட்சி அமைப்பை சிதைக்கக் கூடிய கரு உருவாகி நிலை பெற்றுவிட்டதை அவர்கள் அறிய போவதில்லை . எதிர் முகமாக முன்னிலைப்படுத்த படும் வைத்திலிங்கத்திற்கு அது ஆதரவானதோ சாதகமானதோ அல்ல என்பது அவருக்கும் தெரியும். சமீபத்திய போட்டியில் ரங்கசாமியிடம் முதல்வர் பதவி இழந்திருந்தார் என்பதால் இதை தனக்கான வாய்ப்பாக பார்த்திருக்கலாம் .
இம்முறை வல்சராஜின் அரசியல் தன்மய விளையாட்டு வெற்றி பெற கூடாது என தீர்மானமாக இருந்தேன். கண்ணனுடன் இணைந்து திமுக ஆட்சியை கலைக்க உதவிய போது எழுந்த காங்கிரஸ் அரசியல் சமன்பாடுக் குலைவு மாநில அரசியலில் எதிர்மறையான துவக்கத்தில் கொண்டு விட்டிருந்து அதன் நீட்சி சண்முகத்தின் அவமானகரமான வெளியேற்றம் . அவர் விலகல் முழு அமைப்பின் நம்பிக்கையை குலைந்தது. சண்முகத்தின் மீதான அவநம்பிக்கையும் வருத்தமும் அவரது பதவி விலகளுக்கு பிறகு காணாமலானது. அது எப்போதும் அப்படித் தான் நிகழ்கிறது. ஆனால் அதன் பின் நிகழ்ந்த அரசியல் நகர்வுகள் புதுவை காங்கிரஸ் இயல்பல்ல என்பதால் மூத்த தலைவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் அவற்றை சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சனையை தாங்கள் தலையிட்டு செய்ய ஏதுமில்லை என நினைத்தனர் . அனைவரும் தனிப்பட்டு தங்கள் கோபத்தை வருத்தத்தை வெளிப்படுத்தினாலும் பொது வெளியில் அமைதி காத்தனர். சட்டமன்ற கட்சிக்குள் சிக்கல் எழும் போது கட்சியின் மாநில தலைமை தலையிட்டு தீர்த்துக் கொடுக்கும். இப்போது நிகழ்வது முதல் முறையல்ல சண்முகம் தலைவராக இருந்த போது இப்படி பல முறை நிகழ்ந்தது மரைக்காயர், வைத்திலிங்கம் என அனைவரும் இது போன்ற ஒன்றை எதிர் கொண்டு மாநில தலைமையின் சொல்லுக்குள் நின்று அவற்றை தீர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் .
மரைக்காயர் பல முறை தன்னை மையப்படுத்தும் அரசியல் நகர்வுகளில் வென்றாலும் தோற்றாலும் அதற்கு அடுத்த படிநிலைகளில் கட்சியில் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தற்காலிகமாவது ஒருங்கிணத்தார். அவர் மீது கட்சியினர் வைத்த குற்றச்சாட்டு என்பது அவர் எதையும் நீண்ட காலம் அரவணைக்க மாட்டார். முதல் நகர்வின் லாப நஷ்டங்களில் இருந்து உடன் மீண்டு அடுத்த கட்டத்திற்கு சென்று விடுவார். இரண்டாவது நகர்வு புதிய காய்களை கொண்டதாக இருக்கும். தங்கள் இடங்களை விட்டு அவரை பின் தொடர்நதவர்கள் திகைத்து நிற்ப்பார்கள். அரசியல் களத்தில் அவர் யாரையும் உருவாக்க மாட்டார் பதவி பெற்ற தர மாட்டார். பதவியில் உள்ளவர்களை பயன்படுத்தி கொள்வார். 1993 களில் முதல்வர் பதவியில் சில சங்கடங்களை முதல்வராக வைத்திலிங்கம் சந்தித்த போது அரசியல் ரீதியில் மட்டுமின்றி கட்சி ரீதியிலும் புதிய தலைமை பொறுப்பை ஏற்க முன் வந்தார். அதன் பிறகு அரசியல் சிடுக்குகளுக்கு உள்ளே சென்றவர் பின் ஒரு போதும் வெளிவரவில்லை.
