https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * விலகும் முணை *

 


ஶ்ரீ:



பதிவு : 634  / 824 / தேதி 03 ஆகஸ்ட்  2022



* விலகும் முணை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 30 .





கடந்து முப்பது வருடம் வைத்தியநாதன் சண்முகத்தின் அரசியல் முகமாக அறியப்பட்டவர். சண்முகத்தின் கட்சி ஆட்சி என இரண்டையும் இணைக்கும் ஒரு புள்ளி.அரசு அதிகாரிகள் மட்டுமல்ல கட்சியனரும் வைத்தியநாதனை அஞ்சியதற்கு  சண்முகத்திடம் அவருக்கு இருந்த செல்வாக்கு. சண்முகம் அனைத்தையும் அறிந்த மௌனமானவர் என்பது அவரை சந்திக்கும் அனைவரையும் பதற்றம் கொள்ள வைப்பது. சண்முகத்திற்கு வைத்தியநாதன் அரசை தொட்டு இயக்கும் ஒரு கருவி என்பதால் அரசு அதிகாரிகள் சண்முகத்தை சந்திக்க தயங்குவது தங்களின் வழக்கமான வேலையையும் மறுக்கும், தள்ளிவைக்கும் இயல்பினால் தாங்கள் வழக்கமாக சொல்லும் ஒன்றை சண்முகத்திடம் முன் வைக்க முடியாது என நினைக்கிறார்கள் காரணம் வில்லங்கம் அந்த சிக்கலின் தன்மை அதிலிருந்து வெளி வரும் அத்தனை உப சட்டங்களையும் சொல்லி அவரை தயார் செய்து வைத்திருப்பார் என்கிற அவர்களின் பிரமை. அதை போன்று ஒவ்வொரு மனிதரும் தங்களைப் பற்றி சண்முகத்திற்கு தெரியும் என்கிற தயக்கத்துடன் அவரை அணுகுகிறார்கள். அவரை தினம் சந்திக்கும் எளிய மக்களுக்கு இத்தகைய அகத்தடைகள் இல்லை. அவர்கள் சட்டென மிக சரளமாக அவரிடம் உரையாட துவங்கிவிடுகிறார்கள். அவருக்கு தனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற பாவணையுடன் எதிரில் உள்ளவர் தான் அவற்றை எல்லாம் தனக்கு சொல்ல வேண்டும் என்பதைப் போல தோற்றம் கொண்டுவிடுவார்


அரசு நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இருவரையும் அஞ்சுவது அவர்களிடம் உள்ள தகவல்களின் அடைப்படையில். நிர்வாகத்தில் உள்ளவர்களின் கடந்த கால செயல்பாடுகள் அவர்களை கையாளும் ஒரு வகை லகான். அரசியலில் கடந்த கால சரித்திரம் நிகழ் காலத்தில் நடக்க இருப்பதை ஓரளவிற்கு கணிக்க கூடியதாக இருந்து கொண்டிருந்தது. பல ஆண்டு செயல்பாடுகளில் சண்முகம் வைத்தியநாதனை சகித்துக் கொள்ள முடியாத ஆயிரக் கணக்கான விஷயங்கள் நிச்சயம் இருக்கும். வில்லங்கத்தின் செயல்பாடுகள் எப்போதும் அப்படிப்பட்டது. நன்றாக பரிமாறப்பட்ட இலையின் மூலையில் எதையோ வைத்தது போல நன்றாக செய்த ஒட்டு மொத்த விஷயத்தையுப் சிறப்பாக கையாண்டாலும் அதற்கு பின் அதற்கு முற்றும் எதிரான ஒன்றை செய்யாமலிருக்க அவருக்கு முடிவதில்லை. அவரது இயல்பு அப்படித்தான். அனைவரையும் ஒரு சிக்கலான நேரத்தில் பதற வைப்பது ஒரு விளையாட்டு போல நிகழ்ந்தேறிவிடும் . ஆனால் இந்த இடம் சண்முகம் வைத்தியநாதனை வைத்து கண்டடைந்த ஒரு புள்ளி. அவரை அப்படி உருவாக்கிய சண்முகத்தின் தேவை. இப்போது அவசிமற்றதாக அவர் கணித்தது பெரிய பிழை


முதல்வர் என்கிற இடத்தில் அமர்ந்த பிறகு வைத்தியநாதன் இடத்தை பலர் நிரப்பக் கூடும் என கணக்கிட்டிருந்திருக்கலாம். “வில்லங்கத்தினுள்இருக்கும் அரசியலாளன் கூர் மதி கொண்ட அரசு சூழ்தல் நிறைந்தவர் . அவர் நியமித்த பல செயலாளர்களுக்கு மத்தியில் அவருக்கான இடம் அரசியல் செயலாளராக இருந்திருக்க வேண்டும். முதல்வருக்கு சமர்பிக்கபடும் அத்தனை ஆவணங்களிலும் ஒரு அரசியல் கூறு இருக்கும். அது மறைக்கப்பட்டு மௌனமாக அதன் மீது ஏறி அமர்ந்திருக்கும் அதை அடையாளம் கண்டுகொள்ளும் ஒருவர் முதல்வர் அருகே இருந்தாக வேண்டும். அந்த இடத்திற்கு மிக இயல்பாக சென்று அமர்பவராகவில்லங்கம்தன்னை வைத்துக் கொண்டார். ஆனால் இப்போது சண்முகத்திற்கு அதற்கான தேவையில்லை என்பதை விட வில்லங்கத்தின் கூட்டணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைத்திருக்கலாம். தனது அத்தனை வருட அனுபவத்தில் தன் முன் வைக்கப்படும் அனைத்தின் அரசியல் பின்புலம் அறிந்து அதன் மீது முடிவெடுக்க இயலும் என நினைத்திருக்கலாம்


