https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 26 டிசம்பர், 2023

சமுத்திரா பேலஸ் மகாபலிபுரம்

 மகாபலிபுரம் அருகே  “சமுத்திர பேலஸ்ராஜஸ்தானிய பாணி நட்சத்திர விடுதி. ஒரு நாள் பயணமாக சென்று தங்கி வரலாம் என நிவாஸ், செல்வி பேரன் கிருஷ்ணவுடன் சென்றிருந்தோம். வரவேற்பு அலங்காரம் மேளம் பொய்கால் குதிரை ஆட்டம் என வெளிநாட்டினர்களுக்காக செய்யப்பட்டிருந்தது. நாங்களும் அவர்களப் போல அவற்றை பார்த்து கொண்டிருந்தோம். பேரன் கிருஷ்ணாவிடம் மேளக்காரர் வாசிக்கும் கோலை கொடுத்தும் ஒரே உற்சாகம்

பெரிய நீச்சல் குளத்தை சுற்றி அனைத்து தங்கும் அறைகளையும் கட்டியிருந்தார்கள். விடுதியின் பின் பகுதி மிக நீண்டதாக கடற்கரை வரை சென்று தொட்டது முற்றிலும் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம். மொத்த விடுதியை விட மூன்று மடங்கு பெரியதாக இருந்ததுவிடுதி உள் அலங்காரத்திற்கு முறையான ராஜ்தானி கட்டகலைக்கு அதிக கவனம் செலுத்தபடாமல் மேம்போக்காக இருப்பதாக பட்டது. கட்டடம் கட்டப்பட்டு இடையில் என்னமோ நடத்திருக்க வேண்டும்



















புதன், 6 டிசம்பர், 2023

மறைக்க இயலாத காதல்








மறைக்க இயலாத காதல்

பெண்களின் கண்களில் இருந்து காதலர்கள் தப்பிப்பதல்லை. என் மனைவி என்னிடம் கேட்டார்அது தான் அஜி திருமணம் செய்யப் போகும் பெண் போலஎன்றாள் . நான் இருக்காது என்றேன். விழாவின் இறுதியில் அரங்கில் இருந்து வெளிவருகையில் அஜிதனை சந்தித்தேன் ஜெ அஜிதனைப் பற்றி பேசிய அந்த சொற்கள் நினைவிற்கு வர அஜியை பார்த்து புண்ணகைத்தேன். பதிலுக்கு அஜியும் தனது வெட்கப் சிரிப்புடன் விலகினார் அப்போது உடனிருந்த அந்த பெண்னை பார்த்தேன். அது இப்போது தெளிந்து வருகிறது அது தன்யா தான்.

நான் ஜெ பேச்சினால் அஜி சிறு சங்கடத்தில் இருப்பதாக நினைத்தேன். இன்று புகைப்படத்தை பார்த்த போது அன்று பார்த்த பெண் இவர்தான் என நினைக்கிறேன். மறுநாள் ஜெ வை அவரது அறையில் சந்தித்த போதும் அங்கு அந்த பெண் இருந்ததாக எனது மணைவி சொன்னாள். எனக்கு அது நினைவில் இல்லை

அஜிதனுக்கே நவம்பர் மாதம் தான் தன்யா தனக்கு யார் என்னு உணர்ந்ததாக அவர் தந்தை, தாய் மற்றும் சகோதரிக்கான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். என் மனைவி அதை எப்படி ஊகித்தால் என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை

ஜெ யின் 60 கொண்டாட்டம் கோவையில் நிகழ்ந்த போது நான் மனைவியுடன் கலந்து கொண்டேன். எனக்கு இரண்டு காரணம். ஒன்று விழாவில் கலந்து கொள்வது. இரண்டு இன்னும் ஒரு மாத காலம் கழிந்து நடைபெற இருக்கும் எனது 60 நிறைவு விழாவிற்கு ஜெ தம்பதிகளை அழைப்பது

