https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 17 ஜூன், 2020

*வீடடங்கு *

ஶ்ரீ:




பதிவு :717 / தேதி 17 ஜூன்     2020

*வீடடங்கு 


தனிமை படுத்திக் கொள்வது எனக்கு புதிதல்ல . வாழ்கையில் இதுவரை பலமுறை அதைச் செய்திருக்கிறேன் . என்னை ஒன்றிலிருந்து விலக்கி வேறு ஒன்றுக்கு கொண்டு செல்லும் முன் ஊழ் அதை எனக்கு நானே செய்து கொள்ள வைக்கும் மனநிலையைக்கு கொண்டு விடுகிறதோ என்கிற சந்தேகம் எனக்கு இப்போது சமீப காலமாக உண்டு .

அதுவரை இருந்து வந்த பாதையில் ஏதோ ஒரு புள்ளியில் அதற்கு  முரண்பட்டு விலகி இருக்கும் தருணங்களில் நான் என்னை தனிமை படுத்திக் கொண்டதுண்டு .முற்றான தனிமை என்பது எனக்கு 2011 முதல் 2015 வரையிலானது . பல வகையில் உளக்குமுறலுடன் ஒரு நத்தையைப் போல அனைத்திலிருந்தும் உள்ளிழுத்துக் கொண்டது நிகழ்ந்தது.
அதிலிருந்து 2015 இறுதியில் வெளிவந்தேன்

2011ல் அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக  என்னை அனைவரிடமிருந்து தனிமை படுத்திக்கொண்டேன் . ஆப்போதெல்லாம்              ஸ்ரீ க்ரிஷ்ணப்ப்ரேமியின் ஸ்ரீமத் பாகவதம் , ராமாயணம் மஹாபாரதம் போன்ற உபன்யாசங்களை சலிக்காமல் எத்தனை முறை என்கிற கணக்கு வழக்கின்றி காலை முதல் இரவு வரை கேட்டுக்கொண்டே இருந்தேன்

அந்த காலகட்டத்தில் அடைந்த மற்றம் எனக்கு இன்னமும் விந்தையாக இருக்கிறது . எந்த வித உற்சாகமூட்டும் விஷயங்களில் வலிந்து விலகி கொண்டேன் . திரை இசை பாடல்கள் , நான் மிக விரும்பி விளையாடும் settler 7 போன்ற வீடியோ கேமில் இருந்து கூட விலகி இருந்தேன் . வெளி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கையில் எனக்கு காலம் வெறும் எண்ணிக்கையாக இருக்க நான் புதைந்து போயிருந்தேன் . வரலாறுகளில் இருந்து  உதிர்ந்து விட்டிருப்பதை போல . அனைத்தும் என்னை விட்டு கடந்துவிட்டிருந்தது

சில காலம் அது நிலையழித்தலை கொடுத்தாலும் சீக்கிரமே அதிலிருந்து வெளியே வந்து விட்டேன் . வாழ்க்கையின் பொருளின்மை மிக நுட்பமாக புரிந்து கொண்ட நாட்கள் . யார் மீதும் ஏதன் மீதும் காழ்ப்பு கொண்டிருக்கவில்லை . என்னை முழுமையாக மீட்டது அது ஒன்றே என நினைக்கிறேன்

வாழ்வியலின் அழகிலில் மனதை குவிக்க துவங்கினேன் புது பாதைகள் திறந்து கொண்டன .எனது ஐபேடில் ஆப்பிள் நிறுவனத்தின் இசை செயலி ஒன்று இருப்பது தெரிந்திருந்தாலும் அதில் எந்த பாடலையும் நான் கேட்டதில்லை . ஒரு நாள் அதில் கவனம் செல்லகடல்படத்தில் வரும்மூங்கில் தோட்டம்பாடல் எனக்கு முதலில் திகைப்பை இருந்தது . இசையில் அதீத ஈடுபாடு கொண்ட நான் வலிந்து என்மீது திணித்துக்கிண்டு முடிவு ஏறக்குறைய ஏழு வருடமே நான் எந்த இசையையும் கேட்கவில்லை

அந்த பாடலில் இருந்த நுணுக்கமான இசை என்னை மீளவும் புற உலகிற்கு கொண்டுவந்தது . நீண்ட காலம் வ்ந்த இசையையும் கேட்காததாலோ என்னவோ இளைமையில் நான் ரசித்த பாடலும் எதன் மீதும் எனக்கு அன்றிருந்த ஆர்வம் சிறிதும் இல்லாமலானது . நவீன இசையை , மற்றும் புது திரைபட இசையைத் தவிர பிற எதையும் கேட்காமலானேன் . இது நான் அடைய விருக்கும் துக்கத்தை பற்றிய ஒரு அறிவிப்பாக இருந்திருக்கலாம் என இப்போது நினைக்கிறேன்

சிந்தை உடை என அனைத்திலும் அந்த மாற்றம் நிகழ துவங்கி இருந்தது உணவில் அதுவரை ஒதுக்கிய காய்கறிகளை சுவைக்க துவங்கினேன் . அசைவ  உணவு தவிர்த்த முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது . ஆனால் அதன் மீது இதுவரை நாட்டம் திரும்பவில்லை . திரும்பாது என்றே நினைக்கிறேன் .இந்த காலகட்டத்தில் தான் எனக்கு ஜெயமோகன் அறிமுகமானார் .

கொரோனா தனிமை படுத்துதல் என்னை விதத்திலும்  பாதிக்கவில்லை என்றே நினைக்கிறேன் . சில சமயங்களில் உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க நான் என்னை சுருக்கிக் கொண்டது குற்ற உணர்வை தூண்டுபவையாக இருந்ததுண்டு . இப்போது உலகமே அப்படி இருப்பதை பார்க்க சற்று குரூர திருப்திதான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...