மூளை சோர்வு எத்தகைய ஆளுமையையும் செயலிழக்கச் செய்யக்கூடியது. அரசு அதிகாரிகள் அதை உருவாக்கும் கலை அறிந்தவர்கள். ஒரு கோப்பின் பற்றிய பின் புலம் அது வந்து சேரும் முதற் கணம் அது எப்படிப் பட்டது என்கிற புரிதல் முதல்வருக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் . இரண்டிற்குமான இடைவெளி மிக நுட்பமானது. சண்முகம் நேரடியான மாநில அரசு நிர்வாகத்தில நீண்ட காலமாக இல்லை .பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது பின்னர் சட்டமன்ற தேர்தலில் தோற்றது போன்ற பல காரணங்கள் அவரை நேரடி அரசு அலுவல் நகர்விற்கு அப்பால் இருக்க வைத்திருந்தது. அரசு நிர்வாக சிக்கல் குறித்த தகவல்கள் வைத்தியநான் மூலம் ஒரு வதந்தி போலவே அது இருந்தது. இப்போது ஒரு முதல்வராக அது மட்டும் போதுமானதல்ல. மிகச் சிறப்பான உளவு அமைப்பு , திறம்மிக்க, அரசு அதிகாரிகள் அவர்களுடன் ஒரு அரசியல் கூர்மதியாளனின் இடம் ஒரு சிக்கல் பற்றிய முழு சித்திரத்தை முதலவரின் பார்வைக்கு அதன் நுண்ணிய தகவல்களை வைக்கக்கூடியது. பின் தன் முன் வைக்கப்பட்டதில் இருந்து தனது முடிவை தேருவது முதல்வரின் பணி


அந்த இடத்தைவில்லங்கம்மட்டுமே செய்ய முடியும் என்பதல்ல இங்கு சொல்ல வருவது . ஆனால் அது போன்ற ஒருவரை என்ன காரணத்தினாலோ அவர் இறுதிவரை நியமிக்கவில்லை. அதன் தாக்கத்தினுள் சண்முகம் முழுமையாக சென்று சேர்ந்த போதுதான் தனது சில்லறை சீண்டல்களால் நாராயணசாமி சண்முகத்தை வெறுப்பேற்ற துவங்கியிருந்தார். சண்முகத்தின் சமநிலை குலைந்த இடமாக இதைப்பார்க்கிறேன். முதல் தவறில் இருந்து அடுத்தது , அடுத்தது என சுழல் போல ஒன்றுடன் ஒன்று பிண்ணி எழுந்து கொண்டே இருந்தது. கட்சி மூத்த நிர்வாகிகள் சண்முகத்தின் மீது கொண்டிருந்து கடும் கசப்பு அனைவரையும் நாராயணசாமி நோக்கி திருப்பிவிட்டது


அரசியலுக்கு அதிகாரமும் இருப்பும் மட்டுமே போதுமானது என்பது ஒரு தோற்றம் மட்டுமே .அது புறவயத்தில் பெருத்தமற்றதாக தெரிந்தாலும் அரசியிலின் ஆழ்விசை என்கிற நிர்வாகவியல் செயல்படுவது யாருக்காவது அல்லது எதற்காகவாவது அஞ்சியே. நிர்வாகம் அறத்தை பின்பற்றி நடப்பதில்லை. காரணம் அறம் மாநுட இயல்பல்ல என ஆயிரக்கணக்கான ஆண்டுகள்  சரித்திரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது . அச்சம் மட்டுமே அரசியல் நிர்வாகத்தை மிக சரியாக செலுத்தக் கூடிய விசை .அந்த இடத்திற்குள் அந்த அச்சத்தை கொண்டே அனைவரும் தம்தம் இடங்களில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள். சட்டென அனைத்தும் மிக சரியாக பொருந்தி அரசை விசைமிக்கதாக்குகிறது . பின் அதன் எல்லைகளை தீர்மானிக்க வேண்டியது அதன் தலைமை பீடத்தில் அமர்ந்திருப்பவர். வைத்தியநாதனை போல ஒருவரை செயல்பட வைக்கும் தலைமையின் பிம்பம் அஞ்சக்கூடியது. இன்று வைத்தியநாதனை நிரகரித்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த பண்ணீர் செல்வம் ஒருதமாஷ்”. நேர்மையான திறமையான பல அரசு அதிகாரிகள் இருக்கையால் சண்முகம் பண்ணீர்செல்வத்தை கொண்டுவந்த போது அது சந்தேகத்திற்கிடமில்லாமல் தனது கோட்டை திறந்து கிடப்பதை அறிவித்துவிட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்