கண்ணன் ஆட்சி கட்சி என ஒன்றை தொடர்ந்து முன்வைத்தாலும் அனைத்திற்கும் மேலாக தன்னை எப்போதும் நிறுவிக் கொள்ள முயன்றார் அவரது அரசியல் தோல்வியில் முடிய அதுவே காரணமானது. அந்த முக்கிய அரசியல் நகர்வுகள் முழு பலனையோ அல்லது தோல்வியில் முடிந்ததற்கு பின்னால் அனைத்தையும் இணைக்கும் வரு மெல்லிய கோடு உண்டு அது அரசியல் கட்யில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களை ஒரு அடுக்கில் இருந்து பிறிதொரு அடுக்கிற்குள் கொண்டு செல்லும் வாய்ப்பை ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்தனர். கட்சியில் வளர்வது என்கிற மாயையை அது உருவாக்கி அவர்களுக்கு அளிக்கிறது. அவர்கள் எதிர்பாரத்த தீவிரத்தில் அடுத்த அடுக்கிற்கு நகர்வது நடக்காது போனாலும் அதை எண்ணி எண்ணி பெருக்கி மிக சிறிய அளவில் நிகழ்ந்து கொண்டிருந்தது என நம்ப முற்படுவார்கள். காரணம் அரசியல் என்பது எப்போதும் அகம் சார்ந்து செயல்படுவது.
சண்முகம் , மரைக்காயர், கண்ணன் மற்றும் இன்றுவரை முதல்வராக ரங்கசாமி அதை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதில் எந்த அறவிற்கு அவர்கள் வென்றார்கள் என்பது வேறு கேள்வி ஆனால் அவர்களின் பயணம் பிற மனிதர்களை நம்பி இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை . அந்த வளையத்தில் நிற்காது செயல்பட்ட வல்சராஜ் அந்த அமைப்பின் கனவுகளை அதிலிருந்து உருவாகும் இலக்குகளை முற்றாக அழிக்கவல்லது. கட்சி அமைப்பிற்குள் நின்று செயல்படுவது பற்றி பல முறை அவரிடம் உரையாடியிருக்கிறேன். அவற்றால் பயன் இல்லை அது தனக்கு உகந்தது இல்லை என்பது அவரது பார்வையாக இருந்தது. அதற்கு பின்னால் இருக்கும் நியாயங்களை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். ஆனால் வாய்ப்புகள் உருவாகும் போது அதிகாரத்தின் முழு பலனை அனுபவிக்க தயாராக இருப்பது பற்றி அரசியலில் குறைகூற ஏதும்மில்லை. அரசியலின் தன்மை அத்தகையது. ஆனால் தராசின் தட்டுகளை போல ஒரு பக்கம் தன்னை நிறுத்தும் ஒருவர் மறுமுணையில் பலநூறு தட்டுகளால் சமன் செய்யப்படும் முரணியக்கங்களுக்கு என்ன நிகழத்த போகிறார்கள் என்பது கேள்வி. தங்களை தாங்கும் மறுமுணை பற்றிய புரிதலோ அக்கரையோ இல்லாமல் இன்று காலம் வழங்கும் வாய்ப்பாக பார்க்கும் எதுவும் களத்தில் சமன் குலைவையே உருவாக்கும்.
அந்த சமன் குலைவை ரங்கசாமி புதிய கட்சி துவங்கிய போது நிகழ்ந்த எழுச்சியை உதாரணமாக சொல்லலாம். இருப்பினும் அதில் உள்ள சில முரண் அமைப்பு ரீதியில் அவரது கட்சி இன்றளவும் தனி நபர் செல்வாக்கை முன் வைக்கப்படுகிறதே அன்றி முறைபடுத்தப்படவில்லை. இது ஏறக்குறைய சண்முகம் கையாண்ட அதே யுக்தி ஆனால் பெரிய வேறுபாடு கட்சி அமைப்பென ஒரு பெரும் கூறு அதில் இருக்கிறது அதில் தன்னுடைய நிலை என்ன? என்பதை குறித்த ஆர்வமில்லாதவராக அந்த பொறுப்பை தன் சொந்த அரசியல் காரணங்களுக்காக நிராகரிப்பவராக அவரை அறிகிறேன்.