இருவரும் எனது 60 அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்டு எனக்கு மங்கள நான் எடுத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். சிறு புண்ணகையுடன் ஜெ மறுப்பேதும் சொல்லாமல் இசைந்தார். விழாவிற்கு இருவரும் வந்து கலந்து கவண்டது வாழ்நாள் மகிழ்வான தருணங்களில் ஒன்று . ஜெ சென்னையில் இருந்து வர அருண்மொழிநங்கை நாகர்கோவிலில் இருந்து ரயிலில் வந்தது. ஜெ எனக்களித்த உச்ச இடம்

கோவையில் நிகழ்ந்த ஜெ 60 மணிவிழாஙில. கலந்து கொள்ள மனைவியுடன் சென்றிருந்தேன். கிக்கானி அரங்காம் வெளிநில் குழுமியிருந்த நண்பர்களிட் அளவளாவி அரங்கு உள் நுழைய சற்று தாமதமானுத. விழா இன்னும் துவங்அகி இருக்க வில்லை. ஜெ வின் இருக்கை அருகே சென,று அவருக்கு வணக்கம் சொல்ல சட்டென எழுந்து அவர் பதில் வணக்கம் சொன்னது சற்று திகைப்பை கொடுத்தது

நண்பர் டைனமிக் நடராஜன் பெரு முயற்சியால் நிகழும் விழா. வழக்கம் போல கோவை முக்கிய ஆளுமைகள் அனைவரும்  ஆஜராகி இருந்தனர் மேடையும் நிரம்பி இருந்தது. ஒரு நிறைவான நிகழ்வு. அடுத்த மாதம் புதுவையில் அதே போன்ற ஒரு நிகழ்வை மிகச் சிறிய அளவில் நடத்தும் திட்டம் உருவானது





சனி, 25 நவம்பர், 2023

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

 கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடைந்தது. நிறைவு உரையாடலை நண்பர் சிவாத்மாவும் ஏழாவது நூல் முவுறும் விழாவினை சிறப்பிக்க நண்பர் ராஜகோபால் வந்திருந்தார். நிகழ்வின் துளிகள்.



















புதுவை. வெண்முரசு கூடுகை 66 நிகழ்வு

 












வெள்ளி, 24 நவம்பர், 2023

ஜெ.அடியடைவு பதிவு கனவு கடிதம்

 




24.11.2023

புதுவை.1


அன்பிற்கினிய ஜெ,


வணக்கம்ஒருவகையில் இது 23.11.2023 அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சி. வழக்கமாக அதிகாலையிலேயே உங்கள் தளத்தை வாசித்து முடித்து விடுவேன். என்ன காரத்தினாலோ நேற்று வாசிக்கவில்லை. உங்களுக்கு எழுதிய கடிதத்தை அனுப்பலாம வேண்டாமா என குழுப்பி பின் அனுப்பி வைத்தேன்..அதன் பிறகே உங்கள் தளத்தை வாசித்தேன்

உங்கள்அடியடைவுவாசித்து முடித்த பிறகு அதிர்ச்சி. உங்கள் முன்னோருக்கு நீங்கள் அளித்த நீர்கடன் திகைப்பை தந்தது. உங்களை சந்தித்த இந்த 13 வருடத்தில் நீங்கள் அடைந்து வரும் மாற்றத்தை அறிந்திருக்கிறேன் . நீர்கடன் கொடுத்து முடித்த பிறகு நீங்கள் அடைந்த அந்த மனநிலையை மிக அணுக்கமாக உணர்கிறேன். அவை வார்த்தைகளால் விவரிக்க இயலதவை. அதை ஒட்டி இந்த கடிதத்தை எழுத நினைத்தேன்

எனது தினசரி பூஜை துவக்கம் நீர்கடனுடன் துவங்கும் . நான்கு நிரைகளில் நான் எனக்கு குருவாக நினைக்கும் அனைவருக்கும் அதில் நீர்கடன் கொடுப்பது வழக்கம்

