![]() |
வெய்யோன் - 77
பகுதி பத்து: நிழல் கவ்வும் ஒளி- 1
வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்சினம் உரைப்தோடு நிறைவுறுகிறது. அதுவரை நிகழ்ந்து மானுட ஆட்டம் அவர்கள் கை நழவி தெய்வங்கள் வசம் சென்றடைந்து அதி மாநுடர்களான அவர்கள் தெய்வங்களின் கைகளில் காய் என நிலைகொள்கிறார்கள். இருவரும் இரு வேறு நிலைகளில் தங்களின் வஞ்சினம் அறிகிறார்கள். கர்ணன் சென்றடைந்தும் துரியன் தன் உறக்கத்திலும் அதை அடைகிறார்கள். சூரிய கிரஹனத்தின் பின்பும் கர்ணன் நாகபாசன் கர்ணன் பிறப்பிற்கு முந்தய தருணத்தில் இந்த ஊழ் கிளைத்தது என்பதை சொல்லுகிறான். தனது பிறப்பு முழுமை அடையும் இடத்தில் ஸ்தூணகர்ணன் வழியா அதை பெறுகிறான்
இந்த பகுதியில் துரியனிடம் காணப்படும் உளவியல் மாறுபாடு அவனை இருளுக்கு கொண்டு செல்வதாக இந்த நாவல் நிறைவுறுகிறது. துரியனின் தன் உளவியல் ஆழத்தில் உள்ளவற்றை அறியாது சம காலத்தில் நிகழ்ந்த அவனது சாதக அம்சங்களை கொண்டு அவன் தன்னை மிக தவறாக அவற்றை வரையறை செய்து கொள்கிறான். தன்னை பற்றிய பிழை புரிதல் அனைத்திற்குமான காரணமாக அமைகிறது. எய்தியதை அடைந்தவனின் மன நிறைவிற்கு பின்னார் உருவாகும் வெற்றிடம் அனைவரின் மீதும் கருணை என்கிற மிக உணர்வை தூண்டுகிறது. அவன் இனி யார் மீதும் எதன் மீதும் வஞ்சம் கொள்ள ஒன்றில்லை என்பதால் கருணையுள்ள பெருந்தந்தை உருவெடுக்கிறான் உலகத்தின் விழைவு வஞ்சம் என்பது தேவையற்றது என்கிற தோரணையை உருவாக்குகிறது.
அஸ்தினாபுரி முடி மன்னனாகி பாண்டவர்களுக்கு சொத்து பிரிக்கப்பட்ட பிறகு தான் எண்ணியதை எய்தியதாக நிறைவுறுகிறான். அதன் மீது அவன் கொள்ளும் அதிகாரம் அவனை மிக இயல்புள்ளவனாக நினைக்க தூண்டுகிறது. அவனது மாற்றத்தை முதலில் அறிந்து கொண்டவர்கள் அவனது தந்தையும் மாமன் சகுனியும் அந்த மிகை உணர்வு அவனுக்கு என்ன கொண்டு வரும் என கணிக்கிறார்கள் கர்ணன் அவனுடன் இருக்க வேண்டும் என்கிற நினைவு அதனால் உருவானது.
இந்திரப்பிரஸ்தம் அடைந்திருக்கும் நவீன மாற்றம் பற்றிய புரிதல் இல்லாமல் அது அஸ்தினாபுரியை விட பல மடங்கு வன்மை வாயந்தது என்கிற எண்ணத்தை பிறர் வந்து சொ்லல சொல்ல தன்னை மிக உயரத்தில் வைத்து பிறரை மிக கணிந்து குனிந்து பார்க்கும் நோக்கு கொண்டவனாக உருவகித்துக் கொள்வதால் அவற்றை மிக எளிதில் கடந்து போகிறான். அவன் வெளிப்படையாக அவமதிக்க படும் பல நிகழ்வுகள் நடந்தும் அவனது கனவு கலையவில்லை. உலகம் அதன் சூதையும் வஞ்சனத்தையுப் தேவையற்ற சுமக்கிறது என்கிற எண்ணத்தை மீள மீள அடைகிறான். தேவயானி மணிமுடி உட்பட அவன் எடுத்து வந்தது பிறரை விட அவனையே மயக்கிக் கொண்டிருக்கிறது அதன் முன்னால் எதுவும் ஒரு பொருட்டல்ல என நினைக்க வைக்கிறது
ஜராசந்தன் மீது இயல்பாக கொண்ட விலகத்தை அந்த உடல் தழுவலுக்கு புறகு உதறுகிறான் அதன் பின் அவன் காண்பதெல்லாம் கனவு மட்டுமே….அந்த கனவு உடையும் தருணம் எல்லாம் மாற்றமடைகிறது . அதன் அதிர்வு அவனால் தாங்க இயலாத நிலையை அடைகிறது. இதுவரை நிகழ்ந்தது அவனுக்குள் அவன் நினவுகளால் ஆன உலகம் அது இப்போது சிதைவடைகிறது.