அந்த சூழலில் நான் என்னிடம் கேட்டுக் கொண்ட கேள்வி இரண்டு ஒன்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை நாராயணசாமி பாண்டியனுக்கு கொடுத்த போது அதை வல்சராஜ் ஆதரித்தார் என்பதால் அவர் மீது எனக்கிருக்கும் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக அவரின் அரசியலை எதிர்க்க நினைக்கிறேனா? இரண்டாவது கட்சி அமைப்பு ரீதியில் செயல்படும் ஆற்றல் உள்ளவராக எப்படி அறிகிறேன். அது அவரை பற்றிய எனது மிகை நம்பிக்கையா? இரண்டும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் அவற்றின் பொதுத்தன்மை என்ன என்பதை அவதானிக்க முயல்கிறேன். அவற்றை இரண்டு நிகழ்வின் வழியாக அவரை தொகுத்துக் கொள்ளகிறேன். ஒன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் என் மதிய உறக்கத்தில் இருந்து எழுப்பி தன்னை வந்து சந்திக்குமாறு வல்சராஜ் அழைத்தார். அது கல்கட்டாவில் நிகழ இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வது பற்றியாது. நான் உடன் கிளம்பி அவரை சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் சந்தித்தேன்.நான் சென்று சந்திக்கும் போது பனியன் கையிலில் ஒய்வாக இருப்பதாக பட்டது. ஆனால் யாருக்கோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அவர் அந்த கடிதத்தை எழுதி முடிக் காத்திருந்தேன். ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்று என அவரது கடிதம் நீண்டு கொண்டே இருந்தது. அனைத்தும் மலையாளத்தில் இருந்ததால் அதன் சாரம்சத்தை அறிந்து கொள்ள “என்ன கடிதம்? யாருக்கு”? என கேட்டேன். அப்போதுதான் கவனித்தேன் ஏற்கனவே இருபது இருபத்தி ஐந்து கடிதங்களை அவர் முன்பே எழுதி இருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த மாதம் முழுவதும் சட்டமன்ற கேள்வி பதில் நிகழ்வு இப்போது கல்கத்தா பயணம் , இந்த சூழலில் மஹே திரும்ப இரண்டு மாதம் ஆகலாம். மஹேவில் நிறைய நிகழ்வுகள் அரசியல் கல்யாணம் தனிப்பட்ட கலந்துரையாடல்கள் என பலவற்றில் கலந்து கொள்ள இயலாது இந்த கடிதம் வழியாக எனது நிலை மற்றும் வருத்தத்தை அவர்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார். அப்போது தான் கவனித்தேன் அனைத்து கடிதமும் ஒரிரண்டு வரிகள் அல்ல முழு பக்கத்தையும் நிரப்பும் நீண்ட கடிதங்கள். அவை வல்சராஜ் கலந்து கொள்ள இயலாமையை சொல்லும் ஒன்றை மீள மீள சொல்வது. எல்லோரும் நினைப்பது அவற்றை நகலெடுத்து கையெழுத்து மட்டும் போட்டால் போதுமே. அல்லது தொலைபசியில் வருத்தம் தெரிவிக்கலாமே? இப்போது யார் தொலைபேசியோ அலைபேசியோ இல்லாதவர்கள் என்றேன். அவர் சிரித்து மஹே புதுவை போல அல்ல வரமுடியாத காரணத்தை நான் அவர்களுக்கு சொல்வதற்கு முன்னமே அவர்களும் அறிந்திருப்பார்கள். ஆனால் தொலைபேசியில் வர இயலாத காரணத்தை நான் அவர்களுக்கு சொல்லுவேன் மேலதிக கடிதம் வேறு வகையானது .பேச்சு மொழியை விட எழுத்து மொழி இன்னும் ஆழமாக சென்று நிற்பது. ஒரு ஆவணம் போல அவர்களுக்கு நான் வைத்திருக்கும் இடம்.கடிதத்தை யாரும் தூக்கிப் போட மாட்டார்கள் என்பதால் அது நான் அவர்களுடன் மிக அனுக்கமாக இருப்பதை எப்போதும் உணர்த்துவது என்றார்.
