https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * செயல்தடை *

 


ஶ்ரீ:



பதிவு : 636  / 826 / தேதி 14 ஆகஸ்ட்  2022



* செயல்தடை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 32 .






கட்சி அமைப்புகளில் தலைவரை தவிற பிற எவருக்கும் கட்சியில் பணியென எதுவும் செய்வதற்கில்லை . தலைவர் கூட அனேகமாக எல்லா நேரங்களிலும் ஓய்வெடுப்பது போல அமர்ந்து விடுகிறார். தேர்தல் காலத்தில் போர்களம் போல அதில் ஓய்வறியாத ஓடிக்கொண்டிருக்கும் விசையை அந்த ஓய்வில் இருந்து சேகரிக்கிறார் போல . சண்முகத்தின் தேர்தல் நேர உழைப்பு என்னை பிரமிக்க செய்வதுண்டு. உடலும் உள்ளமும் சோர்ந்து போகச் செய்யும் தொடர் நீண்ட பிரச்சாரம் பயணம்சொன்னதையே அர்த்தமில்லாது மீள மீள சொல்லிக் கொண்டிருப்பது உச்சகட்ட சலிப்பின் பெரும் பகுதி. அதை கேட்டுக் கொண்டு அவருடன் செல்வது போல அயற்சியடையச் செய்வது பிறிதில்லை. பெரும் வதையும் கூட. தேர்தல் பயணம் முடிவுறும் தேதியை பற்றி மனம் கணக்கிட்டபடி இருக்கும். அப்போதெல்லாம் மனம் இரட்டைநிலை ஊடாடும். ஆட்சி அமையாது போனால் நல்லது என்று சொல்லும் . செய்வதற்கு நிறைய இருக்கும் என்கிற எண்ணமும். பின் அதை வெகுண்டு தள்ளிஎதற்கு அஞ்சுவது இம்முறை ஆட்சி அமைந்த பிறகு முன்னர் செய்த பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டும்என்கிற வஞ்சனம் உரைத்துக் கொள்ளும். முன்பை விட நிலைமை நிறைய மாறி இருக்கிறது என்கிற சொல்லை ஒருவழியாக நம்ப ஆரம்பிக்கும். ஆனால் எதுவும் எப்போதும் மாறுவதில்லை. ஆட்சியில் அமர்ந்த பிறகு கட்சி அமைப்பு இரண்டாக பிளந்து ஒன்றை பிறிதொன்று இணைக்கவிடாமல் செய்யும் உயிர் விசையுள்ள மிருகம் எழுந்து ஒன்றை ஒன்று விழுங்க எழுந்து வருவது போல தோன்றும்


காலை 5:00 மணிக்கு புறப்படும் பிரச்சார வண்டியுடனான தொடர் பயணம் இரவு 12:00 மணிக்கு முன் வீடு திரும்ப முடியாமற் செய்துவிடும். இரவு உணவு எப்போதும் அவருடன். நான்கு ஐந்து இட்லியில் அந்த பயணம் நிறைவடையும். தலைவர் வீடு திரும்பிய பின் அவரது இரவு உணவிற்கு என்னிடம் கதவில் மாட்டப்பட்டிருக்கும் தனது சட்டை பையில் இருக்கும் பணத்தை எடுத்து கொடுக்கச் சொல்வார். எனக்கு என்ன வேண்டுமோ அதை வெளியே காத்திருக்கும் ஓட்டுனரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும். பணம் எடுக்க உள்ளே செல்லும் முன்பு வழக்கம் போல நன்கொடையாக அல்லது கட்சியில் இருந்து தேர்தல் செலவிற்கென வந்த பணத்தை தொடாதே என அலறுவார். கணக்கிற்காக அப்படி சொல்கிறார் என முதலில் நினைத்தேன். ஒரு முறைஏன் தேர்தல் செலவில் நமது உணவு வராதா?” என கேட்டதற்கு. “தேர்தல் நிதி யார் என்ன நினைத்துக் கொண்டு கொடுத்தார்கள் என யாருக்கு என்ன தெரியும் அதை கொண்டு சாப்பிடுவாவதுஎன்பார். சட்டைபையில் உள்ளது அவரது பாராளுமன்ற உறுப்பினருக்கான பென்ஷன் பணம். அது ஒரு நடிப்பாக இருந்தாலும் அந்த அர்த்தராத்திரியில் என் ஒருவன் பொருட்டு அரங்கேற்ற என்ன தேவை அவருக்கு? என நினைப்பதுண்டு