முதல் என் தாய் தந்தை வழி 

இரண்டு என்அரசியல் குரு பரம்பரை சண்முகம் காமாராஜர் காந்தி என ஒரு நிரை 

பின்னர் மூன்றாவது நிரை வியாச சுகப்பிரமம் என தொடங்கும் நிரையின் இறுதியில் வெண்முரசு மூலம் உங்களிடமிருந்து பெற்றவைக்கு நன்றி சொல்லும் விதமாக பாகுலேய பிள்ளை விசாலாட்சி அம்மாள் என நிறைவுறும்

நான்காவது நிரை பிரம்மா தொடங்கி துருவன், சிவன் ,மகாபலி ,பகிரதன், கங்கை , பீஷ்மர் என நிறைவுறும்.பின்னர் குல வழக்கமான விஷ்ணு வழிபாடு.

நான் உங்களை பற்றிய எழுதிய கனவிற்கும் உங்கள் பதிவிற்கும் உள்ள தொடர்பு போல ஒன்று  இருப்தாக மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது

நான் காசியில் தாய் தந்தைக்கு நீர்கடன் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன அத்தனை விரிவாக இல்லை


நன்றி 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.


வியாழன், 23 நவம்பர், 2023

இரண்டு கனவு .ஜெ கடிதம்

 




23.11.2023

புதுவை-1


அன்பிற்கினிய ஜெ,

வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன்

கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப்பது போன்ற கனவுகள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாது வருவதுண்டு . ஆனால் இந்த இரண்டு கனவுகள் வேறுவிதமானவை  , அதிலிருந்து விழித்து எழுந்த பிறகும் அந்த கனவின் அதிர்ந்த உணர்வு நிலை விழித்து எழுந்த பிறகும் நீண்ட நேரம் உடலில் நீடித்திருந்தது புதிய அனுபவம். அது பற்றி உங்களுக்கு எழத வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக இந்த கடிதம்.

கனவுகளுக்கு அர்த்தமில்லை என்றாலும்  தொடர் கனவுகள் வந்து போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன் இன்று காலை கண்ட கனவு இந்த கடிதத்தை எழுத தூண்டியது. இரண்டு கனவுகள். முதல் கனவு நான் இன்னதென்று அறிய முடியாத ஒரு பழங்கால அல்லது புராதன இடத்தை பார்க்கச் சென்றிருக்கிறேன். அது பாழடைந்த கோவிலும்  கோட்டையும் கலந்தது போன்ற இடம்

அந்த கட்டுமானம் கற்கள் என ஏதுமின்றி   முழுவதும் பித்தளையினாலும் வேறு உலோகங்களினாலும் ஆன உலகம். எங்கு திரும்பினாலும் லட்சக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக சக்கரமும் விசைகளும் கதவுகளைக் கொண்டதாக பச்சை களிம்பேறி இருந்தது . அது எந்த மாதிராயான இடம் என அறிந்து கொள்ள உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன். பின்னர் ஒரே குழப்பம் அலைபேசி எங்கே என தேடிக் கொண்டிருக்கிறேன் .பின்னர் எப்போது அலைபேசி கிடைத்தது என தெரியவில்லை. உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயல்கிறேன்  .  அங்கிருந்தவர்கள் அலைபேசியை உபயோகப்படத்த கூடாது என்றார்கள். மேற் கொண்டு உங்களுடன் பேச இயலவில்லை

ஒரு முக்கிய இடம் என சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள் சில லிவர்களை இழுக்க எங்கும் சக்ரமும் விசையுமாக நின்றிருந்தது இடம் திடீரென உயிர் கொள்கிறது . ஒட்டு மொத்த அமைப்பே உருமாறிக் கொண்டிருந்தது. அது இயங்கும் ஓசையை என் உடலால் அதிர கேட்டுக் கொண்டிருக்கிறேன். சட்டென ஒரு ஓராள் நுழையும் அளவிலான பித்தளை தரைக் கதவு திறந்து கொள்ள அதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உலோகத்திலான சுருள் படிகெட்டுகள் ஆழமாக இறங்கிச் செல்கின்றன் அருகில் இருந்த சிலர் என்னை அதில் இறங்கி போகச் சொல்லுகிறார்கள்