அது மிக நுட்டபமான உறவை பேணுவது. இது போன்ற ஒன்றை நான் தலைவர் சண்முகத்திடம் பார்த்திருக்கிறேன். புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் தனது கட்சி மற்றிம் எல்லா நண்பர்களுக்கும் அனுப்புவதை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்த பல்லாயிர வாழ்த்து மடல்களில் கையெழுத்திடுவதை பார்த்திருக்கிறேன். பெரிய தலைவர்கள் பலர் தங்களது கையெழுத்தை நகல் செய்து அந்த வாழ்த்து அட்டைகளில் பொதிந்து அனுப்பிக் கொண்டிருக்க. சண்முகம் முகம் கோணாமல் சோர்வுறாது அத்தனை ஆயிரம் வாழ்த்து அட்டைகளிலும்கையெழுத்திடுவமை பார்த்திருக்கிறேன். அது அந்த வாழ்த்தை பெறுபவரை தாங்கள் என்னவாக நினைக்கிறோம் என்பதின் வெளிப்பாடு. அத்தனை வாழ்த்து மடல்களையும் யாரோ் விலாசம் எழுதி ஸ்டேம்ப் ஒட்டி அனுப்பப் போகிறார்கள என்றாலும் அத்தை ஆயிரம் வாழ்த்தட்டகளில் இருந்தது அவரகள் கைவலிக் வலிக்க போட்ட் கையெழுத்தி அவர்களின் தனிப்பட்ட நெருக்கத்தை நோல் இக் கொண்டிருப்பது. இன்று அந்த பழக்கம் வேனு தலைவர்கள இடம் இருப்பதாக தெரிநவில்லை.
வல்சராஜ் ஒரு சட்டமன்ற உறுப்பினராக தனது தொகுதி நண்பர்களுக்கு மற்றும் சாதாரண வாக்காளர்களுக்கு நினைவில் நிற்க செய்யும் இந்த காரியம் அவரை அனைவரது குடும்பத்துடன் மிக அனுக்கமாக கொண்டு வைக்கிறது. இது ஒரு தடையற்ற உரையாடலுக் வழிவகுக்கிறது. அரசியலில் அது உருவாக்கும் நெருக்கம் காலத்திற்கு நீடிக்கக் கூடியது. புதுவை அரசியலில் பிற தலைவர்களை பற்றி எனக்கு தெரியாது ஆனால் சண்முகம் தொடங்கி வல்சராஜ் வரை தொண்டர்களுடன் அவர்கள் கொண்ட நெருக்கம் அவர்களை பிற தலைவர்களிடம் இருந்து பிரித்து பார்க்க இயலும். நான் அவரிடம் எதிர்பார்த்தது ஏறக்குறைய அது போன்ற ஒன்று. ஆனால் அது அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக வந்ததில் இருந்து அவர் அதை செய்ய தவிர்த்தார். அவர் தவறிய ஒன்றை மிக விரிவாக நான் செய்ய முயன்று பெற்ற வெற்றி இன்றுவரையில் பிறர் செய்ய துணியாத்து. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் தில்லியின் அரசியல் சூதுகளை அறியக்கூடியவர் தனக்கான ஒரு ஆதரவாளர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும் ஆனால் அதை மிக தீவிரமாக தவிர்த்தார். அது ஏதோ ஒருவகையில் தனது அரசியலுக்கு அப்பால் பலமான பாதிப்பை உருவாக்கும் என்கிற அச்சம் மட்டுமே அதன் காரணமாக இருந்திருக்க இயலும். மஹேயில் அவர் தனம் தினம் ச*ய்யும் அந்த ராட்சச வேலையின் சிறு துளியை இங்கு செலவழித்திருந்தால் அவரை தலைவராக கொண்ட அமைப்பு அதன் உச்சம்நோக்கி நகர்நதிருக்கும் . அது கட்சியில் எவ்வளவு பெரிய இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் என்பதை நான் அவருக்கு புரியவைக்க வேண்டியதில்லை. அதை திட்டமிட்டு தவிர்க்கிறார் என்பதை நன்கு அறிந்திருந்தேன். நிச்சயம் அரசியலுக்கு அப்பால் உள்ள ஒரு நோக்கத்திற்காக. தனது அரசியலுக்கு மஹே தாண்டி பிறிதொரு இடத்தில் தன்னை அரசியலில் முதன்மை வைக்க அவர் விழையாததற்கு பின்னால் மஹேவிற்கு வெளியே அவர் எதிர்நோக்கும் அரசியலுக்கு அப்பால் உள்ள சமரசம் அதற்கு எதிராக இருக்காலாம் என தெளிவாக புரிந்து கொண்டிருந்தேன்.