இரவுணவற்கு பிறகு அடுத்த நாள் பற்றிய திட்டம் . யார் யாருக்கு எந்தெந்த தகவல்கள் சொல்லப்படவேண்டும் . யாரை சந்திக்க வேண்டும் அல்லது தவிற்க வேண்டும் என அதற்குள் முன்பு உருவாக்கி  வைத்திருந்த பயண திட்டம் பெரிய மாற்றத்தை அடைத்துவிட்டிருக்கும். மீண்டும் முதலில் இருந்து துவங்கி சலிப்பே இல்லாத அடுத்த பயண திட்டம் சந்திக்க இருக்கும் தொகுதி முக்கியஸ்தர்கள், தவிற்க வேண்டியவர்கள் குறித்த வரைவு . சந்திக்க வேண்டியவர்கள் சரி தவிற்க வேண்டியவர் என ஒரு பட்டியல் தேவையா ? என கேட்டதற்குஆம் அது மிக முக்கியம் ஊரின் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு கேட்பதற்கு இணையாக தவிற்க வேண்டியவர்கள் பட்டியல் மிக கவனமாக தயாரிக்க வேண்டும். தவிற்க வேண்டியவர்கள் கட்சியில் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கை பற்றி கட்சித் தலைமை்கு தெரியும் என்பதை போல அவர்களுக்கு ஆறுதலளிப்பது பிறதில்லை என்றார். அது அந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு தெளிவாக சொல்லுவது .அவர்களை நம்மை நோக்கி கொண்டு வருவது. விலக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் வெகு ஜன விரோதிகள் . கட்சி மற்றும் தலைவர்களின் பெயரை தங்கள் சுய லாபத்திற்கு அதுநாள் வரை பயன்படுத்துவதன் வழியாக அனைவரின் வெறுப்பிற்கு ஆளாகி இருப்பார்கள். அவர்கள் மீளவும் தங்களை பலப்படுத்திக் கொள்ள அல்லது தான் இன்னும் முக்கிய இடத்தில் இருப்பதாக பொது மக்களிடம் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமுள்ளவர்களாக இருப்பவர்கள்இந்த தேர்தல் காலத்தில் வெளிவந்து அதிலிருந்து லாபமீட்ட முயல்வார்கள். பிரசாரத்திற்கு வரும் முக்கிய தலவர்களின் கார்களில், அவர்களின் ஊர்வலத்தில் இடம் பெற முண்டியடிப்பார்கள். அதற்காக பிற முக்கியஸ்தர்களுக்கு தடையை உருவாக்குவார்கள். தலைவர்களுடன் அந்த மாதிரி ஆட்களை ஒன்றாக பார்கக நேரும் போது பொதுமக்கள் கசப்படைவார்கள். அது எதிர்மறையான சிக்கலை உருவாக்கும். தலைவர் சந்திக்கும் ஊர் முக்கியஸ்தர்களில் சிலரை அவர்கள் தொகுதி எல்லைவரை  அவரின் பிரசார ஜீப்பில் இடம் ஏற்படுத்தி தரவேண்டும். பிறரை நகர்த்தி ஏற்றிவிடுவது எவ்வளவு கடினமோ அதைவிட அவர்கள் எல்லை முடிவுற்றதும் அவர்களை நாசுக்காக வண்டயில் இருந்து இறக்கி விட வேண்டும்தலைவர் இறக்கி அவர்களுக்கு நன்றி சொல்லி சால்வை அணிவிக்கச் செய்து அடுத்த தொகுதியை நோக்கி நகர வேண்டும். உள்ளூர் முக்கியஸ்தர்கள் வழியாக அந்தந்த பூத் பகுதிகளில் மக்களிடம் சொல்ல வேண்டியதை முன்பே கேட்டு வாங்கி சிறு குறிப்பாக அந்த இடம் வரும் போது அவரது கைகளில் கொடுக்க வேண்டும். என்னுடன் பயணிக்கும் நண்பர்களை இதில் திறம்பட செயல்படுத்துவது என் வேலை.


சரியாகி முடிந்து நான் வீடு திரும்ப இரவு 2:00 மணி ஆகியிருக்கும் . திரும்பவும் காலை 5:00 மணிக்கு செல்லவேண்டும் . உடலும் உள்ளமும் முழுமையாக உறக்கம் தழுவி ஒரு கணத்தில் வழிப்பு வரும்போது மறுநாளாகி இருக்கும். எழுந்தது அமர்ந்ததும் கண்களில் முதலில் எழும் கடும் எரிச்சலுக்கும் உடல் சோர்விற்கும் அளவே இல்லை. திரும்ப படுக்கச் சொல்லி உடல் கெஞ்சல் ஓங்கி நிற்கும். அது எடுபடும் என்கிற எண்ணம் எழும் முன்னர்இல்லைஅது ஒரு கணம்தான் அதற்குள் என்னைத் திரட்டிக் கொள்ள வேண்டும் . களத்தில் தொண்டர்கள்தான் கேட்பாரற்று பரபரப்புடன் கட்சி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். நான் போயேயாக வேண்டும் . விடுப்பெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. வெறி கொண்டு கூவி பின் தொடர்கிறார்கள் திரிகிறார்கள் அதில் திளைக்கிறார்கள். திருவிழா மனநிலை அவர்பளின் அன்றாடங்களைக் கடக்க தேவையாகின்றன. சமயத்தில் நானும் அவர்களில் ஒருவன் தானோ என நினைத்துக் கொள்வேன்  . 


என்னை செயல்படுத்திய விசை இளைஞர் காங்கிரஸ் ஒரு தனி அமைப்பு என்பது . அதற்கு கொடுக்கப்பட்ட எல்லைகளுக்குள் தனித்து சற்று தீவிரமாக செயலாற்ற திட்டமிட இயலும் என்பதால் அதில் எனக்கான கதவை திறக்க எப்போதும் காத்திருந்தேன் . எனக்கிருந்த தடைகள் அனைத்தும் விலகி நான் செயல்படத் துவங்கியது வல்சராஜ் தனது தலைவர் பதவியில்  ஆர்வமிழந்து போன பிறகு . எதிர்ப்புகள் கூரிழந்திருந்தன . 1998 களில் ஏறக்குறைய நான் தலைவரைப் போல செயல்படத் துவங்கியிருந்தேன். அதற்குள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் வந்து சென்றுவிட்டிருந்தன. 1999 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி நிகழ்ந்த நாராயணசாமிக்கும் எனக்கும் உருவான மோதல் என் அரசியலை முற்றாக திசை திருப்பி விட்டது . “வில்லங்கம்அதற்கு முதன்மை காரணம். அரசியலில் எதிரிகளை விட நண்பர்களே எல்லா சமயங்களிலும் ஆபத்தானவர்களாகி நமது ஊழை வேறுவிதம் கொண்டு சென்று விடுகிறார்கள் . அன்றும் அது தான் நடந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...