இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
ஞாயிறு, 8 டிசம்பர், 2024
வெள்ளி, 6 டிசம்பர், 2024
வியாழன், 24 அக்டோபர், 2024
திங்கள், 21 அக்டோபர், 2024
சனி, 21 செப்டம்பர், 2024
வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை
புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். மாதம் ஒருமுறை நிகழும் கூட்டங்களிள் தொடர்ச்சியாக வெண்முரசு வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள். முழுமையாகவே அவருடைய செலவு. சென்னை வெண்முரசுக் கூடுகை முழுமையடைந்து நின்றுவிட்டது. கோவை வெண்முரசுக் கூடுகை நடைபெறுகிறது. இணையத்தில் பல குழுக்களில் வெண்முரசு தொடர்ச்சியாக விவாதிக்கப்படுகிறது.
அரிகிருஷ்ணனின் தந்தையும் இலக்கிய வாசகர். ஜெயகாந்தனின் நண்பர். கலைமகளில் கதைகள் எழுதியவர். ஜெயகாந்தன் அவர்களின் இல்லத்துக்கு வந்திருக்கிறார். தீவிரமான வைணவக்குடும்பமும் கூட. அவருடைய அறுபதாவது அகவைநிறைவு விழாவிலும் நான் உரையாற்றியிருக்கிறேன். (வைணவங்கள் என்னும் தலைப்பில்)
வெண்முரசு சந்திப்பின் ஐம்பதாவது நிகழ்வில் நான் கலந்துகொண்டேன். 12 செப்டெம்பர் 2014 அன்று எழுபத்தைந்தாவது சந்திப்பு. நான் வந்தாகவேண்டும் என்றார்.எனக்கு பல நேர நெருக்கடிகள். ஆயினும் அந்நிகழ்வை விட மனமில்லை. ஏனென்றால் எனக்கு எந்நிலையிலும் விடாப்பிடியாகச் செய்யப்படும் செயல்கள் மேல் பெருமதிப்புண்டு, அவையே மெய்யான சாதனைகள் என்பது என் எண்ணம். நான் அத்தகையவன், எடுத்த செயல்களை விடுவதில்லை. உடன் எவர் என்பதையும் நோக்குவதில்லை.
நான் மதுரை புத்தகவிழாவில் இருந்தேன். மதுரை புத்தகவிழாவை விழா என்று சொல்லலாம், விற்பனை என்று சொல்லமுடியாது. நல்ல கூட்டம். வெளியே பட்டிமன்றத்தில் அரங்கு நிறைந்து அமர்ந்திருந்தனர். விற்பனை மோசம் என்பதற்கும் கொஞ்சம் கீழே. நான் அங்கிருந்த மூன்றுநாட்களிலும் மாலை ஆறுமுதல் எட்டு வரை ஓரளவு வாசகர்கள் வந்து நூல்களை வாங்கினர். சென்ற ஆண்டும் விற்பனை மிகக்குறைவே. ஒரு புத்தகவிழா என்பது விற்பனை மட்டுமல்ல, ஓர் இலக்கிய நிகழ்வும்கூட என்ற அளவில்தான் பங்கேற்றோம்.
மதுரை புத்தகவிழாவில் இருந்து 11 ஆம் தேதி இரவே கிளம்பி புதுச்சேரி சென்றேன். இரவு 1030க்கு பேருந்து. ஆனால் கிளம்பியது 11 30க்கு. குளிர்சாதனக் கருவி பழுது என்றனர். மதுரையில் இருந்து இதுவரை நான் பழுதாகாத ஒரு பேருந்தில் ஏற நேர்ந்ததே இல்லை. பிற இடங்களில் பழுதாகிவிட்ட வண்டிகளை நிறுவனங்கள் மதுரைக்கு அனுப்புகிறார்கள் என நினைக்கிறேன். படுக்கை வசதி கொண்ட பேருந்து. ஆகவே நான் படுத்ததுமே தூங்கிவிட்டேன். வழியில் எங்கோ இறங்கிப் பார்த்தபோதும் இருவர் வண்டிக்கு ஏதோ பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்.
விடியற்காலை ஐந்து மணிக்கு புதுச்சேரி வந்தேன். ஈரோடு கிருஷ்ணனும் கோஷ்டியும் வந்து இன்னொரு அறையில் தங்கியிருந்தார்கள். அவர்களிடம் காலை 9 மணிவரை என்னை எழுப்பலாகாது என கறாராக எச்சரித்திருந்தார் அரிகிருஷ்ணன்.ஆகவே ஆறு மணி முதல் மூன்று மணி நேரம் தூங்க முடிந்தது.
