அயோத்தி
அயோத்தி பால ராமர் பிராண பிரதிஷ்டை நாடு முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்திருந்தது. நான் என் நினைவுகளை துழாவிக் கொண்டிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு அயோத்தி யாத்திரை சென்றது நினைவிலாடியது. தரிசனம் வெகு தூரத்தில் இருந்து. ஒரு ராணுவ கூடாரம் போல இருந்த இடத்தில் வைத்திருந்தார்கள். செப்பு விக்ரஹம். பக்தர்கள் வளைவு வளைவான சுற்றறுகளுக்குள் நீண்ட பயணத்திற்கு பின்னர் ராமரை பார்க்க அனுமதித்தனர். இன்றும் நினைவில் இருக்கும் வன்று மூல விக்ரஹம் வைத்திருந்த இடத்திற்கு மிக அருகில் புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கான விடுதி ஒன்றை பார்க்க முடிந்தது சற்று திகைப்பை கொடுத்தது. ராணுவ பாதுகாப்பில் ராமரை பார்த்த போது சக்ரவர்த்தியாக தெரிந்தார். ஒரு வேலை சிறை கைதியோ….மிக அழகான விக்ரஹம்