அவரது இலக்கான அமைச்சர் பதவியை மையப்படுத்தியே அவரது அரசியல் இருந்திருக்குமானால் அந்த இலக்கை எட்டிய பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்படலாம் என யூகித்திருந்தேன். அதன் பொருட்டு சண்முகம் முதல்வராக தேரந்தெடுக்கப்பட்ட பிறகு அமைச்சர் பட்டியலில் வல்சராஜிற்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட இருந்தது. அந்த சூழலில் அவர் ஒரு முக்கிய கூட்டத்தை கூட்டியிருந்தார். அது மஹேவில் இருந்து பலர் திரளாக பங்கேற்கலாம் என்பது பற்றியும் அதை எப்படி ஒருங்கிணைப்பது என்பது பற்றியும் விவாதிக்க அந்த கூட்டம் கூட்டப்பட்மிருந்தது. அதில் பங்கு கொள்ள நானும் அழைக்கப்பட்டிருந்தேன். நான் ஏன் என எனக்கு முதலில் புரியவில்லை. இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் அனைத்து தொகுதியில் இருந்து வர வேண்டும் அதை என்னிடம் ஒருங்க சொன்னார். ஆரம்பத்தில் நான் அதை மறுத்தேன். கட்சி ரீதியில் அதை செய்ய வேண்டுமானால் ஒரு கூட்டத்தின் வழியாகவே அதை செய்ய இயலும். இல்லையென்றால் அது நான் தனிப்பட்ட சிலரை அழைப்பதாக புரிந்து கொள்ளப்படும். அது தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என்றேன். கூடுகை வழியாக அந்த அழைப்பை வைத்தால் அது எதர்பார்ப்புகளை உருவாக்கிவிடும் அதன் தேவைகளை என்னால் எந்த அளவிற்கு நிறைவற்ற இயலும் என தெரியவில்லை என்றேன். என்ன எதிர்பார்ப்பு இருந்துவிடப் போகிறது ஏற்பாடு செய்யுங்கள் என்றார். ஆட்சி அமைய இருக்கும் சூழலில் ஒரு நிகழ்வை ஒருங்குவது என்பது மிக தன்னியல்பாக அவற்றில் பிற அனைத்தும் வந்து இணைந்து கொள்ளும். அதற்கென தனிப்பட்ட கவனம் செலுத்த தேவையில்லை. நான் அதற்கான கூடுகையை அழைத்து பதவியேற்பில் நமது பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை பற்றி மிக விரிவாக அவர்களிடம் சொல்லி அவர்களின் ஒத்துழைப்பை பெற்றேன்.
வல்சராஜ் பதவியேற்கும் நிகழ்வில் அது உருவாக்கிய அதிர்வை ஒவ்வொருவரிடமும் பார்க்க முடிந்தது. மாநிலம் முழுவதும் திரண்டு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் போக்கு கண்ணனுக்கானது. அது அனைவருக்கும் ஒரு அரசியல் செய்தியை சொல்லும். அன்று வரை அவருக்கு இணையாக பிறர் அதை செய்ததில்லை. அன்று கண்ணன் பின்னுக்கு தள்ளப்பட்டடு வல்சராஜ் பெற்ற அரசியல் அங்கீகாரம் மிக பலமானது. மாநிலம் முழுவதும் அவருக்கு அளிக்கப்பட்ட இடத்தை வரலாற்றில் நிறுத்த வழக்கம் போல தனது பிழை நகர்வால் இழந்தார். அவரிடம் அதை பேசி சரி செய்யும் காலம் நிகழவேயில்லை. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டன. அதில் முதன்மையானது. நாராயணசாமி பாண்டியனை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக