https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் - 526 .* மாறாத கோட்பாடு *

 ஶ்ரீ:






மிக நீண்ட  இடைவெளிக்கு பின்னர் மீளவும் எனது கடந்த சென்ற நினைவுகளில் இருந்து என்னை திரட்டிக் கொள்ள நான் துவங்கிய பதிவுகளை தொடர நினைக்கின்றேன் . இது ஒரு வித அவதனிப்பின் வேறொரு வடிவமாக இருக்கலாம் . சொல் திரளாத காரணத்தினால் இந்த இடைவெளி என நினைக்கிறேன் .பிறிதொன்று வெண்முரசு முடிவுறும் காலத்தில் இருந்தது . மிக விசையுடன் எழுதப்பட்ட நேரம் கண்ணனின் மறைவு பெரும் நிலையழிதலை கொடுத்தது . எந்த காரணத்திற்காக நான் வெண்முரசிற்குள் வந்ததேனோ அது நிகழும் அருகில் வேறு ஒன்றை என்னால் யோசிக்க இயலவில்லை .எனது மெய்மைக்கான சொல்லை அடைந்திருந்தேன் . தேடல்கள் அங்கிருந்து வேறொரு வடிவம் கொள்ள துவங்கி இருந்தது . அதனால் இதை மறுபடியும் எழுதி பார்ப்பது என முடிவு செய்தேன் .


கிருபநிதி அரிகிருஷ்ணன் 



அடையாளமாதல் - 526


பதிவு : 526  / 718 / தேதி 20 ஆகஸ்ட் 2020


* மாறாத கோட்பாடு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 01 .





1996 ல் பொது செயளாலராக பொறுப்பேற்ற பிறகும் பல வித தடைகளை தாண்டி எனது திட்டப்படி அமைப்பை கொண்டு செல்ல நான்கு வருடம் பிடித்தது .முதற் காரணம் பழைய நிர்வாகிகளை உள்ளே கொண்டுவரும் முயற்சியில்  தோல்வி அடைந்திருந்தேன் .இரண்டாவது புதியவர்களை கட்சி நிர்வாகத்திற்கு பழக்கி எடுப்பது சாத்தியமில்லை என தெளிவாக புரிந்திருந்திருந்தேன் . ஆனால் வாய்ப்புகளின் கதவு திறந்து கிடக்கும் போது அதை புறந்தள்ளிச் செல்வது  சரியல்ல என்பதே எனது எண்ணமாக அப்போது இருந்தது . புதியவர்களை கொண்டு முயற்சித்து பார்ப்பது என்று அவர்களை முறைப்படுத்தும் திட்டங்களை உருவாக்க துவங்கினேன் .


அரசியல் நுண்ணிய மனங்களின் விளையாட்டு அதை ஒருவருக்கு கற்றுத் தருவது என்பதை போல மடமை பிறிதில்லை .என்னுடன் நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகளின் செயல்படாமை எனக்கு சூழ்நிலையை சாதகப்படுத்திக் கொடுத்ததிருந்தது  . எனது எதிரணியினர் என்னை முடக்க  வல்சராஜை பயன்படுத்தினர்  .இப்போது அவர் ஒதுங்கிக் கொள்ள எதிர் நண்பர்களுக்கு சண்முகத்தை அனுக துணிச்சலில்லை . இருப்பினும் என்னுடன் நியமிக்கப்பட்ட ஐந்து பொது செயலாளர்களில் ஒருவரான வையத்தரசு மட்டும் சண்முகத்திடம் என்னை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்


வையத்தரசின் குற்றச்சாட்டுகளை சண்முகம் தனது வழமையான பாணியில் எதிர்கொண்டார் , அது என்னை அனைத்தையும் கடந்து செயல்படும் அடங்காமையாக பிறரால் பார்கப்பட்டிருக்க வேண்டும் .மாநில இளைஞர் காங்கிரஸில் தலைவராக வல்சராஜ் அமைப்பில் ஐந்து பொது செயளாலர்களில் ஒருவனாக இருக்கையில் எனக்கென தனித்த அதிகாரங்கள் என எதுவும் இல்லை . ஆனால் எனக்கிருந்த சண்முகத்துடனான அனுக்கம்” என்கிற   உரிய இடம் என்கிற பிறரின் புரிதல் !!! அப்போது  நன்றாக வேலை செய்யத் துவங்கி இருக்க வேண்டும்  .


அரசியலில் ஒருவர் பின்னால் அணித்திரளும் எளிய மக்கள் பற்றிய ஆச்சர்யம் எனக்கு எப்போதும் இருப்பது .அரசியலில் மூன்றாம் இடத்தை வகிக்கும் அவர்களே வெற்றிபெறும் நபரை கணிக்கின்றனர் . அவர்களின் கணிப்பு 90 சதவிகிதம் பொய்ப்பதில்லை . அவர்கள் யாரை நோக்கி முதலடி எடுத்து வைக்கிறார்களோ , அதை உணரும் இரண்டாம் நிலை தலைவர்கள் அவர்களை முறைப்படுத்த தங்கள் இடம் நோக்கி நகர்கிறார்கள் .அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொள்கிறார்கள் . இந்த செயல்முறை தொடங்கிய பிறகு வெற்றி பெருபவராக கணிக்கப்பட்டவர் வெற்றியை நெருங்குகிறார் .இது என்றும் மாறாத இயற்கையின் விந்தையான வதி .


இவை அனைத்தையும் கடந்து தனது செயல்பாட்டை சரியாக வகுப்பவருக்கு முயற்சி அவரின்  உச்ச கட்ட வெற்றியை தொடுகிறது .வெண்முரசின் களிற்றுயானை நிறையில் எளிய மக்கள், தங்கள் வாழ்வில் வெற்றி என ஒன்றை உணராதவர்கள். வெற்றியின் பொருட்டே அவர்கள் வெல்பவர்களை வழிபடுகிறார்கள், அவ்வெற்றி தங்கள் வெற்றியென கொண்டாடுகையில் வாழ்வை பொருட்செறிவு கொண்டதாக ஆக்கிக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு அத்தலைவர்களின் கொடுமைகளைக்கூட பொறுத்துக்கொள்கிறார்கள். தங்கள் தலைவர்களின் தோல்வியில் உளம் சோர்கிறார்கள். ஆனால் மிக விரைவிலேயே தோற்றவர்களை விட்டு விலகிவிடுகிறார்கள். அவர்களை தங்களிலிருந்து இயல்பாக அகற்றிக்கொள்கிறார்கள் எச்சமின்றி மறக்கவும் அவர்களால் முடியும் என்பது சாமாண்யர்களின் உளவிவியல். வெண்முரசு அதை மிக செறிவாக முன்வைப்பது பிரமிப்பளிப்பது .


அமைப்பிற்கு புதிதாக வரும் சிலரை கொண்டே அதை நிரப்ப வேண்டிய கட்டாயம் எனக்கு  . அது மிகுந்த வெறுப்பையும் , ஆயாசத்தையும் கொடுத்த காலம் . நீண்ட யோசனைக்கு பிறகு தொகுதி நிர்வாக கமிட்டியை நியமனம் செய்வது என முடிவுசெய்தேன் . அது  மாநில கட்சி அமைப்பை கொந்தளிக்க செய்வது அதை விட தலைவரிடம் அதற்கான அனுமதியை பெறுவது மேலும் சிக்கலானது .ஏறாக்குறைய நடவாதது .பலர் பலமுறை தோற்றது ஆனால் அதை முயற்சித்து பார்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை .


சண்முகம் எனது முயற்சிகளுக்கு எதிரானவராக நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அரசியல் நிகழ்தல் என்பது பலவித முரணியக்கம் வழியாக நிலைகொள்வது . சில சாதகமற்ற நிலைகளை தலைவர்கள் மாற்ற ஒரு போதும் முயன்றதில்லை காரணம் அது நிலவும் சமன்பாட்டை எங்கோ ஒரு புள்ளியில் குலைத்து விடுவதற்கான வாய்பபை அஞ்சுகிறார்கள் .


இதன் அரசியல் யதாரத்தம் புரிந்திருந்ததால் சரியான தருணத்திற்கு காத்திருந்த போதுதான் தில்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டு அழைப்பு கிடைத்தது அதை  பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன் .சண்முகத்துடன் அது  ஒரு விபரீத விளையாட்டு என்றாலும் அதை செய்து பார்க்க முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் சண்முகம் அனுமதிக்கும் செறிவான உரையாடலும் அதற்கு பின் உள்ள அரசியல் யதரத்தத்தையும், அதை முன்வைக்கும் திறனையும் சரியாக செய்ய இயலுமானால் அவரால் அதை புறக்கணிக்க இயலாது என்பது நான் நன்கு அறிந்தது  அதை இம்முறை உபயோகப் படுத்திப் பார்க்க முடிவெடுத்தேன். .


வல்சராஜ் தலைவராக நியமிக்கப்பட்ட போது , பழைய அமைப்பில் இருந்த சுய மரியாதையும் செல்வாக்குமுள்ள இரண்டாம் நிலை தலைவர்களில் பலர் ஒதுங்கிக் கொள்ள பதவியில் இருப்பதனால் கிடைக்கும் அங்கீகாரத்தை விழையும் சிலர் மட்டும் வல்சராஜை சூழ அமர்ந்து கொண்டனர் .அவர்களும் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேறியதும் உருவான வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு தானாக வாய்த்தது  என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது .


வியாழன், 16 ஜூலை, 2020

வெண்முரசு நிறைவு ..ஜெ கடிதம்

 https://www.jeyamohan.in/133795/


 



2013 டிசம்பர் 25 அன்று எழுதத் தொடங்கி 2014 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் வெளியான வெண்முரசு இன்று, 2020 ஜூலை 16 அன்று, முடிவடைகிறது. இதை ஜூன் 26 அன்று எழுதி முடித்தேன். அதன் பின் நீண்ட நிறைவின்மையும் கொந்தளிப்பும் எஞ்சியது. பின்னர் 13-7-2020 அன்று இறுதி பகுதியை, கண்ணனின் பிள்ளைத்தமிழை, எழுதியபின் நிறைவும் விடுதலையும் அடைந்தேன்.

இதை எழுதுவதாக அறிவித்தபோது இத்தனை பெரிதாக எண்ணவில்லை. ஆண்டுக்கு ஒருநாவல் என பத்து நாவல்கள், ஐந்தாயிரம் பக்கங்கள் என்று அறிவித்தேன். எழுத தொடங்கும்போது பத்தாயிரம் பக்கம் வரலாமென்று தோன்றியது.அன்று அதுவே மலைக்கவைக்கும் பணியாக இருந்தது. மகாபாரதம் அத்தனை இணைப்புகளுடனும்கூட எட்டாயிரம் பக்கம்தான். இந்தியாவில் எந்த நூலும் பத்தாயிரம் பக்கம் இல்லை.

எழுத முற்படும்போது ஒருநாவலை தொடர்ச்சியாக வெளியிட்டுவிட்டு நீண்ட இடைவெளிவிட்டு அடுத்த நாவல் வெளியிடலாம் என்பதே திட்டம். அப்போது இத்தனை வாசகர்கள் இருப்பார்கள் , இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் எழுதத் தொடங்கியபின் வாசகர்களின் பெருக்கம் ஒரு கட்டத்தில் பெரிய அழுத்தமாகியது. ஒருநாவலுக்கும் இன்னொன்றுக்கும் இடையே பதினைந்து நாட்கள் இடைவெளி விட்டால்கூட வாசகர்கள் பலர் அப்போது மிகப்பெரிய வெறுமையை உணர்வதாகச் சொன்னார்கள். ஒருமுறை இருபதுநாட்கள் இடைவெளி வந்தபோது தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்து குவிந்தன.

ஆகவே கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், எழுபத்தொன்பது மாதங்கள், அனேகமாக தினமும் ஒரு பகுதி என வெளியாகியது வெண்முரசு. திட்டமிட்டதை விட இப்போது மும்மடங்கு பெரியது.உலகின் வெவ்வேறு நாடுகளில், இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் இந்நாவலை எழுதியிருக்கிறேன். மலையுச்சிகளில், பாலைவனங்களில், அறியாத சிற்றூர்களில்.விமானங்களிலும் ரயில்களிலும் படகுகளிலும் எழுதியிருக்கிறேன். ஏழாண்டுகள் இது என் வாழ்க்கையின் முதன்மையான பகுதியாகவே இருந்தது. ஒரே ஒருநாள்தான் வலையேற்றம் செய்யமுடியாமல் வெண்முரசு பிந்தி வெளியானது. நான் எழுதாமையால் ஒருநாள்கூட தவறியதில்லை. அது ஓர் அருள் என்றே நினைக்கிறேன்

இதன் வாசகர்களுக்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன். எங்கள் பயணங்களில் கடுமையான அலைச்சலுக்குப் பின் விடுதிக்கு திரும்பி படுத்தால் என்னுடன் வந்த நண்பர்கள் பன்னிரண்டு மணிக்கு வெண்முரசு வெளியானதும் படித்துவிட்டு தூங்குவதற்காக காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். விஷ்ணுபுரம் விழாவின்போது பெரிய கூடங்களில் நண்பர்கள் திரளாக தங்கியிருப்பார்கள். பன்னிரண்டு மணிக்கு அத்தனைபேரின் முகங்களும் செல்போன் வெளிச்சத்தில் மின்ன வெண்முரசு படித்துக்கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன்

உலகமெங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். இத்தனை விலையுள்ள நூல் ஒவ்வொரு முறையும் தேவையான அளவுக்கு முன்விலைத்திட்டத்திலேயே விற்றுச் செல்கிறது. வழக்கமாக நவீன இலக்கியம் படிக்காதவர்கள் மிகப்பெரிய அளவில் இதை படிக்கிறார்கள். சில வீடுகளுக்குச் செல்லும்போது அந்நண்பரை விட அவர் அன்னையும் தந்தையும் வெண்முரசை தீவிரமாக படித்துக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்

இது நிறைவின் தருணம். நன்றி சொல்லவேண்டிய பலர் உண்டு. இந்நாவல்தொடருக்கு ஓவியங்கள் வரைந்த ஷண்முகவேல் இதற்கு ஒரு அழகான தொடக்கத்தை அளித்தார். உதவிய .வி.மணிகண்டனும் நன்றிக்குரியவர். இந்நூல் அச்சில் வெளிவருகையில் பிழைநோக்கி உதவிய ஹரன் பிரசன்னாவுக்கும், ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கும் நன்றிசொல்லவேண்டும். நடுவே சிலபகுதிகளை தட்டச்சு செய்து உதவிய மீனாம்பிகைக்கும், திருக்குறளரசிக்கும் நன்றி.

வெண்முரசு குறித்து இரு வாசிப்பரங்குகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகின்றன. சென்னையில் இதை ஒருங்கிணைக்கும் ஜா.ராஜகோபாலன், சௌந்தர்ராஜன் காளிப்பிரசாத் ஆகியோரும் பாண்டிச்சேரியில் ஒருங்கிணைக்கும் அரிகிருஷ்ணனும் என் நன்றிக்குரியவர்கள். கோவையில் வாசிப்பரங்கை சிலகாலம் நடத்திய விஜய்சூரியனுக்கும் அன்பு.இந்த ஆக்கத்திற்கு பலவகையிலும் உதவியடைனமிக்நடராஜன், சிங்கப்பூர் கணேஷ் இருவருக்கும் நன்றி.

இந்நாவலின் ஆக்கத்தில் ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் உடனிருந்தவர்கள் ஸ்ரீனிவாசனும், சுதா ஸ்ரீனிவாசனும். இதன் அத்தியாயங்களை சீரமைத்து, பிழைகள் திருத்தி, முரண்பாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டி இணை ஆசிரியர்களாகவே செயல்பட்டனர். சுதா ஸ்ரீனிவாசனுக்குத்தான் உண்மையில் இந்நாவல்களின் மொத்த வரிகளும் நினைவில் இருந்தன. நான் அவரிடம் ஐயங்கள் கேட்டிருக்கிறேன். நாவலில் ஓர் இடத்தில் வரும் ஒரு பெயரோ வரியோ பல ஆயிரம் பக்கங்களுக்கு அப்பால் மீண்டும் வந்தால்கூட சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நான் பலநாட்கள் இரவில் மிகப்பிந்தி பகுதிகளை வலையேற்றம் செய்திருக்கிறேன். அவர்கள் காத்திருப்பார்கள். நான் மறந்துவிட்டேனா என்று அழைத்து நினைவூட்டுவார்கள். ஒவ்வொரு நாளும் ஐயங்களைக் கேட்டுச் சீரமைத்தார்கள். இந்நாவல் என்னைப்போலவே அவர்கள் வாழ்க்கையிலும் ஒர் ஒளிமிக்க பகுதி. அவர்களுக்கு என் நன்றியை எளிமையாகச் சொல்லிவிடமுடியாது.

இந்நூலின் ஆக்கத்தில் திரைத்துறையின் பங்களிப்பு முதன்மையானது. என்னைப் பொறுத்தவரை கலைமகளை தொட்டுணரும் அருகமைவு இளையராஜா அவர்களுடையது. எனக்கு அவருடைய இசையேகூட இரண்டாவதாகத்தான், அவர் மெய்யறிவர். அவருடைய வாழ்த்து உடனிருந்தது. மணிரத்னம், கமல், வசந்தபாலன் என் பலர் இந்நாவல் தொடரின் ஆக்கத்தில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டினர். அவர்களின் பின்பலமே என்னை பொருளியல் கவலைகளிலிருந்து விடுவித்து இதில் மூழ்க, விரும்பியவண்ணம் பயணம்செய்ய உதவியது. நான் கம்பன் எனில் சினிமாவே சடையப்பர்.

இந்நூல்வரிசை தொடங்க காரணமாக இருந்த, இதை வாசித்த சைதன்யாவுக்கு முத்தங்கள். இந்நாவலின் ஆக்கத்தின் போது உருவான கொந்தளிப்புகள், கசப்புகள் ஆகியவற்றை நான் அஜிதனுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இதன் மையமான தத்துவச்சிக்கல்களை விவாதித்திருக்கிறேன். அவனுக்கும் என் அன்பு.

என்றுமுள்ளது அருண்மொழியின் அணுக்கம். என் நாவல்களை அவள் வாசித்து அடையும் உணர்வுகளை எப்போதும் கூர்ந்து பார்த்து வருபவன். அது காளிவிளாகத்துவீட்டு விசாலாட்சியம்மா என்ன சொல்வார்கள் என்பதற்கான சான்று. அவளுக்கு என் அணைப்பு. என்றும் இப்போதென அவள் இப்பித்தனைக் காத்தருள்க.

தொடங்கியநாள் முதல் ஒருநாள் கூட விடாமல் இதை வாசித்த பலநூறு வாசகர்களை எனக்குத்தெரியும். ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள்.

நித்யாவைஇந்நூலின் ஆக்கத்தில் தோன்றாத்துணையாக இருந்த ஆசிரியர்கள் அனைவரையும் பணிகிறேன்.

ஜெ

வியாசனின் பாதங்களில்

புதன், 17 ஜூன், 2020

*வீடடங்கு *

ஶ்ரீ:




பதிவு :717 / தேதி 17 ஜூன்     2020

*வீடடங்கு 


தனிமை படுத்திக் கொள்வது எனக்கு புதிதல்ல . வாழ்கையில் இதுவரை பலமுறை அதைச் செய்திருக்கிறேன் . என்னை ஒன்றிலிருந்து விலக்கி வேறு ஒன்றுக்கு கொண்டு செல்லும் முன் ஊழ் அதை எனக்கு நானே செய்து கொள்ள வைக்கும் மனநிலையைக்கு கொண்டு விடுகிறதோ என்கிற சந்தேகம் எனக்கு இப்போது சமீப காலமாக உண்டு .

அதுவரை இருந்து வந்த பாதையில் ஏதோ ஒரு புள்ளியில் அதற்கு  முரண்பட்டு விலகி இருக்கும் தருணங்களில் நான் என்னை தனிமை படுத்திக் கொண்டதுண்டு .முற்றான தனிமை என்பது எனக்கு 2011 முதல் 2015 வரையிலானது . பல வகையில் உளக்குமுறலுடன் ஒரு நத்தையைப் போல அனைத்திலிருந்தும் உள்ளிழுத்துக் கொண்டது நிகழ்ந்தது.
அதிலிருந்து 2015 இறுதியில் வெளிவந்தேன்