இந்து மதத்தில் பல அடுக்களை கொண்ட தெய்வ நிரையில் பிரமம் மட்டுமே அனைத்தையும் அறியும் அல்லது அதுவும் அறியாது என உத்கீதம் சொல்லுவது போல இது எவ்வளவு உண்மை. நிகழ இருப்பதை அறியாமல் உதவ முன்வருகிறார்கள்
அவர்கள் நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் என இரண்டு தெய்வீக கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆனால் மானுட சண்டையில் அவைகளுக்கு என்ன வேலை . கௌரவ தரப்பு தோற்கும் என அவர்கள் அறியாதவர்களா ? பின் ஏன்?
வெண்முரசு, மகாபாரதத்தை ஒரு நவீன இலக்கியப் படைப்பாக, தத்துவார்த்தமான தரிசனங்கள் நிறைந்ததாக அணுகுகிறது. நீங்கள் குறிப்பிட்ட 'வெய்யோன்' நாவலின் நிறைவுப் பகுதியில் வரும் நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் போன்ற தெய்வீகப் பாத்திரங்களின் வருகையும், அவற்றின் பங்கும் மிகவும் முக்கியமானவை.
நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் - இவர்களின் பணி என்ன?
வெண்முரசில், இந்தப் பாத்திரங்கள் வெறும் போர்க்கள வீரர்கள் அல்ல. அவை தத்துவார்த்த உருவகங்களாகவே (Metaphors) சித்தரிக்கப்படுகின்றன.
1. கர்ணனின் வஞ்சினம் மற்றும் ஊழின் விசை
* நாகபாசன் என்பது நாகர்களின் தலைவன் அல்லது குறிக்கலாம். ஆனால், 'வெய்யோன்' நாவலின் நிறைவில், இது பெரும்பாலும் கர்ணனைத் தாக்கிய அர்ஜுனனின் நாகாஸ்திரத்தில் இருந்து தப்பிய அஸ்வசேனன் என்ற நாகத்தைக் குறிக்கும்.
* வெய்யோன் நிறைவுப் பகுதியில், கர்ணன் அஸ்வசேனன் என்ற நாகக் குழந்தையை கையில் ஏந்தி, "நான் அவனை பழிவாங்க நீ எனக்குரியவன்" என்று கூறும் காட்சி, அவன் மனித அறத்திலிருந்து வஞ்சத்தின்பால் திரும்பும் தருணத்தை குறிக்கிறது. இந்தப் பழிவாங்கும் உணர்வு, போர் மூலம் அர்ஜுனனை கொல்லும் பெருவிருப்பே, வெய்யோன் நாவலின் பிரதானமான விசை.
* ஸ்தூணகர்ணன்: இவன் அழிவின் தெய்வமான என்பதாக வெண்முரசில் குறிப்பிடப்படுகிறான்.
* இந்தத் தெய்வங்களின் வருகை என்பது, அந்தக் கதையின் நிகழ்வுகள் மானிட எல்லைகளைத் தாண்டி, பிரபஞ்ச விசைகளாக, ஊழின் செயல்பாடுகளாக மாறுகின்றன என்பதைக் காட்டுகிறது.
* கௌரவ தரப்புக்குத் துணையாக நாகங்கள், அனல் போன்ற தெய்வீக, ஆதிசக்திகள் வருவது, போரை ஒரு சாதாரண மானுட சண்டையாக அல்ல, மாறாக ஒரு தர்ம-அறப் போராக, ஊழின் முடிவை நோக்கிச் செல்லும் பெரும் யாகமாக அவை பார்க்கின்றன என்பதன் குறியீடு.