முதலில் அதில் இறங்கிச் செல்ல முயன்ற போது மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டு திணற துவங்கினேன் . என் உள்ளே ஏதோ ஒன்றுஅது மீள இயலாத பாதை முயற்சிக்காதே என எச்சரிக்க”  நான் அதிர்ந்து பின்வாங்கி விடுகிறேன். கனவு சட்டென கலைந்து விட்டது. விழித்த பின் உண்மையில் மூச்சுக்கு  தேம்பியதால் பதறி விழித்துக் கொண்டிருக்கிறேன். விழித்துக் கொண்ட பிறகும் உடலில் சில வினாடி அந்த சக்கர சுற்றலால் உண்டான உச்சகட்ட அதிர்வில் உடல் இருந்து கொண்டே இருந்தது ஏன் என்று புரியவில்லை

மனம் அந்த மொத்த இடத்தையும் மூளையென சொல்லியது. அந்த தரைக் கதவு ஆழ்மனம் என்றும் அதில் இறங்கி இருந்தால் வெளியேற இயலாது சிக்கி கோமா போன்ற மரணத்திற்கு இணையான ஒன்று எனக்கு நிகழ்ந்திருக்கக் கூடும் என்றது. அதை உண்மைதான் என இன்னொரு பகுதி ஏற்றது. அரை மணி தேரம் உடலின் இருந்து கொண்டிருந்த அந்த அதிர்வு நீங்கவே இல்லை

இரண்டாவது கனவு. இன்று அதிகாலை மீண்டும் ஒரு விசித்திரமான கனவு உங்களை சந்திக்க உங்கள் வீட்டிற்கு வருகிறேன் ஏதோ விசேஷம் போல வீடு நிறைந்திருந்தது. பலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். வரவேற்பறை போல இருந்த இடத்தில் அரை இருட்டில் நண்பர்கள் மத்தியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்கை வணங்கி அருகிருந்த நாற்காலியில் அமர்ந்ததும் பக்கத்தில் இருந்தவர் அது நீங்கள் இல்லைஅஜிதன்என்றார் நான் திரும்பவும் பார்த்த போது அது அஜிதன் தான் சில மாத தாடியுடன். அருகில் நீங்களும் இருந்தீர்கள். இரண்டு பேரும் கரு நீல முழுக்கை சட்டை முழங்கை வரை ஏறி இருந்தது. நீங்களும் அதே ஜாடை தாடியுடன் இருவரும் ஒரு மாதிரி உடல் அசைவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன் .

யாரோ நீங்கள் வெளி அறையில் இருப்பதாக சொல்ல எழுந்து வந்து உங்களை பார்க்கும் போது உடல் முழுவதுமாக முடி மழிக்கப்பட்டு ஆடைகள் இல்லாமல் சமணத் துறவி போல ஒரு கால் மீது மறுகால் போட்டு உட்காரந்து கைகளை மடிமேல்  வைத்துக் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு பின்னால் சுவர் அகல உயர கண்ணாடி அலமாரியில் சற்று முன்னர் யாரோ மூன்று பேர் சப்பிட்டுச் விட்டச் சென்ற பெரிய வாழையிலை அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தது  அதில் செம்பருத்தி பூ போல சிவந்த நிரத்தில் சாப்பிட்ட மிச்சல் . அதன் கீழ் அடுக்கில் அதே போல ஆனால் அந்த இலைகளை விட சற்று சிறிய அளவில் சாப்பிட்ட இலைகள்

யாரோ மிக மிக முக்கியமானவர் வந்து உணவருந்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் புனிதர் என்கிற புரிதலைக் கொடுத்தது. நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் இறுதியில் யார் அந்த இலைகளில் உணவருந்தியது என சொல்லப் போகிறீர்கள் என புரிந்தது காத்திதிருந்தேன்………. கனவு கலைந்து விட்டது.


நன்றி


ஆழ்ந்த நட்புடன்


கிருபாநிதி அரிகிருஷ்ணன்


புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்