https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * காற்றுக்கு காத்திருப்பது *

 



ஶ்ரீ:



பதிவு : 635  / 825 / தேதி 09 ஆகஸ்ட்  2022


  • *  காற்றுக்கு காத்திருப்பது * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 31 .





பதவி ஏற்ற பின் ஒரு முதல்வருக்கு அவரது செயலாளர் மூலம் தனது  அரசை உற்றுப் நோக்கும் ஒரு முகம் கிடைக்கிறது. அது நிர்வாகத்தின் அகத்தை அசைவுற வைப்பது . அங்கிருந்து பின் அதுவே எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. அரசியலில் யாரும் சட்டென ஒரு உயர் பதவியை எட்டிவிடுவதில்லை. அப்படி திட்டமில்லாமல் விதிவசத்தால் அங்கு வந்து அமர்பவர் முதலில் தன்னை அழித்துக் கொண்ட பிறகு அனைத்தையும் ஒன்றுமில்லாததாக்குகிறார். அதிமுக ராமசாமியை அப்படி அனைத்து அரசியலாளர்களும் நினைவுறுபவர். சண்முகம் அந்த இடத்தை அடைந்தது முழுக்க முழுக்க கணக்கு தவறுதலால் நிகழ்ந்தது.அத்தனை அனுபவம் வாய்ந்தவர் குறைந்த கால முதல்வர் என்கிற பட்டியலில் சென்று அமர்ந்தது அவர் ஏமார்ந்த கணத்தில் நிகழ்ந்தது என்றாலும் அவருக்கான ஊழ் அங்கு காத்திருந்தது என்பதை தவிற வேறு எதை சொல்லியும் அதை வரையறை செய்து விட முடியாது .


மாநில அதிகார உச்சம் பற்றிய கனவு கொண்டவருக்கு அது மிக மெல்ல நிகழ்கிறது என்பதைக் கூட இங்கு சொல்ல முடியது என நினைக்கிறேன். கண்ணன் பிற எவரையும் விட கனவு கொண்டவராக தகுதியுள்ளவராக பார்க்கப்பட்டவர்.ஆனால் வெறும் கனவு மட்டும் உதவாது என்பதை நிரூபித்து அதில் இருந்து உதிர்ந்தார். கனவும் அதற்கான காலமும் மிகச் சரியாக கனிந்த இருவர் மரைக்காயர் மற்றும் ரங்கசாமி என நினைக்கிறேன். வைத்திலிங்கம் மற்றும் ராமசந்திரன் இருவரும் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் என்கிற அடைப்பிற்குள் வருபவர்கள். ராமசந்திரனை ஆள விடவில்லை அவரது இரண்டு அரசும் குறை கொண்டது. இரண்டு சண்முகமும் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை ஒன்று காங்கிரஸ் P.சணமுகம் பிறிதொருவர் திமுக MA. சண்முகம். அரசியல் ஏற்ற இறங்கங்களுக்கு ஈடு கொடுக்க முடியாதவராக உணச்சி கொந்தளிப்புள்ளவராக அறியப்பட்ட ராமசந்திரன் நிதானமாக அனுகும் சண்முகத்தை சமாளிக்க முடியவில்லை என்றாலும் திமுக வின் MA. சண்முகம் ஆவி அவரை எப்போதும் மன்னிக்வில்லை.


ஒரு முறை அரசியல் அதிகாரத்தை அடையும் யாரும் தனக்கான அத்தனை அரசு அதிகாரிகளையும் முன்னரே தெரிவு செய்து விடுவார் அல்லது அவரது செயலாளர் அவர்களின் பொருட்டு அதை செய்வார். சட்டென அனைத்தும் ஒரு புள்ளியில் கூர்கொண்டு விடுகிறது. சண்முகம் உச்ச ஆளுமை என்பதால் அது மிக இயற்கையாக தனக்கு ஒருங்கமையும் என அவர் கணக்கிட்டிருக்கலாம். அது ஒரு முணையில் அனைத்தையும் குவிப்பது. ஆனால் அது மிகை மதிப்பீடானது. கட்சி அரசியலில் நாராயணசாமி அவ்வளவு விரைவில் தனது தலைவர் பதவியில் வந்தமர்வார் என அவர் ஊகித்திருந்தாலும். தன்னை கேட்டு அந்த இடத்தை முடிவு செய்வார்கள் என நினைத்திருக்கலாம். அவர் காந்திராஜ் போல வேறு சிலரை தெரிவு தெய்து வைத்திருந்தார். வழக்கமாக முதல்வர் தேர்தலில் தோல்வியுற்ற மறு கணம் தனது அடுத்த இலக்கை நாராயணசாமி முடிவு செய்து அதற்கான நகர்வுகளை தில்லியில் துவக்கி ஏறக்குறைய முடித்து வைத்திருந்தார் . அதற்கு அப்போதிருந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாமநபி ஆசாத் முதன்மை காரணம். சண்முகம் மந்திரி சபையில் குலாம் நபி ஆசாத் சொன்ன எந்த பரிந்துறையையும் அவர் செவி கொள்ளவில்லை என்கிற வெறுப்பில் இருந்தார்


ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் நாராயணசாமியடம்அவருக்கு காது சரியாக கேட்காதா?. அல்லது நான் சொல்லுவது புரியவில்லையா எப்படி இவரிடம் பிறர் பேசுகிறார்கள்என்றார். அவருக்கு வேறு வழிகள் இல்லாததால் இறுதி கட்டமாக சோனியகாந்தி முன் நிகழ்ந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரிசபை பற்றி சிபாரிசுகளை முன்வைக்க சண்முகம் தெளிவாகமந்திரிசபை குறித்த ஆலோசனை முதல்வருக்கும் அந்த மாநில தலைமை செயலாளருக்குமான தனிப்பட பேசு பொருள் அதை இத்தனை வெளிப்படையாக விவாதிக்க முடியாதுஎன சொல்லி சோனியா காந்தியின் முன்னால் குலாம்நபி ஆசாத்தின் மூக்கறுத்தார். சோனியாகாந்தியின் முன்னிலையில் சண்முகம் இப்படி பேசுவார் என எதிர்பார்க்காததால் திகைத்து விட்டார். மந்திரி சபை குறித்து குலாம்நபி ஆசாத்திற்கு சில தனிப்பட்ட விருப்பு இருந்தது அதற்கு காரணம். சண்முகத்திடம் சோனியா காந்தி அப்படியே செய்யுங்கள் என சிரித்தபடி கூறி எழுந்து கொண்டார்.அது சண்முகத்தின் அரசியல் ஆளுமையை வெளிபடுத்தினாலும் குலாம்நபி ஆசாத்தை கொதிநிலைக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். அவர் தனது நேரத்திற்கு காத்திருந்தார். தலைவர் மாற்றத்தை உடனே கொண்டு வந்தார் அதில் சண்முகம் முன்வைக்கும் அனைத்து வாதங்களும் அடைக்கப்பட்டிருந்தன . ஒரு கட்டத்திற்கு மேல் சண்முகம் தனது கோணத்தை வைக்க முடியவில்லை


முதல் நாள் இரவு அவர் தில்லியில் இருந்து என்னுடன் பேச வேண்டும் என்று சொன்ன தகவல் எனக்கு கிடைத்த போது புதுவை கட்சித் தலைமை மாற்றப்படுகிறது என என்னிடம் சொல்லவில்லை . அன்று இரவு 10:00 மணிக்கு நான் அவரை அழைத்த போது என்னை உடனே கிளம்பி சென்னைக்கு வரச் சொன்னார். நான் எதையும் ஊகிக்கும் இடத்தில் அப்போதில்லை முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ளபுதுவை விருந்தினர் மாளிகைக்குசென்றி இரவு அங்கு தங்கினேன். சென்னைக்கு செல்லும் வழியில் இரவு 11:45 மணிக்கு மீண்டும் என்னை அலைபேசியில் அழைத்தார் சண்முகம். மறுநாள் காலை 6:40 விமானத்தில் சென்னை வருவதாக சொன்னார். விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்றார் . என்னை விமான நிலையத்திற்கு வரச் சொன்னபோது சட்டென அனைத்து புலனும் விழித்துக் கொண்டது போலானேன் ஏதோ சரியில்லை என புரிந்தது. நான் தில்லி எனக்கு அணுக்கமான சிலரிடம் அலைபேசியில் அழைத்த போது புதுவை தலைமை மாற்றப்பட்டிருக்கும் தகவல் மற்றும அதன் பின்னணி குறித்த விஷயங்கள் அதிர்வளிப்பதாக இருந்தது


புதுவையில் அடுத்து நிகழ இருப்பதன் முதல் துளி முற்றாக சம்பந்தம் இல்லாத இடத்தில் இருந்து எழுந்த போது அது பிறதொரு இடத்தில் கருக் கொண்டிருப்பதை ஊகிக்க முடியாத போனதை நினைத்துக் கொண்டேன் . பாண்டியன் இளைஞர் காங்கிரஸ் பெயரில் ஒரு ரத்ததான முகாம் நடத்தப் போவதை பற்றிய செய்தி என்னை அடைந்த போது தில்லியில் நடந்திருக்கக் கூடிய சாத்தியங்களை ஒருவாறு அடுக்கிக் கொண்டேனே தவிற தலைமை மாற்றம் பற்றி எந்த ஊகமும் இல்லை . அதன் பின்னரே நாராயணசாமி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தகவலை எனது தில்லி தொடர்பு உறுதிப்படுத்தியது. நாராயணசாமி புதுவை வந்து பதவி ஏற்கும் அந்த சிறிய இடைவெளியைக் கூட விட்டுவைக்க விரும்பவில்லை என்பதை பாண்டியனின் ரத்த தான முகாம் திட்டம் சொல்லியது. புதுவை நண்பர்கள் அதற்கான விரிவான ஏற்பாடுகளை ஒரு கல்யாண மண்டபத்தில் பாண்டியின் செய்து கொண்டிருப்பதை சொன்னார்கள். நாராயணசாமி புதுவை நுழையும் போதே நேரத்தை வீணாக்காமல் அனைவருக்கும் ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறார். முதல்வர் பந்தயத்தில் அதை நூலிழையில் அதை இழந்திருந்தார். அதற்கு ஒருவகையில் நானும் காரணம் என்கிற கோபம் இருந்திருக்க வேண்டும். அல்லது அது எனது கற்பனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்