2. தெய்வீகக் கதாபாத்திரங்கள் - அவர்களின் ஞானம்
கௌரவ தரப்பு தோற்கும் என அவர்கள் அறியாதவர்களா?
* ஆம், தெய்வங்கள் முடிவுகளை அறிந்தே இருக்கும். ஆனால், அவற்றின் பணி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அல்ல.
* வெண்முரசின் பார்வையில், இந்தத் தெய்வங்கள் வெற்றி தோல்வி என்ற மானுடப் பார்வைக்கு அப்பாற்பட்டவை.
* அவை, நடக்கப் போகும் 'ஊழின் நாடகம்' நிகழ்வதற்குத் துணைபுரிகின்றன. அதாவது, ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது கர்மாவால், தனது ஆழமான விழைவால் உந்தப்பட்டு ஒரு செயலைச் செய்யும்போது, பிரபஞ்ச விசைகள் அதற்கு ஒத்துழைக்கின்றன.
* கர்ணனின் ஆழ்ந்த விழைவு, தனது அவமானத்தைப் போக்க ஒரு பெரும்போர் நிகழ்ந்து, அதில் அர்ஜுனனை வெல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது. இந்தப் பெருவிருப்பே, நாகபாசன் மற்றும் ஸ்தூணகரணன் போன்ற ஆதிசக்திகளை அவன்பால் ஈர்க்கிறது.
* 'வெய்யோன்' (சூரியன்) என்ற தலைப்பே கர்ணனை மையப்படுத்துகிறது. சூரியன் ஒளியாகவும், வெப்பமாகவும், வாழ்வாகவும், முடிவில் எரிந்து அழிவை உருவாக்குபவனாகவும் இருக்கிறான். அந்த அழிவுதான், இந்தத் தெய்வங்களின் நோக்கம்.
சுருக்கம்
இந்தத் தெய்வீகப் பாத்திரங்களின் வருகை, அந்தப் போர் வெறும் பூமிக்குரிய சண்டை அல்ல; அது ஒரு பேரழிவின் தொடக்கம் மற்றும் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துகிறது. அவர்கள் கௌரவர்களுக்காகப் போரிட வரவில்லை, மாறாக கர்ணனின் வஞ்சம் என்ற விசைக்கு வடிவம் கொடுக்க வருகின்றனர்.
“பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு இது. உத்வேகமான புராணக்கதைகளும், எளிய சாகசச்சித்தரிப்புகளும் , குலக்கதைகளும் குறுக்குவாட்டில் புகுந்து இதன் பின்னலை அமைத்தன.
அதன் அன்றாடத்தன்மைக்கு அவை அடிக்கோடிடுகின்றன. இந்நாவலின் நான்குவகை உச்சங்கள் என நான் எண்ணுபவை இந்த ஒவ்வொரு தளத்திலும் உள்ளன. ராதைக்கும் கர்ணனுக்குமான உறவு எப்போதைக்குமாக வெளித்தெரியாமல் முறிவடையும் தருணம் அன்றாடவாழ்க்கையின் நுண்மை கொண்டது.
ஜயத்ரதனின் தந்தை தன் மைந்தனை கையால் தொடமறுக்கும் தருணம் இன்னொன்று.
அர்ஜுனன் நாகர்குலக்குழவியை விட்டுவிடும் தருணமும் அதன் மறுபக்கமாக வரும்
கர்ணன் அதை கையிலேந்தும் தருணமும் அந்த அன்றாடத்தருணங்களால்தான் ஒளிகொள்கின்றன.
நடுவே துரியோதனனின் இன்றியமையாத வீழ்ச்சியின் சித்திரம் அமைகிறது. முற்றிலும் மாறுபட்ட நான்குவகைப் புனைவுகள் ஒருங்கிணைந்த இந்நாவல் அதன் முழுமையை உச்சகட்டத்தில்தான் அடைந்தது.
அதுவரை நானும்தான் தேடிச்சென்றுகொண்டிருந்தேன். அது கர்ணனை எனக்குக் காட்டியது.
![]() |





