2011ல் அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக  என்னை அனைவரிடமிருந்து தனிமை படுத்திக்கொண்டேன் . ஆப்போதெல்லாம்              ஸ்ரீ க்ரிஷ்ணப்ப்ரேமியின் ஸ்ரீமத் பாகவதம் , ராமாயணம் மஹாபாரதம் போன்ற உபன்யாசங்களை சலிக்காமல் எத்தனை முறை என்கிற கணக்கு வழக்கின்றி காலை முதல் இரவு வரை கேட்டுக்கொண்டே இருந்தேன்

அந்த காலகட்டத்தில் அடைந்த மற்றம் எனக்கு இன்னமும் விந்தையாக இருக்கிறது . எந்த வித உற்சாகமூட்டும் விஷயங்களில் வலிந்து விலகி கொண்டேன் . திரை இசை பாடல்கள் , நான் மிக விரும்பி விளையாடும் settler 7 போன்ற வீடியோ கேமில் இருந்து கூட விலகி இருந்தேன் . வெளி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கையில் எனக்கு காலம் வெறும் எண்ணிக்கையாக இருக்க நான் புதைந்து போயிருந்தேன் . வரலாறுகளில் இருந்து  உதிர்ந்து விட்டிருப்பதை போல . அனைத்தும் என்னை விட்டு கடந்துவிட்டிருந்தது

சில காலம் அது நிலையழித்தலை கொடுத்தாலும் சீக்கிரமே அதிலிருந்து வெளியே வந்து விட்டேன் . வாழ்க்கையின் பொருளின்மை மிக நுட்பமாக புரிந்து கொண்ட நாட்கள் . யார் மீதும் ஏதன் மீதும் காழ்ப்பு கொண்டிருக்கவில்லை . என்னை முழுமையாக மீட்டது அது ஒன்றே என நினைக்கிறேன்

வாழ்வியலின் அழகிலில் மனதை குவிக்க துவங்கினேன் புது பாதைகள் திறந்து கொண்டன .எனது ஐபேடில் ஆப்பிள் நிறுவனத்தின் இசை செயலி ஒன்று இருப்பது தெரிந்திருந்தாலும் அதில் எந்த பாடலையும் நான் கேட்டதில்லை . ஒரு நாள் அதில் கவனம் செல்லகடல்படத்தில் வரும்மூங்கில் தோட்டம்பாடல் எனக்கு முதலில் திகைப்பை இருந்தது . இசையில் அதீத ஈடுபாடு கொண்ட நான் வலிந்து என்மீது திணித்துக்கிண்டு முடிவு ஏறக்குறைய ஏழு வருடமே நான் எந்த இசையையும் கேட்கவில்லை

அந்த பாடலில் இருந்த நுணுக்கமான இசை என்னை மீளவும் புற உலகிற்கு கொண்டுவந்தது . நீண்ட காலம் வ்ந்த இசையையும் கேட்காததாலோ என்னவோ இளைமையில் நான் ரசித்த பாடலும் எதன் மீதும் எனக்கு அன்றிருந்த ஆர்வம் சிறிதும் இல்லாமலானது . நவீன இசையை , மற்றும் புது திரைபட இசையைத் தவிர பிற எதையும் கேட்காமலானேன் . இது நான் அடைய விருக்கும் துக்கத்தை பற்றிய ஒரு அறிவிப்பாக இருந்திருக்கலாம் என இப்போது நினைக்கிறேன்

சிந்தை உடை என அனைத்திலும் அந்த மாற்றம் நிகழ துவங்கி இருந்தது உணவில் அதுவரை ஒதுக்கிய காய்கறிகளை சுவைக்க துவங்கினேன் . அசைவ  உணவு தவிர்த்த முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது . ஆனால் அதன் மீது இதுவரை நாட்டம் திரும்பவில்லை . திரும்பாது என்றே நினைக்கிறேன் .இந்த காலகட்டத்தில் தான் எனக்கு ஜெயமோகன் அறிமுகமானார் .

கொரோனா தனிமை படுத்துதல் என்னை விதத்திலும்  பாதிக்கவில்லை என்றே நினைக்கிறேன் . சில சமயங்களில் உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க நான் என்னை சுருக்கிக் கொண்டது குற்ற உணர்வை தூண்டுபவையாக இருந்ததுண்டு . இப்போது உலகமே அப்படி இருப்பதை பார்க்க சற்று குரூர திருப்திதான்


புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...