https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

அடையாளமாதல் * தள்ளி நிற்கவும் *

 
ஶ்ரீ:பதிவு : 635  / 825 / தேதி 16 ஆகஸ்ட்  2022* தள்ளி நிற்கவும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 31 .

ஆட்சி மாற்றம் விரைவில் நிகழ இருப்பதற்கான அனைத்து காரணங்களும் வாய்ப்புகளும் அதற்கான முன்னெடுப்புகளும் ஒரு புள்ளியில் வந்து இணைந்து கொண்டிருந்தபோது,நான் அஞ்சிய அந்த நாள் நெருங்கி வந்துவிட்டதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அது போல ஒன்று நிகழும் முன்னர் இளைஞர் அமைப்பை முழுமையாக உருவாக்க வேண்டும் என முனைந்து கொண்டிருந்தேன். முழுமையாக உருப்பெற இயலாமல் அதுவரை அதைச் சிதறடித்த அனைத்து கூறுகளையும் கழித்து அதற்கு அப்பால் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நான் அப்போது இருந்தேன் என்றால் அன்று அது தனியொருவன் கனவாக மட்டுமே இருக்க முடியும். அதுவரை இளைஞர் காங்கிரஸ் சந்தித்த அல்லது எதிர்கொண்ட உட்கட்சி சிக்கல் , மற்றும் அதில் தன்னை முன்னிறுத்தியது என தொடர்ந்து தாய் அமைப்புடன் மோதியதை மட்டுமே அரசியலென புரிந்து கொண்டிருந்தது . கண்ணனுக்கு பிற மாநில தலைவர்களை விட செல்வாக்குள்ள தனியாளுமையாக வளர்ந்து கொண்டிருந்தார். துவக்கத்தில் தெளிவான நோக்கம் இருந்தது அதற்கான வாய்ப்பும் திறந்து கிடந்தது. துரதிஷ்டவசமாக அவர் தலைவராக உயராது வெறும் அரசியல்வாதியாகி எல்லா வாய்ப்புகளையும் சிதைக்கத் துவங்கினார். அவரது அமைப்பு குறுங்குழுவாகி அதன் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை நோக்கிய செயல்பாடுகளுக்குள் சென்று தேங்கிப் போனது .அவரது வழியில் பயணித்த பாலன் தனக்கு சட்டமன்ற வாய்ப்பு என்பதை தாண்டி எந்த திட்டமுமில்லாததால் அவரது இளைஞர் காங்கிரஸ் இலக்கின்றி சிதறி அழிந்தது


தேர்தல் அரசியல் என் நோக்கமில்லை. தலைவனாக என்னை நான் ஒருபோதும் கற்பனை செய்து கொண்டதில்லை. நான் உருவாக்க நினைத்தது அரசியலில் ஒரு நண்பர்கள் வட்டம். சவால் மிகுந்த அரசியலை கூட்டாக எதிர்கொள்ளும் விதமாக அதை உருவாக்க வேண்டும் அங்கு யாரும் யாருடனும் உரையாட , விவாதிக்க முடியும் என்கிற ஒன்றைத் தான் முதலில் வைத்தேன். ஹோட்டல் சற்குருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் வெறும் சடங்கல்ல அது ஒரு துவக்கம் என சொல்லுவதில் வென்றிருந்தேன். அனைத்தைப் பற்றியும் உரையாடும் விவாதிக்கும் இடத்தில் என்னை வைத்துக் கொண்டதால் இரவு நேர உரையாடல்கள் விவாதங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லலாம். நண்பர்கள் மீள மீள வந்து சந்தித்து தொடர்ந்து உரையாடி ஒரு புள்ளியில் வந்து சேர்ந்த போது அமைப்பை முழுமை செய்யயும் எண்ணத்தை அடைந்தேன். அது ஒரு மிக நீண்ட பயணம். அது எப்படிப்டட வெற்றியை தரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது குறித்த பொய்யான எந்த தோற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவில்லை.


தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பின் அடிப்படை வரைவை உருவாக்கத் துவங்கினேன். நான் எனக்கு சொல்லிக் கொண்டது ஒருபோதும் ஆதரவாளர்களை கொண்டு அதை நிரப்பக் கூடாது என்பதை. முரண்பட்டவர்களை உள்ளே கொண்டுவந்தாலும் அதன் எதிர்காலம் குறித்த பார்வை தெளிவானதாக இருந்தால் எனக்கு குழப்பங்களும் இல்லை . அனைவரும் ஏற்கும் ஒன்றை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தேன் அதில் அனைவருகுமான உரையாடல் மட்டுமே எனக்கான இடத்தை பெற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன்.