காலை 10 மணிக்கு வெள்ளாழர் வீதியில் அரிகிருஷ்ணன் இல்லத்தில் நிகழ்வு. சென்னையில் இருந்து ராஜகோபாலன், காஞ்சி சிவா, பார்கவி என பல நண்பர்கல் வந்திருந்தார்கள். கூட்டம் இருந்தமையால் கூடத்தில் சற்று நெரிசலாக இருந்தாலும் ஓர் இலக்கிய நிகழ்வு அப்படி ஒரு வீட்டில் நிகழ்வதில் ஒரு நிறைவு இருந்தது.
காலை பத்து முதல் பன்னிரண்டுக்குள் அனைத்து உரைகளும் சுருக்கமாகவே முடிந்தன. வெண்முரசில் காண்டீபம் நாவலில் அந்த மாதத்திற்குரிய பகுதியைப் பற்றியும், வெண்முரசின் பொதுவான அழகியல் மற்றும் உணர்வுநிலைகள் பற்றியும் பேசினர். எல்லா பேச்சுக்களும் சுருக்கமானவையாக இருந்தன.
அமைச்சர் க.லக்ஷ்மிநாராயணன் அவர்கள் வெண்முரசு பற்றி உரையாற்றினார். அதன்பின்னர் ஹைதராபாத் பல்கலையில் முனைவர்ப்பட்ட ஆய்வு செய்பவரும் இளையதலைமுறையின் மிகச்சிறந்த இலக்கியவாசகர் – விமர்சகர் என சொல்லத்தக்கவருமான ஸ்ரீனிவாஸ் காண்டீபத்தின் அணிகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
ஸ்ரீனிவாஸ் ஊட்டி குருகுலத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய அரங்குகளில் அறிமுகமானவர். அன்றே தீவிரமான வாசிப்பும் கூரிய அவதானிப்புகளும் கொண்டவராக இருந்தார். இப்போது அவர் சென்றிருக்கும் தொலைவு வியப்பூட்டுவது. காவிய இயல் பற்றியும், நவீன இலக்கியத்தில் காவிய அணிகள் எப்படித் தொழிற்பட இயலும் என்பதைப் பற்றியும் ஆழ்ந்த உரை ஒன்றை ஆற்றினார். மிக அரிதாகவே தமிழகத்தின் இலக்கியமேடைகளில் அத்தகைய உரைகள் நிகழ்கின்றன. நான் பெருமிதத்துடன் நோக்கும் வருந்தலைமுறை இலக்கியவாதிகளில் ஒருவர் அவர்
இறுதியாக நான் உரையாற்றினேன். பொதுவாக காவியங்கள் பற்றியும், காவியங்களுக்கும் தத்துவத்திற்குமான தொடர்பு குறித்தும், இன்றைய நவீன இலக்கியச் சூழலில் காவியயியல் எவ்வண்ணம் திகழமுடியும் என்பது பற்றியும் பேசினேன். அத்தனை உரைகளுக்குப்பின் ஒரு நீண்ட உரை நாகரீகம் அல்ல. ஆனால் ஒரு நிகழ்வுக்காக அத்தனை தொலைவு வந்துவிட்டு ஒரு சம்பிரதாய உரை ஆற்றுவதும் சரியல்ல. ஆகவே நடுத்தர நீளம் கொண்ட ஓர் உரை
மதிய உணவுக்குப்பின்னர் விடுதியறையில் வெண்முரசின் வாசகர்களான நண்பர்களுடன் ஓர் உரையாடல். வெவ்வேறு கேள்விகள், விளக்கங்கள், வழக்கமான நகையாடல்கள் என இனிய பொழுது. மாலையில் கிளம்பி புதுச்சேரியில் உருவாகியுள்ள புதிய கடற்கரைக்குச் சென்றோம். இரவில் திரும்பி வந்தோம்
நான் இரவே கிளம்ப வேண்டியிருந்தது. புதுச்சேரி வந்தால் நண்பர் ரமேஷ் பிரேதனைப் பார்க்கவேண்டும் என விரும்புவேன். நேரமில்லை. காலையில் எனக்கு தத்துவ வகுப்பு இருந்தது. இரவு ஈரோடு நண்பர்களுடன் கிளம்பினேன். வழியெங்கும் பேசிக்கொண்டே பயணம். கொஞ்சம் தூங்கினேன்.புலர் காலையில் மலைத்தங்குமிடம் சென்றேன். மீண்டும் ஒரு மூன்று மணிநேரத் தூக்கம். பத்துமணிக்கு வகுப்பு.
நாகர்கோயிலில் இருந்து கிளம்பி பத்துநாட்களாகின்றன. நாகர்கோயிலில் நான்குநாட்கள். அதன்பின் அமெரிக்கா
வெள்ளி, 13 செப்டம்பர், 2024
புதுவை வெண்முரசு 75 வது சிறப்பு அமர்வு சில தருணங்கள்
புதுவை வெண்முரசு கூடுகை தனது 75 வது கூட்டம் 12.09.2024 வியாழன் அன்று காலை 10:20 க்கு துவங்கியது. இது எழுத்தாளர் ஜெயமோகன் புதுவைக்கு வந்து கலந்து கொள்ளும் மூன்றாவது பெரிய நிகழ்வு. முதல் நிகழ்வு கூடுகை துவங்கி ஒரு வருடம் கழித்து முதல் நாவல் வெண்முரசு “முதற்கணல்” நிறைவின் போது நடந்தது. இரண்டாவது கூடுகைநின் 50 வது நிகழ்வின் போது இப்போது எழுப்பத்தைந்தின் நிறைவின் பொருட்டு. மூன்றுமே மாதம் தோறும் கூடும் அதே இடத்தில் நிகழ்ந்தது . முதலாண்டு வெண்முரசு கூடுகை ஏதாவது பெரிய கூடத்தில் நடத்தலாம் என்கிற கருத்து முன வைக்கப்பட்ட போது எனக்கு அது அதர்வை கொடுத்தது. “ஜெ” கலந்து கொள்ளும் அந்த முதல் கூட்டத்தில் எனக்கு பேச நிறைய இருந்தது. முற்றும் புதிய இடத்தில் என்னால் பேச இயலாது என்பதாக இருந்தது என்னைவிட மணிமாறன் இன்னும் அதிர்ந்திருந்தார்.வழக்கமான இடத்தை தவிற்து புது இடம் செல்வது எங்களை சொல்லெழாமல் செய்துவிடும். இறுதியாக வருடம் முழுவதும் நடக்கும் அதே இடமான எனது இல்லத்தை எதற்காகவும் மாற்ற வேண்டாம் என முடிவு செய்தோம். அதிலிருந்து இந்த75 வது வரை இடம் மாற்றுவது பற்றிய சிந்தனை எழவில்லை.
முதல் வருட கொண்டாட்டமாக சிறப்பு விருந்தினர் ஜாஜா வெண்முரசின் வாசிப்பு முறை பற்றிய புதிய கோணத்தை பதிவு செய்தார் . 50 வது கூடுகையில் “ஜெ” வெண்முரசை “கீதையின் சுருக்கமான உரை” என அறிவித்து அனைவரையும் அதிர வைத்தார். 75 வது கூடுகையில் தனது மனம் வெண்முரசில் இருந்து வெகு தூரம் விலகிய நிலையில் வெண்முரசு எழுதுவதில் நிகழ்ந்த தர்க்க புரிதல்கள் அவரை பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்றதை முன்வைத்தார். வாசகர்களுக்கும் அது கொடுத்த புரிதல்கள் அவரின் கண்டடைதலுக்கு நிகரானவைகள். அதை முன் வைத்தே புதுவை வெண்முரசு கூடுகை தனது பயணத்தை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்த்தி வருகிறது.
முதல் இரண்டு நிகழ்வுகளும் எனக்கு நிறைவை கொடுக்காத மனக் குறை உண்டு.75 வது கூடுகை கடந்த காலத்தில் இருந்து கற்ற பாடத்திலானது. இம்முறை மிக தெளிவான திட்டமிடலும் அதை செயல்படுத்து குழுக்களும் மிக நிறைவான பணியினை செய்தனர். அனைவரும் சொன்னது மிக கச்சிதமான ஒருங்கிணைப்பு என்று. அனைத்து குழுவிற்கும் பாராட்டும் நன்றியும் வணக்கமும்
புதிய பதிவுகள்
-
புதுவை வெண்முரசு கூடுகை தனது 75 வது கூட்டம் 12.09.2024 வியாழன் அன்று காலை 10:20 க்கு துவங்கியது . இது எழுத்தாளர் ஜெயமோகன் புத...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : மணிவிழா - 56 24.01.2023 என் மீதான அவநம்பிக்கையால் “ வேளுக்குடி ” சொல்ல நினைத்ததை மீள மீள எனக்குள் எழுப்பிக் க...
-
ஶ்ரீ : பதிவு : 269 / 356 / தேதி :- 16 டிசம்பர் 2017 * மறுமுனையைத் தேடி * “ ஆளுமையின் நிழல் ” - 15 கருதுகோளின...
-
ஶ்ரீ : பதிவு : 137 / 210 தேதி :- 24 ஜூலை 2017 * கற்பிதத்தின் பிழை * இயக்க பின்புலம் - 63 அரசியல் ...
-
வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...
-
ஸ்ரீ: பதிவு : 244 / 330 தேதி :- 20 நவம்பர் 2017 * பல திறப்புக்களின் வாய்ப்பு * “முரண்களின் முனைகள் ” - 13 ” கரு...