தனிப்பட்ட முறையில் அதன் எதிர்காலம் அதை உருவாக்கும் கருக்கள் எங்கு சூல் கொண்டிருக்கலாம் என அதன் எதிர்காலத்தை பற்றி வெளிப்படையாக உரையாட இயலாத போதும் அது பற்றிய கனவுகள் பெரியதாக வளர்ந்து கொண்டேயிருந்தது. கனவில்லாமல் எதை நோக்கியும் செல்ல முடியாது . இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை அடைந்தால் அதுவரை திட்டமிட்டு நிகழ்ந்ததில் இருந்து உருவாகி வந்ததாக அது இருக்கும். பின் அங்கிருந்து செல்லும் பாதை மற்றும் நோக்கம் பற்றிய தெளிவை அங்கிருந்து உருவாக்கிக் கொள்ள நினைத்தேன் . தேர்தலரசியில் எனது கணக்கில் இல்லை அதே சமயம் கட்சி சார்ந்த எந்த பதவியையும் நான் மறுக்கப்போவதில்லை. நான் மூப்பனாரை எனது ஆதர்சமாக நினைத்திருந்தேன் எனக்கு அவரின் அனுகுமுறை மிக உகப்பாக அனுக்கமாக இருந்தது. சண்முகம் மற்றும் மூப்பானருக்கு இடையே கட்சி அரசியல் குறித்த பார்வையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இருவரும் தஞ்சையை அடிப்படையாக கொண்டு உருவானது ஒரு தற்செயல் காரணமாக இருக்கலாம் . மற்றொரு தஞ்சைவாணியான கருணாநிதியும் அதற்குள் வருவார். நான் சண்முகத்தைப் பற்றிய அவதூறுகள் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதற்கிணையாக மூப்பனாரை 1983 முதல் உண்ணிப்பாக அவதானித்து வருகிறேன். அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்து அடைந்த வெற்றி, தோல்வி மற்றும் கைவிடப்படல் என அத்தனையும் அறிந்திருந்தேன். பின் எனக்கு ஏன் இந்த வீண் முயற்சிகள்?. எதை நோக்கிய பயணத்தில் இருக்கிறேன் என பல முறை கேட்டுக் கொண்டதுண்டு


எனக்கான சிறிய பங்களிப்பில்லாத எந்த நிகழ்விலும் பிறரைப் போல பார்வையாளனாக அமர்ந்திருப்பது ஒரு போதும் இயலுவதில்லை . அரைமணி நேரத்தை தாண்டி அங்கு  வெறுமனே அமர்ந்திருக்க முடியாது. அது எவ்வளவு பெரிய அல்லது முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் அங்கிருந்து வெளியேற மனம் உந்தியபடி இருக்கும் .சற்று நேரத்திற்கெல்லாம் அங்கிருந்து வெளியேறிவிடுவேன். கட்சி நிகழ்வை போல ஆயாசமூட்டுவது பிறிதில்லை. பேசி பேசி நோகடிப்பார்கள். அவை மணிக்கணக்காக நீள்பவை யாரும் யாருக்கும் சொல்ல ஒன்றுமில்லை என்பது இன்னும் அபத்தமானது .அது போன்ற இடத்தில் அடுத்தடுத்து செய்ய ஏதாவதொரு வேலை ஒன்றை எல்லோரும் விரும்பினாலும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை


கற்பனையும் செயலூக்கமும் மட்டுமே எனக்களிக்கும் கற்றல் மற்றும் எனக்கு முன் திறந்திருந்த வாய்ப்புகளை நிராகரித்து கடந்து செல்ல முடியவதில்லை . மேலும் அது ஒரு அறைகூவலைப் போல அங்கே நின்றிருப்பது, ஒவ்வொரு முறையும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதன் விளைவுகளை பொருட்படுத்தியதில்லை. அரசியலில் வேண்டாத வேலை என ஒன்று தனித்து இல்லை ஒருவகையில் அனைத்துமே அந்த வரையறைக்குள் நிற்கக்கூடியதே. ஒருகிணைத்தல் என் பலம் அதில் புதியவர்களை கொண்டு செய்யும் முயற்சிகளும் அதில் பயணப்படுவதே அதனால் அடைவது. கூட்டத்தில் தனித்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்ப்பது. எனக்கான ஒரு பணியை உருவாக்கி கொள்வது என்பதற்கு அப்பால் எழுவது இளைஞர் காங்கிரஸின் அமைப்பு ஒரு நாள் தாய் கட்சிக்குள் சென்று அமர்வது . அரசியலை எங்களை சுற்றிப் பிண்ணிக் கொள்வது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக